கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2020

137 கதைகள் கிடைத்துள்ளன.

காய்க்காத பூக்கள்

 

 அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 ராஜேஷ் வீடு போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. ஃபாரன்சிக் நிபுணர்கள் ரேவதியின் படுக்கையறையை அணு அணுவாக சோதனை கொண்டு இருந்தனர். இன்ஸ்பெக்டர் கவிதா ஏட்டு கதிரவனிடம் நடந்த சம்பவங்களை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார். “ரேவதி ரொம்ப நேரமா கதவ திறக்காததால வேற வழியில்லாம தான் மேடம் கதவ உடைச்சு உள்ள வந்தோம்” “கதவோட லேச் உடையாம இருக்கு” “சாவி போட்டு மட்டும் தான் பூட்டி


காணாமல் போன கணவன்

 

 முடி கலைஞ்சு போய் கண்ணு ரெண்டும் கருவளையமிட்டு முகமெல்லாம் சோர்ந்து உதடுகள் வறண்டு ரொம்பவும் சோர்வுடன் குணமாகி வரும் காய்ச்சலில் படுத்திருந்தாள் விந்தியா. ஜாப் டிரெயினிங்க்காக பெங்களூரு சென்று வந்த கல்பனா, தோழி விந்தியாவை பார்க்க வந்தவள், துணுக்குற்று உடம்புக்கு என்ன ஆச்சு.,? என்று விசாரித்தாள். ஏன் உனக்கு ஒன்னும் தெரியாதா.? யாரும் உனக்கு சங்கதி சொல்லலையா.? என்று கேட்டாள். உம் மாமியாரண்ட உன்னை பற்றி கேட்டதற்கு, மூஞ்சியை தூக்கி வைச்சுக் கிட்டு உள்ள இருக்கா போய்


அம்மா காத்திருக்கிறாள்

 

 பாட்னா எக்ஸ்பிரஸ் தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் 9வது plotform-ற்குள் நுழைந்தது. அதிலிருந்து வழக்கம்போல் பீகாரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞர் கூட்டம் இறங்கியது. அவர்கள் அனைவரும் எங்கு செல்வது, யாரை கேட்பது என தெரியாமல் ஸ்டேஷன்க்கு வெளியே வந்தனர். அவர்களில் ஒருவன்தான் நம் யாம்பிரசாத். பீகாரின் பின்தங்கிய கிராமம் ஒன்றிலிருந்து வருகிறான். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அப்பா பகதூரும் அதிகம் படித்தவர் இல்லை.


அதீத காதல்!!

 

 ஏண்டா நாயே..,என்ன திமிரு இருந்தா பைக்க திருட பார்த்திருப்ப?!. ஏட்டைய்யா யார் இவன் என்ன கேஸ்?.,திருட்டுபய அய்யா பெரிய இடத்திலையே வேலையை காட்ட பார்த்திருக்கான். இவன் மேல வேற எதுவும் கேஸ் இருக்கா?.,இல்ல அய்யா!. டேய் இங்க வா., உன் பேரு என்ன?., தினேசு சார்., எந்த ஏரியா?., அண்ணாநகர்., தெருவின் பெயரை கேட்ட நிமிடத்தில் அவன் கன்னத்தில் விழுந்த அறையின் சத்தத்தில் ஸ்டேசனே அதிர்ந்தது. ஏண்டா உங்க ஏரியாகாரங்க சும்மாவே இருக்க மாட்டிங்களாடா, எங்க தாலிய


இரண்டு இருபது காசு

 

 காலையிலதான் பாத்துட்டு வந்தேன். அதுக்குள்ள இப்படி…… எதிர்பார்க்கல. மனத்துக்குள் திடீரென்று ஒரு கனம் வந்து உட்கார்ந்துகொண்டது. ஹாலில் தெரிந்த மின்னிலக்கக் கடிகாரம் மணி விடியற்காலை நான்கு இருபது என்று காட்டிக்கொண்டிருந்தது. தம்பிதான் தகவலைச் சொன்னான். வழக்கம்போல் தூக்கத்தில் முட்டிக்கொண்டுவரும் மூத்திரத்தை அடக்க முடியாமல், பாத்ரூம் சென்றுவிட்டு வரும்போது இடதுபுற அறையில் இருக்கும் பாட்டியிடமிருந்து ஏதாவது ஒரு புலம்பல் கேட்டுக்கொண்டிருக்கும். தாத்தா பிப்ரவரி மாதம் இறந்ததிலிருந்து அந்தப் புலம்பல் இன்னும் அதிகமாகிப்போனது. வயசானா அப்படித்தான் என விட்டுவிட்டோம். இன்று