கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2014

37 கதைகள் கிடைத்துள்ளன.

ரூட் பஸ்!

 

 பஸ் கிளம்பிவிட்டது. ஆடி பிறந்துவிட்டால், மதுரைப் பக்கக் கிராமங்களில் திருவிழாதான். முதல், நடு, கடைசி ஆடி தினங்களைக் கறிச்சோறு தின்று கொண்டாடுகிறார்கள். அன்று ஆடி முதல் தேதி என்பதைப் பளிச் என்று உணர்த்துகிற மாதிரி, ஒரு ஆள் பஸ்ஸுக்குள் ஆடிக்கொண்டே சந்திரனில் கால்வைத்து நடக்கிற மாதிரி, கையையும் காலையும் துழாவிக்கொண்டு சீட்டைத் தேடினார். தேனி பஸ் ஸ்டாண்ட் வளைவு திரும்பியதும் தடுமாறினார். ‘யேய்… விழுந்துராதப்பா” – விசிலடித்தார் கண்டக்டர். ”எறங்கு… எறங்கு… பல்லே வெளக்காம காலங்காத்தால ஃபுல்லா


பகிர்தல்

 

 ராஜீ: நாற்பதைக் கடந்து ஐந்து வருஷம் ஆகிறது. அழகான பெண்களைப் பார்த்தால், தன்னிச்சையாகத் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. இதுதான் அழகு என்று நிரந்தரமான கோட்பாடு ஏதாவது மனதில் இருக்கிறதா? கேவலம், அப்படியும் இருந்து தொலையவில்லை. திரும்பிப் பார்த்துவிட்டு, ‘ச்சேய்… இவளையா இவ்வளவு நேரம் பார்த்தோம்’ என என்னையே நொந்துகொண்டு, தலையைத் தொங்கப் போட்டுக்கொள்வேன். அதுவும் நாற்பது வயதுக்கு மேலும் அழகாக இருக்கிற பெண்களைப் பார்த்தாலே, பதற்றமாகிவிடுகிறேன். ரசிக்கும் ஆர்வத்துடன், குறைந்துவரும் என் தோற்ற இளமையும் சேர்ந்துகொண்டு,


இரண்டு நண்பர்களின் கதை

 

 ஒருவன் பெயர் செல்வம். (பின்னாட்களில் தமிழ்ச் செல்வன் என்று பெயர் மாற்றிக்கொண்டான்.) ஒருவன் பெயர் மாடன். இருவரும் பூம்பொழில் நாட்டில், சுந்தர சோழன் தெருவில் பக்கத்துப் பக்கத்து வீட்டில் பிறந்தவர்கள். ஒன்றாகவே பள்ளிக்கூடம் சென்றார்கள். போகும் வழியில் மாந்தோப்பு இருந்தது. காவலும் இருந்தது. தோட்டக்காரர் இல்லாத பொழுதுகள் எது என்பதை செல்வம் அறிவான். பத்துக் காய்களாவது / பழங்களாவது அடிக்காமல் அவன் பள்ளிக்கு வருவது இல்லை. மாடன், இதுபோன்ற காரியங்களில் இறங்கும் வீரனும் இல்லை; நியாயவாதியும் இல்லை.


காலத்தில் தொலைந்தவர்

 

 இரண்டொரு நாட்களாக வெப்பத்தில் தகித்திருந்த நிலத்தை குளிர்விக்கும் படியாக இன்று காலையிலேயே மழை பிடித்துக் கொண்டது. இடியும், மின்னலும் இருநாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டாலும் மழை மட்டும் இறங்கவில்லை. புதுக்குடி நிலபட்டா பெயர் மாற்றம் சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலரை சந்திப்பதற்காக காருகுறிச்சி செல்ல வேண்டியதாயிற்று. பரபர நொறுக்கு மண் சகதியாகின்ற வரையில் பெய்து கொண்டிருந்த மழை, தொண்டைக்கு இதமாக லேசான சூட்டில் தேநீர் குடிக்கின்ற தாகத்தை ஏற்படுத்த பஸ் நிறுத்தத்திலிருந்த ஒலைக்கூரை கடைக்குள் தஞ்சமடைந்தேன். கரி அடுப்பின்


உறங்கும் கடல்

 

 மறதியிலிருந்து ஆரம்பித்தால் சரியாக இருக்கும். ஏனென்றால் திரு.எம். அங்கிருந்துதான் ஆரம்பித்தார். அவருடையப் பெயரை முழுசாகச் சொல்லிவிட முடியும்; ஆனால், அது தொழில் அதர்மம். மாநில அரசு ஊழியர், ஐம்பது வயதை எட்டியவர், மதுரையில் பிறந்து வளர்ந்தவர், அங்கேயே வசிப்பவர் என்று பொத்தாம்பொதுவான தகவல்கள் சொல்லலாம். இந்தத் தகவல்களால் ஒரு பிரயோசனமும் கிடையாது தான். ஆனால், வெறுமனே அவர் அவர் என்றே தொடர்ந்து பேசுவதில், உங்களுக்கும் அவருக்கும் இடை யில் பெரிய அகழி உருவாகி விடுவது மட்டுமல்ல, எனக்கும்