நிலையூன்றி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 7,188 
 

கெங்கம்மா பாட்டியின் அன்றாடங்கள் அனைவரும் அறிந்ததுதான், உங்களையும் என்னையும் மட்டுமல்ல அவர்களைனைவரையும் எட்டிப் பிடிக்கும் அளவு பிரசித்திப்பெற்றதாய்/

எப் எம் ல் சப்தமாய் பாட்டு வைத்து கேட்கிற அடுத்த தெருவின் மூணாவது வீட்டிலிருந்து வருபவன் அவளுக்கு பேரன் மாதிரி/

குட்டையாய் கைகால் திரண்டு இருக்கும் அவன் கொஞ்சம் பூசியது போல புஷ்டியாகவே…… காரச்சேவுக்கு கையும் காலும் முளைத்தது மாதிரிஎன ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அவனைப் பார்த்து, ஒரு காலத்தில் என்ன ஒரு காலத்தில்,,,,,,?சற்றைக்கு முன்னதான இரண்டு வருடங்கள் முன்பு வரைஅப்படித்தான்இருந்தான். இருக்கட்டுமே இருந்து விட்டுத்தான்போகட்டுமே,என்னஇப்பொழுதுகுறைந்து போனது என அவனது வீட்டார்களால் வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை அவனது உடல் நிலை குறித்து அவர்கள் சொன்னார் கள்,இவர்கள்சொன்னார்கள்எனவைத்தியம் பார்த்தார்கள், சரோஜா துணிக்கடை மாடியில் மரு ந்து ஊற்றுகிறார்கள் என அவனைக் கூட்டிக் கொண்டுபோனார்கள்.ம்கூம்,,,,,எதிலும்தெளிவாகவில்லை அவன், எதற்கும் அசை ந்து கொடுக்கவில்லை அவனது உடம்பு.

முன்பு குடியிருந்த தெருவிலிருந்து இங்கு வந்து குடியேறிய ஓரு வாரத்திலேயே பாட்டியின் பழக்கம் அவனுக்கு கை வரப் பெறுகிற து.அப்படி கைவரப் பெற்ற பழக்கம் பாட்டியின் வளர்ப்புப் பிள்ளை யாக்கி விடுகிறது அவனை. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நேராக பாட்டியின் வீட்டுக்காய் தான்இருக்கும் அவனது படையெடுப்பு. ஹாக்கி விளையாடப் போகிற தினங் க ளில் மட்டும் விதிவிலக்கு விட்டு விடுவான் பாட்டி வீட்டின் வருகைக்கு அன்றைக்கு பாட்டிக்கு கையும் ஓடாது.

காலும் ஓடாது,இந்த வருடம்தான் ஹாக்கிடீமில் சேர்ந்தான்,மனமும் உடலும் ஒத்துப்போன விளை யாட்டு அது என்பது மட்டுமல்ல எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு,தவிர படிப்பு போக ஏதாவது எக்ஸ்ட்ராவாக வேண்டும் எனக்கு என்றான்.அவன் ஹாக்கி டீமில் சேர்வதற்கு வீட்டில் முழுச்சம்மதம் சொல்லி விட்டார்கள்.அவனது பேச்சிற்காக மட்டும ல்ல,சரி கேட்கிறான் அல்லதுஆசை கொள்கிறா ன்.இருந்து விட்டுப்போகட்டும்,வேறு எதற்காகவாவ து இல்லா விட்டாலும் கூட உடம்பாவது நன்றாக இருக்குமே,என சேர்ந்த பிறகு தான் சொல்கிறான் ஒவ்வொன்றாக, சூ,சாக்ஸ், பந்து, ஹாக்கி பேட் எல்லாம் வேண்டும், இது தவிரநல்லதான சைக்கிள் ஒன்று என அவன் லிஸ்ட் வாசித்த போது வீட்டில் கிரங்கிப் போனார் கள்.இப்பொழுதே இப்படி என்றால் இன்னும் போகப் போக எப்படி யோ?சொல்லி விட்டார்கள் வீட்டில் தாங்காதுப்பா நமக்கு இது என அப்பா சைக்கிள் கடைவைத்திருந்தார். ஏதோகைக்கும் வாய்க்குமாக ஓடிக்கொண்டிக்கிறது வாழ்க்கை. இதில் இவன் வேறு என்கிற விதமாய் என பேசிக் கொண்டி ருந்த நாளொன்றின் நகர்வில்தான்பாட்டியிடம் சொல்லியிருப்பான் போலும் பாட்டிதான், ”மொதல்லசூ வும், ஹாக்கி மட்டையும் வாங்கிக்க,அப்புறமா சைக்கிள் இத்தியாதி, இத்தியாதியெல்லாம் பாக்கலாம் என பணம் கொடுத்தாள்.

அவனது அம்மா வந்து பாட்டியிடம் எதற்கு இதெல்லாம் என நாகரீகமாக மறுத்த போது நீ ஒண் ணு சும்மா கெட,அவன் படிச்சி வேலைக்கி போன பிற்பாடு நான் சேத்து வச்சி வாங்கிக்கிற மாட் டேன் என்றாள்.கண்ணீர் ஒழுகும் மென் சிரிப்புடன்.அப்படி பேசிய அவளது பேச்சில் ஒளிந்திருந்த மென் சோகம் யாருக்கும் பிடிபடாததாய் இருந்த போதும் கூட அவனின் தாயாருக்கு அடையாளப் பட்டுப் போகிறது/

இப்படியான ஆரம்பமே அவர்களது பழக்கத்திற்கும், பேச்சிற்கும்அடிநாதபிம்பமாய்/

அவனிடம் அவள் சொல்வதை விட அவளிடம் அவன் சொல்வதே நிறைந்து இருக்கிறது.எப்பப்பாரு பாட்டி ஒங்க தெருவுல இருக்குற அந்த நாலாவது வீட்டுக்காரரு பழைய பாட்டா வச்சி கேட்டுக்கிட்டி ருக்குறாரு.அதுவும் ஹோம் தியேட்டர்ல,D T S எபெக்டோட என்கிறான்.

அதிர்வில் யுவன்சங்கர்ராஜாவையும், ஏ.ஆர்ரகுமானையும் மெலடியில் இளையராஜாவையும் வைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறவன் அவன். பீபீ ஸ்ரீனிவாஸ், பிசுசிலா காம்பினேஷனில் எம்.எஸ்.வியை இழைத்து ஓட விடுகிறவராக அவர்.

கலெக்டெர் ஆபீஸில் ஹெட்கிளார்க்காக வேலை செய்கிறார். தேனிப் பக்கத்துக்காராம், பணி மாறுதலி ல் இங்குவந்துவீடு எடுத்து தங்கியிருக்கிறார், வாரத்திற்கு ஒரு தடவை ஊருக்கு போய் வருகிறார். வயதுக்கு வந்த ஒரு பெண் பிள்ளையும்,பத்தாவது படிக்கிற ஒரு பையனும் இருப்பதாய்ச் சொன்னார். வீடெடுத்து தங்கியிருப்பது சமையல் செய்து சாப்பிட உதவியாய் இருக்கிறது என்கிறார்.

அவர் வேலைக்குப்போய் வருகிற நேரம் தவிர்த்து அவரது வீட்டில் எப்படியும் இவரின் கூடவே நான்கு இளைஞர்கள் இருப்பார்கள், அவர்களில் இருவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண் டிருப்பதாகவும் இன்னும் இருவர் டின் பேக்ட்ரியில் வேலை செய்வதாகவும் சொன்னார்கள். நால்வரில் ஒருவர் நன்றாக ஓவியம் வரைவார்,ஒருவர் புத்தகப் புழு, இன்னும் இருவரில் ஒருவர் துருதுரு வென ஏதாவது செய்து கொண்டிருப்பவராய்,சமயங்களில் அணிந்து கொண்டிருக்கிற பேண்ட்டிலேயே கவிதை எழுதுபவராயும் கூட/இன்னும் ஒருவர் அணைந்து போன பல்பாய் சில சமயங்களிலும், பளிச்சென பிரகாசிக்கிறவராய்சில சமயங்களிலுமாய் காட்சிப்ப ட்டுத் தெரிவார். அப்படியான துருதுருப்புத் தன்மை யே அவரிடம் அவர்களை ஒட்ட வைத்தும் அவர் செய்யும் வேலைகளில் அவர்கைகளையும் மனங்க ளையும் கலக்க வைத்ததாக.இதுவே போதுமானதாய் இருந்தது அவ்ர்பக்கம் அந்த இளைஞர்களை ஈர்க்க வும்,அவரது பேச்சை கவனிக்க வைக்கவுமாய்.

அவர் அப்படி ஒன்றும் பெரிதாய் சொல்லி விட வில்லை அவர்க ளிடம்/ அவர்கள் சார்ந்து நிற்கிற நடிகரின் ரசிகர் மன்றம் தாண்டியும் அதனுடைய செயல்பாட்டையும் தாண்டிய உலகம் பெரிதாய் விரிந்து கிடக்கிறது,அதில் நிரம்பிப்போய் இருக்கிற யதார்த்தமும் சித்தாந் தாமும் வாழ்க்கைக்கு தேவை யானதாய் இருக்கிறது என்றார்.

அன்று அவர் சுட்டிக்காட்டிய உலகில் மெல்ல மெல்ல காலடி எடுத்து வைத்த அவர்களது பயணம் இன்று வரை ஒருவிதவாழ்க்கை புரிதலுடன் பயணித்துக் கொண்டிருப்பதாய்/

இசை பற்றி பேசும் போது சாத்தூர் நண்பர் சொல்வார் தோழரிடம். சாதாரணப் பாட்டுதான் என ஆரம்பித்து ”கும்பாபி ஷேகம் கோயிலு க்குத்தான்”, என்கிற பாடலில் அடி வைத்துத்தொடர்வார் பேச்சை. மணிக் கணக்கில் நீளும் அவரது பேச்சு பாடல்களை இப்படி யும் கேட்கலாம் என படம் விரிப்பதாய் அமையும். பேச்சின் ஊடு ஊடாக தோழரும் சில மெலடிகளை, அதிரடிகளை படங்க ளில் ஒலிக்கிற பிண்ணணி இசையின் லயங்களை எடுத்துக்கோர்த்து விடு வார். அவர்கள் இருவரது பேச்சில் இவன் எப்பொழுதும் கேட்பாளனாக மட்டுமே ஆகிப் போவான். இவன் கொட்டாவிவிடாமலும், மனக் கவனம் வேறு பக்கம் திரும்பாமலுமாய்/

அவர்களது பேச்சின் ரசவாததை கேட்டுக்கொண்டிருக்கையில் அவர் கள் இருவரும் திரும்பிப்பார்த்தால் இவன் பங்குக்கு ஒன்றிரண்டு காதல் பாடல் களை சேர்த்து விடுவான்.

அது என்னவெனத்தெரியவில்லை. வார்த்தைகளை கோர்க்கிறபாடலாசிரியர்களிலிருந்து இசையமைக்கி ற இசையமைப்பாளர்கள்வரை ஒருவித மோனல யம் சுமந்து கொடுத்து விடுவார்கள் காதல் பாடல்க ளை.மனம்நன்றாயிருக்கும்படியாயும்,கேட்கிறவர்மனம்கனமற்றுப் போகும்விதமாயும்/

“சிப்பிஇருக்குது, முத்தும் இருக்குது”,,,,,,,”பால் இருக் கும், பழம் இருக்கும்” என இன்னும் இன்னுமா யும் வார்த்தை லயம் சுமந்து இருக்கிற பாடல்கள் எப்பொழுதும் போல இன்னும்/

முள்ளைவைத்துஅடைக்கவேண்டும்இந்தப்பாதையில்,வேறுயாரையும்நடமாட விட மாட்டேன் இது எங்களது வீட்டு முன் இருக்கிற இடம்,இது நாங்கள் ரோட்டடிக்காக ஒதுக்கினது. என இவர்கள் இந்த ஏரியாவில் வீடு கட்டி குடிவந்த புதிதில் பாடாய்ப் படுத்தி விட்டாள் பாட்டி.என்ன செய்ய வயதான வள் இவளுடன் போய் சரி மல்லுக்கு நின்றால் எப்படி சரியாகும்?பார்பவர்கள் ,பேசுபவர்கள் என்ன சார் நீங்களாவது கொஞ்சம்,,,,,,,,என்பார்கள்,அந்த ஒற்றை வார்த்தைக் காய் ரொம்பவுமே அனுசரித்து போக வேண்டியதாகிப் போனது.

பாட்டிக்கு ஒரே பயம்.தெரு முனை திருப்பத்தில் இருக்கிற வீட்டின் சுவரை ஓட்டி திரும்புகிற தண்ணீர் லாரி அல்லது வேறு ஏதேனுமான வாகனம் வீட்டின் பக்கச்சுவரையும் படியையும் இடித்து விடுமோ என/

தவிர தன் இருப்பை முன்னறிவிக்கிற விதமாய் ஏதாவது செய்து கொண்டே இருப்பாள். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சாக்கடை அடைத்திருகிறது என சண்டைக்கு போவாள்.தெருவில் வருவோர் போவோரிடம்வாய்வம்பு பேசுவாள். அவளது வீட்டு நடைக்கு எதிரில் தான் தெருக்குழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் பிடிக்க வருகிறவர் களை ஏதாவது ஜாடையில் பேசுவாள்.சுதிக்காக அவளது வீட்டுத்தி ருப்பத்தில் இருக்கிறவளை சேர்த்துக்கொள்வாள்.

யாராவது தண்ணீர் பிடித்து வீட்டு நடையில் வைத்து விட்டால் அல்லது வீட்டு நடைக்கருகில் வைத்து விட்டால் வைத்தவர்களின் வீட்டு ஒழுக்கமும், அவர் க ளது ஒழுக்கமும் தெருவில் இழுத்துப் போடப்படும் அவளால்.

இப்படித்தான் ஒரு நாள் காலை வேளையாக தெருவின் குறுக்காக முள்ளை வெட்டிக்கொண்டு வந்து போட்டு விட்டாள்.காலை வேளை அலுவலகம் செல்கிற அவசரம்,பரபரப்பு சுமந்த மனது என சைக் கிளில் ஏறி சென்று கொண்டிருந்த வேளைபாட்டியின் வீட்டருகே தெருவை கடக்க முற்பட்ட போது தெருவின் குறுக்காய் சுவர் எழுப்பி அடைத்தது போல முள்ச்செடி கிடந்தது.காலையிலே யே சொல்லி சப்தம் போட்டுக்கொண்டிருந்தாளாம். இனிமேல் என் வீட்டு முன்பாக யாரும் நடமாடக்கூடாது என/

அப்போதெல்லாம் இத்தனை வீடுகள் கிடையாது இந்தத்தெருவில்/வண்ண வண்ண பூக்கள் பூத்து நிற்பது போல தெருவின் இரு பக்கமுமாய் காட்சியளி த்து கட்டப்பட்டிருக்கிற வீடுகள் வரும் முன்பாய் இவளது வீடும் அவளுக்கு பக்கத்து வீடும் மட்டுமே இருந்திருக்கிறது.

அவசரமாய் சைக்கிளில் ஏறிய போது கவனிக் கவில்லை இப்படி ஒன்று கிடந்ததை.சைக்கிளுடன் அருகில் போனதும் சற்று அதிகமா கவே எரிச்சலாகிப் போகிறான்.முள்ளைத் தூக்கிப் போட்டு விட்டு பாட்டியிடம் சப்தம் போட்டு விட்டு போனான்.

இது நடந்த இரண்டொரு நாளில் அவள்வீட்டு நடையின் முன்பாய் காரை நிறுத்தி விட்டு போய் விட்ட யாரையோ காற்றில் வைது கொண்டிருந்தாள். இவனிடம் வந்து சொன்னாள்.பாரு தம்பி,இப்பிடி நிப்பாட்டிட்டு போயிட்டா நாங்க எப்பிடி பொழங் குறது?என்றால் கோபமாயும் ஆதங்கமாயும்/

முள் வைத்த அன்று சப்தம் போட்டதிலிருந்து இவனிடம் கொஞ்சம் நிமிர்ந்த தனமற்றே நடந்து கொள்கிறாள்.எஞ்சினியர்தான் வந்து சொன்னார்.” வயசா ன காலத்துல இப்பிடி எல்லார் கூடயும் போய் சண்ட போட்டுக்கிட்டு திரிஞ்சா, எப்பிடி?இந்தா ஒரு மணி நேரமா அல்லாடிக்கிட்டித் திரியி றீங்க, யாரா வது வந்து என்ன கேக்க நாதி இருக்கா,நீங்க சொல்லும் போது எல்லாரும் சரி சரின்னு கேட்டிக்கு ருவாங்க,மனசுக்குள்ள பூராம் வேணும் இந்ததிமிர் புடிச்ச கெளவிக்குங்குவேணுப்க்குறதுதான் நெரம்பி இருக்கும் பாத்துக்கங்க இனி மேலாவது கொஞ்சம் நெளிவு சுளிவா நடந்துக்கப் பாருங்க என/

அவர்சொல்லிவிட்டுப்போன ஐந்தாவது நிமிடம் அவளது வீட்டின் முன்னாக இருந்த ஜீப் காற்றில் கரைந்து விட்ட நீர்த்துளியாகிப் போனது. இந்த சம்பவ ம் நடந்தன்றுஞாயிற்றுக் கிழமைகாலையாக இருந்தது.

எஞ்சினியர்தான்சொன்னார்பின்பு ஒரு நாளில்.அது ஏங்வண்டிதான் சார், ஒரு சின்னஅதிர்ச்சி வைத்திய த்துக்காக இப்பிடி செஞ்சது.இனிம இதுவும் இதுக்கு தொணையா நின்னு வம்பு பேசுறவளும் எதுவும் பேசமாட்டாங்க யாருகிட்டயும்” என்றார்.

”ஆட்டக் கடிச்சி மாட்டக்கடிச்சி மனுசன்கடிச்ச கதையா நம்ம வீட்டு நட முன்னாடியே வந்து வம்பு பேச் ஆரம்பிச்சிருச்சிக ரெண்டும்.சரி நல்லாயிருக் காது இனி இப்பிடியே விட்டான்னு பக்கத்துத்தெருக் காரந்தான் நானுன்னாலும் கூட பஞ்சாயத்துல சொன் னாங்கன்ன்னு சும்மானாச்சுக்கு தெரு பூரா சங்கிலி போட்டு அளந்தேன், ஆச்சரியம் பாருங்க உள்ள படிக்குமே அந்தம்மா வீடு ரெண்டடி தள்ளி தெருவில நிக்குது.சொன்னேன் அந்தம் மாட்டப்போயி இப்பயே போயி பஞ்சாயத் துல சொன்னேன்னு வையிங்க வந்து வீட்ட இடிச்சிருவாங் கன்னு சத்தம் போட்டுட்டு வந்தேன், அதுக்கப் புறம் இப்ப ஜீப்பக் கொண்ணாந்து நிறுத்துனேன். இனிம பாருங்க எந்தச்சத்தமும் இருக்காது. என சொல்லி விட்டுச் சென்ற மறு நாளின் மாலை வேலையாய் ரேஷன் கார்டை தூக்கிக்கொ ண்டு வந்து விட்டாள்.

என்னமோ போ இப்பிடி செஞ்சா என்ன செய்யட்டும் நானு,ஒத்தாளு எதெதுக்கு அலையுறது சொல்லு, தம்பி இருக்கா வீட்டுல, இருந்தா ரேஷன் கார்ட ஒட்டி வாங்கீட்டு போகலாம்ன்னு வந்தேன். தீப்பெட்டி ஆபீசுல போயி பசையெல்லாம் வாங்கீட்டு வந்துட்டே ன், ஆனா எப்பிடி ஒட்டுறதுன்னு தெரியல,நான் இப்ப என்ன செய்யட்டும் என அவள் மனைவியிடம் பேசிகொண்டிருந்த போது அப்பொழுதான் அலுவலக ம் விட்டு வந்திருந்த இவன் பேண்ட் சட்டையை கழட்டிக் கொண்டிருந்தான் பாட்டியின் பேச்சை காதில் உட்பொதித்தவாறே/

இவ்வளவு நேரம் ஆகிப் போகிறதுதான் அலுவலகம் விட்டு வர. இன்று கொஞ்சம் காலதாமதமே, ஆனாலும் ஏழுமணிக்குள்ளாய் வந்து விட்டிருந்தான்.

பாரு தம்பி புதுசா கார்டு தருவோன்னு சொன்னாங் க,இப்ப ஒரு சிலிப்பக்குடுத்து பழைய கார்டுல ஒட்டிக் கங்ன்றாங்க என்னதான் செய்யட்டும் நானு, என்ன மோ போ கொடுமையாத்தான் கெடக்கு என்றாள்.

