கருவோடு என்னை தாங்கிய….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 6,580 
 

“வணக்கம் மேடம் நான் வைதேகி மேடத்த பார்க்கணும்”. “அவங்க வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் சார். நீங்க என்ன விஷயமாக அவங்கள பார்க்கணும்?” என்றாள் சாரதா. கொஞ்சம் தயங்கி சொல்ல ஆரம்பித்தான் பிரபு. “நான் ஏற்கனவே வைதேகி மேடம்கிட்ட போன்ல பேசிட்டேன். அவங்க தான் வர சொன்னாங்க. என் அம்மாவை இந்த முதியோர் இல்லத்தில் சேர்க்கலான்னு வந்துருக்கேன். மாதம் மாதம் அதற்கான பணம் கொடுத்துடுறேன்” “என்ன பிரச்சனைன்னு நான் தெரிஞ்சிகலாமா?” என்று அவனின் முகத்தை நோக்கி கேட்டாள் சாரதா. தலையை குனிந்தபடியே பதில் சொல்ல ஆரம்பித்தான் பிரபு. “பெருசா எந்த பிரச்சனையும் இல்ல. ஆனால் அம்மாவுக்கும் என் மனைவிக்கும் கொஞ்சம் ஒத்து வரல. அவளும் வேலைக்கு போறா. என் பையன் 5ம் வகுப்பு படிக்கிறான். அம்மாவால கால மாற்றத்துக்கு தகுந்த மாதிரி அவங்க மாற மாட்டிங்கிறாங்க. எப்பவும் ஏதாவது ஒரு பிரச்னை என் மனைவியுடன். இருவரும் வேலைக்கு போறோம். அவங்கள சரியாக பார்க்க முடியல” என்று சொல்லி மழுப்பினான்.

“எனக்கும் உன் வயதில் ஒரு பையன் இருந்தான். அவனாலதான் நான் இப்போ இங்க இருக்கேன்” என்று அவளின் கதையை சொல்ல ஆரம்பித்தாள் சாரதா. “என் மகனுக்கு பத்து வயது இருக்கும் பொது என் கணவன் தவறிட்டார். விஜய்க்கு அப்பான்னா உயிர். அவர் பிரிவை அவனால தாங்கிக்க முடியல. அப்பதான் அவனுக்கு வழுப்பு நோய் வந்ததது. நான் ரொம்ப சிரமப்பட்டு அவனை காப்பத்தினேன்”. “அம்மா எனக்கு அப்பாவின் ஞாபகமா இருக்கும்மா” என்பான் விஜய். “எப்பவும் அப்பாவையே நினைக்காதே. உனக்காக உன் அம்மா நான் இருக்கேன். நீ அப்பாவயே நினைச்சிக்கிட்டே இருந்தால் தான், இப்போ உனக்கு உடம்பு சரியில்லன்னு டாக்டர் சொல்றாரு. நீ நல்லா படிச்சு அப்பாவைப்போல நல்ல பெயர் எடுக்கணும்”. என சொல்லும் போதே சாரதாவிற்கு அழுகை வந்தது. ஆனால் விஜய் முன் அதை காட்டிக்கொள்ளவில்லை.

விஜய்க்கு உடம்பு குணமடைந்தது. அவன் அம்மாவுடன் மிகுந்த அன்பு கொண்டிருந்தான். நாட்கள் நகர்ந்தது. சாரதா சேர்த்து வைத்திருந்த பணத்தையெல்லாம் கட்டி பி.இ படிப்புக்கு மகனை சேர்த்துவிட்டாள். அவனும் ஆர்வத்துடன் படித்தான். குடும்ப சூழ்நிலை கருதி முதியோர் இல்லத்தில் மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் பகுதி நேர வேலையும் பார்த்தான். அங்குள்ள அனைவருக்கும் அவனை பிடிக்கும். அனைவரையும் தன் தாய் தந்தையை போல் கவனித்து கொண்டான் விஜய். அவர்களும் அவனை தங்கள் பிள்ளையாகவே கருதினர்.

மூன்றாம் ஆண்டு படிப்பு முடிந்தது. வெகு நாட்களாக அவனுக்கு ஒரு ஆசை. அம்மாவுக்கு சேலை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது. சேலை ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றான். “அம்மா நான் என்ன வாங்கி வந்துருக்கேன்னு பாருங்க. ம்மா.. என்ன மா… உடம்புக்கு என்ன ஆச்சு? ஒரு மாதிரியா இருக்கிங்க”. “தெரியலப்பா இடுப்பெல்லாம் ரொம்ப வலி. என்னால முடியல. டாக்டர்கிட்ட போகலாம்” என்றாள் சாரதா. உடனே மருத்துவமனையில் சேர்த்தான். டாக்டர் விஜய்யிடம் அதிர்ச்சி தரும் படியான ஒரு விசயத்தை கூறினார். “உங்க அம்மாவுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளது. அவங்கள தொடர்ந்து சிகிச்சைக்கு கூட்டிக்கொண்டு வரணும். ஆனாலும் வேறு யாராவது மாற்று சிறுநீரகம் கொடுத்தால் தான் நிரந்தரமாக குணபடுத்த முடியும்” இதை கேட்டு மனமுடைந்தான் விஜய்.

மாற்று சிறுநீரகம் வேண்டுமென்றால் நிறைய பணம் வேண்டும். என்ன செய்வதென்று அறியாமல் விழிபிதுங்கி நின்றான். டாக்டரிடம் சென்று ”டாக்டர் நான் என் அம்மாவுக்கு என்னோட சிறுநீரகத்தை கொடுக்கலாமா?” என்றான். ”ஓ.எஸ்!!.. தாரளமாக தரலாம். உங்களுக்கும், உங்க அம்மாக்கும் ரத்தம் ஒரே குரூப்பாக இருந்தால் கண்டிப்பாக கொடுக்கலாம்.” என்றார் டாக்டர். விஜய்யின் ரத்தமும், அவன் அம்மாவின் ரத்தமும் ஓன்று என்பதால் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதற்கு முன் விஜய் தன் அம்மாவை காண சென்றான். “மா.. எப்படி இருக்குமா இப்ப.. எல்லாம் சரியாகிடும். நான் என் ஒரு சிறுநீரகத்தை உங்களுக்கு கொடுக்க போறேன். இதை பத்தி டாக்டரிடம் பேசிட்டேன்” என்றான். “இல்ல விஜய், நான் வாழ்ந்து முடிச்சிட்டேன். ஆனா நீ வாழ வேண்டிய பையன்” என்றாள் சாரதா.

விஜய்யின் விருப்பப்படியே அறுவை சிகிச்சை நடைபெற இருவரிடமும் டாக்டர் கையெழுத்து வாங்கினார். அறுவை சிகிச்சைக்கு முன் விஜய் அம்மாவின் அருகே சென்று தாயின் நெற்றியில் முத்தமிட்டான். சாரதாவின் பாதத்தை கண்ணில் ஒற்றி ஆசி பெற்றான். அவனின் கண்ணீர் அவளின் பாதத்தை நனைத்தது. “அம்மா உங்களுக்கு ஒன்னும் ஆகாது. நம்ம ரெண்டு பேரும் நல்ல இருப்போம்மா” என்றான். அங்கிருந்து இருவரும் அறுவை சிகிச்சை அறைக்கு அனுப்பப்பட்டனர். அறுவை சிகிச்சையும் முடிந்தது. சாரதாவின் உடல்நிலை சீராக இருந்தது. சாரதா கண்விழித்து “சார் நான் என் மகனை இப்போ பார்க்க முடியுமா?” “அம்மா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. கேட்டு மனம் தளராதிங்க. உங்க மகனோட சிறுநீரகத்தை உங்களுக்கு போருத்திருக்கோம். ஆனா உங்க பையனுக்கு திடீர்ன்னு வலுப்பு வந்ததால், அவரை எங்களால் காப்பாத்த முடியல” என்றார் டாக்டர். சாரதா அழுது கொண்டே “அவன் உயிர கொடுத்து, என் உயிரை காப்பாத்திருக்கான் என் பையன். இந்த முதியோர் இல்லத்தில் அவன் செய்த வேலைய தான், எனக்கு இப்போ கொடுத்து இருக்கிறார்கள்” என்று பிரபுவிடம் கூறினாள். பிரபுவின் கண்களும் கலங்கியது.

”நீங்க சிறு பிள்ளையா இருக்கும் பொழுது, எத்தனை குறும்புகள், தவறுகள் செஞ்சிருப்பிங்க. ஆனா அதற்காக, உங்க அம்மா உன்ன பாரமுன்னு நினைச்சுறுப்பாளா?. உனக்காக அவ தன் பசிய பொருத்துக்கிட்டு, உனக்கு சாப்பாடு கொடுத்துருப்பா. உன் மனைவி அடுத்த வீட்டிலிருந்து வந்த பெண். உன் அம்மாவை பத்தி எடுத்து சொல்லி நீதான் அவளுக்கு புரிய வைக்கணும். தாய் பாசம் தெரியாம எந்த பெண்ணும் இருக்கமாட்டா. நீ எடுத்து சொல்” என்று கண்களை துடைத்து கொண்டு நகர்ந்தாள் சாரதா. தான் செய்ய விருந்த மாபெரும் தவறை எண்ணி வருத்தினான். கடைசி வரையிலும் அம்மா தன் கூடையே இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தான் பிரபு.

நம்மில் பலர் தன் குழந்தையை எப்படி எல்லாம் நன்றாக வளர்த்தோம். ஆனால் அவர்கள் நம்மை சரியாக கவனிக்கவில்லையே!! என்று வருந்திகிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் நம் பெற்றோரை சரியாக கவனித்தோம்!! என்று எண்ணி பார்க்க தவறுகிறோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *