கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 14, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

எக்ஸ்சேஞ்ச் ஆபர்

 

 வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் டைனிங் டேபிளில் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, “உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், டென்ஷனாகாமக் கேளுங்க” என்று முன்னறிவிப்புக் கொடுத்து என்னை டென்ஷன் படுத்திவிட்டு விஷயத்தைச் சொல்லுவது தான் என் மனைவிக்கு வழக்கம். அன்றும் அதே பீடிகையுடன் ஆரம்பித்து, “நம்ப கம்ப்யூட்டர் அறையிலிருக்கும் டேபிள் பேன் ரிப்பேராயிடுச்சி, ஸ்பீடே இல்லை, சீலிங் பேனும் ட்ராக்டர் மாதிரி சத்தம் போடுது, ரெண்டுத்தையும் மாத்தணும்” என்றாள். நாளில் பாதி நேரம் அவள் அந்த கம்ப்யூட்டரில்


சுழலும் வீடுகள்

 

 கத்தியால் குத்தி பெண் படுகொலை / கணவனை கொல்ல தீட்டம் தீட்டிய பெண் கள்ள காதலர்களால் பலியான பயங்கரம் என்ற தலைப்பிடப்பட்டு செய்தி ஒன்று பத்திரிக்கைகளில் வெளியானது சென்னை கொசப்பாக்கம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர் விநாயக மூர்த்தி. (வயது 42) இவரது மனைவி வசந்தா (வயது 28). விநாயக மூர்த்தி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நடந்த விபரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது – விநாயக மூர்த்தி மதுரையைச் சேர்ந்தவர்.


வாரிசு

 

 “இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா. வேற பொண்ணுங்களா இல்ல இந்த ஒலகத்திலே?” வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த மகனிடம் முறையிட்டாள் தாய். ராசுவின் உடலும் மனமும் ஒருங்கே சுருங்கின. முப்பது வயதுவரை கல்யாணத்தைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதிருந்தவன் அப்படியே இருந்து தொலைத்திருக்கக் கூடாதா? நண்பர்களின் கேலியோ, அல்லது அகல்யாவின் அழகோ அவனை வெல்ல, பிரம்மச்சரியத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான். அப்படித்தான் நினைத்தான் முதலில். ஆனால், ஓரிரு மாதங்களிலேயே, பருவ வயதில்கூட தனக்குப் பெண்களைக் கண்டு எந்தக்


மோகினிப்பேய்

 

 வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து,சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன். அவன் தனது இருபத்திமூன்றாம் வயதில் யுனிவர்சிட்டிப் படிப்பை முடித்து,கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து கொஞ்சநாட்களில், கல்லூரி நாட்களிலும் யுனிவர்சிட்டி நாட்களிலும் இருந்து சுதந்திரமோ,நேரமோ இனிவருவது அருமை என்று அவனுக்குத் தெரிந்தது. இனி அப்படியான சுதந்திரமும் தான் நினைத்ததைச் செய்ய நேரமும் கிடைப்பதென்றால் அவனடைய உழைப்பு வருமானம் போன்றவற்றையும் யோசிக்க வேண்டும் என்பது யதார்த்தத்தின் வெளிப்படை என உணர்ந்தான். பணத்தைப்பற்றிக் கவலைப்படாமல்


காதல்

 

 ஒங்களை காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டது எவ்வளுவு தப்புன்னு “இப்பத்தான் புரியுது” முகம் சிவக்க மாலா கத்தினாள். இங்க மட்டும் என்னா வாழுதாம், அதேதான் நீ என்னிக்கு வாழ்க்கைல வந்தியோ, அன்னில இருந்தே எனக்கு நரகம்தான். பி.பி எகிற குதித்தான் கணேசன். கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதீங்க, டிப்ன சாப்பிட்டுட்டு போங்க. நீயாச்சு உன் டிபனுமாச்சு விருட்டென வெளியேறினான். ஒங்களுக்கு அவ்வளுவன்னா, எனக்கு மட்டும்…மானம், ரோஷம் இருக்காதா ? சடாரென்று கிளம்பிபோய் காருக்குள் ஏறினாள் மாலா. சூட்டிங் ஸ்பாட்டில்… “டார்லிங்,


இரும்பு பட்டாம் பூச்சி

 

 இரவு மணி 2 ஊசி குத்துவது போல உடலுக்குள் புகுந்து வெளிவந்து கொண்டிருந்தது குளிர்…எங்கும் இருட்டு… ஷிப்ட் முடிந்து சாப்பாட்டு பேக்கும் , சின்ன டார்ச்சுமாக, வீடு நோக்கி நடக்க துவங்கியிருந்தான் செல்வராஜ்….உடன் வந்த சிலர், அவரவர் பாதையில் பயணிக்க, செல்வராஜ் வீடு இருக்கும் பகுதிக்கு, அவன் மட்டுமே செல்லும் தனி காட்டு ராஜாவின் பயணம் அது… அந்த ஏரியாவில் இருந்து அவன் மட்டும் தான் நைட் ஷிப்ட் வேலைக்கு வருகிறான்… நண்பர்கள் உடன் வந்த வரை


வெண்ணிற பூக்கள்

 

 வாசல் எங்கும் வெள்ளை கோலங்கள், வெற்று திண்ணையில் பேப்பர் படிக்கும் பெருசுகள், சோற்றை கட்டி கொண்டு பாயுந்தோடும் மாணாக்கள் – அலுவலர்கள், அந்த சிறிய தெரு காலை 9 மணி வரை விழாக்கால பேருந்து நிலையம் போல் காட்சி அளிக்கும். காலை 9 மணிக்கு மேல் வீட்டுஅம்மாக்களின் பொழுதுபோக்கான பூ தொடுக்கும் சிறு தொழில் பிரதானம் பெரும் நேரம். சந்தையில் விற்கும் பூக்களை கூடை கணக்கில் வாங்கி தொடுக்க குடுத்து படிக்கு ருபாய் என்ற விகிதத்தில் வாங்கி


யூகம்

 

 வீடு ஒரே களேபரமாக இருந்தது. அதனை முறையாக ஒழுங்கு படுத்த நினைத்தபோது சரஸ்வதிக்கு மலைப்பாகவும். ஆயாசமாகவும் இருந்தது. கிரகப்பிரவேசம் முடிந்து புதிய வீட்டிற்கு குடியேறி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் எல்லாமே போட்டது போட்டபடி கிடக்கிறது. பெங்களூரின் ஒதுக்குப் புறத்தில் புதிதாக முளைத்திருந்த பாலாஜி லே அவுட்டில் இவர்கள் வீடு ஒன்றுதான் முழுதாக கட்டி முடிக்கப்பட்டு கிரகப்பிரவேசமும் நடந்தது. அக்கம் பக்கம் வேறு வீடுகளே இல்லை. சற்று தூரத்தில் ஒரேயொரு பச்சை நிற கட்டிடம் மட்டும்


உயிரோடுதான்…!

 

 வருடா வருடம் நவம்பர் மாதம் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்குச் சான்று கொடுக்க வேண்டும். வேறு யாருக்கு நான் குடும்ப ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கிற எனது பாங்க் கிளைக்குத்தான். போன வருடம் வரை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் போய்விட்டார். இந்த வருடம் முதல் என் தலையில் அந்தச் சடங்கு. பரவாயில்லை, நான் இருக்கிறேனா? இல்லையா? என்பது பற்றி நினைத்துப் பார்க்க யாராவது இருக்கிறார்களேன்னு சந்தோஷம். அவர் கடைசியாக வேலை பார்த்தது தூத்துக்குடியில். அங்கேயே ஓய்வூதியக் கணக்கு.


தூத்துக்குடி கேசரி

 

 அருள் என்கிற அருள் முருகன், விதிவசத்தால் எனக்குக் கிட்டிய நண்பன். வீட்டின் வெளியே இருக்கும் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் முதல் சக பயணி, நண்பன்தானே! என் பெற்றோரைத் தாண்டி இருக்கும் மனிதர்கள், வேலைகள், விவசாயம், கிணறு, சினிமா, ஹோட்டல், கடை, பெண்கள், படிக்கட்டுப் பயணம்… என எல்லாம் அவனால்தான் அறிமுகம் ஆனது. அவன் ஒரு கோயில் பூசாரியாக இருந்ததால், அவனை ‘நல்லவன்’ என என் தாய் நம்பினார். ஆகவே, அவனோடு சேர்ந்து ஊர்சுற்றக் கிளம்புவது எனக்கு