குட்டிப்பிசாசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 21,904 
 

கீதா விஜயமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தாள். சுந்தர் திருப்பூரி லிருந்து கே.கே.சி பஸ்ஸில் தான் வருவதாகக் கூறியிருந்தான். ஆனால் இப்போதுதான் இவள் கைப்பேசிக்கு அழைத்து பஸ் ஸ்டாண்டில் கே.கே.சி நிற்கிறது என்றும் இன்னமும் வண்டியை எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தான். இருவரும் பெருந்துறை தேவி சித்ரா திரையரங்கில் வடிவேலின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பார்ப்பதாகத் திட்டம் போட்டிருந்தார்கள்.

கீதா நேற்று முன் தினம்தான் ரவியுடன் அந்தப் படத்தை மதியக் காட்சி பார்த்திருந்தாள். அந்தப் படம் கீதாவிற்குச் சுத்த போர் தான். ரவிதான் இவள் விரல்களை இறுக்கமாய்த் தன் விரல்களுக்குள் பிடித்துக்கொண்டு ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரையையே! இது ஒரு பின் நவீனத்து வப்படம் என்று வேறு இவளிடம் கதையளந்தான். வடிவேல் கண்ணீர் சிந்த, அது ஓடம் போல் ஓடி தேங்கிய குட்டையில் எல்லோரும் நீச்சலடிப்பதை நவீனம் நவீனம் என்றான். இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு முத்தம்கூடத் தராதவனுடன் சினிமா பார்ப்பது படுபோர். அதைவிடப் படமும் படுபோர். ரவியுடன் சினிமா பார்ப்பது இதுவே கடைசி என்று மனதில் முடிவெடுத்தாள்.

சுந்தருக்கோ சொன்னால் புரிய மாட்டேன் என்கிறது. அதே படத்தைத்தான் பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறான். என்னை விட்டுட்டு யாரோட போயி படம் பார்த்தே? என்று கடுப்படிக்கிறான். என் னோட ப்ரண்டு வசுமதிகூடப் போனேன் என்று சுந்தருக்குச் சொல்ல வேண்டி இருந்தது. சுந்தரும் ரவியைப் போலத்தான். என்ன கைவிரல்களைப் பிடிக்காமல் உரிமையோடு தோளில் கை போட்டுக்கொண்டு படம் பார்ப் பான். பார்த்த படத்தையே யார் பார்ப்பது? பேசாமல் அவன் தோளில் சாய்ந்து தூங்க முயற்சிக்கலாம். ஆயிரம் ப்ளீஸ் போட்டாலும் வேறு படம் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். கீதாக் குட்டி மேடம் சொன்னால் சரி என்று இந்த சுந்தர் சொல்லியே ஆக வேண்டும். வேண்டும் என்றே இவனை இரண்டு முறை இவன் கூப்பிடுகையில் தட்டிக்கழித்தால் தான் இவன் சரிப்பட்டு வருவான். அதே சமயம் கீதாவின் கைப்பேசி அலறவும் எடுத்து ஹலோ என்றாள்.

“யாரு கீதுவா? நான் சுரேஸ் பேசுறேன். . . நல்லா இருக்கியா?”

“அண்ணா சொல்லுங்கண்ணா. . . இப்பத்தான் உங்களை நெனைச்சேன். . .”

“மாலுவப் பாத்தியாம்மா? கம் பெனிக்கு ஒழுக்கமா வேலைக்கு வர்றளா? அவ நெம்பருக்குக் கூப்பிட்டேன். . . சுவிட்ச் ஆப் அப்ப டின்னே சொல்லுது. . .என் மேல கோபமோ. . .?”

“அண்ணா அவ பாவம்னா. . . பேசாம இங்கேயே நீங்க கட்டிங் மாஸ்டராவே வேலை செஞ்சிட்டு இருந்திருக்கலாம். மேனேஜர் பேசு னதுக்குக் கோவிச்சுக்கிட்டு நின்னுட்டீங்க. . . இப்ப எந்த கம்பெ னில நீங்க வேலை செய்யறீங்க?”

