கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 15,093 
 

கிருஷ்ணகுமாருக்கு அந்த இச்சை தானாக தோன்றியது. அடுக்கடி அவள் சிரிக்கும்போதும் மார்பு புடவையை சரி செய்யும் போதும் அவளின் பார்வைகள் மெலிதாக திரும்பி இவர் மேல் விழும்போதும் போதும் இம்சைப்படுத்தியது.

கிருஷ்ணகுமாரின் செக்ரட்ரி ராகவி,அவளின் பெண்மையில் தானாகவே சிக்கினார். எக்ஸ்போர்ட் கம்பெனியில் டிரக்டர் ஆக இருக்கிறார். இந்த மார்ச் உடன் நாற்பத்தியொன்று முழுமையாக கரையேறுகிறது. அவசர சுவாரசியத்தில் தொழிலில் சேர்ந்து,இளமை உற்சாகத்தை இழந்து இயந்திர வாழ்க்கையில் மையமாக சுழன்று,படிப்படியாக எட்டிப்பிடித்து இந்த நிலைக்கு வந்தார். திருமணமான புதிதில் அவர்க்கும் அவர் மனைவி சாரதாக்கும் இடையில் மௌனம்தான் ஸ்தாரமாக நிலவியது.அதை கலைக்க இவருக்கு நேரம் போதவில்லை. எப்பவும் சிங்கள முதலாளிகளுக்கு ஜால்ரா அடிக்கவும் அடிக்கடி கான்பிரன்ஸ் என்று மினக்கிடவும் நேரம் சரியாக இருந்தது.

அவருக்கு பிள்ளைகள் இல்லை என்பது முதலில் ஏக்கமாக இருந்தது. இரவு பத்துமணிக்கு ஒபீஸ் அலுவல்களை எரிச்சலோடு முடித்து வீடு வந்து தூங்கவே களைப்பு எஞ்சியிருந்தது. அசௌகரிய களைப்பில் செக்ஸ் இருந்தாலும் மெல்ல மெல்ல விலகியது.அதனுடைய தாக்கங்கள் அப்போது அவரை பெரிதாக தாக்கவில்லை. நாற்பது வயதில் இளமை கரைய தொடங்க வாரிசு இல்லையே என்ற தாகம் தகித்தது.
ராகவி அவர்க்கு செக்ரட்ரியாக வரும்போது முதலில் கவனிக்கவில்லை. இருபத்தியேழு வயதில் அசரடிக்கும் திறமையில் கவர அவளை கவனித்தார். கவனிக்க கவனிக்க அவளின் இளமை சில்மிஷம் செய்தது. மெலிதாக நடந்து பைல்களில் கையெழுத்து வேண்ட மிக அருகில் வரும்போது அவள் விட்டுச் சென்ற ஃபேர்பியூம் அவரை விட்டு போக ரொம்ப நேரம் எடுக்கும்.சில சமயம் அவள் பைல்களை அடுக்கும்போது தெரியும் மார்பகவலைவு பிரதேசங்கள் பாடாய் படுத்தும். இளமையில் செக்குமாடாய் கம்பெனிக்கு உழைத்து இளமையை துலைத்தது உரைத்தது. அந்த வினோத மாற்றங்கள் புதுவகை ஹோர்மோன்களை உந்தியது. டீ டைமில் இவ்வாறான பேசுக்கள் இருக்கும்.

“ஏன் ராகவி நீ இன்னும் கலியாணம் பண்ணல?”

“அந்த டேஸ்ட்ல யாரும் இல்லை சேர்…………”

“ஏன் இல்லை எவ்வளவு பொடியன்கள் இருக்குறாங்க? லவ்கிவ் அப்படி எதுவுமா?”

“ச்சா.. ச்சா.. அப்படி ஒண்டும் இல்லை சேர்.. ஏனோ பண்ணிக்கணும் என்று தோனலை…”
“யு லுக் லைக் வெரி பியூட்டிபுள் ராகவி….நிச்சயம் உனக்கு பிடிச்ச போய் கிடைப்பான்”
அவள் மெலிதாக புன்னகைத்தாள்.

கிருஷ்ணகுமாரின் சகல தேவைகளையும் அவளே கவனித்தாள். ஹோர்லிக்ஸ், டீ எல்லாம் அவளே கலந்து கொடுப்பாள். சிலசமயம் அவள் கைவிரல் அவரை தீண்டும். ராகவி அழகில் அதிக அக்கறை காட்டினாள். ப்ளெஸ் மெலிதாக இருக்கும் பிரா விளிம்புகள் தெரியும். அணியும் சாரிக்கு ஏற்ப நெய்ல் பொலிஷ் தீட்டி இருப்பாள்.கேசங்கள் அலையலையாக காற்றில் அலையும். அதை ரசிக்க கிருஷ்ணகுமார் தவறவில்லை. அவளுடம் ஒருமையில் பேசும் அளவுக்கு அந்நியோன்னியம் அதிகரித்தது.

“ஏன் ராகவி உனக்கு எப்படி பட்டவனை தேடுற?….”

“ம்ம்ம்…. ஏன் சேர்?”

“சும்மா சொல்லு…”

“ஏன் சேர் நீங்க மரி பண்ணி கிட்டதட்ட எவ்வளவு வருஷம் ஆச்சு? என்ன அப்படி அனுபவிச்சீங்க?”

“ஹ்ம்ம்….நிஜமா என் இளமை எல்லாம் கம்பனியை வளக்கவே சரியாய் போச்சு மிச்ச விஷயத்தை நான் கவனிக்கவில்லை திரும்பி பார்க்க நாற்பது வயசு ஆச்சு…எல்லாத்தையும் இழந்தாச்சு”

“அப்படி என்னத்த இழந்தீங்க….”

“வாரிசு….. அது….அது என் மனைவியினால் தர முடியாமல் போச்சு…” அவர் கண்கள் சற்று கலங்கியது.

“ஹோ..சொறி சேர்…”

“ம்ம்…..”

“ஏன் சேர் உங்களுக்கு இப்ப என்ன வயசு ஆச்சு.. யு லுக் வெரி யங்…”

அவர் மனைவி சாரதா அவரை மட்டும் நேசிக்கும் பிரஜைதான். ஒரு விதத்தில் அவள் இவரின் ஒத்தாசை எல்லாம் கூட இருந்து கவனித்தாள்.அவளிடம் ஏதோ ஒன்று இழந்தமாதிரி ஒரு தாக்கம்..சில நளினங்களை தவற விட்ட மாதிரி ஒரு சொல்ல முடியாத விசேஷ சோகம் எஞ்சி இருந்தது. ஏதோ ஒன்று அவருக்கு தேவைபட்டது. ராகவியில் இருந்த இளமை ஒரு விதத்தில் தேவைபட்டது. அவர் மனைவியில் இளமை நேரங்களில் கவனிக்க மறந்தவை ராகவியை பார்க்கும் போது இன்பப்படுத்தியது.
சாரதா மாநிறம்.கிருஷ்ணகுமார் சொந்தத்தில் முடித்தார். இருபதுமூன்று வயதில் நடந்தது அந்த கலியாணம். கொழும்பில் ப்ராண்டெக்ஸ் எக்ஸ்போர்ட் கம்பெனியில் சேர்ந்த தருணம் அது. அதிகம் பணம் பண்ணும் ஆசையில் திரிந்த காலம் அது. அப்போது அதை பத்தி யோசிக்க முடியவில்லை. இப்போது சாராதவை பார்க்கும் போது பழைய சாரதா இல்லை. பருத்து இருந்தாள். தோம் தோம் என்று நடக்கும்போது ராகவியில் இருந்த நளினங்கள் நினைவில் வந்தன. அவளின் நடை, மெலிதாக சிலிர்க்கும் போது அவள் முதுகில் புரளும் கேசங்கள் அவரை தீண்டின. இரகசியமாக இன்பப்படவைத்தன.

“ஏன் ஒரு மாதிரி இருக்குறீங்க…..”

“யாரு….”

“நீங்கதான் என்ன காய்ச்சலா?..நான் சமகன் போட்டு தரவா?”

“எனக்கு ஒண்டும் வேண்டாம் சாரதா….”

“பனடோல் ஆவதுபோடுறீங்களா?”

“என்ன நெய் நெய் என்று உயிர வேண்டுற…. அதான் ஒன்றும் இல்லை என்றன்.. வாய முடிட்டு போறியா?” கிருஷ்ணகுமார் எரிஞ்சுவிழ சாரதா மருண்டு பின் வேண்டினாள்.

அவளுக்கு தெரிந்து இருந்தது எல்லாம் அவள் இருக்கும் பிளட்டும் அவளை சுத்தியிருக்கும் சிலரும்தான். ஒரு சின்ன நடுத்தர குடும்பத்தில் யாழ்ப்பாணத்தில் மூத்த மகளாக பிறந்தாள்.அவளுக்கு அப்புறம் இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் தொங்கிக்கொண்டு இருந்தர்கள். பதினேட்டு வயசு முடிய அவசர அவசரமாக கலியாணம் செய்ய கிருஷ்ணகுமார் புயல் போல் கொள்ளுபிட்டிக்கு கூட்டிவந்து விட்டார். அந்த மாறுதல் முதலில் தாக்கியது. கணவர் வேலைக்கு போக தனிமையில் திகைத்தாள். இரவு தாமதித்து வரும்போது சில சமயம் கண்ணீர் வரும். துடைக்க யாரும் இல்லை. உப்பு வாயில்கரிக்கும் போதுதான் அவள் அழுவதே அவளுக்கு புரியும். ஏன் இவர் அப்படி இல்லை என்று சில சமயம் ஏங்குவாள். அப்பா மீது கோவம் வரும்… இவர்தானே அவசரம் அவசரமாக கொழும்பு மாப்ளை நல்ல வேலை நல்ல சம்பளம் என்று செய்து வைத்தார். ஐயையோ கணவனை இப்படி நினைக்குறமே அவருக்கு ரொம்ப வேலையாக்கும் என்று அப்புறம் வருந்துவாள். அவளிடம் நிறைய கேள்விகள் இருந்தன. தலையணையில் அவள் கேள்விகள் கண்ணீராக தாரை தாரையாக நனைக்கும்.சொந்த கார் சொந்த பிளட் இருந்தாலும் ஒரு தனிமை சிறையில் வாடும் சோகம் வடிந்தது. பிள்ளை இல்லை என்ற ஏக்கம் ரொம்ப துடித்தது அவளிடம். சின்ன தொட்டில்கள் குட்டி குட்டி விளையாட்டு சாமான்களை பார்க்கும்போது குழந்தை நியாபகம் வரும். டிச்கவேரியில் பசு பால் கன்றுக்கு கொடுப்பதை பார்க்கும்போது அவள் வயித்தில் ஏதோ இளகும்.தாங்க முடியாத பாரங்கள் அடிவயித்தில் இடிக்கும்.ரொம்ப துடிப்பாள். சில சமயம் பாத்ரூமில் மௌனமாக அழுவாள்.எதையும் கிருஷ்ணகுமார் கண்டதாக தெரியவில்லை. அவர் அடிக்கடி யுரோப்க்கு செல்வதுக்கும் விமானத்தில் கம்பெனி விசயமாக பறப்பதுக்கும் நேரம் சரியாக இருந்தது.

ராகவி செக்ரட்ரியாக வந்தபின் அவரின் பழைய இளமை திரத்தியது. ராகவி கிருளைபனையில் இருப்பவள். ஒரேயொரு அண்ணா மட்டும்தான் அவளுக்கு சொந்தம். அவரும் சென்ட்ரல் பாங்கில் சுவாரசியமான வேலை.ராகவியின் அந்தரங்கங்களை கவனிப்பதே கிருஷ்ணகுமார்க்கு முக்கிய உப வேலையாக போனது.

“ஏன் ராகவி நீ ஏன் நரேன் உடன் அடிக்கடி கதைக்குற இளிக்குற?”

“யார் ஓடிட்டர் நரேன்னா??…அவன் நல்ல போய் சேர்… பஸ் கிடைக்காட்டி அவன்தான் தன் காருல சம்டைம் ஹோம்ல ட்ரோப் பண்ணுவான்…அவன் நான் போற வழியாலதான் போறவன் அதான் ஒரு ஒத்தாசைக்கு சிரிச்சு கதைக்குறனான்..”

கிருஷ்ணகுமார்க்கு பொறாமையாக இருந்தது. அவரின் முகமே அபத்தமாக காட்டி கொடுத்தது.

“ஏன் சேர் உங்களுக்கு ஏதும் ப்ராபளமா?”

“ச்சா.. ச்சா..அப்படி ஒன்றும் இல்லை”

அவள் அவரின் முகத்தை தீர்க்கமாக பார்த்தாள். “சேர் நீங்க அடிக்கடி கேப்பிங்களே எப்படி பட்ட போய்யை தேடுறீங்க என்று….”

“ம்ம்ம்….”

“சொன்னா கோவிச்சுக்க கூடாது…..உங்களமாதிரி ஒரு ஆளத்தான்..” அவள் சொல்ல திடுக்கிட்டு நிமர்ந்து பார்த்தார். அவள் தொடர்ந்தாள் “இதே சிரிப்பு, இதே உயரம், இதே நிறம் இப்படிபட்ட ஒரு ஆள்தான் வேணும்…” அவள் சற்று தலையை சாய்த்து இமையை கொஞ்சம் தாழ்த்தி சொல்ல கிறக்கமாக இருந்தது அவருக்கு.

“நீ..நீ என்ன சொல்லுற…..”

“உங்களுக்கு என் மேல இன்ரஸ்ட் என்று தெரியும் சேர்…. நீங்க அடிக்கடி கவனிக்குறது தெரியும் சேர்”

கிருஷ்ணகுமார்க்கு ஒருவகையில் வெக்கமாக இருந்தது. “நீ என்ன சொல்ல வாறாய் என்று புரியல”

“சிம்பிள் சேர் நான் உங்களையே கலியாணம் பண்ணிகொள்ள விருப்பப்படுறன்….” அவள் நேர் பார்வை பார்த்தபடி சொன்னாள்.

“ஆ யு ஜோகிங்….?”

“சேர் இந்த பாசாங்கு எல்லாம் வேண்டாம்…. உங்களுக்கு என்னை பிடிக்கும் என்று தெரியும்… எனக்கும் உங்களை பிடிக்கும்…இந்த வேகம்..டக் டக் என்று பிரச்சனைகளை சமாளிக்கும் விதம்… எல்லாம் பிடிக்கும்…உங்க ஹேயார்ல அங்க அங்க எட்டி பார்க்கும் நரைமுடி எல்லாம் பிடிக்கும்”

கிருஷ்ணகுமார்க்கு ரகசிய பாகங்களில் இருந்து அவள் சொல்ல சொல்ல சந்தோஷம் பீரிட்டது.

“எனக்கு ஏற்கனவே கலியாணம் ஆச்சு ராகவி…”

“ஆனா என்ன சேர்..உங்க வைப் உடன் பேசி என்னையும் ரெண்டாம்தாரமா கலியாணம் பண்ணுங்கோ நான் கீப்பாக இருக்க விரும்பவில்லை…உங்க கூட சட்ட பூர்வமான மனைவியாக இருக்க விரும்புகிறன்..உங்களை பகிர்ந்துக்க விரும்புறன்.”

“எப்படி…என் வைப் கேஸ் போட்டா நான் ஜெயில் போக வேண்டியதுதான்…..சட்டம் இடம் கொடுக்காது டியர்….”

“அது நீங்க பேசி உங்க வைப்க்கு புரியவையுங்கோ கிருஷ்….” அவள் கிருஷ் என்று சொல்ல இவளுக்காண்டி வெலிக்கடை ஜெயில்க்கு காரணம் இல்லாமல் போகலாம் போல இருந்தது.

“உங்க மனைவியோடு பேசி என்னை அவங்க அனுமதியோடு கலியாணம் பண்‍‌‌‍ணுங்க கிருஷ்…”

“அவா மாட்டன் என்றா..”

“அப்படியே விட்டிடுவம்.. அப்புறம் ஒண்ணும் இல்லை.. நீங்க போஸ் நான் உங்க பீ.ஏ அவ்வளவு தான்..”

“வெயிட்..வெயிட்.. நான் வைப் ஓட கதைச்சுட்டு சொல்லுறன்”

ரெண்டு நாள் ஏதோ ஓடியது. அவருக்கு சாரதா உடன் நேருக்கு நேர் கதைக்க முடியவில்லை. ராகவி எதுவும் நடக்காது போல் செக்கிரட்ரியாக மட்டும் இருந்தாள். மூன்றாவதுநாள் அவள் போகும் போது கேட்டாள் “வைப்ட கதைச்சீங்களா?..”
“இன்னும் இல்லை….ராகவி”

“கெதியில கதையுங்கோ…”

“ம்ம்…எப்படி ஹோம் போற ராகவி நான் வேணும் எண்டா காருல ட்ரோப் பண்ணவா?”

“வேணாம் நீங்க வைப் ஓட கதைச்சு ஓம் சொல்லாத வரைக்கும் நீங்க மை போஸ் மட்டும் தான்”

கார் பார்க்கிங்கில் கிருஷ்ணகுமார் காரை எடுக்கும் போது நரேன்னுடன் காரில் ராகவி போனாள்.அவருக்கு பொறாமையாக இருந்தது. நிச்சயம் இன்று கேட்டுட வேண்டியதுதான் சாரதாட.

இரவு படுக்க போகும்போது எப்படி எப்படி ஆரம்பிப்பது….அவருக்குள் தகித்தது…

“சாரதா.. உங்கிட்ட ஒன்று கேக்கணும்…”

“என்ன…” அவள் தயக்கமாக கட்டில் ஓரத்தில் இருந்தாள்

“நீ ஒன்றை நினைச்சு பார்த்தியா நமக்கு கலியாணம் ஆகி கிட்டதட்ட இருபது வருஷம் ஆச்சு…”

“ம்ம்….”

“நமக்கு வாரிசு இல்லை என்று எப்பயாச்சு பீல் பண்ணியிருக்குறாயா?”
சாரதா கண்கள் கலங்கியது….சர சர என்று அவளை கட்டுபடுத்த முடியாமல் நீர் வழிந்தது.
“ஏய் எதுக்கு இப்ப அழுற…”

“ஒன்றும் இல்லை சொல்லுங்கோ….”

“நான்..நான் இன்னும் ஒரு கலியாணம் பண்ணிக்க போறன்….” திடும் என்று நேரவே சொல்லிவிட்டார்.

“எ…எ…என்ன சொன்னீங்க….”

“நான் இன்னும் ஒரு கலியாணம் பண்ணிக்க போறன் சாரதா….”

“என்னது இன்னும் ஒரு கலியாணமா….என்ன சொல்லுறீங்க…”

“என் ஒபீஸ்ல வேர்க் பண்ணுற ராகவி என்ற கேர்ள்ளை கலியாணம் பண்ண போறன் வாரிசுக்காண்டி..”

“அப்ப..அப்ப நான்..நான்….” அவள் அழ ஆரம்பித்தாள். அவள் முகம் இன்னும் நம்ப மறுத்தது.

“ஏய்..இப்ப ஏன் கூப்பாடு போடுற.. வாய மூடு…”

அவள் திகைத்து கண்ணீரை அவசரமாக துடைத்து அப்பாவியாக பார்த்தாள்.
“உன்னை நான் ஒண்ணும் கழட்டி விடல சாரதா.. உன்னோட சேர்த்து அவளையும் கலியாணம் பண்ண போறன். நம்ம பிளட்லேயே நாம மூண்டு பேரும் இருக்கலாம்…உனக்கும் ஒத்தாசையாக இருக்கும்…அவள் ரொம்ப நல்ல பொண்ணு…”

“ஏன்..ஏன்..இப்படி கதைகுறீங்க.. ப்ளீஸ் விளையாடாதீங்க.. நம்ம மரியாதை எல்லாம் போயிடும்.. இத நமது சமுதாயம் ஒத்துக்காது.. வேணாம் வேணாம்…நான் என்ன குறை வச்சன்… நீங்க சொல்லுறத எல்லாம் கேட்டுகிட்டு இவ்வளவு நாளும் இருக்கவில்லையா…”

“எனக்கு வடிவா சொல்ல தெரியல… எனக்கு தேவைப்படுது…. நமக்கு ஒரு வாரிசு தேவைப்படுது சாரதா..”

அவள் அழுதாள்.. நீறைய அழுதாள்… தேம்பி தேம்பி அழுதாள். ஒன்றும் சொல்லாமல் வேடிக்கை பார்த்தார்.

“வேணாம்..வேணாம்…நான் அப்புறம் எங்க போவன்… எனக்கு யாரையும் தெரியாது…இப்படி எதுவும் செய்திடாதீங்க…”

“இங்க பாரு சாரதா..இப்படி அடம் பிடிக்காத….எனக்கு வாரிசு வேணும்…”

“இந்த வயசுலயா…?”

“ஏய் உன்னாலதான் நமக்கு பிள்ளை இல்லை… நீ மலடி….உன்னாலதான் எதுவும் இல்லை..நாளைக்கு நிதானமாக ஜோசித்து முடிவை நாளண்டைக்கு சொல்லு”
கிருஷ்ணகுமார் தூங்கிபோனார். சாரதவினால் தூங்கவும் முடியவில்லை ஜோசிக்கவும் முடியவில்லை. அவளுக்கு எதுவும் புரியவில்லை. அவள் இரண்டு தங்கைகளும் கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் கலியாணம் முடிச்சு போய்விட்டனர் அப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை. தம்பி ராஜேஷ் மட்டும்தான் யாழ்ப்பாண கச்சேரியில் ஏதோ வேலை….

மறுநாள் அவரும் சாரதாவும் கதைக்கவில்லை. ஒபீஸில் ராகவி கேட்டாள்….

“ஏன்… ஒரு மாதிரி இருக்குறீங்க… வைப்போட கதைச்சிங்களா?”

“ம்ம்..சொன்னான்”

“என்ன..என்ன சொன்னாங்க?”

“ஜோசித்து சொல்லுறன் என்று சொன்னா.. யு டோன்ட் வொரி…. எவ்ரி திங் இஸ் கோயிங் டு பீ எண்ட் சுமூத்….”

சாரதா தம்பிக்கு போன் பண்ணி சொன்னாள்.அவன் புரியாமல் திகைத்தான்.மறுநாளே கொள்ளுபிட்டிக்கு பஸ் பிடிச்சு வந்து சேர்ந்தான்.

“நீங்க செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல…”

“என்ன நல்லா இல்லை ராஜேஷ்…இது எங்க குடும்ப விஷயம் நீங்க தலையிடாதீங்க..”

“எது குடும்ப விஷயம்.. அக்காவை விட்டுட்டு நீங்க எவளோ ஒருத்திய…..”

“என்ன..என்ன..உங்க அக்காவால ஒரு பிள்ளை கூட பெத்துக்க முடியல…நீ என்ர பிளட்ல வந்து கத்தாம போறியா…”

விவாதம் சூடாக கைகலப்புக்கு போகும் போல இருக்க சாரதா குறுக்க புகுந்து விளக்கினாள். கிருஷ்ணகுமார் ஷர்ட்டை மாட்டிக்கொண்டு எங்கயோ விருட் என்று கிளம்பினார்.

“அக்கா நீ ஒன்றும் ஜோசியாத அவர் அப்படி கலியாணம் பண்ண ஏலாது…அப்படி பண்ணிணா கேஸ் போடுவம்….மிச்சத நான் பாத்துக்குறன்….”
அவள் பேசவில்லை அடுத்து என்ன பண்ண போறம் என்று கூட அவளுக்கு புரியவில்லை. என்னால் தான் பிள்ளை இல்லை மலடி என்று அவர் சொன்னதை அவளால் தாங்க முடியவில்லை. ஏதோவொரு நரம்பில் அந்த வலி மீட்டிகொண்டேயிருந்தது. தொடர்ந்து அவளால் தாங்க முடியவில்லை.நிறைய யோசித்தாள். எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணீரை உதிராமல் தடுக்க முடியவில்லை.

“நான் பேசாம விவாகரத்து வேண்டிர்றன்டா…என்னால இவரோட இனி இருக்க முடியாதுடா….”

“என்னக்கா சொல்லுற?……”

“இவ்வளவு நாள் இவருக்கு பாரமாக இருந்தது போதும்…. இந்த நாலு சுவருக்குள்ள அழுதுகொண்டு இருக்க முடியாதுடா.. நான் பேசாம போறன்டா…”

ராஜேஷ் திகைத்துப்பார்த்தான்

“அப்புறம் நான் என்னடா பண்ணுவன்….எங்க போவன்” அவள் அழாமல் நிற்க ரொம்ப பிராயச்சித்தப்பட்டு தோற்றாள்.

“என்னக்கா இப்படி சொல்லுற….? நீ ஏன் இப்ப அழுற… அவன்தான் அழணும்… ப்ளீஸ் அழுறத நிறுத்து.” அவனுக்கு எப்படி சமாதான படுத்துவது என்று புரியவேயில்லை.

“எனக்கு விவாகரத்து வேண்டிதாடா…..அது போதும்…”

“அப்புறம் எங்கக்கா போவா?…..”

“டேய்.. உன் கூட கூட்டி போறியா?…. கொஞ்ச நாள்ல…எனக்கு ஒரு வழி பண்ணிக்கொண்டு நான் போறன்…”

ராஜேஷ் பரிதாபமாக பார்த்தான்.

ஒபிஸ்ல் டீ டைமில் ராகவி கேட்டாள்…

“என்ன கிருஷ்.. என்ன சொன்னாங்க….?”

“ஹ….அது அது.. அவங்க பிரதரும் வந்து கதைச்சாங்க…அவங்க சொல்லுறாங்க டிவோர்ஸ் பண்ணிட்டு செய்யட்டாம்… தங்களுக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லையாம்”

“ஹோ…. அவங்களுக்கு டிவோர்ஸ் தர முழு சம்மதமா?”

“யாயா….நீ என்ன சொல்லுற…”

“அவங்களா தந்தா எனக்கு ஒன்றும் இல்லை….”

இரண்டு வாரத்தில் கிருஷ்ணகுமார் விவாகரத்து வேண்டிட்டார். சாரதா போகும்போது மெலிதாக குற்ற உணர்வு எட்டிபார்த்தது சாரதா முதல் கொஞ்ச நாள் தம்பி வீட்டை இருந்தாள். தங்கைகள் அவஸ்தைப் பட்டனர். அடிக்கடி போன் பண்ணி கதைத்தனர். கனடாக்கு கூப்பிடுறம் என்றார்கள். அவள் தம்பி வீட்டில் அதிக சுதந்திரமாக இருக்கவும் முடியவில்லை. “ஏன் மாமி இங்க வந்து இருக்குறாங்க” என்று ராஜேஷ் பிள்ளைகள் கேக்கும்.

கிருஷ்ணகுமார் சிம்பிள்ளாக ரெஜிஸ்டர் மரிஜ் செய்துகொண்டார். ராகவி அண்ணா மட்டும் வந்திருந்தார். ராகவி வேலையை ரிசைன் செய்து விட்டாள். அதே பிளாட்டில் தங்கினாள். ஒபீஸ் போகும் போது மற்றவர்கள் பார்வை முதுகை ஊடுருவும் “பார்யா இவன் வாழ்வ வேலை பார்த்த செக்ரட்ரிய கரக்ட் பண்ணிட்டான்” என்று சில விசித்திர சத்தங்க ஒபீஸ், பக்கத்து பிளட்டில் கேக்கும். ஏன்யா? ரெண்டாம்தாரம் செக்ரட்ரிய கலியாணம் பண்ணிணா உங்களுக்கு என்ன என்று கத்த தோன்றும் கிருஷ்ணகுமார்க்கு.
ஒருவருடத்தில் ராகவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சந்தோஷத்தில் கிருஷ்ணகுமார்க்கு தலைகால் புரியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை வளர நாற்பத்தியிரண்டு வயதில் குழந்தை பிறந்த வெக்கம் மெல்ல மெல்ல விலகியது. அவருக்கு பெண்குழந்தை பிடிக்கும் ஆனால் அடுத்த குழந்தையை காணம்…நாள் தள்ளி போய் கொண்டு இருந்தது. குழந்தை பிறந்த பின் ராகவி கொஞ்சம் குண்டாகவந்தாள். முந்தியிருந்த பழைய நளினங்கள் இல்லை. ஏன் அடுத்த குழந்தை பிறக்கவில்லை என்று புரியவில்லை. கோபிதன் என்று குழந்தைக்கு பெயர் வைத்தார்கள். கோபி குட்டி உருண்டது,தவழ்ந்தது. மெல்ல மெல்ல கைகாலை அசைத்து விளையாடியது.

பழைய உறவினர்கள் யாரும் குழந்தையை பார்க்க வரவில்லை.அது ஒரு குறையாக தோன்றவில்லை. சாரதா கனடா போய் விட்டாள்.அங்கே தங்கச்சி புருஷன் சூப்பர்மார்கட்டில் வேலை செய்வதாக யாரோ சொன்னார்கள்.

நீயு இயாரின் போது பக்கத்து ப்ளட் காரர் கூட வரவில்லை. சிலரை வாசலில் சந்தித்தால் சிரித்து விட்டு அவசர அவசரமாக விலகிவிடுவார்கள். ராகவிக்கு அது கொஞ்சம் கவலையாக இருந்தது. ஒபிஸ் பழைய நரேன் மட்டும் வந்தான். ரொம்ப நேரம் கதைத்தான். குழந்தையை ஆசையோடு விளையாடினான்.அவனோடு சீக்கிரம் ஒட்டி கொண்டது. தூக்கி தோளோடு அணைக்கும் போது கிருஷ்ணகுமாருக்கு அது தற்செயலாக தெரிந்தது. நரேன் கன்னம் நெற்றி எல்லாம் குழந்தையில் அப்படியே இருந்தது. கோபி கிருஷ்ணகுமாரை பார்த்து “கிளுக்” என்று கண்ணடித்து சிரித்தது.

பி.கு – எனது இயற்பெயர் பாலகிருஷ்ணன்.அன்னோஜன்,அனாமிகா என்ற பெயரில் ஈழத்தில் எழுத்துகின்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *