கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 27, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

தெருவிளக்கும் குப்பிவிளக்கும்

 

 வெளியே குளிருடன் கடுங்காற்றும் வீசிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்புறமாக மரக்கறித்தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மாலினி குளிருக்கும் காற்றுக்கும் ஈடு குடுக்க முடியாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். வீடு ஒரே வெளிச்ச மயமாகக் காட்சி தந்தது. “இந்தப் பிள்ளை சொல்வழி கேளாது. எல்லா ‘லைற்’றையும் எரியவிட்டு வீட்டைத் திருவிழாவாக்கி வைச்சிருக்கு. ரிஷி எங்கே நிக்கிறாய்?” ஹோலிற்குள் ரெலிவிஷனில் மூழ்கி இருந்த பாஸ்கரன், மாலினியின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். பாஸ்கரனிற்குப் பின்புறமாகப் பதுங்கி இருந்தான் ரிஷி. “ரிஷி இஞ்சை வா. உனக்கு


ஒரு நீண்ட நேர இறப்பு

 

 மிகமிக நீண்ட துாரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த அவன் கைகள் கிளைகளாய் நீண்டு அவள் இடுப்பில் மெல்ல நகர்ந்து காயங்களின்றி இறுக்கி, இழுத்தது. முழங்கால் மடித்து குதியினால் அவன் தொடையில் ஓங்கி உதைந்தாள் அவள். அவன் பிடி இறுக நோக்கண்டாள் அவள். “போ விடு” சிணுங்கலோடு விம்மினாள். எறிந்த பந்தின் விசையாய் அவள் முதுகோடு ஒட்டி காதோர மூச்சு தலைமயிர் கலைக்க “ஏனம்மா” என்றான்.


தூக்குக் கயிறு

 

 நான் சொல்லுவதனைக் கொஞ்சம் நுணுக்கமாகவும் அவதானமாகவும் கேட்டுக் கொள்ளுங்கள். நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு உங்களில் யாருக்காவது பதில் சொல்ல முடியுமா…என்று எனக்குத் தோணவில்லை…உங்களால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா என்று எனக்குத் தெரியவுமில்லை. உங்களில் யாருக்காவது உங்களது மரணம் அல்லது சாவு நிச்சயிக்கப்பட்டுள்ள நேரம் எதுவென்று தெரியுமா அல்லது உங்களால் உறுதிப் படுத்திச் சொல்லத்தான் முடியுமா… குணப்படுத்தவே முடியாத எயிட்ஸ் லியூக்கேமியா நோய்க்காரர்களுக்குக் கூட குறிப்பிட்ட காலத்தில் இவர்கள் செத்து விடுவார்கள் என வைத்தியர்கள்


36,பெருமாள்புரம்.

 

 ஊருக்குப் போக வேண்டும் என்று தோன்றியவுடனே இவனுக்கு எப்படியாவது பெருமாள்புரம் போய் வசித்த வீட்டைப் பார்த்து விட்டு வந்து விட வேண்டுமென தோன்றியது.கம்பெனியில் மீட்டீங் வைத்து அவன் சந்திக்க வேண்டிய வியாபார நபர்களைக் குறித்துக் கொடுத்தார்கள். எதுவுமே மனசில் இல்லை.வீட்டுக்கு அருகாமையில் உள்ள ரவுண்டானாவும் செல்லப்பா பரோட்டா கடையும் இப்போது இருக்குமா என்று தோன்றிற்று. அந்த ரவுண்டானவை சுற்றி தான் இவன் தொட்டு பிடித்து விளையாடியிருக்கிறான்.அப்போதெல்லாம் மணி வீடு தான் பக்கத்து வீடு. ஒருதடவை அப்படி ஓடி


சைக்கிள் முனி

 

 ‘எனக்கு ஒரு பாடை அனுப்பவும் ‘ பாலன் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஏனோ சிரிப்பு வந்தது. அதையே பாட்டாகப் திரும்பத் திரும்பப் பாடியபடி திரெளபதி அம்மன் கோயில் பொட்டலுக்கு டயர் வண்டியோடு அவன் போய்ச் சேர்ந்தபோது உச்சி வெய்யில் மணடையைப் பிளந்து கொண்டிருந்தது. வண்டி என்றால் அதொன்ணும் வண்டி இல்லை. வெறும் பழைய டயர். அப்பா சைக்கிளுக்கு டயர் மாற்றியபோது சைக்கிள் ரிப்பேர் கோவிந்தராஜு கடைக்குக் கூடப் போய்ப் பழைய டயரைப் பத்திரமாக வாங்கி வந்திருந்தான் பாலன்.