Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: தினமலர்

444 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு

 

  சென்னையில் நீச்சல் குளம், ஜிம், மால் என்று எல்லா வசதிகளுடன் இருக்கும் அபார்ட்மென்ட் ஒன்று வாங்கிட வேண்டும் என்று ராதா, குமார் இருவருக்குமே ஆசை. சென்ற வாரம் பார்த்துவிட்டு வந்த அபார்ட்மென்ட், நினைத்ததற்கும் மேலாக பல வசதிகளுடன் இருந்தது. ஆனால், விலை தான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகம். “”எப்படியாவது பணம் புரட்டி வாங்கி விடலாங்க…” என்று ராதா ஆர்வத்துடன் சொல்ல, குமாருக்கும் அந்த வீட்டை எப்படியும் வாங்கி விட வேண்டும் என்ற ஆசை


சரஸ்வதி

 

 கிழக்குச் சிவந்திருந்தது. சேவல்களின் கூவல், அந்த நாற்பது வீடுகள் அடங்கிய ஊரையே விடிந்து விட்ட சேதி சொல்லி எழுப்பிக் கொண்டிருந்தது. வறண்டு கிடந்த அந்த பூமியிலும், ஈரத்தைக் காட்டிக்கொண்டிருந்த மேற்குப் பக்கம் கம்மாக் கரையில், காலைக் கடன்களை முடித்துவிட்டு, தன் குடிசைக்கு வந்த குமரன், அம்மா கிணற்றிலிருந்து சேந்தி வைத்திருந்த பானை நிறைந்த தண்ணீரை ஊற்றி, உடலைக் கழுவி, மாற்றுடை அணிந்து, சின்னத் தோள் பையைத் தயாராக எடுத்து வைத்தான். “”யம்மோவ்… நான் பொறப்பட்டுட்டேன். பஸ்சை பிடிக்கோணும்னா


மாமியார் குணம்!

 

 “”இன்னைக்கு என்னமா பிரச்னை?” தொலைபேசியை எடுத்த பிரபா கேட்க, “”அதை ஏண்டி கேக்கற? எனக்கு மருமகள்னு வந்து இருக்காளே ஒருத்தி, அவளும், அவ சமையலும். இன்னைக்கு அவ ஒரு ரசம் வைக்கறேன்னு சொல்லிட்டு வைச்சா பாரு… தூ! வாயில் வைக்க முடியலை. ஆனா, உன் அப்பா அவளை பாராட்டி தள்ளுறார்.” அம்மாவின் பொருமலை பொறுமையாய் கேட்டவள், “”அம்மா, நீ பேசாம கொஞ்ச நாள் இங்க வந்து தங்கிட்டு போ,” என்றழைக்க, வேதாவுக்கும் பெண் வீட்டில் தங்கி வந்தால்


நெல்லுக்கு இறைத்த நீர்!

 

 “”சக்தி விஷயமாக போனில் எதுவும் பேச வேண்டாம். அடுத்த வாரம் நேரில் வந்து பேசுறேன்,” என்று சொன்ன சதாசிவம், சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தார். சபாபதி தங்கையின் கணவர் தான், சதாசிவம். சென்னை தலைமை செயலகத்தில் வேலை பார்க்கிறார். சதாசிவத்தின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சபாபதியின் அடிமனதில், சற்று குழப்பமாக@வ இருந்தது. “”சதாசிவம் மாப்பிள்ளை எடுத்து வைத்த காரியம் எதுவும் தோற்றதில்லை. நம்ம பிள்ளைங்க, மாப்பிள்ளைங்க வேலை விஷயத்தில் எல்லாம், அவர் மூலமாக, நல்லது தான் நடந்திருக்கிறது. ஆனால்,


பழனியம்மா!

 

 “”பழனியம்மா… ரெடியாயிட்டியா புள்ளே?” “”ரெடியாயிட்டுதேன் இருக்கேன்…” “”முத்துலட்சுமி போட்டோவையும், ஜாதகத்தையும், மஞ்சப் பைல வச்சு, குலுக்கைக்கு மேல வச்சிருக்கேன். அதை எடுத்தாந்திரு.” “”ஆகட்டும் மாமா.” பழனியம்மாவும், குழந்தை ஆர்த்தியும் அமர்க்களமாக டிரஸ் அணிந்து, பழனிவேலு சொன்ன மஞ்சப்பையையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். “”இதென்ன புள்ள மேக்கப்பு? பீரோவுல இருந்த அம்புட்டு நகையையும் அப்பிக்கிட்டு நிக்குதே.” “”நாம பட்டணம் போதோமுல்ல, அதேன்!” “”பீரோவுல, அய்த்தை பாம்படம் இருக்குமுல்ல, அத்தையும் எடுத்து போட்டுக்கோ, பட்டணத்துல எல்லாரும் உன்னதேன் பாப்பாக.”


தேவை ஒரு மாற்றம்!

 

 “”சரி… நீ போயிட்டு வா. நான் இங்கியே பெரியம்மாவோட இருக்கேன். சாயங்காலம், நீ ஆபீஸ் முடிஞ்சு வரும்போது, அப்படியே என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு.” “”சரிம்மா… நான் வர்றேன். லிப்டில் பாத்துப்போ. சாயங்காலம் பாப்போம்.” என் மகன் நாராயணன், என்னை என் ஓரகத்தி வீட்டில், விட்டு விட்டு, அவசரம் அவசரமாக காரை கிளப்பிக் கொண்டே, தன்னுடைய வாட்ச்சை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டே ஓடினான். நாராயணனும், மருமகள் கோதையும் காலையில், 9:00 மணிக்கு முன், வேலைக்குக் கிளம்பி


உள்ளமெனும் பெருங்கோவில்!

 

 கையில் வேப்பங்குச்சியுடன், ஆற்றங்கரை பக்கமாக வந்தார் வீரமுத்து. கார்த்திகை மாத சிலு சிலுப்பையும் மீறி, சுளீரென அடித்தது வெள்ளை வெயில். இந்த மாதிரி வெயிலுக்கு பின், மழை இருக்குமென அப்பா சொல்வார். ஆற்றில் கைகால் கழுவி, முகம் துடைத்து, சூரியனை நோக்கி கைகூப்பி விட்டு கரையேறும் போது, மனம் பார்க்காதே என தடுத்தாலும், கண் வலப்பக்கம் தன்னிச்சையாக திரும்பியது, ரணமாக வலித்தது. ஆற்றங்கரையில்… சதுரமாக நான்கு குட்டைச் சுவர்களும், மேற்கூரையை இணைக்கும் கம்பி வலையுமாக, தட்டைக் கூரையுடன்


கேட்க நினைத்த கேள்வி!

 

 எங்கள் ஊருக்கு புதிதாக வருபவர்கள், அகலாங்கரையைப் பார்த்து மலைத்துப் போவர். “அடேங்கப்பா… கடலாட்டம் தண்ணி கிடக்கு… அதும், நாலு பக்கமும் படிக்கட்டு கட்டி, பார்க்கவே அழகாயில்ல இருக்கு…’ என்பர். பாளையக்காரர்கள் இங்கு வந்து வசித்ததாகவும், அவர்கள் கட்டிய கோட்டையும், குளமுமே அதற்கு சாட்சியென்றும் பேசிக் கொள்வர். கோட்டை, குளத்தையொட்டியே இருக்கிறது. ஆனால் சிதிலமடைந்து, மரமும், புதர்களுமாய் கிடக்கும். ஆடு, மாடுகள் மேய சிறந்த இடமாக இருந்தது. அப்புறம், ரொம்ப காலமாய் ஒரு பேச்சு அடிபட்டது. குளத்துக்குள் சுரங்கப்பாதை


சலனம்

 

 ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சவுமியா. அவளைப் பார்த்தால், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பெண்ணைப் போலவே இருக்க மாட்டாள்; மிகவும் எளிமையாக இருப்பாள். நெற்றியில் கருப்பு சாந்து இட்டு, அதன் கீழ் நகமளவு விபூதி இட்டிருப்பாள். குளித்து விட்டு, டிபன் சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்திருக்கும் சவுமியாவிடம் இருந்து, நறுமணம் ஒன்று பரவியதை, அவள் அம்மா அம்புஜம் கவனித்தாள். சென்ட் அடித்துக் கொள்ளும் பழக்கமுள்ளவள் தான் சவும்யா; அதெல்லாம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை. இப்போது, திடீரென்று


யாராலும் முடியும் தம்பி!

 

 “நிலா’ பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார். ஒட்டுனர் கதவைத் திறந்து கொண்டு சங்கரலிங்கம் இறங்க, நானும் இறங்கினேன். வயர்லெஸ் செட்டையும், இரு கைபேசிகளையும் எடுத்துக் கொண்டு நடந்தார். அலுவலக உதவியாளன், அவரது சூட்கேசை எடுத்துச் சென்றான். நான், ஒரு பத்தடி தூரம் விட்டு, அலுவலகத்தை நோட்டமிட்டபடியே நடந்தேன். எடிட்டரின் குளிர்பதன மூட்டப்பட்ட அறையில், அவரது இளைய சகோதரர்கள் இருவர், ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தனர்; வணங்கினேன். “”என்ன