“வேலையா? நான் தஞ்சாவூர்ல இருக்கேன்டி. . . அப்பா அம்மாவ பார்த்துட்டு போலாம்னு வந்தேன். இங்க தோட்டத்துலதான் பத்து நாளா வேலை. . . அப்பாக்கு ஒடம்பு செரியில்லை. . .”

“அண்ணா என்னண்ணா திடீர்னு குண்டு போடறீங்க. . . ஊருக்குப் போயிட்டீங்களா? மாலினிக்குத் தெரியுமா. என்கிட்ட சொல்லவே இல்ல. எப்பிடி அழறா தெரியுமாண்ணா அவ. . . ம் ஆம் பளைங்களை நம்பி புள்ளைங்க நாங்கதான் என்னேரமும் ஏங்கி அழணும் சரி. . . எப்பண்ணா வர்றீங்க?”

“இன்னம் பத்து நாள் ஆகும் கீது. . . வந்த ஓடனே உங்க வீட் டுக்கு வர்றேன். உன் அப்பா, அம்மா, தங்கச்சி நல்லா இருக்காங்ளா?”

“நீங்க கேட்டதா சொல்லிட றேன். . . போதுமா. . .”

“அப்படியே ஊட்டி போயி என் நண்பனைப் பார்க்கறோம்.”

“ஐயோ நான் வர்ல சாமி.”

“ஏண்டி. வரமாட்டீங்றே? அன்னிக்கு மாதிரி இல்ல. . . நிதானமா பண்ணிக்கலாம்.”

“ஐயோ நான் வர்லண்ணா. சேர்ந்தே ஒட்டுக்கா ஷவர்ல குளிப் போம்னுவீங்க. . . வேணா ஒண்ணு பண்றேன். மாலினிகிட்ட சொல் றேன். கல்யாணம் பண்ணிக்கப் போறவீங்க நீங்க ரெண்டுபேர் மட்டும் போங்க. . .”
“சரி உங்கொப்பா சொன்ன மாதிரி உனக்கு மாப்பிள்ளை பார்த்து இங்க ரெண்டு ஜாதகம் வாங்கி வெச்சிருக்கேன்.”

“ஐயோ இப்ப எனக்குக் கல்யாணமே வேண்டாம். . . நீங்க ஜாதகம் கொண்டாந்தாலும் வேஸ்ட்.”

“ஏண்டி, வயசு உனக்கு இரு பத்தி மூணு ஆச்சில்ல. . . இன்னம் ரெண்டு வருசம் போனா அரைக் கிழவி ஆயிடுவே பான்பராக் மென்னு மென்னு உன் பல் எல்லாம் காரை.”

“அதைச் சரிப்பண்ணி பளீர்னு வெள்ளையா இருக்கறதுக்குத்தான் எங்க ஊர் ப்ரெண்டைக் கூப்புடு றேன், கூப்புடுறேன் போனை எடுக்கமாட்டீங்றாப்ல. என்ன கோபம் என் மேலயின்னு தெரியல தடிமாடு. . . இப்பக்கூட அடிச்சேன். என் நெம்பரை பார்த்தாவே எடுக்க மாட்டீங்றான் தடிமாடு.”

“ஒரு ரூபாய் காய்ன் போட்டு கூப்பிடவேன்டீதுதான.”

“ம். . . அந்தத் தடிமாடு 04294 அப்படின்னு பார்த்தாலும் எடுக் காது. அதா பாத்து எடுத்துச் சுன்னாதான் . . . அண்ணா . . . அந்த சிவா இருக்கான்ல. அவனோட பெருந்துறையில நின்னுட்டு இருந் ததை எங்க ஊரு வாத்தியான் கருமன் ஒருத்தன் இருக்கான்னா. . . அவன் பார்த்துட்டு போயி அது கிட்ட சொல்லிட்டான்.”

“அது அதுங்றியே. ஒரு நாள் எக்ஸ்ஸெல் சூப்பர்ல போனாரே அவரா?”

“ஆமா. . . அதுமோட பேரு பழனிச்சாமி. . . நானு கொரங் குன்னு சொல்வேன். என்னோட பேரை அதுமோட செல்லுல 1/2 கிறுக்குன்னு போட்டு வெச்சிருக்குது. . . லொள்ளு.”

“ஏண்டி உசுரே எம்மேலதான் வச்சிருக்காப்லைன்னு சொன்னே. . கோபம் வந்தா கொரங்கு அப்பிடின்னுவியா?”

“நான் அப்புடித்தான் சொல் வேன். சரீண்ணா நீங்க வாங்க பத்து நாள்ல. . . இன்னொரு போன் வருது. யார்னு தெரியல. எங்கம் மாவா இருந்தா. சாப்புடாம ஏண்டி போனேன்னு கேக்கும். அண்ணா ஈவினிங் ஏழு மணிக்கு கூப்புடுங்ணா. ஓகே. பை”

கீதா கட் செய்துவிட்டு மிஸ்ட்டு கால் பார்த்தாள். குன்னத்தூர் ராம். சரி மறுபடியும் கூப்பிடட்டும் என்று பான்பராக் பாக்கெட்டை கிழித்து வாயில் கொட்டிக்கொண் டாள். கே.கே.சி. வருவதற்கு முக் கால் மணி நேரம் இருக்கிறது. பேசாமல் வீட்டில் சாப்பிட்டு விட்டே வந்திருக்கலாம் என்று தோன்றியது! பஸ் நிறுத்த நிழல் குடையில் இருந்த பென்ச்சில் அமர்ந்தாள். பழனிச்சாமியைக் கூப்பிடுவோம் என்று எண்ணி செல்லில் இதயம் படம் வைத் திருந்த நெம்பருக்கு ஓடீனாள். இந்த நெம்பரை இனி செல்லில் எடுத்துவிடவேண்டும். பழனிச்சாமி நெம்பர்தான் இதயத்திலேயே இருக்கிறதே. ரிங் போகிறது. ரிங் போகிறது. எட்றா. . . எடுடா. . . எடுத்துத் தொலைடா. நாயி. த்தோ கட்டே ஆயிடிச்சு. ரெண்டு மூணு நாளாவே எடுக்கவே மாட்டீங் றான் திருட்டு நாயி. என்று கீதா நினைத்தபோது ரிங் வந்தது. ஆசை யாய்ப் பழனிச்சாமிதான் திருப்பிக் கூப்பிடுகிறானோ என்று பார்த் தாள். இல்லை. குன்னத்தூர் ராம்.

“ஹலோ நான் ராம் பேசுறண்டி. ஏன் என் கல்யாணத்துக்கு வரலை. லட்சுமி கிட்டயும் சொன்னேன். ரெண்டு பேரும் வரலை.”

“வரப்பிடிக்கலை வரலை.”

“ஏண்டி கோபமா பேசுறே? என்ன ஆச்சு? அந்த மூன்று நாட் களா? அந்த சமயத்துல தான கோபமா. . . எரிச்சல்படுவீங்க.”

“ஆமா அப்படித்தான். எங்க ஊர்க்காரர்ட்ட என்ன சொன்னீங்க?

“உங்க ஊர்க்காரர்னா யாரு. . . அந்த பழனிச்சாமின்னு சொன்னாரே அவர்கிட்டயா? ஆமா உண்மையச் சொன்னேன்.”

“என்ன உண்மை உங்களுக்குத் தெரியும்? நாலு தடவ தாலி கட்டி னவ அவன்னு சொல்லியிருக்கீங்க. . . நீங்கதான் என்னோட நாலு கல்யாணத்திலயும் தாலி எடுத்துக் குடுத்தீங்ளா? எனக்கு லட்சுமிய உங்க ஊருக்குக் கட்டிக் குடுத்ததாலதான் தெரியும். லட்சுமி எங்க ஊருக்கு வந்து ஏழு வருசம் ஆச்சு. லட்சுமிய உங்க ஊர்ல நீங்க என்ன பண்ணுனீங்க. அப்படி எதாச்சிம் நான் கேட்டனா? உங்க ஊர் பசங்களுக்கு எதுக்கு என் நெம்பரைக் குடுத்தீங்க? அவுனுக எப்பப்பாரு என்னைக் கூப்பிட்டு டார்ச்சர் பண்றானுக. . .”

“சாரி. உன் நெம்பரை நான் யாருக்கும் குடுக்கலை. உன் ஊர் பழனிச்சாமி உன் மேல கோபமா பேசினங்காட்டி, நானும் உன் மேல கோபமா இருந்தங்காட்டி சொன்னேன்.”

“அவரு கோபமா பேசினா. . . அதுக்காக கண்டதீங்கடிதீம் சொல்லணுமா? ஈவ்னிங் ஆறு மணிக்கு மேல விஜயமங்கலம் வாங்க. பேசிட்டு இருப்போம்னு கூப்பிட்டேன். அதை எல்லாம் அவர் கிட்ட, ஆறு மணிக்கு மேல அவ எதுக்குக் கூப்பிடறான்னு எனக்குத் தெரியாதான்னு சொல்லியிருக்கீங்க. . . நான் வெச்சுடறேன். இனிமே என்னை போன்ல கூப்பு டாதீங்க. யாருக்கும் என் நெம்பரை தயவு செஞ்சு குடுக்காதீங்க.”

கீதாவுக்கு மார்பு படபடத்தது! மனசு கெட்டு குட்டிச்சுவர் ஆகி விட்டது போல இருந்தது. இந்த நாய் எதுக்கு இப்போ மத்தியா னத்துல போன் பண்ணினான்? இன்னொரு பான்பராக்கைக் கிழித்து வாயில் கொட்டிக்கொண் டாள். பழனிச்சாமிக்கு மீண்டும் அடித்து அழைக்க முயற்சித்தாள். நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றது. நாயி. ஆப்பே பண்ணிப் போட்டுட் டியா? அந்தத் தொளசாப்புள்ளை ஊட்டுக்கு போயிருக்குமோ? சேச்சே. அங்கதான் போகமாட் டேன்னு சொல்லியிருக்குதே! அவ ஒரு அழகின்னு அவகிட்ட எல் லாம் எப்பிடி போச்சோ? கருமம் என்று பழனிச்சாமியைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தபோது கைப்பேசி மீண்டும் அலறியது! சென்னிமலை மூர்த்தி! ச்சை. இவன் தொல்லை வேறு. ஒருத்தன் அழகா இருக்கானேன்னு பாக்கு றது தப்பா? பார்த்தா ஒடனே காதல் வந்துடுமா?

“ஹலோ. நான் மூர்த்தி பேசுறேன்.”

“சொல்லுங்க. ஏன் இப்படிக் கத்துறீங்க? காதே அடைச்சுப் போச்சு உங்க நர்ஸ் அக்கா வீட்ல இல்ல. நான் பார்க்கவும் இல்லை!”

“நான் எங்க அக்காவைக் கேக்கவே இல்லை. நீங்க சொல்றீங்க. எங்கக்காவைப் பாக்குறதுக்கு வந்தப்பதான் உங்களைப் பார்த் தேன். நீங்க என்னைப் பார்த்தீங்க. உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னா மாட்டேன் மாட்டேன்னே சொல் றீங்க. என்னை உங்களுக்குப் பிடிக்கலையா? இப்ப சொல்லுங்க. பிடிக்குது பிடிக்கலை ரெண்டுல ஒண்ணு. சொல்லுங்க. ப்ளீஸ். இல்லின்னா ஆறு மணிக்கு நான் கூப்புடறேன் அப்ப சொல்லுங்க.”

“உசுரோட இருந்தா சொல்றேன்.”

“ஐய்யோ. என்ன இப்படிச் சொல்றீங்க. ஏங்க எங்கீங்க இருக் கீங்க?”

“விஜயமங்கலத்துலதான் இருக்கேன். இப்பத்தான் டிடிட் டைக் கரைச்சுக் குடிச்சேன். கண் ணெல்லாம் இருட்டு கட்டீட்டு வருது. தறி ஓட்டறதை நிப்பாட் டிட்டு ஆறு மணிக்கு வந்து என் பொணத்தைப் பார்த்துட்டுப் போங்க. வெச்சுடறேன்.” கட் செய் ததும் இன்னொரு ரிங் வந்தது!

“ஹலோ. . . கார்த்தி இப்பத்தான் உங்களைக் கூப்பிடலாம்னு உங் களை நெனச்சிட்டு கே வரிசைக்கு போனேன். உடனே கூப்புடறீங்க. . . அதெப்படி ரெண்டு பேருமே ஒரே நேரத்துல நெனச்சிட்டோம்? அதான் சாமி இருக்குதுன்னு நம்ப ணும். நீங்க நம்பவே மாட்டீங்றீங்க. வீட்ல பிரச்சினை ஆயிடிச்சிங்க கார்த்தி. எங்க அம்மாவும், தங்கச்சியும் உங்களைச் சந்தேகப்பட றாங்க. என்னையும் சந்தேகமாவே திட்டறாங்க. கார்த்தி அண்ணான்னு தானே நீ பேசுறேன்னு கேக்க றீங்க. ஒரு அண்ணன்கூட தின மும் நைட்ல பத்து மணியில இருந்து மணிக்கணக்காவா பேசு வாங்க. அப்படிங்குது எங்கம்மா. கொஞ்சம் நாளைக்கு நைட்ல என்னைக் கூப்புடாதீங்க. ப்ளீஸ் சாரிப்பா. . .”

“பின்ன நீ எப்ப என்னைக் கூப்பிடுவே? கம்பெனிக்கு உள் ளார செல்போனை கொண்டுட் டும் போவக் கூடாது. சொல்லு.”

“நானே கூப்பிடுறேன்.”

“போடி. நீ கூப்பிடவே வேண் டாம்.”

“சாரிப்பா. சாரி சாரி சாரி.”

“சரி உன் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு வீடு காலியா இருக்குது வாட கைக்கு வீட்டுக்காரம்மா கிட்ட கேட்டுப் பாக்குறேன்னு சொன் னீல்ல. வீடு பார்த்தியா? இங்க ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு எனக்கு வயிறு சரியில்ல. . . டீவி வாங்கிடலாம், சாமான், செட்டுக வாங்கிடலாம். நீ என்கூட வந்து இருந்துக்க. . . நீ வேலைக்கிப் போக வேண்டாம். . .”

“அந்த வீட்டை வாடகைக்குத் தரமாட்டீங்றாங்க. இப்பத்தான் வீட்ல பிரச்சினை ஆயிடிச்சே. அந்த வீடு வேண்டாம். அதும் இல்லாம எங்க ஊர்ல நீங்க வந்து இருக்க வேண்டாம்!”

“சரி அப்ப நான் நைட்ல இனி உன்னைக் கூப்பிடக்கூடாது. அதானே அதான் ரெண்டு மூணு நாளா ஆப்லயே நைட்டு இருந் திச்சா?”

“கொஞ்சம் நாளைக்குத்தான் கார்த்தி அண்ணா. . . ப்ளீஸ்.”
“ஏய் இப்ப தனியாத்தான இருக்கே. அண்ணா சொல்றே?”

“சாரி சாரி. அப்புடியே கூப் பிட்டு கூப்பிட்டு பழக்கமே ஆயி டிச்சு. இந்த வாரம் ஞாயித்துக் கிழமை என்னை சினிமாக்குக் கூட் டிட்டு போறீங்ளா? ம். நான் இன்னம் வேல் பாக்கலை, பழனி பாக்கலை, விஜய் படம்கூட இன்னம் பாக்கலை.”

“ஏன் உங்க ஊர் தோஸ்த்து பழனிச்சாமி கூட்டிட்டு போக லியா?” அவுரு என் கிட்ட பேசு னாரு. அடுத்த முறை ஊருக்கு வந்தா வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாப்ல. . .”

“உங்க நெம்பர் எப்படி அவருக் குத் தெரியும்?”

“ம். கேப்பேடி. என் செல்லை வாங்கி ஒருக்கா கூப்பிட்டு நீதான பேசினே. சரி மாலினி எப்பிடி இருக்கா?”

“மாலினி பாவம் கார்த்தி. சுரேஸ் அவகிட்ட கூட சொல் லாம தஞ்சாவூர் ஓடீட்டான். அவு ளுக்கு ஒரு போன் பண்ணியாச்சிம் சொல்லி இருக்கலாம்ல. இவ ரூம்ல அழுதுட்டே இருக்கா. சரியா சாப் புடறதுகூட இல்ல கார்த்தி. . . நீயாச்சிம் ஒரு போன் பண்ணி அவளைச் சாப்பிடச் சொல்லு. இந்த லட்சணத்துல எனக்கு தஞ்சாவூர்ல மாப்பிள்ளை பாத்துருக் கானாம். நீங்க அவன் கூடப் பேசாதீங்க!”

“மாலினி நெம்பர் என்கிட்ட இல்லையே. நீதான் என் செல்லுல பொண்ணுக நெம்பரே இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டியே. எடுத்துட்டேன்.”

“சரி. நீங்க சொல்ல வேண்டாம். நானே சொல்லிக்கறேன். ப்ளீஸ்பா. சினிமாக்கு. போலாம். சினிமாக்கு போலாம்!”

“சரி சரி சரி. திருப்பூர்ல பாக்க லாம். ஞாயிற்றுக்கிழமை காலைல நான் போன் பண்ணுறேன். ஓகே வா. செல்லம் எனக்கும் உன்னைப் பார்க்கணும்னுதான் இருக்கு. பழனிச்சாமிக்கு நான் ஒரு போன் போட்டா?”

“நீங்க ஒண்ணும் அவுருக்கு போன் போட வேண்டாம். உங் களுக்கெல்லாம் அவர்கிட்ட பேசவே தெரியாது. துருவித் துருவி கேட்டு கண்டுபுடிச்சிக்கும். அப்பு றம் எங்கிட்ட சண்டை கட்டிட்டே இருக்கும். இப்ப ஒரு வாரமா சண்டை. எங்க ஊர்க்காரன் ஒருத்தன் அதுகிட்ட, திருப் பூர்ல இருந்து ஒருத்தன் ஒரு ரூவா காசப்போட்டு போனுபோட்டு கூப்பிட்டான். இவ பஸ் ஏறிப் போனா. திருப்பூர்லயே நான் பாத் தேன்னு சொல்லிட்டானாம். அதுக்கு என்னை பண்டம்னு சத்தம் போடுது! என்னால சாவும் முட்டும் மறக்கவே முடியாது. என்னை பண்டம்னு சொல்லிப் போடுச்சு. நீங்க தயவுசெஞ்சு போனெல்லாம் அதுக்கு போட்டு கூப்புட்டு சவுக்கியமான்னு கேட் டுட்டு இருக்காதீங்க. சிவா கிட்ட இது போனு போட்டு காரியத்த முடிச்சிட்டீங்ளான்னு கேட்டிருக்குது. அவன் ஏதோ சிரிச்சு பேசி மலுப்பி உட்டுட்டான்.”

“அடிச்செல்லாம் வெச்சுடு வாப்லைன்னு சொன்னில்ல.”

“ஆமா. அடிச்சுப்போடும். உனக்கு என்ன உரிமை இருக்கு துன்னு கேட்டா மறுபடியும் எச்சா அடிக்கும். வேற யாரு அடிச்சாலும் கைய முறிச்சுப்போடுவேன். அது அடிச்சா மட்டும் அப்புடி.”

“அதான் காதலு.”

“க்கும். மண்ணாங்கட்டி. அது என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்டு. . . என்ன வேணாலும் கேப்பேன். மாட்டேன்னு சொல்லாது. இப்பத் தான் போனவாரம் சின்ன மேடம் சின்ன மேடம்னு புதுசா கூப்புட் டுச்சு. குட்டிப் பிசாசுன்னு சொல் லுச்சு. முன்ன. . . அதைத்தான் சிம்பு காளைல கதாநாயகிய கூப் புட்டான் அப்புடின்னு இனிமே உன்னைக் குட்டிப்பிசாசுன்னு கூப்புடமாட்டேனுட்டுது. சிம்புக்கு எப்படிக் குட்டிப்பிசாசு தெரிஞ்சு துன்னு டென்சன்ல இருந்திச்சு.”

“பாரு பழனிச்சாமி பேச்சை எடுத்தா நிறுத்தாம ஓய்வே இல்லாம பேசுறே பாத்தியா.”

“ஆமா அதும் விஜயமங்கலம், நானும் விஜயமங்கலம். நான் வயசுக்கு வந்தப்ப இருந்து என்னை லவ் பண்ணுது, ஆனா ஒரு வாட்டி தான் என்னோட இருவது வயசுல இருபத்தி எட்டாம் தேதி. ஜனவரி மாசம் ஐ லவ் யூன்னு சொல்லிச்சு. அதோட செல்லுல 1/2கிறுக்கு வி.ஜே.எம்.னு போட்டிருக்குது. நான் பண்ற கூத்துக்கு அப்புடித் தான் போடுமாம். குட்டிப்பிசாசே நல்லா இருந்துச்சு. சரி செல்ல காசு என்ன ஆகுறது உங்குளுக்கு? ஈவ்னிங் ஆறு மணிக்குக் கூப்பி டுங்க. வெச்சுடறேன். ஞாயித்துக் கிழமை கண்டிப்பா கூப்பிடுங்க.” கீதா செல்லில் மணி பார்த்தாள். ஒன்று முப்பதுதான் ஆகியிருந்தது. ஒன்று நாற்பத்தி ஐந்திற்குத்தான் கே.கே.சி. விஜயமங்கலம் வந்து சேரும்! வாயில் இருந்த பான் பராக் துகள்களைத் துப்பிவிட்டு, இன்னொன்று புதிதாய்க் கிழித்துக் கொட்டிக்கொண்டாள். செல் போன் மீண்டும் அலறியது! 04294 என்றிருக்க. யார் ஒரு ரூபாய் போட்டுப் பண்ணுவது என்று எடுத்தாள்.

“வணக்கமம்மா. நல்லா இருக்கியாம்மா? வீட்ல அம்மா, அப்பா நல்லா இருக்காங்களாம்மா? சாப்புட்டியாம்மா? ஏன் பேசவே மாட்டீங்றே? யாராச்சிம் வீட்ல திட்டினாங்ளா?”

“சாப்புட்டேன். . . சொல்லுங்க. . . டூட்டி முடிஞ்சுட்டுதா?”

“டூட்டிலதான்மா இருக்கேன். ஈரோடு கோர்ட்டுக்கு வந்தேன். சாப்பாட்டு நேரம். சாப்பிடப் போலாம்னு கடைவீதில நின்னேன்.”

“என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நாளைக்குப் பெருந்துறை பஸ்ஸ்டாண்டுல காலைல பத்து மணிக்கு நிப்பேன். எனக்குப் பணம் ரெண்டாயிரம் வேணும்.”

“சம்பள டேட்டுக்கு இன்னம் பத்துநாள் இருக் கேம்மா. திடீர்னு பணத்துக்கு நான் எங்க போவேன்மா.”

“அதெல்லாம் முடியாது. எனக்கு பணம் வேணும். நான் நிப்பேன். நீங்க வந்து குடுத்துட்டு டூட்டிக்குப் போங்க. நான் வெச்சுடறேன்.” வைக்காதேம்மா என்ற அவரது குரல் கடைசியாய் காதினுள் விழ விழவே துண்டித்தாள் கீதா. அதே சமயம் விஜயமங்கலம் சந்தைக் கடை வழியாகப் பழனிச்சாமி எக்ஸெல் சூப்பரில் வருவதைப் பார்த்தவள் நிழல் குடையை விட்டு வெளியேறி அவன் பார்வை படு மாறு நின்றாள். பழனிச்சாமியும் இவளைக் கண்டதும் இவளை ஒட்டினாற்போல வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான். “உக்காரு கொடுவேரி போறோம் இப்போ.” என்றான். கீதா எதுவும் சொல்லாமல் அவனை ஒட்டி பின்னால் அமர்ந்துகொண்டாள்.

பழனிச்சாமி சந்தைக் கடை வழியாக மேக்கூர் தாண்டியதும் எக்ஸலை முறுக்கினான். திங்களுர் நோக்கி வண்டி விரைந்தது!

– கூப்புட்டா செல்லை எடுத்து என்ன ஏதுன்னு கேட்கவே மாட்டீங்ளா? அப்புடி என்ன கோபம்? எத்தனை தடவை மூணு நாளா கூப்பிட்டுட்டே இருக்கேன் தெரியுமா? சரி நீங்களாச்சிம் கூப்பிட்டு எதுக்கு கூப்பிட்டேன்னு கேக்கலாம்ல? அதுக்கும் மொடையா? என்று பழனிச்சாமியிடம் கேட்டுக் கொண்டிருந்தபோது கீதாவின் செல் அலறியது. கொஞ்சம் மெதுவாப் போங்க. எங்க சுந்தர் அண் ணன் கூப்பிடுது. . .

“அண்ணா சுந்தரண்ணா. சாரின்னா திடீர்னு வயித்து வலி போட்டு கொல்லுதுங்க. என் ப்ரெண்டு வந்தாப்ல ஆமா. வண்டிலதான் போயிட்டிருக்கேன். சாரிண்ணா இன்னொரு நாளைக்குக் கண்டிப்பா வர்றேண்ணா. அதான் சாரி சொல்லிட்டன்ல. என்ன கூடவா. இப்பத்தான சொன்னேன். ப்ரண்டு அப் படின்னு பாத்திங்ளா. சந்தேகமா பேசறீங்க. என்ன? அண்ணா பஸ்சுல ஒரே இறைச்சலா இருக்கு சுந் தரண்ணா. சரியா கேக்க மாட்டிங்குது. . . ம். என்ன ட்ரெஸ்ஸா? ப்ளூ கலர் சுடிதார் போட்டு இருக்கேன்” கீதா பேசிக்கொண்டு இருக்கையிலேயே வண்டியை வேப்பை மர நிழலில் நிப்பாட்டி இறங்கினான் பழனிச்சாமி.

– ஏன் வண்டிய நிறுத்திட்டீங்க? நான் பேசிட்டே வர்றேன். ஓட்டுங்க. ம். சொல்லுங்க சுந்தரண்ணா. என்றபோது பழனிச்சாமி கீதாவின் கன்னம் மீது ஒரு அப்பு அப்பினான். கீதா செல்லை கட் செய்து விட்டு “இப்ப எதுக்கு அடிக்கறீங்க? அண்ணன்னு தான் சொன்னேன்” என்றான்.

– அவன் என்னடி கேட்டான்? என்ன ட்ரஸ்சுங் றான். நீ புளூ கலர் சுடிங்றே? ஏன் வித்தவுட்ல உக்காந்துட்டு போயிட்டிருக்கேன்னு சொல்ல வேண்டீதுதான.

– இதப்பாருங்க. செல்லை ஆப் பண்ணீட்டேன். இனிமே உங்களோட வர்றப்ப, பாக்குறப்ப செல்லை ஆப் பண்ணிடறேன் போதுமா.

– கையில எதாச்சிம் சிக்கி இருந்தா மண்டைப் போடாப் போட்டுக் கொன்னிருப்பே சிரிக்காதடி ஏறு வண்டீல. . . என்றவன் ஸ்டார்ட் செய்து அமர பின்னால் அமர்ந்தவள் இதெதுக்கு உங்களுக்கு இத்தனை கோபம் வருது? என்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *