கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 18, 2013

2 கதைகள் கிடைத்துள்ளன.

நாடு அதை நாடு

 

 அந்த அமொரிக்க இளைஞர்களை பார்த்தால் பயமாகத்தான் இருந்தது. ஏதாவது ஸ்கூலில் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். இப்பொழுதே சித்ராவை விட உயரமாக, சூயிங்கம் மென்று கொண்டு, ரோலர் ப்ளேடில் அலட்டலாக வந்தார்கள். இங்கே பொதுவாகவே எல்லோரும் உருவத்தில் பொ¢யவர்களாக இருக்கிறார்கள். விளக்கில் பச்சை மனிதன் நடக்க சொன்னதும் சற்று அவர்களை விட்டு விலகியே நடந்தாள். கோடைக்காலமாதலால் இந்த சாயங்கால வேளையிலும் பிரகாசமான கலிஃபார்னியா சூரியன். செல்போனில் பேசியவாறே வண்டிகளில் விரைபவர்கள். ரோடோரத்தில் சிரிக்கும் ஊதாப்பூக்கள்.


திருப்புமுனைகள்

 

 பிரசாத்தின் பார்வையில் விரோதமும், அலட்சியமும் நிதர்சனமாகத் தெரிந்தது. ‘நீ யார்… நீ எதற்கு என்னை இதுபோல் கேள்விகள் கேட்டு உபத்திரவம் செய்கிறாய்?’ என்ற பாவம். ஆனால், நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. “இதோ பார் பிரசாத்… ‘ஸெமஸ்டர்’ தொடங்கி ஒரு மாசம் முடிந்து நானும் எட்டு கிளாஸ் எடுத்து விட்டேன்… நீ இதுவரை ஒரே ஒரு ‘க்ளாஸ்’ தவிர மற்ற எல்லாவற்றுக்கும் ‘ஆப்ஸென்ட்…’” பிரசாத் விறைப்பாகப் பதில் சொன்னான். “அதான் சொன்னேனே ஸார்… எனக்கு உடம்பு சரியாக இல்லை…”