நியாயம்!

 

படிக்காதவங்க கூட இப்ப ஏ.டி.எம். மிஷினைப் பயன் படுத்தறாங்க! உள்ளே போன ஆசாமி வெளியே வர ரொம்ப நேரமாச்சு! வெளியே காத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் அந்த ஆசாமி தேள் கொட்டியது போல் பரபரப்பாக வெளியே வந்தார்.

“என்னாச்சு?…எதற்கு இந்தப் பதட்டம்?” என்று கேட்டேன்.

“சார்!…என் கார்டை உள்ளே செருகினேன்…அது உள்ளே போய் விட்டது! காத்திருந்து பார்த்தேன்…கார்டு வெளியே வரலை!….”

“நீங்க பணம் எடுத்துக் கொண்டீர்களா?…”

“இல்லே சார்!…கார்டே இன்னும் வெளியே வரலை….அப்புறம் எப்படி சார் பணம் எடுப்பது?..”

அவரை உள்ளே அழைத்துப் போய் அவருக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொடுத்து, பின் கார்டையும் எடுத்துத் தந்து, இந்த மிஷினில் பணம் எடுத்த பிறகு தான் கார்டு வெளியே வரும் என்று விபரம் சொன்னேன்.

“சார்!…நான் இந்த மாதிரி மிஷினில் பணம் எடுத்ததில்லை…எங்க தெருவில் இருக்கும் மிஷினில் முதலில் கார்டைச் சொருகி எடுத்துக் கொள்வேன்….இது வேற மாதிரி இருக்குது சார்! …”

“ஆமா…ஒவ்வொரு மிஷினும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்!…”

“ எனக்குப் புரியலே!….பாங்கும் அதன் விளம்பரங்களும் போர்டுகளும் நாடு முழுவதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்……ஆனா அதே பாங்கு நமக்கு நோட்டுத் தர வைக்கிற மிஷின்களை மட்டும் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு மாதிரி வைக்குமாம்!…இது நல்லாவா இருக்கு?..”

என்று முணு முணுத்துக் கொண்டே போனான் அந்தப் பட்டிக்காட்டான்.

அவன் பேச்சில் கூட ஏதோ நியாயம் இருப்பது போல் தோன்றியது!.

- பொதிகைச்சாரல் – செம்பம்பர் 2014 

தொடர்புடைய சிறுகதைகள்
“என்ன செல்வம்!...பேப்பர் ‘கட்டிங்’குகளை கை நிறைய வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறே?....” “ ஆமாண்டா…தமிழ் நாட்டில் சாலை விபத்துக்கள் பெருகி விட்டன…என்று காவல் துறை அடிக்கடி சொல்கிறது!...அது தொடர்பாக ஏன் எப்படி என்று ஒரு சின்ன ஆராய்ச்சி நடத்திப் பார்த்தேன்…ரிசல்ட் ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
விடாமல் அடித்த போனை கல்பனா தான் எடுத்தாள். திருப்பூரிலிருந்து சித்தி மகள் பேசினாள் “அக்கா!....அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்....காலமாகி விட்டார்....” “அப்படியா?.....அட அடா.!...எப்ப எடுப்பாங்க?” “மாலை ஆறு மணி ஆயிடும்!......” “சரி!...நான் வந்து விடுகிறேன்...நேரில் பேசிக்கலாம்!” இரண்டு மாதம் கழித்து இரவு பத்து மணிக்கு மேல் போன். கல்பனாவின் கணவர் ராஜசேகரன் ...
மேலும் கதையை படிக்க...
அது சர்க்கரை நோயாளிகளுக்கான மிகப்பெரிய மருத்துவ மனை. சாப்பிடும் முன் ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டியிருந்ததால் காலை ஏழு மணிக்கே நான் அங்கு போக வேண்டியிருந்தது! மருத்துவமனை இருப்பது 5- வது மாடி. நான் ‘லிப்ட்’டுக்காக காத்திருந்தேன். என் அருகில் வந்து ஒரு ...
மேலும் கதையை படிக்க...
அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் ஷியாமை கல்யாணம் செய்து கொண்டு,அங்கேயே செட்டிலாகி விட்ட தன்னுடைய ஆருயிர் தோழி சிந்துஜா பத்தாண்டுகளுக்குப்பிறகு, இன்றுதான் சொந்த மண்ணை மிதிக்கிறாள். அவளை வரவேற்க விமான நிலையத்திற்கே போயிருந்தாள் ஆர்த்தி. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆர்த்தியின் கார் ...
மேலும் கதையை படிக்க...
பிரபல தமிழ் எழுத்தாளர் எழிலரசு அவர்கள் தன்னுடைய 86 - வது வயசில் காலமானார். கடந்த ஒரு வாரமாக தமிழ் நாட்டிலிருந்து வெளி வரும் அனைத்துப் பத்திரிகைகளிலும், அவரைப் பற்றிய செய்திகளையும், கட்டுரைகளையும் பிரசுரம் செய்து சிறப்பு செய்தன. சில வாரப் பத்திரிகைகள் எழுத்தாளரின் ...
மேலும் கதையை படிக்க...
டூவீலரை ஆன் செய்!…..செல்போனை ஆப் செய்!……
வலி!
ஒரு நிமிடப் பயணம்!
தமிழ் நாட்டு அரசியல்!
கதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)