இவரக்கட்டிக்கிட்டு என்னசெய்யட்டும்தம்பி,இந்த தள்ளாத வயசுல, எனக்கு முன்னாடிஅவருபோயி சேந்துரணும், ஆமாம், இல்லைன்னா அவரு ஒத் தையில கெடந்துதவதாயப்பட்டுப் போவாரு, ஏன்னுகேக்கக் கூட நாதியத்தவங்களாத்தான போனோம் நாங்க/இதுல தாத்தாவ கவனிக்க எனக்கு ஏது நேரம் சொல்லு.

காலையில எந்திரிச்சி அவர் பாத்ரூம் போக வச்சிப ல்லு வெளக்கி குளுப்பாட்டி விட்டு சமையல் பண்ணி அவருக்கு பண்டுதம் பாக்குற துக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிப்போகுது/ஊடு ஊடு ஊடா அவர வாரத்துக்கொருக்க ஷேவிங் பண்ண கூட்டிக்கிட்டுப் போகணும். அவர கூட்டிட்டுப்போயி வாரதே பெரும் பாடா இருக்கு, முன்ன மாதிரி இல்ல பார்வ கம்மியாகிப் போச்சு, நிதானம் இல்ல, ரொம்பத் தூரம் நடக்க முடியல, பத்தடிக்கொருக்கா உக்காந்துக்குர் றாரு, ரொம் பத்தான் சங்கடமாக்கிப்போகுது. வீட்டுக்கு வரமாட்டேங்குறாங்க கடைக்காரங்க, வெள் ளிக்கெழம மாதிரி நாள்கள்ல போயி வர்றம்ன் றாங்க,அது எப்பிடித்தம்பி ஒரு நல்ல நாளும் அதுவுமா வீட்ல ஒக்காந்து ஷேவிங் பண்ணீட்டு இருப்பாங்க” என்று அதை ஒட்டிமாய் நிறைய பேசும் போதும் ”சொந்தக்காரங்க யார் வீட்லயும் போயி இருக்குற மாதிரியெல்லாம் இல்லப்பா,அது கெடக்கு இந்தா இருக்குற மல்லாங்கெணறுல இருந்து கெப்பிலிங்கம்பட்டிஅழகிய நல்லூர்ன்னு இருக்காங்க. அக்கங்க,இவ்வளவு எதுக்கு,உள்ளூரிலயே கொத்த வால் சாவடி தெருவுல சொந்தக்காரங்க இருக்காங்க, தாத்தா கூடச்சொன்னாரு நாந்தான் இப்பயே போயி கைகால் நல்லா யிருக்குறப்பயே எதுக்கு,இருக்குற மட்டும் இருப்பம்.பின்னாடி படுத்துக் கிட்டப்பறம் யாரு வந்து பாக்குறாங்களோ, அவுங்களுக்கு இந்த வீட்ட எழுதி வச்சிட்டு பேசாம அவுங்க கூட போயிற லாம்ன்னு இருக்கேம்பா,இப்பதைக்கி அடுத்த தெருவு ல இருக்குற மூணாவது வீடடுப்பயந்தான் வந்து உதவி பண்றான்.எங்க சொந்தக்காரங்க பையன் அவன்.ஏங் பேரன் மாதிரி அவன். புள்ளைங்க இல்லாத எங்களுக்கு புள்ளையாவும்,பேரனாவும் இருக்கான்.

முருகன் கோவில் சந்தைக்கடந்து வந்து கொண்டிரு ந்த பொழுது கோவில் வாசலுக்கு எதிர்த்தாற் போல் இருக்கிற தையல் மாலில் இருக்கிற சவுண்ட் சர்வீஸீலிருந்துபழையபாடல்களும்,புதிய பாட ல்களு மாய் காற்றில் கலந்தும் மிதந்துமாய் பாலிருக்கும் பழமிருக்கும் எனவும் கும்பாபிஷேகம் கோயிலுக்குத் தான் எனவுமா ய் பாடிக்கொண்டிருந்த வேளையில் வழக்கமாய் நிற்கிற கடையில் டீக்குடிப்பதற்காய் சைக்கிளை நிறுத்துகிறான்.

டீயைக்குடித்துக்கொண்டேபக்கத்திலிருந்தரோட்டோரடீக்கடையில்புரோட்டாபார்சல்சொன்னவன்இரண்டு ஸ்பெ சல் தோசைகளையும் சேர்த்துக் கட்டு மாறு பணிக்கிறான்.

தாத்தாவுக்கும், பாட்டிக்கும் தோசை பிடிக்கும்தானே?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *