கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 12, 2012

67 கதைகள் கிடைத்துள்ளன.

பிப்ரவரி இரண்டு

 

 ‘கௌரவர்கள் சூதுக்கிழுத்து பன்னிரண்டு + ஒன்று என்ற கணக்கில் பாண்டவரின் இயல்பு வாழ்வை முடக்கியதுபோல்’ உன் சுற்றத்தார் நான் தெளிவில்லாமல் இருந்தபோதும் கையை கடிக்காமல் இருப்பதற்கு சரியான ஆள் என நினைத்திருப்பார்கள், நீயும் உன் வீட்டுக்கு கழிதல் கணக்கில் சுலபமாய் அடங்கிவிட்டாய். இருவரும் வெயிலுக்கும் மழைக்கும் அடிப்பட்டோம். ஹெலிகாப்ட்ரில் வீசும் நிவாரண பொட்டலத்தை கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து வாழ்வோருக்கு சமமாய்த்தான் நம் வாழ்வும் இருந்தது. பதினான்கு ஆண்டுகள் வாழ்வின் பந்தம் முடியும்போது மூக்கு ஒழுகும் பிள்ளைகளை


சித்திரக்காரன் கதை

 

 சற்றேறக்குறைய அந்த ஊரில் வசிக்கும் அனைவரையும் நனைத்துவிட்டு அப்போது தான் அடங்கியிருந்தது மழை. அந்த மழைக்கு அதுவரைக்கும் ஒதுங்கியிருந்த நகரவாசிகள் மீண்டும் நடைபோடத் துவங்கியிருந்தனர். எனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த ஒரு முதியவர் பின்னால் பார்க்காமலேயே தனது குடையை மடக்க முற்பட “பார்த்து… பின்னால் ஆள் வருவது கவனம்…” என்றேன். அவர் திரும்பி என்னைப் பார்த்து “வயசாயிடிச்சி தம்பி…. கவனம் சிதறுதுப்பா மன்னித்துக்கொள்” என்றார். அந்த நேரத்தில் என் காலடித்தடங்களை அவரை முன்னே போகச்செய்யும் நோக்கில் மெதுவாக்கினேன்.


வசந்தத்தில் ஒரு நாள்

 

 தேவன், அந்த பூச்சூடும் வைபவத்தில் மூச்சுமுட்டுவதை உணர்ந்தான். மெல்ல தப்பித்து மாடி ஏறியபோது பாலூர் சித்தப்பா கூப்பிட்டார். “தேவா, உன் புஸ்தகம் வந்ததிலில் இருந்து இவளுக்கு உன்னை பார்க்கணுமாம்”. அவள் படியேறி வந்துகொண்டு இருந்தாள். நேர்வகிடு எடுத்து வாரப்பட்ட தலைப் பின்னல். மத்திய வயது. சட்டென எந்த சுவாரஸ்யமும் தோன்றாமல் அவன் புன்னகைத்தான். ஆனால் மேலேறி வந்ததும், அவனைப் பார்த்து புன்னகைத்ததும், படியில் கால் விட்டவாறு, கீழே இருந்து பார்ப்பவர்கள் கண்களுக்கு அவள் தெரிகிறமாதிரி அவள் உட்கார்ந்துகொண்டு,


டுபாக்கூர் ராஜாவும் டயமண்ட் ராணியும்

 

 சென்னையில் போன வருடம் பெய்த அடைமழையின் ஞாபகங்கள் மற்றவர்களிடமிருந்து எனக்கு முற்றிலுமாக வேறுபட்டது. அதுவரைக்கும் எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த அறையை காலி செய்து விட்டு வடபழனி கோயில் பக்கத்தில் ஒரு ஸ்டோரி வீட்டில் இருந்த முத்தண்ணன் உடன் நான் போய் சேர்ந்திருந்தேன். முத்தண்ணன் என் வருகையினை ரொம்பவும் விரும்பவே செய்தார் என்பது அவர் என் மீது காட்டிய பாசமான அணுகுமுறையிலேயே தெரிந்தது. மதுரையில் முதலில் பரிச்சயமான பொழுது அவர் காட்டிய அதே அக்கறை,


நீளமான இராத்திரி… ஊதலான மார்கழி…

 

 காதில் justin bieber-ன் latin girl, david guetta-வின் one more love இரைந்துகொண்டிருக்கிறது என்றோ, bob marley, eminem, rihanna, akon எல்லோரும் வரிசையில் காத்துகொண்டிருக்கிறார்கள் என்றோ, ‘மூடு’ மாறினால் shakira-வோ, jackson-னோ அழைக்கப்படுவார்கள் என்றோ பார்ப்பவர்கள் நினைக்ககூடும். காரணம் என் levis track jeans, retro tops மற்றும் reebok shoe. உண்மையில் ‘சின்ன கௌண்டர்’ முத்துமணி மாலையும், கரகாட்டகாரன் மாங்குயிலே பூங்குயிலேயும் தான் காந்தபுலத்தின் மின்விசை அதிர்வுகளால் என் காதில் வழிந்துகொண்டிருந்தது. மாநகரங்களில்