கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 26, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

நெறிமுறைப் பிறழ்வா?

 

 அன்று ஒரு நாள், நானும் என் மகளுமாய் ஒரு றெஸ்ரோரண்டுக்குச் சென்றிருந்த போது, எதிர்ப்பட்ட குளிரிலிருந்து எனக்குப் பாதுகாப்புத் தருவதற்காக, தனக்கென ஆசைப்பட்டு வாங்கிய அந்த ஸ்கார்ஃபை அவள் எனக்குத் தந்திருந்தாள். பின்னர் சாப்பிடும்போது என் முன்னால் இருந்து என் மேல் அந்த ஸ்கார்ஃபை ரசித்தவள், ”யூ லுக் குட் வித் தற் ஸ்கார்ஃப். யு கீப் இற்” என்று அதை எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தாள். தொடரும் நினைவுகளை இடைமறித்தது, அந்தக் கவுன்சிலரின் குரல். அமைதியான அந்த


குற்றமும் தண்டனையும்

 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விளாடிமிர் என்னும் நகரத்தில் வாலிப வியாபாரி ஒருவன் வசித்து வந்தான். ஐவான் டிமிட்ரிச் அக்ஸனோவ் என்பது அவன் பெயர். அவனுக்கு இரண்டு கடைகள் இருந்தன. சொந்த வீடு ஒன்றும் உண்டு. அக்ஸனோவ் அழகன். மினுமினுக்கும் சுருட்டை முடி அவன் தலையை அழகு படுத்தியது. வேடிக்கை நிறைந்தவன் அவன். பாட்டுப் பாடுவதில் அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது. சின்னஞ் சிறு வயதிலேயே அவன் குடிக்கப்


ராமசாமி காவியம்

 

 (1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த ராமசாமி மனிதனாகக் கருதப்பட்டதற்குச் சரித்திர மில்லை. தேயிலைச் செடிக்குள் எல்லாமிருக்கும்’ என்று நம்பிக் கடல் கடந்த சீவராசிகளின் சந்ததியில் வந்தவன் மனித னாக முடியுமா? காட்டையழித்துப் பச்சைக் கம்பளம் போர்த்து, அதைப் பேணி, உணவுப் பிச்சையளித்தவன் மனிதனாக முடியுமா? இதெல்லாம் ராமசாமிக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள். இன்று, இந்த மாங்குளத்துச் சந்தியில் வெய்யில் நெருப்பில், அதை வெல்கின்ற வயிற்று வெக்கையுடன் மீனாச்சி, ‘செவனு’,


பரிசுப்பொருள்

 

 பத்து வயதான வாசு பரபரப்பாக வண்ண காகிதங்களை கொண்டு எதையோ செய்து கொண்டிருந்தான். முகத்தில் வியர்வைத் துளிகள், சட்டை நனைந்திருந்தது. அடிக்கடி தன் அறைக் கதவைப் பார்த்துக் கொண்டான். அம்மா வந்துவிடப் போகிறார்கள் என்ற பயம்! எழுந்து போய்க்; கதவு பூட்டப்பட்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்தான். பின்னர் மீண்டும் தரையில் அமர்ந்து தன் வேலையைத் தொடங்கினான். எதையோ மறந்து விட்டவன் போலத் தன் பக்கத்தில் இருந்த மடிக்கணினியைத் தட்டினான். அதில் தெரிந்த காணொளியைத் திரும்பப் பார்த்தான், தான்


அரியத்தின் அக்காவுக்கு…

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அரியத்தின் அக்காவுக்கு, எப்படி இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. எவ்வளவோ நேரம் சிந்தித்தும் ஒரு முடிவுக்கு வர என்னால் முடியவில்லை. கொஞ்ச நேரமென்றாலும் – நீ என்னுடன் பழகிய அந்த மகத்தான உணர்ச்சிகரமான நேரத்தைக் கொண்டு எப்படி உன்னை அழைக்கலாமென்று எனக்குப் புரியவில்லை. உன்னை அன்புள்ள சகோதரியென்று விளிக்கவும் என்னால் இயலும்; அன்புள்ள … என்று விளிக்கவும் என்னால் இயலும்.


அப்பாவின் மேஜை

 

 அறைக்குள் மெல்லிய வெண்ணிறப் படலமாக இன்னுமும் சுழன்று கொண்டிருந்த சிகரெட் புகையால் சண்முக நாதனுக்கு மூச்செடுப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. வீட்டுக்காரம்மா மகன் கீழே சென்று இருபது நிமிடங்களாவது ஆகியிருக்கும். சிகரெட் படலம் போலவே அவன் கொடுத்துச் சென்ற அதிர்வால் ஏற்பட்டு விட்ட நெஞ்சுப் படபடப்பும் இன்னும் அடங்கவில்லை. முகத்துக்கு நேரே புகை விடாத குறைதான். உரையாடலின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் வாயில் சிகரெட்டைப் பொருத்தி, உதடு குவித்து, நிதானமாய் உறிஞ்சி மூன்று துவாரங்களிலும் புகையை அவிழ்த்து


அம்மானா சும்மா இல்லீங்க…

 

 மீனாட்சியைக் கண்டால் எல்லாருக்குமே பயம். சிரிக்கிற குழந்தையும் பார்த்தவுடனே அழுதிடும். அழுகிற குழந்தையும் பார்த்தவுடனே அழுகையை நிறுத்திடும். யாரு மாட்டினாலும் வாயால போட்டு வெளுக்கறது மட்டுமில்லாம, கையிலையும் அடிக்க ஆரம்பிச்சா, யாரா இருந்தாலும் அம்புட்டுதான்.. இப்ப.. நான் இத உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கும் போது, மீனாட்சி யாருன்னு கேக்காதீங்க… அவங்க என்னோட அம்மா..!! நான் ராஜு.. ஆறாம் வகுப்பு படிக்கிறேன்… இப்ப இதெல்லாம் நான் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும் போது , என் கை, காலெல்லாம் நடுங்கிகிட்டு


மாறிய மனசுகள்

 

 “அப்பா..! அப்பா ! இங்க வாங்களேன்..” காலை நேரம் . ஜன்னலிலிருந்து சரஸ்வதி கிசுகிசுப்பாய்க் கூப்பிட்டாள். இரவு ஊரிலிருந்து வந்த அலுப்பு. ஆனாலும் மகள் அழைக்கிறாள். தட்ட முடியாமல் அருகில் சென்றேன். “அங்கே பாருங்க…”கண்களால் வெளியே ஜாடை காட்டினாள். எதிர் வீட்டு வாசலில் கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டரில் ஏறி தாயாராய் இருந்தார்கள். வாசல் குறட்டில் ஒரு வயதானவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு கையசைத்தார்கள். அவர்களை அடையாளம் தெரிய எனக்குள் பயங்கர இடி.,


ஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல்

 

 முகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி அவர்களின் ஆன்மா சாந்தி பெற வழிபடுவது மனிதனின் உரிமை . புத்தர் கூட ஆன்மாவுக்கும் எல்லா இனங்களுக்கும் மதிப்பு கொடு என்று போதித்தார். பௌத்த மதம் இலங்கையின் அரச மதம் என்று தம்பட்டம் அடிக்கும் சிங்கள அரசசியல்வாதிகள் உண்மையில் புத்தரின் போதனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறி . ஆயிரம் சிப்பிக்குள் ஒரு முத்து என்பது போல் ஆயிரக்


வாஷிங்டனில் திருமணம்

 

 (1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 “பிள்ளைக்கு ஒரு கார், பெண்ணுக்கு ஒரு கார். தவிர, கல்யாணச் செலவுக்கென்று பத்து லட்சம் டாலரைத் தனியாக ஒதுக்கி வைத்துவிட்டார்களாம்” என்று பல் முப்பத்திரண்டும் தெரியக் கூறினாள் பெண்ணின் தாயார் விசாலம்மாள். “பெண்ணுக்கு நகை நட்டெல்லாம் செய்து போடுகிறார்களாமா?” என்று விசாரித்தாள் அபயாம்பாள் அத்தை. “இருபத்திரண்டு கேரட் தங்கமாகவே நமக்கு வேண்டியதைக்