கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2014

110 கதைகள் கிடைத்துள்ளன.

அட நாராயணா!

 

 காலையில் நான் பேப்பர் படிக்க உட்காருவதும், “ஸார்!” என்று கூப்பிட்டுக் கொண்டு அடுத்த வீட்டு நாராயணசாமி ஐயர் வருவதும் சரியாக இருக்கும். ஆசாமி வந்து விட்டால் நான் பேப்பர் படித்தாப் போலத்தான்! அவர் கையில் அதைக் கொடுத்து விட்டுச் ‘சிவனே’ என்று உட்கார்ந்து விட வேண்டியதுதான்! இதுதான் தொலையட்டும். இன்னும் கேளுங்கள்.   சாயந்திரம் ஆபீஸிலிருந்து வருகிறோமா? சற்று விச்ராந்தியாக சம்சாரத்தோடு பேசிக் காலங் கழிக்கலாமென்று ஆவல் இருக்குமா, இராதா? நமக்கு இல்லாவிட்டாலும் சம்சாரத்துக்காவது இருக்கும் அல்லவா?


கூட்டணிக் கட்சி

 

 தூக்கம் வராததால் ராமனுக்கு அந்த இரவு மிக நீண்டு இருப்பது போல தோன்றியது. நாளை அவனுக்கு விடுதலை… நாளை முதல் கொசுக்கடியிலும், மூத்திர நாற்றத்திலும் தூங்க வேண்டாம். நாக்கை சாகடிக்கும் உப்பு சப்பில்லாத ஜெயில் சாப்பாட்டை சாப்பிட வேண்டாம். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கழித்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் போகிறான். மறுநாள் அவனுக்கு விடுதலை என்பதை இன்று சாயங்காலம்தான் வார்டன் வந்து சொல்லிவிட்டுப் போனார். விடுதலை என்ற அந்த ஒற்றைச் சொல் ராமனுக்குள் பலவிதமான எண்ணங்களை எழுப்பி


ஆட்டுக்கல்லு

 

 வீட்டின் முற்றத்தில் ஆட்டுக்கல்லை இறக்கி வைத்தார் அப்பா. தனது ஆசையை நிறைவேற்றி விட்ட பூரிப்பில் அம்மா அப்பாவுக்குக் காப்பி கொடுத்துக் கொண்டிருந்தாள். அண்ணனும் நானும் ஆட்டுக்கல்லையே வெறித்துக்கொண்டிருந்தோம். உரலில் வெற்றிலையும் பாக்கையும் ஒன்றாக இடித்து வாயில் திணித்துக்கொண்டே ஆட்டுக்கல் மீதான விசாரணையைத் தொடங்கினாள் பாட்டி. “யேன்டா இந்த கல்லு என்ன வெல?” “முப்பது வெள்ளி “ “என்ன கல்லாம்? கருங்கல்லா இல்ல மாவு கல்லா?” “கருங்கல்லுதான்” “பாத்தா மாவு கல்லு மாதிரில்லடா இருக்கு” “ஆமா, பூவிழுந்த கண்ணுல


வேலை

 

 அர்த்தத்தோடுதான் அழைக்கிறார்கள்; கோலாலம்பூரை மாநகர் என்று. மணி காலை பதினொன்று இருக்கும். இன்றைக்குப் பிழைப்பைப் பார்க்கப் புறப்பட்டேன். கோலாலம்பூரில் ராபிட் கே.எல். பஸ் இருக்கும்வரை எனக்கு எவ்வளவோ வசதி. நாள் முழுக்க நகரத்தில் பெரும்பகுதியைச் சுற்றினாலும் இரண்டு வெள்ளிக்குமேல் போகாத பஸ் கட்டணம். எனக்கு வேலை நிரந்தரமான ஒரே இடத்தில் இல்லை. இங்கும் அங்கும் அலைய வேண்டியிருக்கும். அதிக அவசரம் என்றால் ஓட வேண்டியதுகூட இருக்கும். மோட்டார் சைக்கில் வாங்கியிருக்கலாம்தான். ஆனால், வாங்காததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று,


ஓரி

 

 “ராமாயி நான் வேலைக்கு கிளம்பறேன்” என்றவாறே வெளியே கிளம்ப தயாரானான் பரமசிவன் “நான் சொன்ன நீ எங்க கேட்க போறே அந்த கேடு கேட்ட வேலைக்கு போகதைன்னு நான் எத்தன முறை சொல்லிட்டேன்” “ஏய் சும்மா இருடி!இந்த ஊர்காரங்க மாதிரி நீயும் புத்தி இல்லாம பேசாத அவங்கதான் உருப்படாத பசங்க அவங்களோட சேர்ந்து என்னையும் கஷ்டப்பட சொல்லறியா” அங்கே மாடசாமி பிள்ளை வரவும் இருவரும் பேச்சை நிறுத்தினர் ராமாயி ” வாங்கன்னே உட்காருங்க” என்னம்மா காலையிலேயே ரெண்டு