Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2019

59 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாராமன் ரவிக்(கை) மாற்றின வரலாறு

 

 ஆதௌவ்….. விடியற்காலை ஒன்பது மணிக்கு மலர் ஆபிஸுக்கு வந்தால் ரொம்ப முக்கியமான விஷயம் இருக்க வேண்டும்… “ஹாய் …மலரு.. என்ன பல்லுவிளக்காம ஆபிஸ் வந்துட்டியா..” “சும்மா இர்ரா உனக்கு எப்பொவும் கேலி ..ராத்திரி பூரா உன்கூட பேசியே ஆகனும்னு ஒரே ஆத்திரம்…” ” ஆஹா உனக்கு இப்பிடி ஒரு யொகமாடா பயலே …சரி..சான்ஸை விடாதே மலரு இன்னைக்கே ஒடிப்போகலாம்….. என்ன கண்ணம்மா..பாரு கொடைக்கானல்ல எனக்கு ஒரு ரிசார்ட்டு இருக்கு..ஊட்டின்னா இன்னம் சௌகரியம்…உன் வசதி எப்பிடி..”. “ஏன்டா உனக்கு


இரண்டாவது அத்தியாயம்

 

 தேன் மொழிதான் அந்த ஐடியாவைக் கொடுத்தாள் அவனுக்கு. ஹைதராபாத்தில் கல்யாணம் ஆன புதிதில், வாடகைக்கு ஒரு வீடு எடுத்து மூன்று வருடம் அவர்கள் இருவரும் வாழ்ந்ததை நினைவு படுத்தி, அங்கு நம் புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்றாள் அவனிடம். சென்னையில் அவர்கள் இருந்ததும் வாடகை வீடு தான். அதில் தான் அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன. பிந்துவை அவன் பார்த்த பிறகு தேன் மொழியை கொடுமை படுத்த ஆரம்பித்து விட்டான். ஆனால் தேன்மொழி அப்போது நடந்து கொண்டது,


குழந்தை

 

 அத்தியாயம் -22 | அத்தியாயம் -23 அவள் மௌனமாக இருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து ”அந்த ராணீ நம் வூட்லே எவ்வளவு வேலைங்க செஞ்சு வந்தா.ஒரு சின்ன பொருளைக் கூட அவள் திருடினது இல்லே.அப்படி பட்ட ராணியின் குழந்தை நாம வளக்காம அனாதை இல்லத்தில் சேப்பது சரி இல்லை கமலா” என்று மறுபடியும் குழந்தையைப் பற்றி பேச ஆரம்பித்தான் நடராஜன்..“நீங்க சொல்றது எல்லாம் ரொம்ப சரிங்க.நான் இல்லேன்னு சொல்லலலே.அவ சாகறப்ப ‘இந்த குழந்தை யை நாங்க வளக்க மாட்டோம்.நாங்க


இதுதான் கைமாறு என்பதா?

 

 சந்திரன் தன் மேற்படிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க மிகுந்த சிரமப்பட்டான். அவன் எவ்வளவுதான் படிப்பில் ஆர்வமாக இருந்து வகுப்பில் முதல் தர மாணவனாக வந்த போதும் அவன் தாய் தந்தையரால் அவனை மேலும் படிக்க வைக்க முடியவில்லை. அப்போதுதான் அந்த அறிவித்தலை அவன் தற்செயலாகப் பார்த்தான். தங்கள் உற்பத்திகளை வீடு வீடாக சென்று பட்டுவாடா செய்ய இளவயதினரின் சேவை தேவைப்படுகின்றதென்ற சுவரொட்டி அறிவித்தல் தெருவோர சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. பகுதி நேரமாகவும் அதனை செய்யலாம் என்றிருந்ததால் பாடசாலை முடிந்த பின்னரும்,


பிசாசக்கை

 

 அன்றொரு மதியம். புழுக்கம் கதகதப்பை தரவும், கடலோரமாக சென்று சற்று இளைப்பாறலாமென எழுந்து பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். எங்கள் வீட்டிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் வங்கக்கடலின் விளிம்பவள் நீல நிறத்தில் மிதந்து கொண்டிருந்தாள். கடல் அருகில் அதன் கரையோரமாக நெடு நெடுவென வளர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசையாகி நிற்கும் சவுக்கு மரங்கள். அதன் நிழலோடு ஒற்றை வழி பாதை ஒன்று. அந்த பாதையில் மெதுமெதுவாக பைக்கை ஓட்டிச் செல்லும்போது மெல்லிய- சில்லெனும்