கதையாசிரியர் தொகுப்பு: அ.முத்துலிங்கம்

98 கதைகள் கிடைத்துள்ளன.

பூமாதேவி

 

  இங்கே என்னடா என்றால் சமயலறைக் கேத்தில் கூட என்னை விசில் அடித்துக் கூப்பிடுகிறது! அவ்வளவு மரியாதை! என்னுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். நான் சிறுவனாய் இருந்தபோது அவர் வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் மெள்ள மெள்ள அடிவைத்துத்தான் நடக்க வேண்டும். உரத்துப் பேசக் கூடாது; குஷ’யான சமயங்களில் பாடுவதற்கும் ஏலாது. ஏன் விசிலடிக்கக்கூட முடியாது. அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வளர்ந்தவன் நான். ஆனால் இங்கே…! நான் அமெரிக்காவுக்கு வந்து மிக வேகமாக முன்னேறியது இந்தத் தேநீர் போடும்


ரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள்

 

  என்னுடைய அப்பா ஒரு வருடத்திற்கு மேலாக, பல இரவுகள் மருத்துவ புத்தகங்களையும், அகராதிகளையும் வைத்துக்கொண்டு தன்னை சித்திரவதை செய்துவந்தார். சொக்கலட் தொழிற்சாலையில் நீண்ட பகலைக் கழித்துவிட்டு வந்த பிறகு தன்னுடைய படுக்கை அறையில் விளக்கை எரியவிடுவார். சமையலறையில் எங்களுடன் சூப் அருந்துவார். ஆனால் தன்னுடைய பிரதான உணவை ஆட்டம் போடும் ஒரு சோவியத் ஸ்டூலில் வைத்து எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்கு போய்விடுவார். அவருடைய வேலை கடினமானது. அவருக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அவருடைய சொற்ப


எலி மூஞ்சி

 

  புதுச்சட்டம் வந்தபோது எல்லோரும் கூடிக்கூடி அது பற்றியே பேசினார்கள். ‘இது மனித அடிப்படை உரிமை. அரசு எப்படி இதில் தலையிடலாம். வேற்று நாடுகளில் இப்படியான புதுச்சட்டம் கிடையாதே? அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது பின்னோக்கிச் செல்கிறது. நாங்கள் போராட வேண்டும் என்றாள்’ ஒரு மாணவி. அவளுக்கு வயது பத்து. ‘நான் என்னுடைய வலைப்பூவில் எழுதுவேன்’ என்றான் ஒரு பையன். ‘ஆஹா! உன் பெயரைத் தெருவுக்குச் சூட்டுவார்கள்.’ எல்லோரும் சிரித்தார்கள். இறுதியில்


நிலம் எனும் நல்லாள்

 

  சைமன் கனடா வந்த நாலாவது நாளே தாயிடம் கேட்டான். ”அம்மா, உங்களிடம் துவக்கு இருக்கிறதா?” ”இல்லையே, இது என்ன கேள்வி?” ”அமெரிக்காவின் சனத்தொகையிலும் பார்க்க அங்கே துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகமாமே.” ”இது அமெரிக்கா அல்ல மகனே, கனடா.” ”பக்கத்து வீட்டுக்காரர்களிடம் துப்பாக்கி இருக்குமா?” ”ஏணி கடன் கேட்பதுபோலப் பக்கத்து வீட்டில் போய் இரவல் கேட்கப்போகிறாயா? யேசுவே, என்ன நடக்கிறது இங்கே?” ”இல்லை அம்மா, ஒரு பாதுகாப்புக்குத்தான்.” ”இங்கே உனக்கு எதிரிகள் இல்லை. நீ சுதந்திரமாக உலாவலாம்.


கனகசுந்தரி

 

  இப்படி ஓர் அவமானம் கனகசுந்தரிக்கு அவளுடைய 15 வயது வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இதற்கு எல்லாம் காரணம், கறுப்பு ரீச்சர்தான். மற்றவர்கள் விமலா ரீச்சர் என்று அழைத்தாலும், அவளுக்கு அவர் கறுப்பு ரீச்சர்தான். எதற்காகத் தன் மீது வன்மம் பாராட்டுகிறார் என்று அவள் யோசித்து இருக்கிறாள். ரீச்சர் வாய் திறக்கும்போது நாக்கு பிளந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்திருக்கிறாள். கனகசுந்தரி அழகாக இருப்பாள். வெள்ளை வெளேர் என்ற நிறம். அவள் நடந்துபோனால், ஆணோ, பெண்ணோ நின்று திரும்பிப்