அன்னச் சேவலே! அன்னச் சேவலே! ஒன்று கேள்! நீ , நின் மனைவியோடு, அதிகாலைப் பொழுதில் இருபுறமும் சுடர் தோன்றும் குமரியில் விருந்தருந்தி, வடதிசைக் கண்ணுள்ள இமய மலைக்குச் சென்றால், வழியிலே சோழ நாடு தெரியும். அதனைக் கண்டதும், அங்கே இறங்கிக் களைப்பாறு ! நேரே உறையூருக்குப் பறந்து போ! வானோங்கும் கிள்ளியின் மாளிகை உன்னைத் தடுத்து நிறுத்தும். வாயில் காப்போர்க்கு அஞ்சாமல் உள்ளே செல். அங்கே, பெருங் கோக்கிள்ளியின் காதிற் கேட்கும்படி, யான் ஆந்தைப் புலவன் “அடிமை” என்று கூறு!
அப்புறம் நடக்கும் சிறப்பை நீயே தெரிந்து கொள்!
பட்டும் பீதாம்பரமும் பாலும் பழமும் அளித்துக் கொட்டு மேளத்துடன் உனக்கும் உன் மனைவிக்கும் திருமணம் நடத்தி வைப்பான்!
- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புடைய சிறுகதைகள்
"வெளிமான், உன்னிடம் பரிசில் பெற வந்தேன்!” என்றார் பெருஞ்சித்திரனார்.
"தம்பி, இவர்க்குப் பரிசில் தருக" என்று தன் தம்பியை நோக்கிக் கூறினான் வெளிமான்.
இளவெளிமான், புலவர் திறம் உணரா இளையன். எனவே, அவன் தன் கைக்குக் கிட்டிய பொருளைக் கொண்டு வந்து பரிசெனக் கொடுத்தான். ...
மேலும் கதையை படிக்க...
வாரி வழங்கும் வள்ளல் ஆய்அண்டிரன். யானை, குதிரை, தேரோடு பொருள் பல பாடுவோர்க்கு அளிப்பவன்.
அந்தோ ! ஆய் உயிர் துறந்தான். அருமை மனைவியரும் உயிர் நீத்தனர். "சுட்டுக் குவி" என்பது போல் ஆந்தை அலறியது. சுடுகாட்டில் ஈம விறகு அடுக்கி ...
மேலும் கதையை படிக்க...
இளங் குமணன் தன் அண்ணன் குமணனை விரட்டி விட்டு, அரசுக்கட்டில் ஏறினான். கொடை வள்ளலாகிய குமணன் காட்டிற் சென்று, தலை மறைவாய் வாழ்ந்து வந்தான்.
பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர், காட்டிற்குச் சென்றார். குமணனைக் கண்டு பாடினார். அப்பொழுது குமணன் கையிற் பொருள் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஊரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றார்.
அவர் குளிக்கும் போது திடீரென வெள்ளம் வந்து ஆசிரியரை இழுத்துச் சென்றது.
"என்னை யாராவது காப்பாற்றுங்கள்" என்று பலமுறை கூச்சலிட்டார். அவருக்கோ நீந்தத் தெரியாது.
அப்போது, ஆற்றின் கரையில் வேட்டி துவைத்துக் கொண்டிருந்தவன் ...
மேலும் கதையை படிக்க...
வழி தவறிய ஆட்டுக்குட்டி, தன் தாயைத் தேடி அலைந்தது. தாயைக் காணவில்லை. களைப்பு மிகுந்தது ஆட்டுக்குட்டிக்கு. அருகில் இருந்த ஓடையில் தண்ணீர் பருகத் தொடங்கியது.
அப்போது, சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்த ஓநாய், "ஆட்டுக் கூட்டியே!' என்று உறுமியது,
ஆட்டுக்குட்டி பயந்து நடுநடுங்கிது. தண்ணீர் ...
மேலும் கதையை படிக்க...
இரவலர் யார்? புரவலர் யார்?
ஆற்றிலே மூழ்குவதே நல்லதா?