காட்டில் இருந்த ஒரு புலிக்கு வயிற்றில் நோய் கண்டிருந்தது. அது பொல்லாத நச்சு நோய். அந்த நோய் ஏற்பட்டிருந்ததால், அதனால் எவ்விதமான உணவும் உட்கொள்ள முடியவில்லை. நாளுக்கு நாள் மெலிந்து வந்தது. அப்படியே நோய் வளர்ந்து வந்தால், தான் இறந்துபோக நேரிடுமென்ற அச்சம் புலிக்கு உண்டாகியது.
தன் நோயை எவ்வாறு தீர்ப்பது என்று புலி சிந்தனை செய்துகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது. புலி அதனிடம் தன் நோயைத் தீர்க்க ஒரு வழி கூறும்படி கேட்டது.
“பக்கத்து ஊரில் ஒரு மருத்துவன் இருக்கிறான். அவன் இது போன்ற நச்சு நோய்களைத் தீர்ப்பதில் வல்லவன். அவனைப் போய்ப் பார்” என்று கூறி விட்டு, நரி தன் வழியில் சென்றது.
புலி மெல்ல மெல்ல நடந்து மருத்துவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தது.
அந்த நச்சு மருத்துவன் புலியின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கினான். அதற்குத் தகுந்த மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்தினான்.
நோய் தீர்ந்தவுடன் புலிக்குப் பசியெடுத்தது. அத்தனை நாட்களாக ஒன்றும் தின்னாமல் இருந்த தால் பசி அதிகமாயிருந்தது. உடனடியாக ஏதாவது தின்ன வேண்டும் போலிருந்தது.
தன் நோயைத் தீர்த்தவன் என்று சிறிதுகூட எண்ணிப்பாராமல் புலி, மருத்துவன் மீது பாய்ந்தது, அவனை அறைந்து கொன்று, உடலைக் கிழித்துத் தின்றது.
நன்றிக் குணம் இல்லாத கொடிய புலிக்கு உதவி செய்த மருத்துவன் அதற்கே இரையானான்.
கருத்துரை: கொடிய புலிக்கு உதவிய மருத்துவன் அதற்கே இரையானான்; நல்லறிவில்லாத தீயவர்களுக்குச் செய்யும் உதவிகளும் இது போலத் தீமையாகவே முடியும்.
- நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம் – முதற் பாதிப்பு ஜனவரி 1965.
தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு மடைவாயில் கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது, அந்த மடையில் வந்து கொண்டிருந்த ஒரு கொழுத்த மீன் அந்தக் கொக்கைப் பார்த்தது. பார்த்தவுடன் அது பயந்து அப்படியே நின்று விட்டது.
அந்த மீனின் தாய், அதனிடம் கூறிய சொற்கள் அதற்க்கு நினைவுக்கு வந்தன. ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு நாள் வயிற்றுவலி கண்டது. சிறுது நேரம் வலித்துக் கொண்டு இருந்து பின் விட்டுவிட்டது. ஏதோ உணவுக்கோளாறு என்று பேசாமல் இருந்து விட்டான். பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது. ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் தேவநாதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அவன் வேளை தவறாமல் உணவு வைப்பான் ; நாள்தோறும் குளிப்பாட்டுவான், ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவான்; இவ்வாறு அன்புடன் அதை வளர்த்து ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரில் கண்ணன் என்று பெயருடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவன் மிக ஏழை. அவன் ஒரு பணக்காரரிடம் வேலைக்குச் சேர்ந்தான். அந்தப் பணக்காரரின் வீடு மிகப் பெரியது. அந்த வீட்டைச் சுற்றிலும் ஒரு பெரிய பூந்தோட்டம் அமைந் திருந்தது. அந்தத் ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். இருவரும் தோழிகள். அவர்கள் ஒன்றாகவே இருப்பார்கள்.
பள்ளிக்கூடம் போகும்போதும், சந்தைக்குப் போகும்போதும், ஊருணிக்கு நீர் மொண்டுவரச் செல்லும்போதும் இருவரும் ஒன்றாகவேச் செல்வார்கள்.
நீர் மொள்ளச் செல்லும்போது ஒருத்தி போன் குடம் எடுத்து வருவாள். மற்றொருத்தி மண்குடம் எடுத்து ...
மேலும் கதையை படிக்க...
பொன்னப்பர் ஒரு பெரிய பணக்காரர். அவர் மனைவி பெயர் தங்கம்மாள் . அவர்கள் வீட்டில் பணம் நிறைய இருந்தது. சொன்ன வேலையைச் செய்ய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் பேசிச் சிரித்து விளையாட ஒரு பிள்ளை இல்லை . ...
மேலும் கதையை படிக்க...
காட்டில் இருந்த பறவைகள் எல்லாம் ஒரு பெரிய மாநாடு கூட்டின. அந்த மாநாட்டுக்கு எல்லாப் பறவைகளும் வந்திருந்தன. பறவைகள் முன்னேற்றத்தைக் குறித்துப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டு முடிவில் ஒரு நடன அரங்கேற்றம் ஏற்பாடாகியிருந்தது. திட்டப்படி கடைசியில் மாநாட்டு மேடையின் மீது ஏறி ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவர் பெயர் வெள்ளுடையார் . அவர் வெள்ளையான உள்ளத்தை யுடையவராக இருந்ததாலும், எப்பொழுதும் தூய உடைகளையே வெள்ளையாகத் துவைத்து உடுத்தி வந்ததாலும் அவருடைய இயற்பெயர் மறைந்து காரணப் பெயராகிய வெள்ளுடையார் என்ற பெயரே நிலைத்து ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிங்கம் காட்டில் அலைந்து கொண்டிருந்தது.
அதற்குப் பசி! பசி யென்றால் பசி அப்படிப்பட்ட பசி! எதிரில் ஒரு விலங்கு கூட அகப்படவில்லை.
வரவர இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் எச் சரிக்கையாகி விட்டன. சிங்கம் வருகிற நேரம் தெரிந்து எங்கோ பதுங்கி விடுகின்றன. ...
மேலும் கதையை படிக்க...
ஒரு காட்டில் சிட்டுக் குருவி ஒன்று இருந்தது. சின்னம் சின்னமாய் அதற்கு நான்கு குஞ்சுகள் இருந்தன.
ஒரு நாள் சிட்டுக் குருவி, தன் குஞ்சுகளுக்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் குஞ்சுகளில் ஒன்று, "அம்மா, அம்மா என்னால் வெயிலைத் தாங்க ...
மேலும் கதையை படிக்க...
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை