கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2016

68 கதைகள் கிடைத்துள்ளன.

வாய்ப்புகள் உன்னாலே உருவாகின்றன

 

 மூன்றாம் குறுக்குத்தெருவைக் கடந்து புனிதா வீட்டின் வாயிலுக்கு அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து வினிதா, திவ்யா, புவனா ஆகிய தோழிகள் வந்தனர். வீட்டின் கதவு மூடப்பட்டிருந்ததைக் கண்டதும் ஏமாற்றம் அடைந்தனர். உடனே புவனா தனது மொபைல் மூலம் புனிதாவை அழைத்தாள். ஆனால் வீட்டிற்குள் ரிங்டோன் ஒலிப்பதை வினிதா கவனித்தாள். உடனே தோழிகளையும் கவனிக்க அறிவுறுத்தினாள். வீட்டுக்குள்ள சவுன்டு கேக்குது பாருங்கடி, என்று வினிதா கூறினாள். அப்போது அந்தத் தெருவின் குப்பைகளை எடுத்துச் செல்லும் குப்பை


காதல் தேவதைக்கு ஒரு கை விலங்கு

 

 அக்கா மனோகரி அன்றைக்குத் தன்னுடன் கூடவே கல்லூரிக்கு வராமல் போனது சசிக்குப் பெரிய மனக்குறையாக இருந்தது காரிலே போவதாக இருந்தாலும் அக்கா கூட வரும் போது சகோதர பாசத்தையும் மீறி நெருக்கமான நட்பு உணர்வுடன் காற்றில் மிதப்பது போல் மிகவும் ஜாலியாக இருக்கும் அந்தப் பயணம் அவளுக்கு என்ன மனமாற்றம் வந்ததோ தெரியவில்லை தான் இனிமேல் மல்லாகம் பள்ளிக்கூடத்தில் தான் படிக்கப் போவேன் என்று கூறிச் சரித்திரத்தையே மாற்றி விட்டாள் அப்பாவுக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை


பவுனு பவுனுதான்..!

 

 கம்பிக் கட்டின் பாரம் செல்லப்பனின் முதுகுத் தண்டை இழுத்துப் பிடித்தது. இரவில்தான் ஊரிலிருந்து திரும்பியிருந்தான். அருகே ஒத்தவாடைதான் அவன் ஊர். டவுன் பஸ் ஏறி ஒரு மணி நேரம் பயணித்தால் இறங்க வேண்டியதுதான். காலையில் முதல் லோடுக்கு வந்து விட வேண்டும் என்று கடை முதலாளி சொல்லியிருந்ததில் ராத்திரித் தூக்கமே பிடிக்கவில்லை. பவுனுவை எழுப்பி விடு என்று சொல்லியிருந்தான். அவள் கிடக்கும் கிடையில் தன்னை எங்கே எழுப்ப முடிந்தால் அவளையும் சேர்த்து, தானே எழுப்ப வேண்டும் என்று


விதையின்றி விருட்ஷம்

 

 அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது… அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக…. ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி… கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது… பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி… சுவரில் தெரிந்த அந்த மிகப்


வறுமையின் நிறம் சாம்பல்

 

 சாம்பல் பூத்த அந்தக் காடு… தன் பூத உடலைத் திறந்து ஒரு பெரும் பிணம் போல கிடந்தது. காகங்களும்….. கனவுகளும் அலைந்து கொண்டே திரியும் அந்தக் காடு… சிமிட்டாத காட்சியாக இரைந்து கிடந்தது…. முன்பு கூறியதை போலவும்… அலை பாய்ந்து கொண்டே இருந்த கண்களோடு எட்டு வயது நடக்கின்ற அந்த இரண்டு சிறுவர்களும்… காட்டின் ஒரு மூலையில்… இருந்த புதருக்குள்.. குத்த வைத்து ஒருவரோடு ஒருவர் ஒட்டியபடி.. இரட்டை தீர்க்கமென வெறித்துக் கொண்டிருந்தார்கள்….. அவர்களின் உடல் முழுக்க


யூனிபார்ம்

 

 மாலை மணி ஐந்து. சீப் இன்ஜினியரின் அறையிலிருந்து கோப்புகளுடன் வெளியே வந்த ரத்தினம், தன் சீட்டின் அருகே தனக்காக கான்ட்ராக்டர் ராமசாமியும் மகன் ஆறுமுகமும் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். தினமும் பள்ளிக்கூடம் விட்டதும் அருகிலிருக்கும் தன் தந்தையின் அலுவலகத்திற்கு வந்து விட்டுத்தான் வீட்டிற்கு செல்வான் ஆறுமுகம். கோப்புகளை மேஜையின் மீது வைத்தவன் மகனிடம், “எலே, நான் வீட்டுக்கு வரத் தாமசிக்கும்னு அம்மாகிட்ட சொல்லிருடா” என்றான். “அப்பா, யூனிபார்ம் வாங்கணும்பா..” “கண்டிப்பால, ஆபீஸ் முடிஞ்சதும் கடைக்குப் போய் உனக்கும்


மனித உரிமைகள்

 

 டாக்டர் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் அவனின் தாய்க்கு விளங்கியிருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.. உத்தியோக தோரணையில், தனது தமயன் பற்றிய வைத்திய விளக்கங்களை அந்த டாக்டர் அமைதியாகச் சொல்வதை ஒரளவு கிரகித்துக்கொண்ட அவனது தந்தையின் கண்கள் நீர்க்குளமாவை அவன் அவதானிக்கிறான்.அவனது இதயம் வெடிக்கும்போல் வேதனை அழுத்துகிறது. ஓன்றாகப் பிறந்த நான் படும்பாடு இப்படியென்றால்,பெற்று வளர்த்து.தன் தமயனைப் பெரியவனாக்கிய தந்தை தாயின் துயர் எப்படியிருக்கும் என்று அவனாற் கற்பனையும் செய்ய முடியாது. தான் சொன்ன விளக்கத்தை இவர்கள் விளங்கிக்கொண்டார்களோ இல்லையோ


பெண்மையின் வலி

 

 “உங்களுக்கென்ன,ஆம்பிளைங்க ஜாலியா இருப்பீங்க. பொம்பளைங்க நாங்கதான் கஷ்டபடுறோம். சிரிக்காதீங்க, வர்ற ஆத்திரத்தில ஓங்கி அடிச்சிட போறேன்” என்று வெறுப்பை உமிழ்ந்தாலும், சிரிப்புடன் உட்கார்ந்திருந்த என் கணவர், “ஏண்டி, ஊர் உலகத்துல இருக்கிற எல்லா பொம்பளைகளுக்கும் வர்ற சிரமம்தானே. நீ ஏன் இப்படி கத்துற. என்ன செய்யுறது, திருப்பி டாக்டர்கிட்டதான் போகனும். கிளம்பு போகலாம்”. “போய் என்ன பண்ணுறது. திரும்ப திரும்ப ஓரே மாத்திரைதான். போன தடவை ஸ்கேன் பண்றப்ப சொல்லிட்டாங்க, கர்ப்பபை எடுக்குறதுதான் ஒரே வழின்னு. நமக்குதான்


அவர்கள் சென்ற பாதை

 

 ராஜசேகர் திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல அவன் திருமணம் செய்து கொள்ள சம்மதித்த காரணத்தையும் யாராலும் கண்டறிய முடியவில்லை என்பதும் உண்மை. அவன் இப்போதும் வின் நினைவாகவே இருந்தான். அவனுக்கு வருகிற ஜனவரி 20-ம் தேதி இரண்டாவது திருமணம் என முடிவாகி, அதற்கான அழைப்பிதழை எனக்கும் அனுப்பியிருந்தான். அவனுக்கு முதல் திருமணம் நடைபெற்ற அதே மண்டபத்தில்தான், இரண்டாவது திருமணமும் நடைபெற இருக்கிறது. என் ஆச்சர்யத்தையும் கவலையையும் யாரோடு


கோடுகள்

 

 எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். வழுக்கை, குட்டை முடியுடன், நீண்ட கூந்தலுடன், சுத்தமாய் வழித்து, மூன்று நாள் தாடி, முழுத் தாடி, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள், வயதானவர்கள், வசதியானவர்கள், ஆடைகளில் பளபளக்கிறவர்கள், பஞ்சைகள், பராரிகள் என ஏக இந்தியாவின் மிகச் சரியான சித்திரமாய் அந்த இரயில் நிலையத்தின் பெரிய ஹாலில் ஒற்றையாய் – கும்பல் கும்பலாய் – சிதறி சிதறி – ஓட்டமும் நடையுமாய் பயணிகள் பர பரத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஹாலை நிறைத்திருந்த சத்தம்