நியாயம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 6,698 
 

படிக்காதவங்க கூட இப்ப ஏ.டி.எம். மிஷினைப் பயன் படுத்தறாங்க! உள்ளே போன ஆசாமி வெளியே வர ரொம்ப நேரமாச்சு! வெளியே காத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் அந்த ஆசாமி தேள் கொட்டியது போல் பரபரப்பாக வெளியே வந்தார்.

“என்னாச்சு?…எதற்கு இந்தப் பதட்டம்?” என்று கேட்டேன்.

“சார்!…என் கார்டை உள்ளே செருகினேன்…அது உள்ளே போய் விட்டது! காத்திருந்து பார்த்தேன்…கார்டு வெளியே வரலை!….”

“நீங்க பணம் எடுத்துக் கொண்டீர்களா?…”

“இல்லே சார்!…கார்டே இன்னும் வெளியே வரலை….அப்புறம் எப்படி சார் பணம் எடுப்பது?..”

அவரை உள்ளே அழைத்துப் போய் அவருக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொடுத்து, பின் கார்டையும் எடுத்துத் தந்து, இந்த மிஷினில் பணம் எடுத்த பிறகு தான் கார்டு வெளியே வரும் என்று விபரம் சொன்னேன்.

“சார்!…நான் இந்த மாதிரி மிஷினில் பணம் எடுத்ததில்லை…எங்க தெருவில் இருக்கும் மிஷினில் முதலில் கார்டைச் சொருகி எடுத்துக் கொள்வேன்….இது வேற மாதிரி இருக்குது சார்! …”

“ஆமா…ஒவ்வொரு மிஷினும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்!…”

“ எனக்குப் புரியலே!….பாங்கும் அதன் விளம்பரங்களும் போர்டுகளும் நாடு முழுவதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்……ஆனா அதே பாங்கு நமக்கு நோட்டுத் தர வைக்கிற மிஷின்களை மட்டும் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு மாதிரி வைக்குமாம்!…இது நல்லாவா இருக்கு?..”

என்று முணு முணுத்துக் கொண்டே போனான் அந்தப் பட்டிக்காட்டான்.

அவன் பேச்சில் கூட ஏதோ நியாயம் இருப்பது போல் தோன்றியது!.

– பொதிகைச்சாரல் – செம்பம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *