முதலிரவு

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 31,179 
 

நீங்களே சொல்லுங்க.. ஒரு வயசுப் பையனுக்கு என்னலாம் ஆசயிருக்கும்…? அட மத்தத விட்டுடலாம், முதலிரவப்பத்தி எப்படிலாம் ஆசபட்டிருப்பான்..? விவரம் தெரிஞ்ச நாள்லயிருந்து எப்படிலாம் கனவு கண்டிருப்பான்..? அட என்ன விடுங்க, நீங்க கனவு காணலையா…? இல்லன்னு சும்மா ஒரு நாகரீகத்துக்காக சொல்லிடலாம், ஆனா உண்மை என்னன்னு உங்க மனசுக்குத்தானே தெரியும்.? இப்பெல்லாம் பசங்க எவ்வவளவு அட்வான்சா இருக்காங்க? கல்யாணத்துக்கு முன்னையே எல்லாத்தையும் பார்த்துடுறாங்க, நானும் தான் இருக்கேனே? ‘தண்டக் கருமாந்திரம்’. சரி கல்யாணத்துக்கு முன்ன எதுவும் இல்லைனா ஓகே.. அதுவே கல்யாணத்துக்கு அப்பறமும் இல்லைனா எப்படி? என் நிலமைய என்னன்னு சொல்ல? எல்லாம் என் நேரம்…! வாட்சாயனரே…..!…..! உங்களோட கருத்துக்கள என்னால இப்போதைக்கு செயல் படுத்த முடியாது போல.

“இப்போதைக்கு இல்லன்னா என்ன தம்பி… எப்படியும் செயல் படுத்தத் தானே போற?” வாத்சாயனர் எனக்கு பதில் சொன்ன மாதிரி இருந்துச்சு.. உங்களுக்கு வாத்சாயனர் யாருன்னு தெரியுமா…? தெரியலைனா, விவரம் தெரிஞ்ச யாரையாவது கேட்டுத் தெரிஞ்சிக்கோங்கோ. இந்த பொலம்பல் வாத்சாயனர பத்தி இல்ல… எனக்கு முதலிரவு எப்ப நடக்கும் அப்படிங்கற உலகளாவிய விஷயத்தப் பத்தி.

யார் டா இவன் சம்பந்தமே இல்லாம வந்து பொலம்பிகிட்டு இருக்கானேன்னு யோசிக்குறீங்களா? சொல்லிடுறேன்….. சொல்லிடுறேன்… நான் யார்னு இப்பவே ‘ஹிண்ட்’ கொடுத்துடுறேன்.

என் பேரு ஷிவாங்க. வேல- கழுத கெட்டா குட்டிச்சுவறு, ஊரே பாக்குற அதே சாப்ட்வேர் இஞ்சினியர் வேல. மாச சம்பளம் – என்னவிட ஷேர் ஆடோக்காரனே அதிகமா சம்பாதிப்பான். ஆனா வெளிய மட்டும் கேட்டா கம்ப்யூட்டர் வேல கைநிறைய சம்பளம்ன்னு ஒரு பேத்தல். சரி எனக்கு என்ன தான் பிரச்சன…? என் பிரச்சனையே நான் தாங்க.. வெட்கத்த விட்டு சொல்லுறேங்க எனக்கு இன்னும் முதலிரவே நடக்கலைங்க. கல்யாணமாகி ஒரு வாரமாச்சி. அட சிரிக்காதீங்க…!

என்னோட தவிப்ப யார் கிட்டயாவது சொல்லணும். வேற வழியே இல்ல, நீங்க தான் இப்ப என்கிட்ட சிக்கிட்டீங்க.. ஒழுங்கு மரியாதையா முழுசா என் பொலம்பல கேளுங்க பாஸ்.. கெஞ்சிக்கேட்குறேன். தலையே வெடிச்சிடும் போல இருக்கு.

கல்யாணம் காதல் கல்யாணம், அவசர கல்யாணம். எங்க வீட்டுல ஏத்துகிட்டாங்க, ஆனா என்னோட பிரியா வீட்டுல ஏத்துக்குல. கல்யாணம் எங்க முறப்படித் தான் நடந்தது. எல்லாம் சரி அடுத்தது என்ன? முதல் இரவு… சொல்லும் போதே எப்படி ஜிலு ஜிலு ஜிலுன்னு இருக்கு.. உடம்புலாம் ஏதோ செய்யுது இல்ல., அதே இரவு தான்.. இந்த இரவுக்குத்தானே நான் எவ்வளவு நாள் காத்துக்கிட்டுயிருந்தேன்? எவ்வளவு கற்பன செஞ்சிருப்பேன்? படிக்ககூடாத புத்தகங்கள படிச்சும் (படங்கள பார்த்தும்), பாக்க கூடாத படங்கள பார்த்தும், எவ்வளவு கற்பன கட்டிவெச்சியிருக்கேன். எல்லாம் எதுக்காக, இந்த ஒரு இரவுக்காக தானே? அந்த இரவே நடக்கலைனா மனசு என்ன பாடுப்படும்?

‘இன்னிக்கு நயிட்டு அடிச்சு துவம்சம் பண்ணிட வேண்டியது தான்’ அப்படின்னு அதுவரைக்கும் நினைச்சிகிட்டு இருந்தேன். அந்த நினைப்ப அழிக்குறா மாதிரி அப்பா ஒரு வார்த்த சொல்லிட்டாரு

” கல்யாணம் தான் நாள் நட்சத்திரம் பார்க்காம செஞ்சிட்டோம், மத்த விஷயங்களாவது கொஞ்சம் நாள் நட்சத்திரம்லாம் பார்த்துட்டு செய்வோம்.. என்ன டா ஒன்னும் பிரச்சன இல்லையே…?”

அவர்கிட்ட போய் எப்படி பிரச்சன தான்னு சொல்லுறது? காலம்காலமா எல்லா பசங்களும் அவங்க அப்பா அம்மாகிட்ட ஒன்னுமே தெரியாத நல்ல புள்ளையாத் தானே நடந்துகிட்டு இருக்காங்க, நான் மட்டும் எப்படி போய் நான் அப்படி இல்ல எனக்கு இப்பவே, இன்னைக்கே பஸ்ட் நைட்டு வேண்டும்ன்னு சொல்லுறது? மனசுல அவர திட்டிகிட்டே “சரிப்பா.. உங்களுக்கு தெரியாததா.. இதுக்குலாம் ஏன் போய் என்ன கேட்டுகிட்டு” அப்படின்னு சொல்லிபுட்டேன்.

சரி பையன் தான் அப்படி சொல்லிட்டானே, அவனுக்குள்ளையும் ஆசைகல்லாம் இருக்குமே, சடங்க சீக்கிரமா வைக்கணுமேன்னு அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சுதா? அதுவும் இல்ல. நாளு தான் தள்ளிகிட்டே போச்சி. சரி ராத்திரி ஒரு மூலையில அவ இருக்குற ரூம்லயே படுத்துக்கலாம்ன்னு நினைச்சா அதுக்கும் வெச்சாங்களே ஆப்பு… அவ தனி ரூம்ல அம்மா கூட, நான் வெளியில. இருட்டுல, அங்க இருக்குற கொஞ்சமான வெளிச்சத்துல அவள பார்க்கனும்ங்க்றது என்னோட எவ்வளவு நாள் கனவு. அதுக்கும் வெச்சாங்களா?

சரி செயல்ல தான் ஒன்னும் இங்க நடக்கல, பேசிகிட்டாவது இருக்கலாம்னு வெளிய நானும் அவளும் பேசிகிட்டிருந்தோம். அவ சும்மா புடவையில சிக்குன்னுயிருந்தா. அதுவரைக்கும் நான் அவள புடவையில பார்த்ததில்ல (கல்யாணநாள் தவிர்த்து). என்னமா இருக்கா? இந்த அழகு மொத்தம் எனக்கா?

என்கிட்டயிருந்து பெருமூச்சு மட்டும் தான் வெளிய வந்திச்சு. அவளுக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு. ‘குஷி’ படத்துல விஜய் சொல்லுறா மாதிரி அந்த எலிமிச்ச நிற இடுப்ப பாக்குறப்போ, அட அட அட…! மொத்தமா அனுபவிக்க வேண்டிய நேரத்துல்ல இப்படி பிட்டு பிட்டா பார்க்க வெச்சிட்டாங்களேன்னு கோவம் மட்டும் தான் இருந்துச்சு எனக்கு.

மேகமூட்டத்துக்கு நடுவுலயிருந்து நிலா எட்டிப்பாக்குறா மாதிரி, அவளோட இடுப்பு அப்ப அப்ப என்ன பார்த்து சிரிச்சுது. சும்மாவா இருக்க முடியும்? லைட்டா கைய வைக்கலாம்னு…. வெச்….ச…சேன்…

“டேய்! வீட்டுக்குள்ள வாங்க ரெண்டு பேரும்…”

அய்யய்யோ நான் கைவெச்சத அம்மா பார்துட்டாங்களோ? இனி எப்படி அவங்க முகத்துல முழிப்பேன்? அப்படியே உள்ள போனா,

“கல்யாணம் முடிஞ்ச கையோட பொண்ணு மாப்பிளலாம் வெளிய தனியா இருக்க கூடாதாம், காத்து கருப்பெல்லாம் அலைஞ்சிகிட்டு இருக்குமாம்…”

“உனக்கு யார் மா இப்படிலாம் சொல்லுறாங்க..?” கொஞ்சம் எரிச்சலாவே கேட்டேன்

“போகாதன்னு சொன்ன போகாத… ”

பேசுறதுக்கும் ஆப்பா?

இப்படியே தாங்க போச்சு என்னோட ஒரு வாரம்.

அதுவும் சொந்தக்காரங்கன்ற பேர்ல வரவங்க செய்யுற அக்கப்போர தாங்கிக்கவே முடியாது. ஏதோ ஜூல புதுசா வந்துயிருக்குற விலங்க பாக்குறா மாதிரி எங்க ரெண்டு பேரையும் பார்ப்பாங்க பாருங்க.. பாக்குறதோட நிறுத்திகிட்டா பரவாயில்ல,

“அடுத்த வருஷம் உங்க ரெண்டு பேரயும் ஒரு குழந்தயோட தான் பார்க்கணும்….”

அப்படியே கடப்பாறைய எடுத்து அவங்க வாய்க்குள்ள விடலாமான்னு தோணும்…..

“ஏதாவது நடந்தா தானே டா குழந்த பொறக்கும்… அவ என்ன குந்தி தேவியா.?”

மனசுல மட்டும் தான் கவுன்ட்டர் கொடுக்க முடியும்… நேர்ல சிரிச்சிகிட்டே தான் இருக்கணும்….

“மாப்ள ரொம்ப சிரிச்ச மூஞ்சா இருக்காரே….!” – இது வேறவா? நடக்கட்டும்…

சரி சொந்தக்காரங்க தான் ஒரு வழியில இம்ச பன்னுராங்கன்னா, நண்பர்கள்னு ஒரு கூட்டம் இருக்கே, அவனுங்க இவங்களுக்கு மேல. ஒரு விஷ் செய்ய கால் பண்ணுற எல்லா பன்னாடைகளுமே “என்ன மச்சி, எல்லாம் சீரும் சிறப்புமா முடிஞ்சுதா?”, சொல்லி வெச்ச மாதிரி இதே கேள்வி. அவனுங்க கிட்ட உண்மைய தான் சொல்ல முடியுமா? அப்படியே சொல்லிட்டா, நம்மள இவனுங்க “அவனா நீ?”ன்னு நினைச்சிட்டா? நமக்கு ஏன் பா வம்புன்னு ஒரு சிரிப்ப சிரிச்சிடுவேன். அப்பவும் சில பேரு விடாம “வாய தொறந்து சொல்லுடா…”ன்னு தொனைப்பாங்க?

“என்னத்த டா சொல்ல சொல்லுறீங்க…? நீங்க கல்யாணமாகாம ‘அப்படியே’ இருக்கீங்க, நான் கல்யாணமாகியும் ‘அப்படியே’ இருக்கேன்னா?” சொல்ல முடியும். சிரிப்பா சிரிச்சே பேச்ச மாத்திடுவேன். இல்லைனா நம்மள பார்த்து ‘பக்கி’ங்க சிரிப்பா சிரிசிப்புடுவாங்க…

‘வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!’

ஒரு வாரம் அப்படி என்னதான் செஞ்சேன்னு கேட்குறீங்களா? எழுந்துக்குறது, டி.வி.பாக்குறது, சாப்பிடுறது, டி.வி.பாக்குறது, சாப்பிடுறது, டி.வி.பாக்குறது,சாப்பிடுறது, கொஞ்ச நேரம் சுத்தி இருக்குற சொந்தக்காரங்க அடிக்குற மொக்க ஜோக்குக்கும் சிரிக்கவே முடியாம அசடு வழிய சிரிக்குறது, மறுபடியும் குப்பற அடிச்சு தூங்குறது.

பொண்டாட்டி கிட்ட மனசு விட்டாவது கொஞ்ச நேரம் பேச முடியுதா? ஹ்ம்ம்ம்ஹும்ம்ம்…. எப்படி நடக்க விடுவாங்க இந்த பெருசுங்க… சுத்தி உட்கார்ந்துகிட்டு அவங்க தான் எங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசிகிட்டே இருப்பாங்க… உங்களோட பேசுறது தான் எனக்கு இப்ப ரொம்ப முக்கியமா டா? அட போங்க பா….

இன்னியோட ஒரு வாரம் முடிஞ்சது, ஏதோ குலதெய்வம் கோயிலுக்குலாம் போயிட்டு ரொம்ப களைப்பா வந்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டாங்க… ரெண்டு பேருக்கும் இன்னைக்குத்தான் முதலிரவு….

அட பொலம்பல விடுங்க பாஸ்.. முதலிரவுன்னு தெரிஞ்ச உடனே நம்ம நெஞ்சு துடிச்ச துடிப்பு இருக்குதே அடடடடே….

ஷிவா இன்னிக்கு நீ அவள முழுசா பார்க்கப்போற… காஞ்ச மாடு வயக்காட்டுல புகுந்த கத தான்…. நீ அசத்து ராசா.. என்னலாம் பண்ணனும்னு யோசிச்சிக்கோ… வட்சாயனார ஞாபகம் வெச்சிக்கோ…. ஒரு வாரம் பசிக்கு நல்ல தீனி….ஆனாலும் இன்னைக்கு ரொம்பத்தான் அலைச்சல்… உடம்பு தான் கொஞ்சம் அசதியா இருக்கு…. இன்னைக்கு தான் முதலிரவுன்னு முன்னமே சொல்ல மாட்டாங்களா? என்ன பண்ணி என்ன, அலைச்சலையெல்லாம் ஓரம் கட்டு… நேரம் கூட சொல்லிட்டாங்க ஒன்பதரைல இருந்து பதினொன்னுக்குள்ளவாம்… ஏன் அதுக்கப்பறம் பண்ண முடியாதா? விடிய விடிய செய்வேன் ஜோசியரே….! நீங்க குறிச்ச நேரத்துலயும் செய்வேன் கவல படாதீங்க…!

ரெண்டு பேரும் பால் குடிச்சிட்டு ரூம்குள்ள வந்தோம்…

“விரியாத மொட்டு ஒன்று என் அருகில் பட்டும் படாமல் நின்று கொண்டிருந்தது”

அட எனக்கு கூட கவித வருதே? பலநாட்களாகவே பசியோட இருந்தவன் இலைய பார்த்த உடனே என்ன செய்வான்? கரெக்ட் ..மேய்வான்… நான் மட்டும் என்ன புதுசா செஞ்சிடப்போறேன்?

“என்னங்க..”ன்னு பேச ஆரம்பிச்ச அவள அப்படியே கட்டில்ல தள்ளி மேல நானும் தொப்புன்னு விழுந்தேன்…. என்னோட கைய அவளோட இடுப்பச் சுத்தி, புடவைய வி…லக்…க்கி….

மறுநாள் காலையில, “என்னடா அடிச்சு போட்டா மாதிரி தூங்குற”ன்னு மாமா வந்து எழுப்பும் பொழுது தான் எந்திரிச்சேன்.

“என்ன நைட்டுலாம் தூக்கம் இல்லையோ…? கல்யாணமான புதுசுல எல்லாம் அப்படித்தான்”

“மாமா……..”

“சரி விடு விடு… நாங்க பக்காததா…?”

மனசுக்குள்ள – “நீங்க பார்த்துட்டீங்க.. நான் தான் மாமா இன்னும் பாக்கல…”

இன்னுமா பார்க்கலன்னு ஷாக் ஆயிடாதீங்க…. நிசமா பாக்கலைங்க… அப்பறம் என்னத்த பண்ணிக்கிட்டு இருந்தோம்ன்னு தானே கேட்குறீங்க..? உண்மைய சொல்லனும்னா, அவ மேல நான் விழுந்த அடுத்த செகண்ட் ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு தூக்கம்… தூங்கிட்டோம்….!

ஏன் டா பரதேசி என்ன மாதிரியான நேரத்துல தூங்குவன்னு நீங்க திட்டுறது என்னக்கும் கேட்குது… பதில் இது தான் – ரெண்டு பேரும் தூங்குனதுக்கு சாட்சாத் நான் தான் காரணமே ……

மாமா நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்னு எல்லார் பால் கிளாஸ்லையும் தூக்க மாத்திர கலந்திருக்காங்க… நான் அவசர குடுக்க, சீக்கிரமா சூடேரனும்னு தூக்க மாத்திர கலந்த பால எனக்கும் அவளுக்கும் கொடுத்துட்டு….

அப்பறம் அந்த மாத்ர கலக்காத பால மாமாவும் மாமியும் குடிச்சிட்டு, விடிய விடிய கொண்டாடியிருக்காங்க… இந்த விஷயம் தெரிஞ்ச போது தான் மாமா சொன்னது மைண்ட்ல ஓடிச்சு,

“சரி விடு விடு… நாங்க பக்காததா…?”

சரி நேத்து தான் சொதப்பிட்டோம், இன்னிக்காவது ஒழுங்கா தொடங்குவோம்னு நினைக்கும் போது, அடுத்த குண்ட என் தலையில தூக்கிப்போட்டாளே என் பொண்டாட்டி…

“என்னங்க.. அடுத்த மூணு நாளுக்கு எதுவும் இல்ல….”

“என்ன டி சொல்லுற…? ஏன்… என்னாச்சி, அம்மா எதாவது சொன்னாங்களா?”

“அம்மா எதுவும் சொல்லல…. என்னக்குத் தான்…”

“என்னாச்சி….?”

“ப்ளீஸ்… புரிஞ்சிக்கோங்க…… லேடீஸ் ப்ரோப்ளம்…..”

இது வேறவா…? அட போங்கையா, எனக்கு முதலிரவே வேண்டாம்…. சொல்லுறதுல ரொம்ப பெரும, இந்த எருமைக்கு… யார எருமைன்னு சொல்லுறேன்னு பாக்குறீங்களா? எல்லாம் என் அரும பொண்டாட்டியத் தான்… சரியா இருபத்தியெட்டு நாள்ல டான்னு வந்துடுச்சாம்.

வந்ததுக்கு என்ன தெரியப்போகுது என்னோட வேதன? மனுஷங்களுக்கே தெரியலையாம்….

அப்படியே ஓங்கி தலையில அடிச்சிகிட்டு அழுவனும் போல இருந்துச்சு.

எப்படியோ பல்ல கடிச்சிகிட்டு பொறுத்துகிட்டேன். மூணு நாளும் மூணு யுகமா இருந்துச்சு.. அட வந்துடுச்சே.. நேத்தோட மூணு நாள் தான் முடிஞ்சிடுச்சே, இன்னிக்கு எப்படியும் நடந்திடுமே… அய்யாவுக்கு செம குஷி… புதுசா குளியல், சென்ட்டு, ரோஸ் பவுடர் இன்னும் என்னவெல்லாமோ அப்பிகிட்டு ரெடி ஆயிட்டேன். இன்னிக்கு நேரம் கடத்தக்கூடாது, போன உடனே பேசாம செயல்ல இறங்கிடனும்.. பாலெல்லாம் தொடக்கூட கூடாது. எல்லாம் ரெடி.. அம்மாவும் அப்பாவும் வெளிய போய் இருக்காங்க.. வந்த உடனே ‘கியாமுய்யா’ தான்… பழம்லாம் வாங்க போயியிருப்பாங்க போல அப்படின்னு நான் நினைக்கும் போது அம்மா வந்தாங்க,

“தம்பி… நீங்க தான் போன தடவையே சொதப்பிட்டீங்க… அப்பறம் ப்ரியாவுக்கு வேற இப்படி ஆயிடுச்சு… ஏதோ கெடுதல் நடக்குறாமாதிரி தோணிச்சு. அதுனால திரும்பியும் ஜோசியர பார்க்கப்போனோம்…. இன்னும் ஒரு வாரத்துக்கு எதுவும் கூடாதாம்… அதுக்கப்பறம் தான் சடங்க வெசிக்கனும்ன்னு சொன்னார்…. உனக்கு ஒன்னும் பிரச்சன இல்லையே….?”

“திரும்பியும் முதல்ல இருந்தா…..?”

Print Friendly, PDF & Email

3 thoughts on “முதலிரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *