Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 20, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஏழாவது அறிவு

 

 சங்கரின் வருகைக்காக காத்திருந்த ஜான் தன் அலுவலகத்தில், செய்தித்தாளை பார்த்து கொண்டு இருந்தார். சிறுவர்கள் மர்மமாக காணாமல் போவது அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் நீள்கிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 21 சிறுவர்கள் காணாமல் போய் உள்ளனர். இதற்காக DGP.திரு.ஜான் தலைமையில் ரகசிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. என்ற செய்தியை படித்து முடிக்கும் போது, அவர் முன் ஆஜரானார், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி சங்கர், ஜானிற்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு மிடுக்காக அவர் முன் நிற்கிறார்.


ராமசாமியின் ராசாத்தி

 

 ராமசாமி ஓடி விறுவிறுத்து வந்தான் , அப்ப தான் புரிந்தது அவன் போலீஸ் வேலைக்கு சேந்தப்புறம் இதுவரைக்கும் ஓடவேயில்லைனு . கல்லூரியில் படிக்கும் போது அவன் ஒரு பெரிய அதிகார பதவியில் வருவான் என்பது எல்லாருக்குமே தெரியும். வேர்த்து விறுவிறுத்த இந்த நேரத்தில பாஸ்கர் சொன்ன வார்த்தைகள் தான் ஜபாகம் வந்தது மச்சி, நீ எப்படியும் ஒரு IPS வாங்கிருவே தெரியும், உன்னுடைய பிஸிக்கல் பிட்னெஸ்க்கும் நீ பண்ணுற ப்ராக்ட்டீஸுக்கும் கண்டிப்பா நீ IPS தாண்டா ,


அக்கா

 

 “முதலில் இந்த தலை மறைகளை (முறை,கிறை பார்க்கிற ,மரபுகளை ) ஒழிக்கணும்”சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே …இவற்றை இனம் கண்டு தான் இருந்தான்.இருந்தாலும் எந்த ஒரு மாறுதலையும் அதில் ஏற்படுத்தி விட முடியவில்லை..ஆசிரியையின் பையன் என்ற பிம்பம் வேறு அவனை சுயமாக வாழ விடவில்லை என்று தோன்றுகிறது.அவன் அதை விடுதலைக்கு தாரை வார்க்கப் படட்டும் என்றே செயல்பட்டிருக்கிறான்.அதில் ஏற்பட்ட சிந்தனைகள் அவனை மூடி காலம் முழுதும் கரைந்து விடும் என்று நினைத்திருந்தான். மாறி விட்டது. சென்ற வாரம்


காதல்காரன்

 

 “ஐ ஹேட் யூ” காதல் உரையாடல்கள் எப்போதும் ரொமாண்டிக்காய் அமைவதில்லை. உணர்ச்சிகள் எல்லை மீறியது. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவள் திணறினாள். இதற்கு மேல் அவள் பொறுமை காக்கபோவதாக உத்தேசமில்லை ‘பளார்’ என அவனை அறைந்தாள். அறைந்த மாத்திரம் பட பட வென பொறிந்தாள். “உனக்கு புரியலயாடா??? நீ எனக்கு வேணாம்” திரும்பி போக வேகம் எடுத்தவள் மறுபடியும் அவனை பார்த்து சொன்னாள். “ஐ ஹேட் யூ” இந்த வார்த்தை இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


காதலின் மறுபக்கம்

 

 ஸ்காபரோ வைத்தியசாலையின் நான்காம் மாடி கட்டிடத்தில உள்ள இருதய நோயாளிகளின் வார்டில் 421ம் அறையில் படுத்திருந்த இந்திரனுக்கு கடந்த மூன்று தினங்களில் நடந்தது எல்லாம் கனவு போலிருந்தது. முப்பது வயதுடைய இந்திரனுக்கு இந்த இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வந்து இருதயம் பாதிப்படையும்; என்று அவனது நண்பர்கள் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அன்ஜியோகிராம் செய்து பார்த்த பின்னர் இருதய வைத்திய நிபுணர் பிலிப்ஸ் சொன்னது இந்திரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. “உமது இருதயத்தின தசைகள் வெகுவாக தாக்கத்தால் பாதிக்கபட்டுள்ளது. அதோடு


தோழா.. தோழா..

 

 நாய்களில் அகிடாஇனு, பிட்புல், புல்டெரியர், கிரேட்டேன், பிரேசிலியன் மஸ்டிஃப், டாபர்மேன் பின்ஸ்சர்ஸ், பொம்மரேரியன், ஹஸ்கீஸ், ராட்வெய்லர், சிப்பிப்பாறை, தால் மாட்யன், லெப்ராடோர், அல்சேஷியன் என்கிற ஷெஃபர்டு, இப்படி பல வகை இனங்கள் இருக்கின்றன. இருப்பினும் ராஜபளையம் நாட்டு நாய்க்கு எதுவும் ஈடாகாது. பழங்காலத்தில் ஜமீன்தார், பெரும் நிலக்கிழார்கள் வேட்டைக்கு செல்லும் போது இந்த வகை நாயைத் தான் பயன் படுத்தினார்கள். நாய்கள் எந்த வகையாக இருந்தாலும் அதனை குட்டியிலிருந்து எடுத்து வளர்த்தால் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.


நான் சாரங்கபாணி..!

 

 நான் சாரங்கபாணி.! சின்ன வயசில இருந்தே அம்மா.. அப்பாலாம் “சாரி…சாரி”. ணே கூப்டுவா..! சின்ன வயசுல என்ன எல்லாரும் “சாரி.சாரி.”ன்னு கூப்டரச்சே.. “ஏன்..! நீங்க என்ன தப்பு பண்ணினேள்.?.எங்கிட்ட சாரி கேட்கரேள்?” னு ஜோக் அடிப்பேன் நான்.. குறைஞ்சது ஒரு ஆயிரம் தடவையாவது நான் இந்த ஜோக்க அடிச்சிருப்பேன்..அம்பது வயசு வரைக்கும் .. ஆரம்பத்துல எல்லாரும் சிரிப்பாங்க.. போகப் போக கடைசியா நானே சொல்லிட்டு நானே கெக்கபிக்கேனு சிரிக்கர்து வழக்கமா போய்டுச்சு…! திருச்சி லால்குடி பக்கத்துல மணக்கால்


எப்போது வருவான்…?

 

 சுமதியின் எதிரில் இருந்த அந்த உயிருள்ள காகிதம் காற்றில் படபடத்தது. அவள் அதையே வெறித்தாள். சென்ற நிமிடம் வரை வெற்றுத் தாளாக இருந்த அந்தக் காகிதத்திற்கு இப்போதுதான் உயிர் வந்தது. துரைவேலு எப்போது வந்தானோ சுமதிக்குத் தெரியாது. அவள் கூடத்தில் வாசலுக்கு முதுகுகாட்டி முருகனின் புகைப்படத்தைக் கையில் பிடித்தப் படி அமர்ந்து ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். “சுமதி …! ” துரைவேலு குரல் கேட்டதும்தான் திடுக்கிட்டு எழுந்தாள். அலறிப்புடைத்து நின்றாள். அவளையறியாமலேயே கை பின்னால் சென்று படத்தை


ராதா போட்ட டிராமா…

 

 அவன் பெற்றோர்கள் அவனுக்கு வைத்த பெயர் ஆனந்தன்.அவன் வாழ்க்கையில் எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த பெயரை வைத்து இருப்பார்கள் என்று அவன் நினைத்தான். ஆனால் ஆனந்தனுக்கோ தான் செய்யும் காரியம்,தன் குடும்பம்,தன் சம்பாத்தியம்,தன் மணை வி செய்யும் சமையல்,தன் குழந்தைகள் அழகு,அவர்கள் வாங்கும் மார்க்குகள்,தன் வீட்டு அழகு, எதுவுமே சந்தோஷத்தை தருவதில்லை. பிறர் செய்யும் காரியங்கள் பிறர் வீட்டு அழகு,பிறர் குழந்தைகளின் மார்க்கு,இவைகள் தான் அவனுக்கு நன்றாய் இருப்பது போல் அவன் எண்ணுவான்.அவன்


அடுத்த ஜென்மம்

 

 (இதற்கு முந்தைய ‘முதல் கதை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) என் முதல் கதை ‘திசை மாறிய எண்ணங்கள்’ விகடனில் வெளியான பிறகு எனக்குள் ஒரு நம்பிக்கை துளிர்த்தது. இதனிடையில் எனக்கு பெங்களூர் டைட்டான் வாட்சஸ் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. நான் உடனே பெங்களூருக்கு இடம் பெயர்ந்தேன். பெங்களூர் வந்ததும் கதைகள் எழுத முயற்சித்தேன். அதன் பிறகு எனது சிறு கதைகள் குமுதம், இதயம் பேசுகிறது, சாவி, அமுதசுரபி, ஓம்சக்தி,