பகுத்தறிவாளன்

 

என் நெருங்கிய நண்பன் அறிவுச்சுடர். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவன்.மூடப் பழக்கங்களை ஒழிப்பதற்காக பிறவி எடுத்தவன் போல் நிறையப் பேசுவான்..

பல வருடங்களுக்குப்பிறகு அவனுக்கு குழந்தை பிறந்திருந்தது. நானும் குழந்தையைப் பார்க்க மருத்துவ மனைக்கே போயிருந்தேன்.
நிறைய உறவுப் பெண்கள் குழந்தையைப் பார்க்க வந்திருந்தார்கள். வந்த பெண்களில் ஒருத்தி குழந்தையை எடுத்து கொஞ்சிக் கொண்டே, குழந்தையின் பிஞ்சு விரல்களைப் பிரித்து அதில் ஒரு இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை வைத்து விரல்களை அழுத்திப் பிடித்துக் கொண்டே,

”டேய்!…..அறிவு….உன் குழந்தை உன்னை விட ரொம்ப புத்திசாலியாக வருவான்…..பணத்தைக் கொடுத்தவுடன் எப்படி கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் பார்!….”என்று பெருமையாகச் சொன்னார்கள்.

அதை அறிவுச்சுடரும் சிரித்துக் கொண்டே ரசித்தான்.

அதைப் போலவே வந்திருந்த எல்லாப் பெண்களும் அவரவர் தகுதிக்கேற்ப பணத்தை குழந்தையின் பிஞ்சு விரல்களில் வைத்துக் கொடுத்தார்கள்.

கட்டிலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, அறிவுச்சுடர் அந்த நோட்டுக்களை பெருமையாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

கொங்கு நாட்டில் பிறந்த குழந்தையைப் பார்க்க வருபவர்கள், குழந்தையின் கைகளில் பணம் வைத்துக் கொடுத்துப் பார்ப்பது நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம் தான்!

எல்லோரும் போன பிறகு நான் மட்டும் அறிவுச்சுடர் பக்கத்தில் இருந்தேன்.

“டேய்!….அறிவு…குழந்தைக்கு இரண்டு நாள் தான் ஆகிறது….பச்சை குழந்தையிடம் நோய் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்ளும்….இந்த நோட்டுக்கள் கொஞ்ச நேரத்திற்கு முன்பு எந்த நோயாளியின் கைகளில் இருந்ததோ!.உனக்குத்தெரியாதது ஒன்றும் இல்லை…..பணம் என்று வரும் பொழுது நீ கூட அரசியல் வாதிகளைப் போல் உன் கொள்கைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டாயே!..”.என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

பாவம் அறிவுச்சுடரால் அதற்குப் பதில் சொல்ல முடியாமல் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்! 

தொடர்புடைய சிறுகதைகள்
இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நிறைய திரைப் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. போன வெள்ளிக் கிழமை நாலு புதுப் படம் ரிலீஸ். நானும் என் மனைவியும் ரிலீஸ் அன்று ஒரு படத்தின் காலைக் காட்சிக்குப் போயிருந்தோம்! அன்று தான் படம் ரிலீஸ் என்பதால் சற்று ...
மேலும் கதையை படிக்க...
“என்ன இருந்தாலும் ஆண்டவன் நம்ம பக்கம் தாண்டா இருக்கான்!..........இன்னைக்கு பேப்பரைப் பார்த்தாயா?.....”” “பார்த்தேன்!.........தங்கம் பவுன் விலை இருபத்தி நாலாயிரத்தைத் தொட்டு விட்டது!...படிக்கப் படிக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது!...........”.” “பவுன் விலை இருபதாயிரத்தையெல்லாம் தாண்டும் என்று நான் எந்த காலத்திலும் நெனைச்சுக்கூடப் பார்த்ததில்லை!........தங்கம் விலை ஏற ...
மேலும் கதையை படிக்க...
சரவணன் சீமான் வீட்டுப் பிள்ளை. சிறுவயசிலிருந்தே ஜாலியாக இருந்து பழகி விட்டான். அதே சமயம் படிப்பில் ஸ்கூல் பஸ்ட். அதனால் பெற்றோர் அவன் விஷயத்தில் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அவன் இஷ்டப்படி விட்டு விட்டார்கள்! பிளஸ் டூ முடித்தவுடன் அவன் விருப்படி சென்னை ...
மேலும் கதையை படிக்க...
அந்த நகரத்தில் மேயர் தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகள் நேரிடையாக மோதல்! எங்கும் ஒரே பரபரப்பு! கொடிகட்டிய வேன்களும் கார்களும் சந்து பொந்தெல்லாம் ஸ்பீக்கர் கட்டிக் கொண்டு நுழைந்து ஆரவாரம் செய்தன. அரவிந்தன் மாநிலத்திலேயே மிகச் சிறந்த பேச்சாளன். ஒரு நல்ல எழுத்தாளன். ...
மேலும் கதையை படிக்க...
தமிழ் நடிகர்களிலேயே பத்து கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் மிக பிரபலமான நடிகர் அவர்! அவருடைய ஈ.சி.ஆர். ரோடு,.பால வாக்கம் பண்னை வீடுகள், தி.நகர், வேளச்சேரியில் உள்ள பங்களாக்கள், சிட்டியில் உள்ள அவருடைய அனைத்து அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமானத்துறை அதிகாரிகளால் ரெய்டு! சென்னை ...
மேலும் கதையை படிக்க...
வெள்ளிக் கிழமை லீவு வேண்டும்!
தங்கம்
முறை!
மேயர் தேர்தல்
சரியான நேரம்! – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)