டெக்னாலஜி – ஒரு பக்க கதை

 

ஏங்க நம்ம தெருவுல புதுசா ஒரு பூக்காரி வந்திருக்கா.

எல்லாரும் கையாலதானே முழம் போட்டு கொடுப்பாங்க? இவ ஸ்கேல் வச்சு அளந்து கொடுக்கிறா…ஏதோ கொஞ்சம் படிச்சிருப்பா போலிருக்கு…அதுக்காக அதை இப்படிக் காட்டணுமா! டெக்னாலஜி எல்லாரையும் மாத்திடுச்சு” என கிண்டலாக தன் கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகுணா

சரியாக அப்போது அந்தப்புது பூக்காரி தெரு முனையில் பூக்கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். வழக்கமாக வரும் பூக்கார அம்மா அன்று வராததால், சுகுனா அவளிடம் பூ வாங்கினாள். அவள் கேட்ட இரண்டு முழம் பூவை பூக்காரி ஸ்கேல் கொண்டு அளப்பதை கதிரும் கண்கூடாகப் பார்த்தான்

‘ஏம்மா, எல்லாரும் முழம்தானே போடுவாங்க..நீ ஏன் ஸ்கேலால அளக்கிறே? அடக்கமாட்டாமல் கேட்டு விட்டான், கதிர்.

”ஐயா, நான் கொஞ்சம் குள்ளம்! என் கையால் முழம் போட்டால் ரொம்ப கம்மியா இருக்கும்னு யாரும் வாங்க மாட்டாங்க.. அதனாலதான் , ஸ்கேலாலே அளந்து
கொடுக்கிறேன். வேற ஒண்ணும் உள் நோக்கம் இல்லீங்க ” என்றாள் வருத்தமாக.

படிப்பும் இல்ல…பகட்டும் இல்ல..டெக்னாலஜியும் இல்ல..எதையும் நீயா முடிவு பண்ணாம கேட்டுத் தெரிஞ்சுக்க’ எனப் பார்வையாலேயே மனைவியிடம் பாடம் சொல்லிக் கிளம்பினான் கதிர்

– வி.சகிதா முருகன் (திசெம்பர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
சொந்த மண்ணை விட்டுத் திசை திரும்பிப் போகின்ற சராசரி மனிதர்களுள் ஒருவனாய் தானும் மாறிவிட நேர்ந்தது குறித்து, ராகவனுக்கு உள்ளூரப் பெரும் மனக் கவலைதான். உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவுக்கு இப்படித் தான் போக நேர்ந்தது குறித்து ,ஓரளவுதானும் ...
மேலும் கதையை படிக்க...
ஷவரின் சத்தத்தில் என் மனைவி விழித்துக்கொண்டாள் என ஹாலின் விளக்கு வெளிச்சம் வெண்டிலேட்டர் வழியாக கசிந்ததைக்கண்டு தெரிந்துகொண்டேண். “என்னங்க... காலைல அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு எங்க கிளம்புறீங்க” பொதுவாக என் மனைவிடம் நிறைய விஷயங்களை பகிர்வதில்லை. ஒவ்வொன்றிற்கும் எதிர்கேள்வி கேட்டிக்கொண்டேயிருப்பாள். அந்தளவுக்கு பொறுமை எனக்கில்லை. ஆபிஸ் ...
மேலும் கதையை படிக்க...
அவள் காத்திருந்தாள்.வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த வேட்டைநாள் இன்றுதானென்பது அவளுக்குத் தெரிந்து விட்டது. கொப்பளிக்கும் கோபம் நாடி நரம்புகளிலெல்லாம் கசியும் ரௌத்ர சூரியன் பற்ற வைத்த நெருப்பு, அந்த பொட்டல் வெளியெங்கும் பற்றியெறிந்து கொண்டிருந்தது.நா வறணடு துவணடு நகர்ந்தது முடமான காற்று. மேகங்களற்ற வானில் ...
மேலும் கதையை படிக்க...
அந்த டாக்டர் வழக்கமானவர்களில் இருந்து ரொம்ப வித்தியாசமாகத் தெரிந்தார். மூக்குக் கண்ணாடியை, சரியாக மூக்கு நுனியில் மாட்டிக் கொண்டு வெற்றுக் கண்களால் பேஷண்டை உற்றுப் பார்த்துப் பேசுவார். அவரது பேண்டுக்கு எப்போதும் பெல்ட் கிடையாது. அதிகபட்சம் ஐம்பது கிலோ இருப்பார். ஆனால் திறமைசாலி.முக்கியமாக ...
மேலும் கதையை படிக்க...
அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான். பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு விடுகிறது. கொட்டாவி விடுதலுடனும்,உடல் முறுக்கிய தூக்கக் கலக்கத்துடனுமாய் படிக்கிறான் படிக்கிறான், உடல் அலுக்கும் வரை படிக்கிறான், எழுதுகிறான் கை வலிக்கும் வரை ...
மேலும் கதையை படிக்க...
சாத்தானின் முகம்
இயற்கை உபாதை
எதிர் வினை
பயம்! – ஒரு பக்க கதை
கொட்டாவி,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)