யாருக்கு வேண்டும் வரம்?

 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

gokulam_tamil1991-12-01_0014-picஓர் ஏழைக் குடியானவள் கண்ண பிராளை மிக பக்தியுடன் பூஜை செய்து வந்தாள். கண்ணன் அவனுக்கு இரங்கி, ”உனக்கு என்ன வேண்டும்? கேள், தருவேன். ஆனால் ஒன்று, உனக்குத் தருவதை நான் எல்லோருக்கும் தருவேன். எதையும் உனக்கு மட்டும் என்று தருவதற்கு முடியாது” என்றான்.

“கோபாலா! எனக்கு வேண்டியதை நீ தந்தால் போதும். அதை நீ எல்லோருக்கும் தந்தாயானால் எனக்கு என்ன ஆட்சேபணை? நான் அப்படித் துர்ப்புத்திக்காரன் அல்ல. எனக்கு யார் பேரிலும் அசூயை இல்லை” என்றான் குடியானவன்.

“நீ மிகவும் நல்லவன். எனக்குத் தெரியும். உனக்கு வேண்டியதைக் கேள். மனைவியுடன் யோசித்துக் கேள். பிறகு மாற்றிக் கொள்ள முடியாது” என்றான்.

“அப்படியானால் மனைவியைக் கேட்டுச் சொல்கிறேன். எனக்கு மூளை உன்னைப் பார்த்ததும் கலங்கிப் போயிற்று. நாளை கேட்கலாமா?” என்றான் குடியானவன்.

“அப்படியே” என்றான் கண்ணன்.

குடியானவன் அன்றிரவு தன் மனைவியுடன் யோசனை செய்தான். தன் புருஷன் பெற்ற வரத்தைக் கேட்டு மனைவிக்கு வெகு சந்தோஷம். இதைக் கேட்கலாமா, அதைக் கேட்கலாமா என்று இருவரும் வெகு நேரம் யோசித்துக் கடைசியாக முடிவு செய்து கொண்டார்கள்.

மறுநாள் குடியானவன் கண்ணனைத் தியானித்தான். ஆண்டவன் சிரித்துக் கொண்டே தரிசனம் தந்தான்.

“தம்பீ, என்ன கேட்கிறாய்?” என்றான்.

“கருணைக் கடலே, கோபித்துக் கொள்ள வேண்டாம். நான் ஏழை. எனக்கு அறிவு அதிகமில்லை. ஆனபடியால், நீ சொல்லியபடி என் மனைவி யுடன் யோசித்தேன்” என்று ஆரம்பித்தான்.

கண்ணன், ”என்ன வேண்டுமோ அதைக் கேட்டுப் பெறுவாய். அது ஊரில் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்” என்றான் கண்ணபிரான்.

“ஆண்டவனே என் பெட்டி நிறையப் பணம் வெள்ளி ரூபாயாக இருக்க வேண்டும். எவ்வளவு எடுத்தாலும் குறையக்கூடாது. இதையே கேட்கிறேன்” என்றான் குடியானவன்.

“அப்பனே உனக்கு ஏன் பண ஆசை பிடித்து விட்டது?” என்று சொல்லிக் கோவிந்தன் தாமதித்தான்.

gokulam_tamil1991-12-01_0015-picதான் கேட்ட வரத்தையே தர வேண்டும் என்று குடியானவன் வணக்கத்தோடு பிடிவாதம் செய்தான்.

“சரி, அப்படியே!” என்று சொல்லிக் கோவிந்தன் மறைந்து விட்டான்.

பணம் இருந்தால் எல்லாமே பெறலாம். அவ்வப்போது என்ன வேண்டுமோ அதைப் பெறலாம். ஆனபடியால் இந்த வரத்தைக் கேள் என்று தன்னுடைய மனைவி சொன்னதைக் குடியானவன் சரி என்று ஒப்புக் கொண்டு இவ்வாறு கேட்டு வரம் பெற்றான்.

வரத்தின்படி பெட்டியில் ரூபாய் நிறைந்து விட்டது. உடனே குடியானவன் கை நிறைய ரூபாய் எடுத்துக் கொண்டு, அடுத்த ஊரில் துணிக் கடைக்குச் சென்றான். வீட்டுக்காரிக்கு நல்லதாக புடைவை இரண்டு வாங்க வேண்டுமெனச் சென்றான்.

குடியானவன் சென்ற வழியில் ஜனங்கள் எல்லாரும் ஏதோ வெகு குதுகலமாக இருப்பதைக் கண்டான். தனக்குக் கோவிந்தன் தந்த வரம் எல்லாருக்குமே பயன்பட்டு விட்டதை அவன் முதலில் மறந்து விட்டான். பிறகுதான் நினைவுக்கு வந்தது. ஊரில் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவனும் மகிழ்ந்தான். ஜவுளிக் கடைக்குள் நுழைந்தான்.

நல்ல புடைவைகள் இரண்டு எடுத்துத் தரச் சொன்னான்.

“நீ என்ன கொடுப்பாய்?” என்று கேட்டார் கடைக்காரர்.

“என்ன விலை சொல்லுகிறீரோ அதைத் தருகிறேன்.”

“விலையா? எங்களுக்குப் பணம் வேண்டாம். பணத்தை இப்போது மதிப்பார் இல்லை. அது எல்லாரிடமும் ஏராளமாக இருக்கிறது. எத்தனை மூட்டை அரிசி தருவீர், சொல்லும்” என்று கேட்டார் கடைக்காரர்.

“ரூபாய்க்கு ஏன் மதிப்பில்லை? அதற்கு என்னவாயிற்று?” என்றான் குடியாளவன். கடைக்காரர் வேடிக்கை செய்கிறார் என்று எண்ணி இப்படிக் கேட்டான்.

“எல்லாரிடமும் ரூபாய் வேண்டிய அளவு குறையாமல் இருக்கிறது. இப்போது யாருக்கும் பணம் வேண்டிய தில்லை . இது உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார் கடைக்காரர். குடியானவனுக்கு விஷயம் விளங்கவில்லை. அடுத்த கடைக்குப் போனான். அங்கேயும் “அரிசியோ, பருப்போ , கடலையோ ஏதாவது உணவுப்பண்டமாகக் கொண்டு வா, பணம் வேண்டாம் அது நம்மிடம் ஏராளமாக இருக்கிறது” என்றார்கள்.

gokulam_tamil1991-12-01_0016-picகுடியானவன் துக்கமடைந்தான். எந்தக் கடைக்கு எந்த பண்டம் வாங்கப் போனாலும் இந்த நிலையே இருப்பதைக் கண்டான். ரூபாய்க்கு மதிப்பே இல்லாமல் போயிற்று. மனைவியும் புருஷனும் துயரத்தில் மூழ்கினார்கள்.

“கோவிந்தா, என்னை ஏமாற்றி விட்டாயே” என்று அழுதான் குடியானவன்.

“நான் ஏமாற்றவில்லை உன்னை! நீயே ஏமாற்றிக் கொண்டாய்” என்றான் கோவிந்தன்.

“நானும் குடும்பமும் பசியால் செத்துப் போவோமோ” என்று குடியானவன் அழுதான்.

“வரத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டான் கண்ணன்.

“உன் வரத்தை நீயே எடுத்துக் கொண்டு போ! நான் முன்போல் உழைத்துப் பிழைப்பேன். அதற்கு நீ உதவினால் போதும்” என்றான் குடியானவன் தைரியமாக.

“அதுவே சரி. நீயும் உழைத்துப் பிழை, எல்லோரும் உழைத்துப் பிழைக் கட்டும்” என்றான் கோவிந்தன்.

- 01-12-1991

(1957இல் கல்கியில் வெளியான இந்தக் கதை, வரங்களால் மனிதர்களுக்குத் தொல்லையே. உழைப்பே மனித சமுதாயத்தை மேம்படுத்ததும் உயர்ந்த சக்தி என்பதை எவ்வளவு அழகாக உணர்த்துகிறது) 

தொடர்புடைய சிறுகதைகள்
(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருவிடைமருதூர்ச் சாமிநாதையர் தொண்டை மண்டலம் உயர்தரப் பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டு வருஷங்களாகத் தலைமை உபாத்தியாயர் . அவர் மனைவி அகிலாண்டம்மாளும் அவரும் மிகவும் சந்தோஷமாகக் குடும்ப வாழ்வு நடத்தி வந்தார்கள். ...
மேலும் கதையை படிக்க...
பாண்டவர்கள் அருச்சுனனத் தவம் செய்ய அனுப்பிவிட்ட பிறகு ஒரு நாள் லோமசர் என்கிற பிரம்மா அவர்களைக் காண வந்தார். இந்திரப் பிரஸ்தத்தில் புதிஷ்டிரனைப் பூஜித்து வந்த பிராமணர்களின் கூட்டம் வனவாசத்திலும், கூடவே இருந்து கொண்டு வந்தது. இது ஒருவிதத்தில் கஷ்டமாகவே இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு மாமியார். அந்த மாமியாருக்கு ஒரு மருமகள். மருமகளுக்குப் பதினான்கு வயது. புக்ககத்திற்கு வந்து ஐந்து நாளாயிற்று. "லக்ஷ்மீ , நான் நாலு குடம் ...
மேலும் கதையை படிக்க...
(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுந்தரஞ் செட்டியார் ஒரு துணி வியாபாரி . சிறுமுதலைக்கொண்டு ஆரம்பித்து, தம்முடைய நான் யத்தினாலும், விவேகத்தினாலும் நல்ல ஆஸ்தி சம்பாதித்தார். அவர் மனைவி மீனாட்சியம்மாள் தீவிர தெய்வபக்தி கொண்டவள். ...
மேலும் கதையை படிக்க...
சபேசன் காப்பி என்றால் ஒரு காலத்தில் ராஜதானி யெல்லாம் பிரசித்தம். வெள்ளைக்காரர்கள் கூட அதைத் தேடி வாங்குவார்கள். நம்மவர்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதே இல்லை. "கொட்டை வாங்கி எவ்வளவு ஜாக்கிரதையாக வீட்டிலேயே வறுத்துப்பொடி பண்ணினாலும் டப்பாவுக்குள் போட்டு மூடிய சபேசன் காப்பிப் பொடிக்குச் ...
மேலும் கதையை படிக்க...
(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "அவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? இந்த மாதிரியான வேலைகளில் இறங்குவது அபாயம். கமலம். வேண்டாம். நான் சொல்வதைக் கேள்." "ஒரு அபாயமும் இல்லை. காமு. நம் கையெழுத்து அவருக்குத் தெரியுமா? ...
மேலும் கதையை படிக்க...
(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராயப்பன் எங்கள் விற்பனைப் பையன்களுள் ஒருவன். கிறிஸ்தவப் பையன். ஆனால் அவன் வழக்கம். இரவில் எங்கேயாவது ஒரு விநாயகரைத் தொழுது விட்டு அங்கேயே விநாயகருக்குப் பின் படுத்துத் தூங்கிவிடுவான். வேறு ...
மேலும் கதையை படிக்க...
(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சப் கலெக்டர் சீதாராமனுக்குச் சம்பளம் ஆயிரத்து இருநூறு ரூபாய். ஆனாலும் குடும்ப வாழ்க்கை மிகவும் சிக்கனமாக நடந்து வந்தது. 'சிக்கனம் ஏன்? திராபை' என்றே ஊரிலுள்ள மற்ற உத்தியோகஸ்தர் ...
மேலும் கதையை படிக்க...
(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 'ஆய்வராத' வண்டி கறுப்பனை வேறே வைத்தார்கள். வேறே வைப்பது என்றால், குடியானவர்களுக்குள் ஒருவ னுக்கு விவாகம் செய்து மனைவி வீட்டுக்கு வந்ததும் அவனும் அவன் மனைவியும் வாசிக்க ஒரு தனிக் ...
மேலும் கதையை படிக்க...
(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோட்டூர் ஜில்லாவுக்குத் தலைநகரமாகிய கோட்டூரில் முன்பு காட்டாஞ்சேரி என்று சொல்லி வந்து இப் போது சில வருஷமாய் ஜேம்ஸ்பேட்டை என்று புதுப் பெயர் கொண்ட ஆதித்திராவிடத் தெருவில், ஸபளையர் ...
மேலும் கதையை படிக்க...
சோதிடம் பொய்யாகுமா?
வியாசர் விருந்து – அகஸ்தியர்
சாந்தி
தீபாவளியில் தேவ தரிசனம்
சபேசன் காப்பி
கூனி சுந்தரி
ராயப்பன்
கர்நாடக விஜயம்
திக்கற்ற பார்வதி
ஒரு எலெக்ஷன் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)