கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 24, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

பூங்கொத்து கொடுத்த பெண்

 

 நான் பாகிஸ்தானில் போய் இறங்கி இரண்டு மணி நேரம் முடிவதற்கிடையில் வேலை கேட்டு என்னிடம் ஐந்து விண்ணப்பங்கள் சேர்ந்துவிட்டன. நான் அப்பொழுது பணியில் சேரக்கூட இல்லை. என்னுடைய வேலையை பொறுப்பேற்பதற்கு இன்னும் 15 மணி நேரம் இருந்தது. ஆனால் விண்ணப்பங்கள் வரும் வேகம் குறையவில்லை. நான் விமான நிலையத்திலிருந்து பிடித்து வந்த வாடகைக்கார் சாரதியிலிருந்து, ஹொட்டல் சேவகர் வரை வேலைக்கு விண்ணப்பம் செய்தார்கள். இதில் அதிசயம் என்னவென்றால் இவர்கள் எல்லோரும் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த விண்ணப்பக் கடிதங்களையே


சந்தான லெட்சுமியும் சைக்கிளும்

 

 சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து இரண்டு வயதாகும் சந்தான லெட்சுமி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை ஆசையோடு பார்ப்பாள். எப்படித்தான் இந்தக் குழந்தைகள் ஒரே நாளில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்கின்றனவோ? என்று ஆச்சரியப்படுவாள். அவள் மகன் பிரபு ஆறாவது படிக்கும்போது தன் தந்தையின் பெரிய சைக்கிளை எந்தவிதச் சிரமமுமின்றி ஓட்டினான். சந்தான


கோல பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர் வரை

 

 ஊட்டச்சத்து தின்னுத் தின்னு நாளுக்கு நாள் வெரசா வளருது பார் கட்டடம். மாசத்துக்கு ஒரு கட்டடமாச்சும் முளைச்சுருதுடா சாமி இந்த கோலாலம்பூருல. பய மவனுங்களுக்கு மட்டும் பணம் காய்க்கிற மரம் எப்பிடிதான் கெடைக்குதோ? போன வாரம் வரைக்கும் அந்த பிரிக்பீல்ட்ஸ் ட்ராபிக்காண்ட நின்னாக்கா அந்தாண்ட ரோடு நல்லா தெரியும். திடுதிப்புனு காளான் மாதிரி மொளைச்சிடுச்சு இம்மாம்பெரிய கட்டடம். எம்மு, ஏ, எக்குசு, அப்பறம் ஐய்யி, கடசியா எஸ்ஸு, ன்னு நீலக்கலருல மலாய்ல எழிதி வச்சிருக்கானுங்க பெருஸ்ஸா. நம்ம


டிங்கு குட்டியும் பிங்கு வாத்தியாரும்…

 

 சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன. சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன. அங்கு, பிங்கு என்ற மனிதக்குரங்குதான் தமிழ் கற்றுக் கொடுத்தது. அவர் பாடம் நடத்தும் முன்பு திருக்குறள் கதைகளைக் கூறுவார். எல்லா மாணவர்களும் ஆர்வத்துடன் கதைகளைக் கேட்பார்கள். இதற்கு டிங்கு யானைக்குட்டி மட்டும் விதிவிலக்காக இருந்தது.


அட்சதைமழை

 

 அந்த அனெக்ஸ் குடியிருப்பு மனிதர்களையெல்லாம், கட்டளையிட்டு வழி நடத்திச் செல்கின்ற மிகவும் அழகானதொரு ராஜகுமாரன் போல் அவன் இருக்கிறான். ராஜ்குமாரென்ற அவன் இயற் பெயரை இந்த லட்சணங்க்ளுடன் சேர்த்துக் கொஞ்சம் மாற்றினால் அவன் அசல் ராஜகுமாரன் தான். அப்படித் தான் ஒரு ராஜ வம்சத்திலேயே வந்து பிறந்திருப்பது போலக் கர்வம் மாறாத அவன் சுய தோன்றுதல்களான நடத்தைகளிருந்தே, அவனை அறியாமலே அவை இயல்பாக வெளிப்பட்டு வரும். அவனோடு நேர் நின்று பேசவே பயப்படுகிற ஒரு பின்னடைவான தயக்கம்