தொழில்முறை நடிகையாக இருந்து, வீராச்சாமியைக் கல்யாணம் கட்டியவுடன், பிள்ளை குட்டி என ஆனபின் குடும்பத்தைக் கவனிப்பதிலேயே காலத்தை ஓட்டினாள் கௌரி. வழக்கம் போல அன்றும் வீராச்சாமியுடன் விவாதம்.
“ஏய், இன்னான்றே இப்போ ! சொம்மா தென்துக்கும் கத்தி கூப்பாடு போட்டுனுகீற…” என்று விழி பிதுங்கித் தள்ளாடிய வீராச்சாமி, கௌரி விட்ட அறையில், வாசல் தரையில் பொத்தென்று விழுந்தான்.
“கௌலீ ழீ ழல்லா இலுக்கனு….” என்று கை எடுத்துக் கும்பிட்டவனிடம் இருந்து சற்றைக்கெல்லாம் பேச்சு மூச்சைக் காணோம். பதறி போனாள் கௌரி. கிட்ட நெருங்கி நாசித் துவாரத்தில் விரல் வைத்துப் பார்த்தாள்.
‘நல்ல வேளைக்கு மூச்சிருக்கு !’ என்று தெம்பானாள். குமட்டிய சாராய நெடியைத் தாங்கிக் கொண்டாள். வீராச்சாமியின் அவிழ்ந்த வேட்டியை, இறுக்கிக் கட்டி, அவனைத் தரதரவென குடிசையினுள் இழுத்து, தூக்க முடியாது தூக்கி கயிற்று கட்டிலில் போட்டாள்.
குடிசை மூலையில், ஏதோ நிகழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்த இலவச டி.வி.யை அணைத்தாள்.
சட்டைப் பொத்தான்களை அவிழ்த்து விட்டு, அங்கே கிடந்த ஓலை விசிறியில் லேசாக விசிறி விட்டாள்.
“இந்தாம்மே கௌரீ…வூட்டுல தான் கீறியா ?” என்று குடிசைக் கதவை அடித்தாள் கோமளவல்லி.
கதவைத் திறந்த கௌரி, “யக்கா, இது இம்ச நாளுக்கு நாள் தாங்கலக்கா…” என தன் கணவனின் நிலை குறித்துப் புலம்பினாள்.
“இப்படி வாய் பேசாத இருந்துகினா, அது (வீராச்சாமி) வாயடைக்கிறது கஷ்டங்கண்ணு”
“யக்கா, நீ வேற, ஏய்யா இப்டி குட்சிட்டு வந்து கலாய்க்கிற. நமக்கும் புள்ள குட்டினு ஆகிபோச்சி. ஆனது ஆச்சி, கடலு பக்கம் எப்பதான் போவேனு கேட்டு தான் உட்டேன் ஒரு உடு, அது தாங்காத சுருண்டுகிச்சி” என்றாள் கௌரி.
“அய்யே அடிச்சியாக்கும்… ம்ம்ம்ம்ம், இப்டி செஞ்சீனாக்கா அது உன் காலாண்ட சுத்தி சுத்தி வரும் பாரு !” என்று ஒரு யோசனையும் சொன்னாள் கோமளவல்லி.
“சொம்மாங்காட்டியும் சொல்லாதக்கா !”
“மெய்யாலுமே தாங் கண்ணு, செஞ்சி தான் பாரேன்.”
***
இரண்டொரு வாரங்களில் நல்ல மாற்றம் இருந்தது வீராச்சாமியிடம். நேரத்துக்கு கடலுக்குப் போவதும், மீன் அள்ளி வருவதும், குழந்தைகளை இஸ்கூலுக்கு அழைத்துச் செல்வதும் என ஆளே மாறிப்போனான்.
“இன்னாம்மே… எப்டிகீற ? அய்யே மூஞ்சீல சிரிப்பப்பாரு …” என்றார் திண்ணைப் பேச்சில் ஒரு நாள் கோமளவல்லி.
ஆனந்தத்தில் திக்குமுக்காடிய கௌரியால் அழுகையை அடக்க முடியவில்லை.
“ஏம்மே இதுக்குப் போயி அயுதுனுகீற. கவ்லைய உடும்மே. சொம்மாவே கடலு உப்பா கீது, அப்பாலிகா தாங்காது !” என்று நமட்டுச் சிரிப்புச் சிரித்தார் கோமளவல்லி.
***
வீராச்சாமியைத் தன் வசம் வைத்துக் கொள்ள, கௌரியிடம், கோமளவல்லி அப்படி என்ன யோசனை சொல்லி இருப்பார் ? உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டுங்கள்.
இரண்டொரு நாட்களில் பதில் இங்கு
))
ஒரு சின்ன க்ளூ : இந்த கதையிலும், இதற்கு முந்தைய சில பதிவுகளிலும் பதில் ஒளிந்திருக்கிறது.
***
ரெண்டு நாளாச்சுபா … உங்க முயற்சிகளுக்கு நன்றி. எனது பதில் கீழே,
கோமளவல்லியின் ரோசனை:
‘எதுனா டி.வி. நிகழ்ச்சிக்கு ஜட்ஜா போயி, நம்ம குப்பத்துல ஒரு ப்ரோக்ராம் வச்சிகினு, வீராச்சாமிய அதுல கலந்துக்க வச்சி, போட்டுத் தாக்கிருவேன்’னு சொல்லிப் பாரு கண்ணு
))))
தொடர்புடைய சிறுகதைகள்
வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர ஆடையை.
வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் பச்சை ருத்ராட்சங்களென சடை சடையாய் நெல்லிக்கனிகள்.
சில ...
மேலும் கதையை படிக்க...
"ஊரெல்லாம் ஷோக்கா கீதுபா" என்கிற பாஷையை குப்பத்தில் கூட கேட்கமுடிவதில்லை. அல்ட்ரா மாடர்ன் தமிழுக்கு மாறியிருந்தனர் அனைவரும்.
தன்னைப் போலவே சர்வ சாதரணமாக ஆங்காங்கே அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டம் ரிடர்ன் இந்தியர்கள். கையில் மினரல் வாட்டருடன் உலாவுவதைப் பார்க்கும்போதே தெரிந்தது சந்தீப்புக்கு.
மனைவியும் ...
மேலும் கதையை படிக்க...
மாப்ள, இந்த வாரம் சனிக்கிழமை சாயந்திரம் நேரம் இருக்குமா ?
என்னடா விசேசம் ?
நாங்களும் இந்த ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆகுது. உங்க வீட்டுக்கு அத்தன தடவ வந்திட்டோம். வந்து சாப்பிட்டு தொல்லையும் கொடுத்திருக்கோம்.
இந்த சனிக்கிழமை நேரம் இருந்தா, "சந்துரு குடும்பத்தோட ...
மேலும் கதையை படிக்க...
"இதுவரைக்கும் படிச்சதெல்லாம் சும்மா தான். இனிமேல் தான் கவனமா இருக்கணும். எப்படியாவது இங்க சீட் வாங்கிறனும். என்ட்ரன்ஸ் நல்லா பண்ணு. கௌன்ஸிலிங்ல தைரியமா பேசு. எதுவும் தெரியாதுனு சொல்லாதே. என்ன சரியா ?"
அம்மாவும், அப்பாவும், இருபுறம் இருந்து மத்தளம் வாசிக்க, பொறுமையாகக் ...
மேலும் கதையை படிக்க...
"டேய் ரவி அவ விடற லுக்கு நாளுக்கு நாள் தாங்க முடியலடா".
Outlook-ல் pop-ஆன "This evening special Dinner" click செய்து, "எவ அவ" என்று நக்கலுடன் ஆனந்தைப் பார்த்தான் ரவி.
ரவியும், ஆனந்தும் ஒரே அலுவலகத்தில் வேலை (மன்னிக்க) பொட்டி தட்டுபவர்கள். ...
மேலும் கதையை படிக்க...
"எலே ஏகாம்பரம், இன்னிக்கு ரேஷன்ல சீனி போடுறாக தெரியும்ல. வெள்ளன வந்து கார்டையும், காசையும் வாங்கிட்டு போயி, சீனி வாங்கியாந்து ஆத்தா கையில குடுத்துரு" என்றாள் மெடிக்கல் ஷாப்பிலிருந்து செல்வி.
"என்னப்பூ ஏகாம்பரம், கொஞ்ச நாளா சீமைக்கு போயிட்டு வந்து ஆளே மாறி ...
மேலும் கதையை படிக்க...
தினம் பள்ளிக்கூடம் போகும் போதும், விட்டு வரும்போதும், அடுத்த தெருவில், அந்த வீட்டைக் கடக்கையில் மட்டும் சற்று நின்று நிதானித்து தான் செல்வான் சௌந்தர்.
நன்றாக கடைந்தெடுத்த கரும்அரக்குத் தேக்கில், வழு வழுவென்று வழுக்கைத் தலை போல பள பளத்து, வெளி உத்தரத்தில் ...
மேலும் கதையை படிக்க...
"சின்ன பக், யூனிட் டெஸ்ட்டிங்ல எப்படி மிஸ் பண்ணிங்க ? இன்டக்ரேஷன் டெஸ்ட் வரைக்கும் வந்தாச்சு. டெஸ்ட் ரிசல்ட்ஸ் செக் பண்ணனும் எடுத்துகிட்டு வாங்க....." என்று உடுக்கை அடித்தாள் டெக் லீட் வர்ஷினி.
"ஹேய் இந்த சுடிதார் கலர் நல்லா இருக்கு. எப்ப ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகத்தின் டென்னிஸ் மைதானம். முதல் செட் ஆடி முடித்து, சிறிது ஓய்வெடுத்தனர் ஜேம்ஸும், ராகினியும்.
"ஜேம்ஸ், நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா ..." என்று இழுத்தாள் ராகினி.
அந்தப் பண்ணாட்டு நிறுவனத்தின் சென்னை கிளைக்கு ஜேம்ஸ் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அந்நிறுவனத்தின் மென்பொருள் ...
மேலும் கதையை படிக்க...
"ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளைக் காதலிக்கறேன் என்றும் சொல்றே. இதெல்லாம் நல்லதுக்கில்ல ... ஆமா ... சொல்லிட்டேன்"
கல்லூரி வாசலில் அவள் கடக்கையில், 'மியாவ்' ...
மேலும் கதையை படிக்க...