க.சிவகுமார்

என்னை பற்றிய சுய குறிப்புகள் இதோ பெயர்: க . சிவகுமார் பிறந்த இடம்: ஆண்டிமடம் , அரியலூர் மாவட்டம் பள்ளிப்படிப்பு: ஆண்டிமடம் கல்லூரிப்படிப்பு: சேலம் தற்போது வசிப்பது: ஓசூர், தமிழ்நாடு தொடர்புக்கு: க .சிவகுமார் , கதவு என் 146 , தில்லை நகர் , பாகலூர் சாலை , ஓசூர் ,கிருஷ்ணகிரி மாவட்டம் . மின்னஞ்சல்: andiessiva@gmail.com blogger – ஹட்டப்ஸ்://vasikarapriyan .blogspot .com , (kuzhalosai) மேலும் படிக்க...»

வ.அ.இராசரத்தினம்

வ. அ. இராசரத்தினம் (சூன் 5, 1925 – பெப்ரவரி 22, 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். திருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி மேலும் படிக்க...»

க.நவசோதி

குழந்தை இலக்கி யத்தை வளர்க்கவேண்டும் என்ற இலட்சியமுடைய இவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பன சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சஞ்சிகை, தமிழோசை, விவேகி, கலாநிதி, கலைமதி, வெண்ணிலா, சிறுவர் சுடர், மாணவ முரசு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன; வெண்ணிலா, தமிழோசை, என்பன இவர் நடாத்திய பத்திரிகைகள்; இலங்கை வானொலியில் இவரது கட்டுரை, கவிதை, நாடகங்கள் இடம்பெற்றுள்ளன; கொழும்பைச் சேர்ந்த இவரது புனைப்பெயர்-ஆவிகன். மொழி உணர்வும் அறிவும் இலக்கியப் பிரக்ஞையும் மிக்க மேலும் படிக்க...»

நீர்வை பொன்னையன்

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 – மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951 மேலும் படிக்க...»

செங்கை ஆழியான்

செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 – 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார். இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். மேலும் படிக்க...»

யோ.பெனடிக்ற் பாலன்

பெனடிக்ற் பாலன், யோ. (1939 – 1997) ஓர் எழுத்தாளர். இவர் கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்று உளவியல் விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது ‘விபச்சாரம் செய்யாதிருப்பாயா’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு 1995 இல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இவரது நீயொரு பெக்கோ என்ற மேலும் படிக்க...»

செம்பியன் செல்வன்

இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 – மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை மேலும் படிக்க...»

குப்பிழான் ஐ.சண்முகன்

ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு ஆகஸ்டு 1, 1946, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். இவரது நூல்கள் கோடுகளும் கோலங்களும் (சிறுகதைகள் – 1976) பதிப்பு விபரம் அலை வெளியீடு 6. மேலும் படிக்க...»

செ.யோகநாதன்

ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் – எழுதியவர்: முல்லை அமுதன் – 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு மேலும் படிக்க...»

மருதூர் வாணர்

மன உறுதியோடு நில்லாமல் இலக்கியப் பணி செய்தவர் கலாபூஷணம் மருதூர் வாணர் - கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் -May 9th, 2019 மருதூர் வாணர் தனது எழுபதாவது வயதில் கடந்த 2009.05.08ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மருதமுனை பிரதான வீதியைக் கடக்க முற்படும் போது விபத்தில் உயிரிழந்தார். மருதூர் வாணர் இலங்கையின் இலக்கியப்பரப்பில் இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை புரிந்துள்ளார்.இலக்கியமே இவர் பேச்சிலும் நடைமுறைச் செயற்பாடுகளிலும் இருந்து வந்ததையாரும் மேலும் படிக்க...»

வாஸந்தி

தமிழ் எழுத்துலகில் தனக்கென தனித்துவமான அடையாளம் கொண்டவர். தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படுபவர். சமூக, மனித உளவியல் கூறுகளை வெகு இயல்பாக எழுத்தில் கையாண்டவர். இயற்பெயர் பங்கஜம். கர்நாடகாவில் உள்ள தும்கூரில் 1941, ஜூலை 26ல் பிறந்தார். பெங்களூரில் வசித்தபோது, ஜேன் ஆஸ்டன், ஜெயகாந்தன், அலெக்ஸாண்டர் டூமாஸ், சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்து, தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். இவருடைய ஆரம்ப கால நாவல்கள் எல்லாமே பெண்களை மேலும் படிக்க...»

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய “நீலக்கடல்” மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன வாழ்க்கைச் சுருக்கம் இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் மேலும் படிக்க...»

முல்லைஅமுதன்

எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின் மேலும் படிக்க...»

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவன். படிப்பு இளங்கலை வணிகவியல், பணி நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலய குருக்கள். எழுத்தார்வத்தால் 1993 முதல் எழுதி வருகிறேன். முதல் படைப்பு கோகுலம் சிறுவர் இதழில் வெளியானது. கல்கி, குமுதம், பாக்யா, ஆனந்தவிகடன், குங்குமம், இந்து தமிழ் இதழ்களில் நகைச்சுவை துணுக்குகள், குறுங்கதைகள் எழுதியுள்ளேன். தளிர் என்னும் வலைதளம் நடத்தி வருகிறேன். thalirssb.blogspot.com மேலும் படிக்க...»

வாசுகி நடேசன்

வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் “சங்க இலக்கியங்களில் மருதத்திணையின் மேலும் படிக்க...»

சரசா சூரி

இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ‘ சரசா சூரி’ எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்… நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்.. பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து’ ஜாங்கிரி’ எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான மேலும் படிக்க...»

ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்

அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர். தொழில் தனியார் பள்ளி ஆசிரியர். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை, என்று 15 நூல்கள் வெளியிட்டுள்ளேன். எமது 3 நூல்களுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நூல் வெளியிட நிதி தந்துள்ளது. தொலைந்து போன கால்டுவெல் ஐயரின் நூல்களை மீட்டெடுத்து, மீள் பதிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.   ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். மேலும் படிக்க...»

தொ.மு.சி.ரகுநாதன்

தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார். மேலும் படிக்க...»

முனைவர் வா.நேரு

முனைவர் வா.நேரு..பிறந்த தேதி 31.05.1964. பெற்றோர்கள் க.வாலகுரு,சு.முத்துக்கிருஷ்ணம்மாள், இருவரும் ஆசிரியராகப் பணியாற்றி, இப்போது நினைவில் வாழ்பவர்கள். சொந்த ஊர் மதுரை மாவட்டம் சாப்டூர்.இப்போது வசிப்பது மதுரையில். தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றவர். 1. பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் 2. சூரியக்கீற்றுகள் என்னும் இரண்டு கவிதைப்புத்தகங்களும், 3. நெருப்பினுள் துஞ்சல் என்னும் சிறுகதைத்தொகுப்பும் இவரால் படைக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...»

உதயசங்கர்

கா. உதயசங்கர் (பிறப்பு: 1960) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு 1960 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் தந்தை ச. கார்மேகம் மற்றும் தாயார் கமலம். இவர் மல்லிகா என்பவரை ஏப்ரல் 12, 1987 அன்று திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு நவீனா, துர்கா என்ற இரு மகள்கள் உள்ளனர், மேலும் படிக்க...»

செய்யாறு தி.தா.நாராயணன்

செய்யாறு தி.தா.நாராயணன் நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள்:— என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள மேலும் படிக்க...»

துடுப்பதி ரகுநாதன்

கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில் மேலும் படிக்க...»

பா.அய்யாசாமி

பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில் மேலும் படிக்க...»

தாரமங்கலம் வளவன்

சுய விபரக் குறிப்பு: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 1961 ஆம் ஆண்டு பிறந்த நான், சேலம் அரசு பொறியியற் கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தேன். தந்தை தமிழாசிரியர் மற்றும் கவிஞர். முதலில் தமிழ்நாட்டில் பணி புரிந்த நான், பிறகு பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை என்று பணி புரிந்து விட்டு தற்போது தில்லியில் பணி புரிகிறேன். நான் கல்லூரி காலத்தில் இருந்தே சிறுகதைகள், கவிதைகள் எழுதி மேலும் படிக்க...»

ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்: ​’கணையாழி களஞ்சியம் பாகம் 3′ ல் திரு என். எஸ். ஜகந்நாதன் அவர்கள் மூன்றாவது பத்தாண்டு காலத் தொகுப்பாக தேர்நதெடுத்து கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட 80 கதைகளில் ஒன்று ராஜி ரகுநாதன் எழுதி கணையாழி ​,​ செப்டம்பர் 1989ல் வெளிவந்த ‘வேப்பமரத்தை வெட்டிய போது…’ சிறுகதை. பெரிய ஜாம்பவான்களோடு சேர்ந்து இவர் கதையும் சிறந்த கதைகளுக்கான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து ​மகிழ்கிறார். கீழ்வேளூரில் பிறந்து ஹைதராபாத்தில் மேலும் படிக்க...»

ஸ்ரீ.தாமோதரன்

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் எண்.64,பகுதி.1, பி.எல்.எஸ்.நகர், சின்னியம்பாளையம் (அ) கோயமுத்தூர்-641 062 செல் : 9486822851 பணி புரியும் முகவரி: நூலகர், துணை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவ மையம். தபால் பெட்டி.ஏன்.3209, அவிநாசி சாலை, கோயமுத்தூர்-641 062 எழுத்தாளராய் என் பயணம் தொடங்கியது. வலைதளத்தில் : www.sirukathaigal.com முதல் கதை 21 ம் தேதி டிசம்பர் .2014 ல் வெளி வந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக வெளியிட்டு ஊக்கப்படுத்தினர். பின்னர் மேலும் படிக்க...»

ஜே.வி.நாதன்

ஜே.வி.நாதன், பொறுப்பாசிரியர், ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழ், சென்னை. ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 37 ஆண்டுகளாக வேலூரில் வாசம். இவருடைய மனைவி ஜெயா, வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். ஆனந்த விகடன் குழும ஆசிரியர் இலாகா நிர்வாக செயல் அலுவலர், அதே பத்திரிகையின் மூத்த பத்திரிகை யாளர் (ஸீனியர் கர°பாண்டெண்ட்), விகடன் குழும சேர்மன் திரு மேலும் படிக்க...»

இரா.சந்தோஷ் குமார்

இரா.சந்தோஷ் குமார் எனும் நான் திருப்பூரில் வசிக்கிறேன். உளவியல் இளங்கலை பட்டபடிப்பை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயின்றேன். மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் எனும் மருத்து அறிக்கை தயாரிக்கும் கணினி சார்ந்த பணிக்காக சொந்த அலுவகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறேன். கல்லூரி காலத்திலிருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தாலும் .. கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் தீவிரமாக எழுத்து.காம் உள்ளிட்ட இணையத்தளங்களில் படைப்புகள் சமர்பித்து வருகிறேன். இணையத்தளங்களை தவிர்த்து வேறு எந்த ஊடகத்திலும்… இதழ்களிலும் எனது மேலும் படிக்க...»

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம்

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில் மேலும் படிக்க...»

எஸ்.கண்ணன்

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது ‘தாக்கம்’ சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. ‘புலன் விசாரணை’ 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது ‘மனிதர்களில் ஒரு மனிதன்’ மேலும் படிக்க...»

வி.ஜே.பிரேமலதா

முனைவர் ஜ.பிரேமலதா, தமிழ் இணைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி,சேலம் -7. அரசு கல்லூரிப் பேராசிரியர், கட்டுரையாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுபவர், 60 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்ளையும், 6 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கியிருப்பவர். செந்தமிழ்ச்செல்வி போன்ற இலக்கிய இதழ்களில் கட்டுரை எழுதுபவர். தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறிகாட்டுநராக இருப்பவர். திராவிடப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யும் முனைவர்பட்ட மாணவர்களுக்கும் மேலும் படிக்க...»

சாந்தி ரமேஷ் வவுனியன்

பெயர்: சாந்தி ரமேஷ் வவுனியன் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மன் பிரஜையான தமிழ்ப்பெண் ஊடகவியலாளர் இவர். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (சங்கமம்), தமிழ் இணையத்தள வானொலி மற்றும் பல்வேறு இணையத்தள ஊடகங்கள் ஆகியவற்றுக்காகப் பணியாற்றி வருபவர் சாந்தி ரமேஷ் இவற்றுள் தமிழ் இணையத்தள வானொலி நேரடியாக அவரால் நடத்தப்படுவது. 31 வயதுடைய சாந்தி ரமேஷ் யாழ்ப்பாணம், குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கணவர் மேலும் படிக்க...»

சிவக்குமார் அசோகன்

நான் குமுதத்தில் ஒரு பக்கக் கதைகள்(பல வருடங்கள் முன்பு) எழுதியிருக்கிறேன். ஜோக்ஸ் முயற்சி செய்திருக்கிறேன். குமுதம், கல்கி, குங்குமம் இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறேன். sivakumarasokan16.wordpress.com என்ற வலைப்பூவில் என்னுடைய சில கட்டுரைகளைக் காணலாம். ஃபேஸ்புக், ட்விட்டரிலும் சற்று இயங்கி வருகிறேன்.(https://www.facebook.com/sivakumar.asokan.9) ஷேர் மார்கெட்டில் வேலை. தஞ்சாவூர் வாசம். மேலும் படிக்க...»

ரேவதி பாலு

சிறு குறிப்பு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்ற்ருக்கிறார். இலைக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது. இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கும் மேலும் படிக்க...»

இமையம்

கடலூர் மாவட்டம், கழுதூரில் பிறந்த (1966) இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இப்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார். தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக அறியப்படும் இமையத்தின் முதல் நாவலான `கோவேறு கழுதைகள்’ (1994) உடனடியான கவனம் பெற்று, இன்றுவரை பேசப்படும் ஒன்றாக உள்ளது. `கோவேறு கழுதைகள்’ ஆங்கிலத்தில் ‘Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது. `ஆறுமுகம்’ 1999லும், மேலும் படிக்க...»

உஷா அன்பரசு

உஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com - உஷா அன்பரசு, வேலூர். மேலும் படிக்க...»

சுதாராஜ்

விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம் புனைபெயர்: சுதாராஜ் கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு: முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்) சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட், 189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த, கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj) Seacrest Appartment, 189/1, 6/1, Mahavithyalaya Mawatha, Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை) தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.com மேலும் படிக்க...»

கலைச்செல்வி

பெயர் : கலைச்செல்வி கணவர் பெயர் : சு.கோவிந்தராஜு வீட்டு முகவரி : கே.கே.நகர், திருச்சி 620 021 இமெயில் முகவரி : shanmathi1995@live.com இதுவரை வெளிவந்த படைப்புகள் : “சக்கை“ என்ற இவரின் நாவல் NCBH வெளியீடாக 2015 ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது. இந்நாவல் நேரு மெமோரியல் கல்லுாரி, புத்தனாம்பட்டியில் தமிழ் இலக்கியத்திற்கான பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. காந்திகிராம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இவரது சக்கை நாவலை மேலும் படிக்க...»

ஜெஸிலா

துபாய் ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பிறந்து வளர்ந்தது சென்னையில். பட்டிமன்ற பேச்சாளர். வலையுலகில் கதைகள் கவிதைகள் கட்டுரைகள் படைத்து வரும் இவர் அமீரகத் தமிழ் மன்றத்தின் தூண்களில் முக்கியமானவர். அமீரகத்தில் தமிழ் வானொலியொன்றில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் செயல்படும் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவமும் உண்டு. பெண்ணியச் சிந்தனையும்,நேர்படப் பேசுவதும் இவரது சிறப்பியல்புகள். மூட நம்பிக்கைகள், பெண்களுக்கெதிரான சிறுமைகளுக்கெதிராக தனது ‘கிறுக்கல்கள்’ வலைப்பதிவில் காரமான மேலும் படிக்க...»

அகணி

அகணி என்ற புனைபெயரில் எழுதி வரும் சி.அ.சுரேஸ் என்ற எழுத்தாளர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். இவர் அறிவியல் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகள் என்பவற்றை எழுதி வருகின்றார். இவர் கவிச்சாரல்(புதுக்கவிதைத் தொகுதி), சாயி அமுதம்(மரபுக் கவிதைத் தொகுதி), நினைவாற்றல்(அறிவியல் நூல்) ஆகிய நூல்களைக் கனடாவில் வெளியிட்டுள்ளார். அத்துடன் கனடாவில் “பொதிகைப் புதுமலர்கள்” என்ற மரபுக்கவிதைத் தொகுதியை உருவாக்கிய கவிஞர் எண்மரில் இவரும் ஒருவராவர். இவரது சில தெய்வீகப் மேலும் படிக்க...»

சரஸ்வதி ராஜேந்திரன்

பெயர்: சரஸ்வதி ராஜேந்திரன் புனை பெயர்: மன்னை சதிரா ஊர்: மன்னார்குடி இந்த வலைப்பூவில் எனது சின்ன சிறுகதைகள் வலம் வரப்போகிறது நிண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம், அந்த காப்பி இன் தரத்திற்காக. காப்பிஇன் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம், மனம், சுவை மேலும் படிக்க...»

பானுரவி

எனது சிறுகதைகள் மங்கையர்மலர், ஆனந்த விகடன், அமெரிக்காவின் தென்றல், கலைமகளில் வெளிவருகின்றன. சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ்முரசில் எனது படைப்புக்கள் வெளிவந்துள்ளன..  மேலும், சிங்கப்பூர் தேசியக் கலைக்கழகத்தார் நடத்தும் தங்க முனை விருதுப் போட்டியில், எனது கவிதைக்கு 2011-ஆம் ஆண்டு முதல்பரிசு கிடைத்தது.  கெளரவத்துக்குரிய அப்பரிசை சிங்கப்பூரின் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். (சிங்கப்பூர் வெள்ளி பத்தாயிரம்). அது தவிரவும், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் போன்றவை நடத்திய மேலும் படிக்க...»

சந்திரவதனா செல்வகுமாரன்

சந்திரவதனா செல்வகுமாரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் சந்திரவதனா இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் இரண்டாமவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி யில் கல்வி கற்றவர். கணிதத் துறையில் மேலும் படிக்க...»

இராஜன் முருகவேல்

இராஜன் முருகவேல் (சோழியான், பிறப்பு: ஆகஸ்ட் 4, 1960, சுழிபுரம், யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு ஈழத்து எழுத்தாளர். பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். தமிழமுதம் இணைய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். தற்போது புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கைச் சுருக்கம் இராஜன் முருகவேல் இலங்கையின் பறாளாய் வீதி, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முருகவேல் சரோஜியினி தம்பதிகளின் மூத்த புதல்வர். சுழிபுரம் விக்ரோறியாக் மேலும் படிக்க...»

ஸ்ரீஜா வெங்கடேஷ்

இயற் பெயர்: ஸ்ரீஜா வெங்கடேஷ். படிப்பு : M.A ஆங்கில இலக்கியம். சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. தற்போது வசிப்பது சென்னையில். கணவர்: திரு.வெங்கடேஷ். தமிழ் நாடகங்கள்: 1997 முதல் 2007 வரை ஒரிஸ்ஸா புவனேஸ்வரில் வாசம். அந்த வருடங்களில் மொத்தம் ஆறு தமிழ் நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு. அதில் இரு நாடகங்கள் ஒரிஸ்ஸாவின் அப்போதைய ஆளுநர் திரு M . M . இராஜேந்திரன் மேலும் படிக்க...»

மா.பிரபாகரன்

பெயர்: மா.பிரபாகரன படிப்பு: பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவர் அரசுப்பணியில் இருக்கிறேன் வசிப்பது மதுரையில் எனது முதல் படைப்பு ‘புறக்கணிப்பு’ எனும் சிறுகதை தினமணிகதிரில் வெளியானது. தொடர்ந்து நிறைய படைப்புக்கள் கதிரில் வெளிவந்துள்ளன. தற்போது நான் சிறுவர்களுக்கான படைப்புகளில் மட்டும் எனது கவனத்தைச் செலுத்தி வருகிறேன். சிறுவர்கதைகள் குழந்தை பாடல்கள் சிறுவர்மணியிலும் சுட்டிவிகடனிலும் வெளிவரப் பெற்றுள்ளன. வளரும் இளைய தலைமுறையின் மனங்களில் ஒரு சிறிய நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தால் அதுவே மேலும் படிக்க...»

நிலாமகள்

இயற்பெயர்: இரா. ஆதிலட்சுமி புனைப்பெயர்: நிலாமகள் துணைவர் : ச. செந்தில்குமார் (எ) நெய்வேலி பாரதிக்குமார் கல்விச் செல்வம்: முதுகலை தமிழ், இளங்கலை ஆசிரியப் பட்டப்படிப்பு. (M.A., B.Ed.) இருப்பிடம் : (முன்னாள்) குறியாமங்கலம், சிதம்பரம் வட்டம். (இந்நாள்) நெய்வேலி நகரம், கடலூர் மாவட்டம்., தமிழ்நாடு, இந்தியா. எழுத்துலகில் பிரவேசித்த சூழல்: திரு. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டிக்காக பாரதிக்குமாரின் தூண்டுதலின் பேரில். துவக்கம் : 2003 மேலும் படிக்க...»

உஷாதீபன்

உஷாதீபன் தன் குறிப்பு இயற்பெயர்: கி.வெங்கட்ரமணி தகப்பனார் பெயர்:ஆ.ப.கிருஷ்ணய்யர் பிறந்த தேதி: 10.12.1951 கல்வித் தகுதி: பி.யு.சி. பிறந்த ஊர்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பணி: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு. புனை பெயருக்கான காரணம் திரு. நா. பார்த்தசாரதி, அவர்களின் தீபம் இலக்கிய இதழின் மீதான வாசிப்பு மேலும் படிக்க...»

யுவகிருஷ்ணா

யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் ஒரு தமிழ் எழுத்தாளர். தொடக்கத்தில் இணைய விவாத தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் எழுதத் தொடங்கிய இவர் விளம்பரத்துறை குறித்த சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். குங்குமம், பெண்ணேநீ, ஆனந்த விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், பில்டர்ஸ் வேர்ல்டு உள்ளிட்ட பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார். குமுதம் இதழ் கடந்த 2008ஆம் ஆண்டு தொகுத்த மேலும் படிக்க...»

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில் இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த மேலும் படிக்க...»

பாரததேவி

அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன்…’ என்று அவர் ஆரம்பித்தால், அவரது சொக்கலிங்கபுரம் கிராமமே (ராஜபாளையம் அருகில் உள்ளது) வந்து கதை கேட்க உட்கார்ந்துவிடும். நாகரிகப் பூச்சு அறியாத வார்த்தைகளும் வர்ணனைகளும் பாரததேவியின் ஸ்பெஷாலிட்டி! களத்துமேடுகளிலும், கண்மாய் கரைகளிலும் சொல்லப்படும் கிராமத்துக் கதைகள் காற்றோடு கரைந்துவிடாமல் சேகரித்து, 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது, ஐந்தாம் வகுப்பு வரைதான்! சிறுவயதில் மாடுமேய்க்கப் போனபோது கதை கேட்டு மேலும் படிக்க...»

கமலாதேவி அரவிந்தன்

கமலாதேவி அரவிந்தன் பிறப்பால் மலையாளி, எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்து இ்ன்று வரை எழுதி வருபவர். தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி என தமிழவேள் கோ. சாரங்கபணியால் பாராட்டப்பெற்றவர். தன் தாய்மொழியான மலையாளத்திலும் தமிழிலும், ஏறக்குறைய 120 சிறுகதைகள், 18 தொடர்கதைகள், 142 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட இலக்கியக்கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் 22 மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார் மேலும் படிக்க...»

முகில் தினகரன்

பெயர் – முகில் தினகரன் முகவரி – சைட் நெ-3ஃ சாந்தி நகர் ஆவாரம்பாளையம் ரோடு கணபதி அஞ்சல் கோயமுத்தூர் – 641 006. அலை பேசி எண் – 98941 25211 கல்வித் தகுதி – எம்.ஏ.(சமூகவியல்) எம்.காம். பி.ஜி.டி.பி.எம். (மனித வள மேம்பாடு) டி.ஈ.எம். (ஏற்றுமதியியல்) வயது – 49 ஆண்டுகள் தொழில் – மத்திய அரசு சார்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சிறுகதைகள் இதுவரை மேலும் படிக்க...»

நிலாரசிகன்

நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. மேலும் படிக்க...»

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றவர். சிறுகதை , நாவல் , கட்டுரைகள், கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த பதினைந்து வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். நவீன வாழ்க்கையின் பிரச்சனைகளையும், சிதைவுகளையும் பற்றிய நுட்பமான பார்வை இவருக்கு உண்டு. அது இவரது எழுத்துக்களில் விரவி இருக்கும்.156 கதைகளைக் கொண்ட என் தொகுப்பு மேலும் படிக்க...»

சி.பி.செந்தில் குமார்

18 வருடங்களாக ஆனந்த விகடன் , குமுதம் போன்ற ஜன ரஞ்சக இதழ்களில் ஜோக்ஸ், எழுதி வருகிறேன், கதைகள் அப்பப்போ எழுதுவேன் , குமுதம் வார இதழ் நடத்திய கட்டுரை போட்டியில் ரூ 1 லட்சம் பரிசு பெற்றிருக் கிறேன் தீபாவளி மலர் 2000 குமுதம் இதழில் தமிழ் நாட்டின் டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் செலக்‌ஷனில் ஒரு வராக தேர்வாகி அது பற்றி கட்டுரை வந்தது. 12 வருடங்களுகுப்பிறகு மேலும் படிக்க...»

வண்ணதாசன்

வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர். ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன் மேலும் படிக்க...»

நீல பத்மநாபன்

நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ மேலும் படிக்க...»

கி.வா.ஜகந்நாதன்

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 – நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. மேலும் படிக்க...»

பெருமாள்முருகன்

கவிதையில் தொடங்கிச் சிறுகதை, புதினம், கட்டுரைகள், அகராதி, பதிப்பு, தொகுப்பு என எதையெதையோ செய்து கொண்டிருப்பவன். மாணவர்களின் மனங்கவர்ந்தவனாக இருக்க விரும்பும் தமிழ் இலக்கியம் பயின்ற அரசுக் கல்லூரி ஆசிரியன். Interests:கற்பித்தல், எழுத்து. பெருமாள்முருகன் http://www.perumalmurugan.com கல்லூரி ஆசிரியன் நாமக்கல், தமிழ்நாடு மேலும் படிக்க...»

மெலட்டூர் இரா.நடராஜன்

பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின் ஆசிரியர். இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார். எனவே இவரது கதைகளை படிக்கும் போது, நம் இயல்பு வாழ்க்கையில் எதிர் மேலும் படிக்க...»

அ.முத்துலிங்கம்

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் மேலும் படிக்க...»

எம்.ஏ.சுசீலா

​எம்.ஏ.சுசீலா-குறிப்பு தமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு, எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் www.masusila.com 3/217,கிருஷ்ணா நகர்,திருப்பாலை, மதுரை 625014 மின் அஞ்சல் : susila27@gmail.com எம்.ஏ.சுசீலா, மதுரை- பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர். 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில் இவரது’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம்,முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளும்,கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் மேலும் படிக்க...»

சுப்ரஜா

சுப்ரஜா என்கிற புனைப்பெயரை வைத்தவர் மறைந்த மூத்த பத்திரி’கயாளர் சாவி. கல்லூரியில் படித்து கொண்டே அவரின் சாவி வார இதழில் பணிபுரிந்த வேளையில் ‘’’கிரியேடிவாக எழுது ‘என்றார்.அவரிடம் பணி புரிந்த போது மற்ற பத்திரிக’ளுகும் எழுத அனுமதித்தார். ஒரு சிறுகதையை எழுதி எனது உண்மை பெயரான ஸ்ரீதரன் என்கிற பெயரின் முன்னால் எனக்கு பிடித்த எம்.எஸ்.வி.அம்மாவின் சுப்ரபாத பிரியத்தில் சுப்ரஜா ஸ்ரீதரன் என்று எழுதி தர முதலில் அந்த பெயரில் மேலும் படிக்க...»

கலைவேந்தன்

கலைவேந்தன் என்னும் பெயரில் கதைகள் கவிதைகள் எழுதி வரும் என் இயற்பெயர் எஸ் ராமஸ்வாமி. நான் புதுதில்லியில் ஆங்கில ஆசிரியனாக கடந்த 24 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டமும் கல்வியியல் இளங்கலைப்பட்டமும் பெற்றுள்ள நான் எழுதிய சில கதைகள் விகடனிலும் விகடன் பவளவிழா சிறப்புக் கவிதைப்போட்டியில் 7000 ரூபாய்கள் பரிசுபெற்று முதலிடத்தில் வந்த எனது கவிதையும் எனது சிறு சாதனைகளாகக் குறிப்பிடலாம். மூன்று நான்கு புத்தகத்தொகுப்புக்கு ஏற்ற மேலும் படிக்க...»

ஜெயந்தி சங்கர்

சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. மேலும் படிக்க...»

அறிஞர் அண்ணாதுரை

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 – 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் மேலும் படிக்க...»

அகிலன்

அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 – ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது மேலும் படிக்க...»

அசோகமித்திரன்

அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது மேலும் படிக்க...»


சிறுகதை ஒரு சமையல்குறிப்பு – ஜெயமோகன்

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு » எழுத்தாளர் ஜெயமோகன்

[அவ்வப்போது ஏதாவது எழுத முயல்பவர்களுக்காகவும் இளம் எழுத்தாளர்களுக்காகவும் இக்குறிப்புகள் அளிக்கபப்டுகின்றன. சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஆகஸ்ட் 2006 -ல் நிகழ்ந்த சிறுகதைப் பயிற்சிப் பட்டறையில் நடத்திய பாடத்தின் வரிவடிவம் இது.]

1. சிறுகதை என்றால் என்ன?

‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே.

அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கிய வடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.

சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.

பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக் கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக் கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருபோம்.

இவை ஏதும் ‘சிறுகதை’கள் அல்ல.

புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடுகள் உண்டு. அதுதான் சிறுகதையின் அடையாளம்.

அது என்ன?

அதை கதையின் முடிப்பில் உள்ள ‘திருப்பம்’ என்று சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் ‘twist’ என்று சொல்கிறார்கள்.

அதாவது ஒரு சிறிய கதையை சிறு கதையாக ஆக்குவது திருப்பம்தான். ‘சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை’ என்று எளிமையாக வரையறை செய்யலாம்.

சிறுகதையின் திருப்பம் எப்படி உருவாகிறது?

பிற கதைகளையும் சிறுகதையையும் ஒப்பிட்டுப்பார்ப்போம்.

பிற கதைகளில் ஒரு மையம் இருக்கும். அந்த மையத்தை நமக்குச் சொல்வதற்காகவே அந்தக் கதை நிகழும். கதையை வாசித்து முடித்ததும் அந்த மையம் நம் மனதில் அழுத்தமாக பதியும்.

எளிமையான உதாரணத்தையே வைத்துக் கொள்வோம்.

**

”ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. அந்தக் காகம் தன்னைப்பற்றி உயர்வான கற்பனை கொண்டதாக இருந்தது.[1]

ஒருநாள் அந்தக் காகம் ஒரு வடையை திருடிக் கொண்டுவந்து மரத்தில் அமர்ந்தது.[2]

அப்போது அங்கு ஒரு நரி வந்தது. அது தந்திரக்கார நரி [3]

நரி காகத்திடம் ”காக்காயே உன் குரல் இனிமையானது என்றும் நீ சிறந்த பாடகன் என்றும் கேள்விப்பட்டேன். ஒரு பாட்டு பாட மாட்டாயா ?” என்று கேட்டது[4]

புகழ்ச்சியில் மயங்கிய காகம் வாயைத்திறந்து ”கா!கா!”என்று பாட்டு பாடியது. [5]

அப்போது வடை கீழே விழுந்தது. நரி வடையுடன் ஓடிப்போயிற்று.[6]

புகழ்ச்சிக்கு மயங்குகிறவன் ஏமாளி ” [7]

**

இது ஒரு நீதிக்கதை. இந்தக்கதையின் மையம் என்ன ? சொற்றொடர் 7 தான். மொத்தக்கதையும் அந்த மையத்தை நமக்குச் சொல்லும்பொருட்டே அமைந்துள்ளது. கதை முடிந்ததும் நமக்கு அதன் மையக்கருத்து தெளிவாக புரிந்துவிடுகிறது.

ஏழாவது சொற்றொடர் இல்லாவிட்டாலும்கூட அந்த நீதியை நாம் அடைந்துவிடமுடியும்.

இதேகதை இப்படி முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். ஐந்தாவது சொற்றொடருக்குப் பின்னால் கதை இப்படி உள்ளது

”புகழ்ச்சியில் மயங்கிய காகம் வடையை தன் காலால் பிடித்துக்கொண்டு வாயைத்திறந்து ”கா!கா!”என்று பாட்டு பாடியது.

நரி வாயைப்பிளந்து நிற்கையில் காகம் சொன்னது ” அஸ்குபுஸ்கு….ஒன்றாம் வகுப்பு பிள்ளைகள் இந்தக் கதையை பாடத்தில் படிப்பதை நான் நிறையதடவை கேட்டிருக்கிறேன்”

இது இப்போது ஒரு சிறுகதையின் வடிவத்தை அடைந்துவிட்டது. இறுதியில் உள்ள திருப்பம்தான் இதை சிறுகதையாக மாற்றுகிறது.

பிற கதைகளில் அதன் மையக்கருத்துதான் அதன் மையம். சிறுகதையில் அதன் திருப்பமே அதன் மையம். ராட்சதனின் உயிர் ஏழுமலை உச்சியில் உள்ள குருவியில் இருப்பதுபோல சிறுகதையின் உயிர் அதன் திருப்பத்தில் உள்ளது.

இப்போது நீங்கள் வாசித்த நல்ல சிறுகதைகளை யோசித்து பாருங்கள்

திருப்பம் எதற்காக?

திருப்பத்தை முக்கியமானதாகக் கொண்டு சிறுகதைவடிவம் உருவாகக் காரணம் என்ன?

முதல் காரணம், வாசகனின் கற்பனைக்கு அதிக இடம் கொடுப்பதேயாகும். மற்ற கதைகளில் கதையின் மையத்தை புரிந்து பெற்றுக்கொள்ளும் இடத்தில் வாசகன் இருக்கிறான். ஆனால் சிறுகதையில் வாசகனை கதைக்குள் இழுக்கிறான் ஆசிரியன். வாசகன் கதைமுடிவைப்பற்றி என்ன நினைக்கிறான் என்று ஊகித்து அதற்கு நேர் எதிராக கதையை முடித்து அவனை திகைக்க வைக்கிறான். கதைவாசிப்பு என்ற செயலில் வாசகன் ஆற்றும் பணி மேலும் அதிகமாக ஆகிறது.

இதைத்தான் ‘வாசகப் பங்கேற்பு’ என்ற கலைச்சொல்லால் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நவீன இலக்கிய வடிவங்கள் எல்லாமே வாசகப்பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் உருவானவையே. இலக்கிய வடிவங்களில் வரும் எல்லா மாற்றங்களும் மேலும் மேலும் வாசகப்பங்கேற்பை உருவாக்கும் பொருட்டு வருவனவே.

இப்படி வாசகப் பங்கேற்பை அதிகரிப்பதற்கான தேவை என்ன வந்தது?

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு ஊடகம் உருவாகி வளர்ந்ததும் கதைகள் எழுதுவதும் வாசிப்பதும் பல்கிப் பெருகிற்று. சிந்தித்து பாருங்கள், இதழ்கள், சினிமா, தொலைக்காட்சி என்று நாம் ஒருநாளில் எத்தனை கதைகளைக் கேட்கிறோம்! சொல்லப்போனால் மீன் நீரில் திளைத்து வாழ்வது போல நாம் கதைகளில் வாழ்கிறோம்.

இத்தனை கதைகள் வந்து நிறைந்தபோது கதைகளில் வாசகனின் பழக்கம் அதிகமாயிற்று. ஒரு கதையை படிக்கும்போதே அவன் முடிவை ஊகிக்க ஆரம்பித்துவிட்டான். அவ்வாறு ஊகிக்கக் கூடிய கதைகளில் அவனுடைய ஆர்வம் குறைந்தது. சிறுகதை வடிவம் வாசகனின் ஆர்வத்தை தக்கவைத்துக் கொள்ளும்பொருட்டே உருவாயிற்று. வழக்கமான கதைவாசகன் ஒரு கதையை எப்படி ஊகிப்பான் என்பதை கதையாசிரியனே ஊகித்து அதற்கு மாறாக கதையை முடிக்கிறான். இது வாசகனை கதையைப்பற்றி சலிப்படையாதிருக்கச் செய்கிறது.

உண்மையில் சிறுகதை என்ற வடிவம் தொடக்கத்தில் பொழுதுபோக்கு இதழ்களில் வாசகனுக்கு ஆர்வமூட்டி முடிவில் இன்பத்தை அளிக்கும் ஒருவகை ‘கதை விளையாட்டாக’வே உருவாயிற்று. சிறுகதை முன்னோடிகளான ‘எட்கார் ஆல்லன் போ’, ‘ ஓ.ஹென்றி ‘ போன்ற படைப்பாளிகளின் கதைகள் இத்தகைய விளையாட்டுகளாகவே உள்ளன.

சிறுகதையை வாசிக்கும்போது வாசகன் வெறுமே கதைபடிப்பவனாக இல்லாமல் கதையை பலவாறாக ஊகித்து புனைந்தபடியே செல்கிறான். ‘இப்படி இருக்குமோ? இப்படி முடிப்பாரோ! ‘ என்றெல்லாம் அவன் எண்ணிக் கொண்டே படிக்கிறான். இப்போது கதையில் வாசகன் ‘பங்கேற்க’ ஆரம்பித்துவிடுகிறான். அவனும் அக்கதையை தனக்குள் எழுதுகிறான். ஆகவே இங்கே வாசகன் வெறுமெ வாசகனாக இல்லாமல் ‘இணை ஆசிரியனாக’ செயல்படுகிறான்.

நவீன ஆக்கங்களில் வாசகன் அப்படைப்பாளிக்கு இணையாகவே கற்பனையை செயல்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இது இன்றைய இலக்கிய திறனாய்வில் பலவாறாக விரிவாகப் பேசப்படுகிறது. சிறுகதையில் உள்ள திருப்பம் வாசக பங்கேற்பை அதிகரிக்கும்பொருட்டு உருவானதே.

சிறுகதை என்பது புத்திலக்கியத்தின் ஒரு முக்கியமான வடிவம். மரபிலக்கியம் ஏற்கனவே சமூகத்தில் உள்ள கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் வலியுறுத்தும் போக்கு கொண்டது. புத்திலக்கியம் அவற்றை மறுத்து அல்லது பரிசீலனைசெய்து பேசும் நோக்கம் கொண்டது. சிறுகதையில் உள்ள திருப்பம் இதற்கு மிக வசதியானதாக அமைந்தது. ஒரு பிரச்சினையை பேசியபடியே வந்து சட்டென்று ஒருபுதிய கோணத்தை திறப்பதற்கு சிறுகதையே மிகச்சிறந்த வடிவம்.

புத்திலக்கியவாதிகள் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை என்பது பலவிதமான முரண்பாடுகளால் ஆனது என்று எண்ணினார்கள். வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளைச் சொல்வதற்கும் சிறுகதை சிறந்த வடிவம்.

மாப்பசான், ஆண்டன் செகாவ் போன்ற படைப்பாளிகள் இவ்வாறு சிறுகதையை கையாண்டு அதைஇலக்கியத்தரமான ஒரு வடிவமாக மாற்றினர்.

சிறுகதையின் வடிவம் என்ன?

எல்லா கதைகளும் தங்கள் மையத்தை முன்வைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். அதற்காகவே அக்கதைகளில் உள்ள எல்லா கூறுகளும் இயங்கும்.

அப்படி மையத்தை முன்வைக்க உதவாத விஷயங்களை ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்குமென்றால் ‘சரியான வளவளப்பு”என்று நாம் சொல்வோம்.

உதாரணமாக முன்னர் சொன்ன கதையை இப்படி ஆரம்பிக்கலாம்.

”ராஜகிருகம் என்ற ஊரில் ராஜசிம்மன் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்துவந்தான்

அவன் நேர்மையான மன்னன். மக்கள் அவனை நேசித்தார்கள்.

அவன்நாட்டில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் ஏராளமான பறவைகளும் விலங்குகளும் இருந்தன.”

இதன் பின் முதல் சொற்றொடர் [1] வந்தால் நாம் சலிப்படைவோம். கதை புகழ்ச்சியைப்பற்றியது. கதைமாந்தர் காகமும் நரியும். இதில் மன்னனும் காடும் எதற்கு என்று கேட்போம்.

சரி அந்தப் பாட்டியைப் பற்றி ஒரு வர்ணனை கொடுத்தால் என்ன?

”அந்த ஊரிலே குப்பம்மா என்று ஒரு பாட்டி இருந்தாள். அவள் நல்ல பாட்டி. அவளுக்கு யாருமே இல்லை. அவள் அனாதை. ஆகவே வடை சுட்டு விற்று வாழ்ந்து வந்தாள்”

கதை பாட்டியைப்பற்றியதே அல்ல. ஆகவே பாட்டியைப்பற்றி வர்ணித்தால் நாம் பொறுமை இழப்போம்.

இதேபோலவே நரியின் முன்கதையையோ காகத்தின் பின் கதையையோ விரிவாகச் சொல்லப்போனாலும் அலுப்புதான்.

கதையின் மையம் புகழ்ச்சிக்கு மயங்குதல். அதைச் சார்ந்தே கதையின் எல்லா உறுப்பும் இருக்கும்.

இதைத்தான் கதையின் ஒருமை [unity] என்கிறார்கள். கதைகளைப்பற்றி பேசும்போது கச்சிதமான வடிவம் , வடிவ நேர்த்தி என்றெல்லாம் பொதுவாகச் சொல்வது ஒருமையைப் பற்றித்தான்.

ஒருமையை உருவாக்குவது எது? நோக்கம்தான்.

எந்த நோக்கத்துடன் ஒரு கதை எழுதப்படுகிறதோ அதன்பொருட்டே அந்தக் கதையின் எல்லா விஷயங்களும் அமைந்திருப்பதே ஒருமை.

உண்மையில் கதைகள் மட்டுமல்ல ஒருவர் சாதாரணமாகப் பேசும்போதே ஒருமை இல்லாவிட்டால் நம்மால் அதை கேட்க முடியாது.

ஆனால் சிறுகதை நேர்மாறாக இருக்கிறது. அது கூறவந்ததை நேராக முன்வைப்பதில்லை என்று கண்டோம். அது திருப்பத்தைத்தான் தன் மையமாகக் கொண்டிருக்கிறது. அப்படியானால் அதன் ஒருமை எப்படி உருவாகும்?

இங்கும் நாம் பார்க்க வேண்டியது நோக்கத்தைத்தான். சிறுகதையின் நோக்கம் ஒரு மையக்கருத்தை சொல்வது அல்ல. ஒரு திருப்பத்தைச் சொல்வதுதான்

அப்படிப் பார்த்தால் ஒரு சிறுகதையில் உள்ள எல்லா கூறுகளும் அந்த திருப்பத்தை சிறப்பாக நிகழ்த்த உதவியிருக்குமென்றால் அது ஒருமை உள்ள சிறுகதை.

திருப்பத்தை சிறப்பாக நிகழ்த்த வேண்டுமென்றால்ழதை வாசகன் முன்னதாகவே ஊகிக்கக் கூடாது. அதற்கு சிறந்த வழி வாசகனை வேறு வகையில் ஊகிக்க வைப்பது. கதை ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி குவிந்து ஒருமைகொண்டு செல்லும். அந்த முடிவை வாசகன் தன் மனதில் உருவாக்கியிருப்பான். சட்டென்று கதை வேறு ஒரு எதிர்பாராத முடிவை சென்று அடையும்.

அதாவது ஒருமை கொண்ட ஒரு கதையும், மாறான முடிவும் கொண்டதே சிறுகதையின் வடிவம் .

சிறுகதையின் இலக்கணவடிவம் என்ன?

சிறுகதையின் வடிவத்துக்கு ஐந்து அடிப்படைகள் உண்டு என்பது மரபான இலக்கணமாகும்

1. சிறுகதையின் ‘உடல்’ ஒருமை கொண்டதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களே அதில் இருக்காது. அது நேராக ஒரு முடிவை நோக்கிச் செல்லும்.

2. சிறுகதையின் முடிவு வாசகன் ஊகித்திராத ஒன்றாக இருக்கும். இதுவே ‘திருப்பம்’ என்பது. சிறுகதையின் மையம் என்பது திருப்பத்திலேயே உள்ளது.

3. திருப்பம் நிகழ்வது வாழ்க்கையின் ஒரு புள்ளியிலேயே. ஆகவே சிறுகதை வாழ்க்கையின் ‘ ஒரே ஒருபுள்ளியை’ மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். சிறுகதை ‘ஒன்றை மட்டுமே சொல்லக்கூடிய ‘ இலக்கிய வடிவம். திருப்பம் மூலம் வெளிப்படும் அந்த மையத்தைதவிர வேறு எதை அது சொல்ல தொடங்கினாலும் கதை சிதறி ,ஒருமை இல்லாமலாகும்

4. சிறுகதை வாசகனிடம் எதையாவது சொல்வதற்காக உருவான வடிவம் அல்ல. வாசகனை கதையில் பங்கெடுக்க வைப்பதற்காக உருவான வடிவம். வாசகனை எந்த அளவுக்கு கற்பனைசெய்ய வைக்கிறதோ அந்த அளவுக்கு சிறுகதை வெற்றி பெறுகிறது. சொல்லப்படும் விஷயம் சிறுகதையில் இருக்கக் கூடாது. வாசகனே ஊகித்துச் சென்றடையும் விஷயமே சிறுகதையின் மையமாகும்.

5. சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது.

சிறுகதை வடிவத்தின் உறுப்புகள்

சிறுகதையில் வழக்கமான வடிவத்தில் உள்ள உறுப்புகள் என்னென்ன?

அவற்றை கீழ்க்கண்டவாறு வரையறுத்துகூறலாம்.

1. மையக்கதாபாத்திரம். [ Protagonist ]

ஒரு கதையைப் பற்றிப்பேசும் முன் ”இது யாருடைய கதை?” என்ற கேள்வி மிக முக்கியமானது.உதாரணமாக ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம்’ கங்காவின் கதை. இவ்வாறு ஒரு மையக் கதாபாத்திரத்தை வரையறுத்துக்கொள்வது ஒரு சிறுகதையின் வடிவ ஒருமைக்கு இன்றியமையாததாகும்.

மையக்கதாபாத்திரத்தை நோக்கி வாசகனின் கவனம் இருக்கும்படி கதை அமையவேண்டும். அந்த மையக்கதாபாத்திரத்தின் குணச்சித்திரம் ஆசிரியனால் கதையில் கொடுக்கப்படுகையில் கதைக்கு ஒரு குவிமையம் அமைகிறது.

மேலே சொன்ன கதையில் ‘காகம்’ மையக் கதாபாத்திரம். இது அக்காகத்தின் கதை. அக்காகம் எப்படிப்பட்டது, அதற்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. வரி 1 மையக்கதாபாத்திரத்தையும் அதன் குணச்சித்திரத்தையும் அறிமுகம் செய்கிறது. இப்போதுதான் உண்மையில் கதை தொடங்குகிறது.

2. எதிர் கதாபாத்திரங்கள்.[ Antagonists ]

சிறுகதையில் மேலே சொன்ன மையக்கதாபாத்திரத்தை நேர்நிலை [positive] என்று வைத்துக்கொள்வோம். அதன்மீது குறுக்காக வெட்டும் கோடுகள்தான் பிற கதாபாத்திரங்கள். எதிர்நிலை [negative] கதாபாத்திரங்கள். ‘இவர்கள் மையக்கதாபாத்திரத்திற்கு அளிக்கும் பாதிப்பு மூலம்தான் கதையின் சிக்கல், நெருக்கடி ஆகியவை உருவாகின்றன. சிறுகதையில் இத்தகைய கதாபாத்திரங்கள் ஒன்று அல்லது இரண்டாக இருப்பது நல்லது. வடிவ ஒருமை எளிதாக உருவாகும்.

மேலே சொன்ன கதையில் நரி எதிர்கதாபாத்திரம். வரி 3 அக்கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறது.

இப்போது கதையின் நேர்சரடும் எதிர் சரடும் உருவாகிவிட்டன. இவற்றை மோதவிட்டோ, பின்னியோ கதையை கொண்டுசெல்லலாம்.

இங்கே ஒருவிஷயத்தைச் சொல்லியாக வேண்டும். மையக்கதாபாத்திரம் ‘நல்ல’ கதாபாத்திரமாகவும் எதிர் கதாபாத்திரம் ‘கெட்ட’ கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டுமென்பது இல்லை. மையக்கதாபாத்திரத்தை வெட்டிச்செல்வதாக எதிர்கதாபாத்திரம் இருக்கவேண்டும் அவ்வளவுதான்.

3. கதைக்களம். [context]

கதை நடக்கும் சூழல், காலம் ஆகியவையே கதைக்களம். கதையின் மையக்கருவையும் கதாபாத்திரங்களையும் ஒரு வாழ்க்கைச்சூழலில் நம்பகமாக பொருத்திக்காட்டவேண்டியது கதைக்கு அவசியம். கதை எங்கே நடக்கிறது,எப்போது நடக்கிரது என்றகேள்விக்கு கதையில் பதில் இருக்கவேண்டும். அதற்கேற்ப கதையின் சித்தரிப்புகள் இருக்கவேண்டும்.

அச்சூழல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சமகாலமாக இருக்கலாம். இறந்தகாலமாகவோ எதிர்காலமாகவோ இருக்கலாம். மண்னாக இருக்கலாம். விண்வெளியாக இருக்கலாம். வாசகன் அச்சூழலை நம்பும்படியாக எழுத்தாளன் அதைச் சித்தரிக்கவேண்டும்.

ஆனால் சிறுகதை என்றவடிவம் விரிவான சித்தரிப்புகளுக்கு இடம் கொடுக்காது. ஏற்கனவே சொன்னதுபோல திருப்பம்தான் அதன் மையம். அதை நோக்கி அது ஓடிக் கொண்டிருக்கவேண்டும். விரிவாக விவரித்துக் கொண்டிருந்தால் வடிவஒருமை கைகூடாது.

ஆகவே சிறந்த சிறுகதைகள் அதிக சொற்கள் இல்லாமல் கதையோட்டத்தின் போக்கிலேயே கதைக்களத்தையும் சித்தரித்துச் செல்லும். எவ்வளவு சுருக்கமாக சொல்லமுடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்வது நல்லது. ஆனால் கதைக்களம் தெளிவாக உருவாகவும் வேண்டும்.

பழையகாலக் கதைகளைப் பார்த்தால் முதலில் கதைக்களம், பிறகு மையக்கதாபாத்திரம். பிறகு எதிர் கதாபாத்திரம் என்று சம்பிரதாயமாக கதையைச் சொல்வதைக் காணலாம். ”சிங்கப்பூர் விமானநிலையம்! பத்து நிமிடத்திற்கு ஒரு விமானம் ஒரு இறங்கும் இடம் அது என்பதனால் ஒரே கூட்டம். உலகம் முழுக்க உள்ள பலவகையான மனிதமுகங்கள்……. .” என்றெல்லாம் கதைக்களத்தை வர்ணித்துவிட்டு ”…எட்டுபத்துக்கு வந்துசேர்ந்த விமானத்தில் நிர்மலா வந்து இறங்கினாள். நிர்மலாவுக்கு வயது இருபது. அழகானவள். எம்பிஏ படித்திருகிறாள். கண்டிப்பானவள்.” என்று மையக்கதாபாத்திரத்தை அறிமுகம்செய்து, அதன் பின் ”நிர்மலாவை வரவேற்க ஹரி வந்திருந்தான். அவளது காதலன்.அவளுக்கு நேர் எதிர். எதிலும் ஒழுங்கில்லாதவன்… ”என்று எதிர்கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அதன் பின் பிரச்சினையை சொல்லி கதையை நடத்துவது இன்றும்கூட கல்கி, விகடன் கதைகளில் காணக்கிடைக்கிறது. இது மிக பழைய ஒரு ‘அமெச்சூர்’ எழுத்துமுறையாகும்.

குறைவான சொற்களில் போகிறபோக்கில் சொல்லிச்செல்வதே சிறுகதைக்கு வடிவ நேர்த்தியை உருவாக்கும். மேலே சொன்ன கதையை இப்படி எழுதிப்பார்க்கலாம். ” விமானநிலையத்துக்கு ஹரி சீவாத தலையுடன் வந்திருந்தான். ”லக்கேஜை நான் எடுத்துக் கொண்டுவருகிறேன்…”என்றவன் ரகசியமாக” நீ ரொம்ப அழகாக இருக்கிராய்”என்றான். ”சும்மா சோப்பு போடாமல் வேலையைபார்”என்று அவனை கைப்பையால் அடித்துவிட்டு நிர்மலா வாட்சைப்பார்த்தாள். எட்டுபதினைந்து…”

பல சிறுகதைகளில் கதைக்களம் ஓரிரு வார்த்தைகளில் சொல்லப்பட்டிருக்கும். சில கதைகளில் ஊகிக்க விடபப்ட்டிருக்கும். சிலகதைகளில் கதைக்களம் முற்றிலும் மறைந்திருக்கும். ஆனால் கதை எங்கே எப்போது நிகழ்கிறது என வாசகன் உணர்ந்திருப்பான்.

மேலே சொன்ன கதையில் ‘ஒரு ஊரில்’ என்பதுதன கதைக்களம்.

சிறுகதையில் ஒரே ஒரு கதைக்களம் இருப்பது வசதி. ஒருமுறை கதைக்களம் மாறுவதும் பெரிய சிக்கலைக் கொடுக்காது. அதற்குமேல் கதைக்களத்தை மாற்றினால் சிறுகதையின் ஒருமை சிதறும். வாசகன் கதையை ‘இழுவை’யாக உணர்வான்

3. கதைமுடிச்சு .

கதை எதைப்பற்றியது என்பதுதான் கதை முடிச்சின் அடிப்படை . மேலே சொன்ன கதையில் கதைமுடிச்சு ஏமாளித்தனம் பற்றியது. யாரை யார் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதையின் கேள்வி.

காகத்தை ஏமாற்ற நரி முயல்கையில் கதைமுடிச்சு விழுகிறது. சொற்றொடர் 4 ல் கதைமுடிச்சு விழுகிறது.

கதையின் மையமான நிகழ்ச்சி நடக்கும்போது முடிச்சு உருவாகலாம். மையமான கேள்வி எழும்போது முடிச்சு உருவாகலாம்.

பெரும்பாலும் மையக்கதாபாத்திரத்தை ஒட்டித்தான் முடிச்சு உருவாகும். அதற்கு எதிர்கததாபாத்திரம் காரணமாக இருக்கும்.

4. திருப்பம்.

மேலே சொன்ன முடிச்சை கதை எப்படி அவிழ்க்கிறது என்பதுதான் கதையின் இறுதி. சிறுகதையில் அது எப்படி அவிழும் என்று வாசகன் ஊகிக்கிறானோ அதற்கு அப்பால் சென்று புதிய ஒரு கோணத்தில் அதை அவிழ்ப்பதே திருப்பம் ஆகும்.

சொற்றொடர் 6 ல் அத்தகைய திருப்பம் உள்ளது. இது வாசகனை சற்று அதிர வைக்கிரது. நிலைகுலையவைக்கிறது. அவனது சிந்தனையை உசுப்புகிறது. அவனை மேலே சென்று கற்பனைசெய்யவைக்கிறது.

5. தலைப்பு.

கதையின் தலைப்பு என்பது ஒரு மனிதருக்கு பெயர் போடுவதுபோல ஓர் அடையாளம் மட்டுமே. நினைவில் நிற்கும் தலைப்பு போடுவது நல்லது

ஆனால் தலைப்பில் செய்யக்கூடாதவை சில உள்ளன

அ. கதையின் மையம் என்ன, சாரம் என்ன என்றெல்லாம் ஆசிரியனே சொல்வதுபோல தலைப்பு வைப்பது தவறு. உதாரணம் ‘ மனமே மருந்து!’

ஆ. எல்லாரும் போட்டு தேய்ந்து போன பாணியில் தலைப்பு போடக்கூடாது . உதாரணம் ”கற்க மறந்த பாடங்கள்’ ‘தோணியும் வண்டியில் ஏறும்’

இ. கதையின் சாரத்தை படிமம் மூலம் சுட்டும் தலைப்பு வைக்கலாம். அது கதையை நினைவில் நிறுத்த உதவும்.ஆனால் அது மிக வெளிப்படையாக இருக்கக் கூடாது. வாசகனின் கற்பனைக்கு அது தடையாகும்

இதுவே சிறுகதையின் உறுப்புகள்.

சிறுகதையின் இடைவெளி

நவீன இலக்கியப் படைப்புகளில் முக்கியமான ஒருவிஷயம் உண்டு. அதை ‘வாசக இடைவெளி ‘ என்று திறனாய்வாளர் சொல்வார்கள். ஒரு படைப்பு வாசகன் தன் கற்பனையின் மூலம் நிரப்பிக் கொள்வதற்கு விடும் இடைவெளிதான் அது.

இதற்கான தேவை என்ன? பழைய பாணியில் இலக்கியங்களை ரசிப்பவர்கள் நம்மிடம் இதைப்பற்றி எப்போதுமே குறைப்படுவார்கள் ”சொல்ல வந்ததை தெளிவாகச் சொன்னால் என்ன?” என்று கேட்பார்கள். சொல்லி தெரிவதில் கலையனுபம் இல்லை, கற்பனைசெய்வதிலேயே கலையனுபவம் உள்ளது.

இதை ஆர்தர் கோஸ்லர் எழுதிய ‘ The art of Creation’ என்ற நூலில் விரிவாக விளக்குகிறார். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் நகைச்சுவை துணுக்கு என்ற வடிவம்.

**

ஒரு ஹிப்பி பேருந்தில் அமர்ந்திருந்தான். காலில் ஒற்றைச் செருப்புடன்.

அருகே வந்து அமர்ந்த முதியவர் கேட்டார் ”ஒரு செருப்பு தொலைந்துவிட்டதோ?”’

”இல்லை. ஒன்று கிடைத்தது”

**

இந்த நகைச்சுவைக்கு புன்னகை செய்தீர்கள் என்றால் ஏன் என்று யோசியுங்கள். அந்த ஹிப்பியின் குணச்சித்திரத்தை அவனுடைய ஒருவார்த்தைப் பதிலில் இருந்து நாம் ஊகிக்கிறோம் என்பதே அதற்குக் காரணம். குறைவான சொற்களில் சொல்லும்போதுதான் நகைச்சுவைத்துணுக்கு சிரிப்பு மூட்டும். விளக்கிச்சொன்னால் சிரிப்பு வராது.

நகைச்சுவைத்துணுக்கு கேட்டு சிரிப்பு வரும் கணம் எது? சட்டென்று அதில் சொல்லப்படாததை நாம் ஊகிக்கிறோம் அல்லவா ,அதுதான்.

நம்முடைய கற்பனையை தூண்டும் படியாக துணுக்கின் அமைப்பு உள்ளது. எதிர்பாராதபடி சட்டென்று கச்சிதமாக அந்த வரி வெளிப்படுவதனாலேயே நாம் அதை ரசிக்கிறோம்.

இதையே இப்படிச் சொல்லலாம். ” ஒரு ஹிப்பி பேருந்தில் அமர்ந்திருந்தான். அவன் காலில் ஒற்றைச் செருப்பை அணிந்திருந்தான்.அது அவன் கண்டெடுத்த செருப்பு. காரணம் அவன் பொறுக்கித்தனமாக வாழ்கிறவன். அவனருகே வந்து அமர்ந்த முதியவர் ”ஒரு செருப்பு தொலைந்துவிட்டதா?’ என்று கேட்டார். ஹிப்பி ”இல்லை. ஒன்று கிடைத்தது” என்று பதில் சொன்னான். முதியவர் அதிர்ச்சி அடைந்தார்”

இதில் ரசிக்க எதுவுமே இல்லை. அதாவது நகைச்சுவைத்துணுக்கு சொல்லும் முறை மூலமே நகைச்சுவையை உருவாக்குகிறது. கொஞ்சமாகச் சொல்லி மிச்சத்தை ஊகிக்கவிடுவதே அதன் வழி

சிறுகதையின் வடிவமும் கிட்டத்தட்ட இப்படித்தான். ‘சொல்லவந்த விஷயத்தை சொல்வது’ அல்ல சிறுகதையின் இயல்பு. கொஞ்சமாகச் சொல்லி பெரும்பகுதியை வாசகனை ஊகிக்கவைப்பதுதான் சிறுகதையின் இயல்பு. இவ்வாறு வாசகனின் ஊகத்துக்காக விடப்படும் மௌனத்தைத்தான் வாசக இடைவெளி என்கிறோம்.

நகைச்சுவைத் துணுக்குகளை ரசிக்க நாம் பழகியிருக்கிறோம். சொன்னதுமே மிச்சத்தை ஊகித்து சிரிப்போம். ஆனால் பல சமயம் வயதான பாட்டிதாத்தாக்கள் நகைச்சுவைத்துணுக்குகளை ரசிக்க முடியாமல் போவதை பார்க்கலாம். அவர்களுக்கு அவற்றை ரசிப்பதற்கான பழக்கம் அல்லது பயிற்சி இல்லை.

அதைப்போல சிறுகதையிலும் விடப்படும் வாசக இடைவெளியை ஊகித்து ரசிப்பதற்கு கொஞ்சம் பழக்கம் தேவை. தொடர்ந்து படிப்பதன்மூலம் இயல்பாக அது உருவாகிவரும். அ·தன்றி சிறுகதையை வாசித்துவிட்டு ‘சொல்லவந்ததை தெளிவாகச்சொல்லு”என்று எழுத்தாளனிடம் சொல்வதில் பொருள் இல்லை. அப்படிச்சொன்னால் அது சிறுகதை அல்ல.

சிறுகதையின் சித்தரிப்பு

சிறுகதைகள் எழுதத் தொடங்குபவர்கள் முதலில் செய்யும் தவறு என்ன? சொல்ல உத்தேசிப்பதை சுருக்கமாகச் சொல்வதுதான். அதாவது நேரில் பேசினால் சொல்வது போல சொல்வது. அது சிறுகதைக்குப் போதாது. ஏன்?

”நேற்று காலையில் சாலையில் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டேன். கையில் நல்ல அடி. அப்போது சாலையில் யாருமே இல்லை. மழைவேறு பெய்தது. அதனால் வண்டியின் என்ணைப் பார்க்க முடியவில்லை. ” இப்படி நடந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்லலாம். இப்படித்தான் நாம் சாதாரணமாகப் பேசுவோம். நடந்ததை பிறருக்கு ‘தெரிவிக்க’ இது போதும்.

ஆனால் இலக்கியம் நடந்ததை தெரிவித்தால் போதாது. நடந்த நிகழ்ச்சியை வாசிப்பவருக்கு ‘அனுபவமாக’ ஆக்க வேண்டும். அவரும் தனக்கு உண்மையில் நிகழ்ந்தது போல அதை உணரவேண்டும். அதற்குத்தான் ‘சித்தரிப்பு ‘ தேவையாகிறது.

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன. நான் இருபக்கமும் பார்த்தேன், வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை. என் மனதில் காலைநேரக் கவலைகள். ஆபீஸில் ஒரு சின்ன நிதிச்சிக்கல். ஒரு தைரியத்தில் சட்டென்று சாலையைக் கடந்தென்.யாரோ கையை ஓங்கி தட்டுவது போலிருந்தது. சுழன்று விழுந்தேன். ஒரு கார் என்னைத்தாண்டிச் சென்றது. அதன் பின் விளக்குகளின் சிவப்பு சீறிசீறி அணைவதை மட்டும்தான் கண்டேன். ஒரு கணம் என் மனதில் எதுவுமே இல்லை. என்ன நடந்தது என்பது பொழுதுவிடிவது போல மெல்லத்தான் தெளிவாகியது. ஆபீஸ¤க்கு நேரமாகிவிடுமே என்ற எண்ணமும் கையில் வலியும் சேர்ந்தே எழுந்தன….”

இது ஒரு கதையின் தொடக்கமாக அமையலாம். வேறுபாட்டை கவனித்திருப்பீர்கள். என்னென்ன சிறப்பம்சம்ங்கள் இரண்டாவது சித்தரிப்பில் உள்ளன?

முக்கியமாக இரண்டு. 1. காட்சி விவரிப்பு 2. உள்ள விவரிப்பு.

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன” — இது காட்சி விவரிப்பு. துல்லியமான தகவல்கள் மூலம் அந்த சாலையை அப்படியே வாசகனின் கற்பனையில் எழுப்ப முயலப்பட்டுள்ளது.

இந்த காட்சி விவரிப்பில் இரு கூறுகள் உள்ளன. அ.. தகவல், ஆ. உவமை முதலிய அணிகள்

”காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை.” ” வண்டிகள் வரும் ஒலி கேட்கவில்லை. ” இது தகவல். நுட்பமான தகவல்கள் ஒரு கதையை நம் கண்முன் நிறுத்துபவை.

”சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போல கரிய தார்பரப்பை மூடியிருந்தது. கார்களின் ஹெட்லைட் ஒளிகள் நீரின் அடியில்தெரிவதுபோல கலங்கி தெரிந்து தாண்டி மறைந்துகொண்டிருந்தன” — இவை இரண்டும் உவமைகள். உவமைகள், உருவகங்கள் மூலம் காட்சிகளை மேலும் துல்லியமாக வாசகனின் கற்பனையில் எழுப்பலாம். இன்றும் சிறந்த கதைகளில் இத்தகைய அணிகளுக்கு பெரிய இடமிருப்பதைக் காணலாம்.

பொதுவாக வழக்கமான உவமைகளை பயன்படுத்தக் கூடாது. அவை எந்த வாசகனில் விளைவையும் ஏற்படுத்தாது. வெறும் அலங்காரமாகவே நின்றுவிடும். புதிய உவமைகள் வாசகனின் கற்பனையை தூண்டும்.

சித்தரிப்பில் இரண்டாவது கூறு ,உள்ளம் செயல்படுவதைச் சொல்வது. பெரும்பாலும் மையக்கதாபாத்திரத்தின் மனத்தை சித்த்ரிப்பது வழக்கம். ஒன்றுக்குமேல் மனங்களை சித்தரிக்க ஆரம்பித்தால் கதையின் ஒருமை இல்லாமலாகும்.

மனதையும் இருவகையில் சித்தரிக்கலாம். அ.நேரடியாக ஆ. அணிகல் மூலம். ”என் மனதில் காலைநேரக் கவலைகள்.” இது நேரடியான உள்ளச் சித்தரிப்பு ”என்ன நடந்தது என்பது பொழுதுவிடிவது போல மெல்லத்தான் தெளிவாகியது. ” இது உவமை அணி.

காட்சி சித்தரிப்பு புற உலகை காட்டுகிறது. உள்ளச் சித்தரிப்பு அக உலகைக் காட்டுகிறது. இவை இரண்டையும் மாறிமாறி தேவைக்கேற்ப பிணைத்து புனையும்போது கதையின் அனுபவம் உண்மையாகவே வாசகனுக்குள் நிகழ்கிறது.

கதையை செறிவாக்குவது

ஏற்கனவே சொன்னது போல சிறுகதை ஒரு திருப்பத்தை அல்லது முத்தாய்ப்பை முன்வைக்கும் வடிவம். அதாவது அது ஒரு புள்ளி மட்டுமே. அந்தப் புள்ளியை வாசக மனதில் நிகழ்த்தவே மொத்தக் கதையும் செயல்படுகிறது

ஆகவே சிறுகதை கச்சிதமாக இருக்கவேண்டியுள்ளது. அப்படி கச்சிதமாக இருப்பதற்கு அடிப்படையான தேவைகள் இரண்டு.

ஒன்று: யாருடைய கதை என்ன சிக்கல் என்பதை தெளிவாக வரையறுப்பது

இரண்டு : அந்தக்கதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சூழலில் நடந்து முடிவது.

ஆனால் வாழ்க்கையை நாம் அப்படி ஒரு புள்ளியில் நிறுத்தி விட முடியாது. அது முன்னும் பின்னும் விரிந்து கிடக்கும். அவற்றை சொல்லாமல் பிரச்சினையை சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் கதை பரந்து விரிந்துவிடும்.

ஆகவேதான் சிறுகதை வடிவம் கதையை செறிவாக்குகிறது. எப்படி? பல வழிகள் உள்ளன.

ஹரி எதிலும் ஒழுங்கில்லாதவன். பொறுப்பற்றவன்.காரணம் அவன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து தன்னிச்சையாக வளர்ந்தவன். நிர்மலா உழைத்து வளர்ச்சி அடைந்தவள். தன்னம்பிக்கை உடையவள். இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் நிர்மலாவுக்கு ஹரியின் கட்டுப்பாடில்லாமை பிடிக்கவில்லை. ஹரிக்கு அவள் தன்னை கட்டுப்படுத்த நினைப்பது பிடிக்கவில்லை. பிரிய தீர்மானிக்கிறார்கள். பிரியும் முன் ஓர் இடத்தில் சந்திக்கிறார்கள். அப்போது தெரிகிறது ஒருவருக்கு இன்னொருவர் தேவை என்பது. கட்டுப்பாடான வாழ்க்கையின் நிம்மதியை நிர்மலா ஹரிக்கு காட்டுகிறாள்.கட்டுப்பாடுகளுக்கு அப்பார்பட்ட வாழ்க்கையின் சுதந்திரத்தை அவன் அவளுக்கு காட்டுகிறான். அவர்கள் இணைய முடிவெடுக்கிறார்கள்.

இது ஒரு சிறுகதை என்று வைத்துக் கொள்வோம். ஹரி, நிர்மலா இருவரின் பின்புலத்தை கதைக்குள் சொல்லவேண்டுமல்லவா? அவர்களின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் சொல்ல வேண்டுமல்லவா? அவர்களுடைய அப்பாஅம்மா , இறந்தகாலம் அனைத்தையும் சொல்லி அவர்கள் பழகிய நாட்களை விவரித்து கதையை எழுதினால் கதை எப்படி இருக்கும்? சிறுகதையின் ஒருமை கைகூடுமா?

அப்படியானால் எப்படி கதையை உருவாக்குவது? அவர்கள் பிரிய தீர்மானித்து ஒரு ஓட்டலில் கடைசியாக சாப்பிடும்போது கதையை தொடங்கலாம். ஏன் பிரிய தீர்மானித்தார்கள் என்பதையெல்லாம் கதையின் ஓட்டத்தினூடாக சொல்லலாம். கதை முடிவில் பிரிய வேண்டாம் என்ற முடிவை எடுக்கிறார்கள். கதைக்களம், காலம் எல்லாம் குறுகியது. இரண்டே கதாபாத்திரங்கள். கதை கச்சிதமாக இருக்கும்.

முன்கதையை மூன்று வழிகளில் சொல்லலாம்.

ஒன்று, பின்னோக்கு உத்தி [Flash Back] ஆனால் பொதுவாக சிறுகதைகளில் இது செயற்கையாகவே தெரிகிறது.

இரண்டு: கதாபாத்திரங்களின் எண்ணங்களில் ஆங்காங்கே நடந்தவற்றைச் சிதறவிடுவது. இதை கட்டுப்பாட்டுடன் செய்ய வேண்டும். கதைநிகழ்ச்சிகளின் ஓட்டம் அறுபட்டு எண்ணங்கள் தனியாக ஓட ஆரம்பிக்கக் கூடாது

மூன்று: உரையாடல்களில் இயல்பாக அவை வந்து சேர்ந்து வாசகன் என்ன நடந்தது என்று ஊகிக்கலாம். இதுவே சிறுகதைக்கு மிகமிக உகந்த வடிவமாகும். ஹெமிங்வே இதில் நிபுணர். தமிழில் அசோகமித்திரன் சுஜாதா இருவரும் திறன் மிக்கவர்கள்.

இவ்வாறு கதையை ஒரு சிறிய இடத்துக்குள் செறிவாக்கி நிறுத்தியபிறகே சிறுகதையைச் சொல்ல வேண்டும்.

சிறு கதையின் தொடக்கம்

சிறுகதையின் தொடக்கம் ஒருபோதும் பீடிகையாக இருக்கக் கூடாது. செறிவானபடி கதையை அமைப்பதற்கு சிறந்த வழி கதையை அதன் மையத்திலேயே தொடங்குவதுதான். எதைப்பற்றிய சிறுகதையோ அதையே தொடக்கத்தில் சொல்ல ஆரம்பிக்கலாம்.

மேலே சொன்ன கதையை இப்படி தொடங்கலாம்.

”சரி, நேரமாகிறது எப்போதாவது முடிந்தால் பார்க்கலாம்”என்றாள் நிர்மலா . அவளுக்கு நெஞ்சை அடைத்தது. அதை முகத்தில் காட்டாமலிருக்க பார்வையை வேறுபக்கம் திருப்பினாள். ஹரியின் முகம் சிவந்து கண்கள் ஈரமாக இருந்தன.

நேரடியாக கதைக்குள் குதித்துவிட்டால் திசை திரும்பாமல் கதை முடிவை நோக்கி ஓடும்.

சிறு கதையின் முடிவு

சிறுகதையின் முடிவு அதன் திருப்பத்தில் உள்ளது என்றோம். அது வாசகனை அந்தக் கதையை முற்றிலும் புதிதாக மீண்டும் கற்பனையில் எழுப்பச் செய்யவேண்டும்.

அப்படியானால் அது முடிந்தவரை குறைவான சொற்களில் சொல்லப்பட வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வாசகனின் கற்பனைக்கு விடப்பட வேண்டும்.

நல்ல கதைகளில் கடைசி சொற்றொடரில் கதையின் திருப்பம் வெளிப்படுவதைக் காணலாம்.

திருப்பம் வெளிபப்ட்டதுமே கதை முடிவது நல்லது. அதற்குப்பிறகுவரும் ஒவ்வொரு சொல்லும் கதைக்கு பாரமே

சிறுகதையின் வளர்ச்சிக்கட்டம்

இதுவரை நாம் பேசியது சிறுகதையின் ‘செவ்வியல்’ [Classic] வடிவம் பற்றியாகும். இலக்கியம் என்பது தொடர்ந்து வளர்ந்துகொண்டெ இருப்பது. ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொருவிதமான தனித்தன்மைகொண்டதாக இருக்கும். ஆகவே இலக்கியத்துக்கு திட்டவட்டமான இலக்கணம் இருக்காது, இருக்கக் கூடாது. நம் முன்னோர்கள் இதையே ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்றார்கள்.

அதேசமயம் ஒரு வரையறை இல்லாமல் எந்த வடிவத்தைப் பற்றியும் நாம் பேசமுடியாது.ஆகவே சிறந்த படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் இலக்கணம் உருவாக்கப்படுகிறது. இதையே செவ்வியல் வடிவம் என்கிறோம். அதைத்தான் நாம் பயில வேண்டும். பிறகு அதிலிருந்து மேலே சென்று மேலும் நுட்பத்துடன் படைப்புகளை உருவாக்கலாம்.

சிறுகதையின் முதல் கட்டத்தில் திருப்பம் முக்கியமானதாக கருதப்பட்டது. இக்காலகட்டத்தில் அந்த திருப்பம் மிக வெளிப்படையாக கதையில் இருக்கும். வாசகன் அதை சந்தித்ததுமே வியப்பும் வேகமும் கொள்வான். மொத்தக் கதையையையும் அந்த முடிவின் அடிப்படையில் மனதுக்குள் ஓட்டிப்பார்ப்பான். கதையில் அதுவரை சொல்லப்பட்ட அனைத்தையும் இந்த முடிவின் அடிப்படையில் மீண்டும் பரிசீலனை செய்வான். கதை மீண்டும் தொடங்கும். சுஜாதா தமிழில் இத்தகைய கதைகளை நிறைய எழுதியிருக்கிறார். உதாரணம்: நகரம்

இரண்டாம் கட்டத்தில் அந்த திருப்பத்தை மிகச்சுருக்கமாகவோ நுட்பமாகவோ சொல்லத் தொடங்கினார்கள். திருப்பம் ஒரேவரியில் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கும். ஆகவே முதலில் திருப்பத்தை கற்பனை செய்து ஊகிக்கும் பொறுப்பு வாசகனுக்கு வருகிறது. அதன் பின்னர் அதன் அடிப்படையில் அவன் கதையை மீண்டும் மனதில் கற்பனைசெய்து கொள்கிறான். வாசகனின் பங்கேற்பை அதிகரிக்கிறது. அசோகமித்திரனின் பல கதைகள் இதற்கு சிறந்த உதாரணமாக அமைபவை. சிறந்த உதாரணம் : பிரயாணம்

மூன்றாவது கட்டம் வந்தது. சிறுகதையின் திருப்பம்கொண்ட முடிவு எந்த விளைவை ஏற்படுத்துகிறது என்று பார்த்தார்கள். வாசகனை அந்த முடிவில் இருந்து மேலும் முன்னகர்ந்து மேலும் விரிவான கதையை கற்பனைசெய்ய வைக்கிறது அது இல்லையா ? அப்படியானால் சிறுகதையின் முடிவு வாசகனை மேலும் முன்னகரச் செய்தாலே போதுமே. அது திருப்பம் ஆக இருந்தாகவேண்டியதில்லை.

வேறு எப்படி இருக்கலாம்? ஒரு சிறந்த கவிதைவரி நம்மை பலவிதமான கற்பனைகளுக்குக் கொண்டுசெல்கிறதே. அதேபோல கவித்துவமான ஒரு முடிவு சிறுகதைக்கு இருந்தால் போதாதா? இவ்வாறாக யோசித்தபோது கவித்துவ முத்தாய்ப்பு கொண்ட சிறுகதைகள் உருவாயின. ஒருகதை அதன் முடிவில் சட்டென்று கவிதைபோல ஆகும். அந்த முடிவிலிருந்து கதையை மீண்டும் புதிதாக கற்பனைசெய்ய முடியும். வண்ணதாசன் எழுதிய கதைகள் இதற்குச் சிறந்த உதாரணங்கள். உதாரணம் நிலை.

இவ்வாறு சிறுகதை வடிவம் வளர்ந்து விரிந்து சென்றபடியே உள்ளது

* நாவல் ஒரு சமையல்குறிப்பு: http://jeyamohan.in/?p=206

* சிறுகதையில் என்ன நடக்கிறது: http://jeyamohan.in/?p=5

* தமிழ்ச் சிறுகதை இன்று: http://jeyamohan.in/?p=169

நன்றி: http://www.jeyamohan.in 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)