குளம் குட்டையானது

 

அந்த ஊருக்கே அடையாளத்தை கொடுத்துக்கொண்டிருந்தது அந்த குளம். சுற்றிலும் தோட்டங்களாகவும், குடிசைகளாகவும், ஒரு சில காரை வீடுகளாகவும் அமைந்திருந்த ஊருக்கு இந்த குளம் எல்லாவற்றிற்கும் தேவையாய் இருந்தது.ஊரே உபயோகப்படுத்தினாலும் நொய்யலின் புண்ணியத்தினால் கிளை வாய்க்கால் போல தண்ணீர் இந்த குளத்துக்குள் வந்து சேர்ந்து குளத்தை நிரப்பிக்கொண்டிருந்தன. ஒரு சில மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகமாகி வழிந்தோட அந்தக்காலத்தில் ஏதோ ஒரு இராசா காலமாக இருக்கவேண்டும் அமைத்திருந்த மதகு போன்ற வழியாக தண்ணீர் வழிந்தோடி சிறிய வாய்க்கால் போல ஓடி மற்றொரு குளத்துக்கு சென்று விடும். ஒரு சில நேரங்களில் மட்டும் மதகு வழியாக பெரு வெள்ளம் ஓடி இருந்ததாக வரலாறு உண்டு. நொய்யல் வறண்டு போன காலங்களில், அந்த ஊர் மக்கள் குளத்தில் இருக்கின்ற தண்ணீரை வைத்தே நானகைந்து மாதங்களுக்கு சமாளித்து விடுவர்.குளம் சொட்டு தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டதுண்டு.அதன் பின் மழை பெருக, குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும். அதன் பின் நான்கைந்து மாதங்களுக்கு அந்த ஊருக்கு வசந்தம்தான்.பறவை கூட்டங்களும்,அதன் ஒலிகளும்,சுற்றி மீன் பிடிப்பவர்களும் பார்க்க கண் கொள்ளா காட்சியாய் இருக்கும்.

குளத்திற்கு சற்று தொலவில மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த கண்ணப்பன் தன் மகளின் பனிரெண்டாம் மதிப்பெண்ணை வாங்க வந்தவா¢டம்,அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் “உங்க பொண்ணு நல்ல மார்க் வாங்கி இருக்கா ! டாக்டருக்கு படிக்க வையுங்க, சொன்ன ஆசிரியா¢டம் அதுக்கெல்லாம் வசதி வேணுங்களே, என்று பெருமூச்சுடன் சொல்லிவிட்டு மகளை வீட்டுக்கு கூட்டி வந்தார். மகள் டாக்டர் கனவிலே கூட வந்தாள்.

சம்சாரத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார் கண்ணப்பன் “இந்த வாத்தியாருக்கு என்ன வேலை” பொண்ணை டாக்டருக்கு படிக்க வைக்க சொல்லிடறாங்க, அதெல்லாம் வசதிப்பட்டவங்களுக்கு தோதுப்படும், நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு சா¢ப்பட்டு வருமா? மகளும் ‘அப்பா அம்மாவிடம்’ சொல்வதை மெளனமாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.

கண்ணப்பண்ணே,! என்ற குரல் கேட்டு வெளியே வந்து பார்த்த உடன் முகத்தை சுழித்தார் கண்ணப்பன், ராசு என்ன விசயம்?எண்ணன்னே விரோதிய பார்த்து கேக்கற மாதிரி கேக்கறீங்க. உங்க பொண்ணு நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகியிருக்கா, அண்ண்ன் ரொம்ப சந்தோசப்பட்டாரு, நீங்க எங்க படிக்க வைக்கணும்னாலும் அண்ணன் சீட் வாங்கித்தர ரெடியா இருக்காரு, ஒரு புன் சிரிப்புடன் சொன்னான்.அதெல்லாம் இன்னும் முடிவு பண்ணல, என்று விட்டேத்தியாய் பதில் சொல்லி அவனை அனுப்ப முயற்சி செய்தார். சா¢ண்ணே நீங்க சொல்லி விடுங்க எதுண்ணாலும் மீண்டும் ஒரு புன்னகையுடன் விடை பெற்றான் ராசு.

இவனுக்கென்ன வேலை? என்று சலித்துக்கொண்டு உள்ளே வந்தார் கண்ணப்பன். அவர் முகத்தை பார்த்தபடி மனைவியும், மகளும் நிற்க,இவர் தயங்கினார். மகள் கண்களில் கண்ணீருடன் உள்ளே செல்ல “ஏங்க பேசாம அந்த ஆள் கேக்கற மாதிரி அந்த இடத்தை கொடுத்திடலாம்ல, பொண்ணு படிப்புக்கு ஆகும், அவ ஆசைப்பட்டபடி டாக்டருக்கு படிக்க வச்சுடலாம். சொன்ன மனைவியை முறைத்து பார்த்த கண்ணப்பன் உனக்கு அறிவிருக்கா? இருக்கற அந்த மூணு ஏக்கராவையும் கொடுத்துட்டா நாம என்ன செய்யறது?ஆமா புள்ளை ஆசைய விட உங்களுக்கு அந்த இடம் பொ¢சா போச்சு முணங்கியபடி உள்ளே சென்றாள்.

வீட்டில், பெண்கள் இருவரின் ஒத்துழையாமையை ஒரு வாரத்துக்கு மேல சமாளிக்க முடியாமல் கண்ணப்பன் ராசுவை வரச்சொன்னார். இந்தா பாரு ராசு என் புள்ளைக்கு எப்படியாச்சும் டாக்டர் படிப்பு படிக்க சீட் வாங்கிக்கொடுத்துடனும், அதுக்கப்புறம் இன்னைக்கு மார்க்கெட் ரேட் என்ன விலையோ அதைய கொடுத்துடனும், என்று தடாலடியாக பேச அதுக்கெண்ண்னே, நீங்க “ஊம்னு” மட்டும் சொல்லுங்க மத்ததை நான் பாத்துக்கறேன்.

கண்ணப்பன் தன் மகளுக்கு டாகடர் சீட்டுடன் ரொக்கமாய் வந்த பெருந்தொகையுடன் பாங்கியில் போட்டு விட்டு வீட்டில் அக்கடாவென உட்கார்ந்து பழங்கதைகள் பேச ஆரம்பித்துவிட்டார்.

இடத்தை ராசு மூலம் வாங்கிய மக்கள் பிரதிநிதி கண்ணப்பனுக்கு கொடுத்தது போல, இரு மடங்கு தொகையையும், கம்பெனி தொடங்க “மந்திரியின்” சிபாரிசையும் பெற்றுக்கொடுத்து அதற்கும் தனியாக ஒரு தொகையையும் ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டு இந்த விசயத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டான்.

ஏராளமாய் பணத்தை கொடுத்திருந்த அந்த நிறுவனம் வாங்கிய மூணு ஏக்கரில் தன்னுடைய கம்பெனியை கட்ட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அந்த ஊர் மக்கள் முணு முணுத்து எதிர்ப்பை காட்ட கம்பெனி அந்த ஊரையும், அதனை சுற்றியுள்ள ஊர் மக்களையும் தனி கவனிப்புடன் வேலைக்கு எடுக்க ஆரம்பித்தது. முணு முணுப்புக்கள் அப்படியே அமுங்க, கம்பெனி வேகமாக வளர ஆரம்பித்தது.

ஆறே மாதத்தில் தன் உற்பத்தியை தொடங்க ஆரம்பித்த கம்பெனி முதலில் கழிவுகளை மெல்ல குளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் திறந்து விட ஊர் மக்கள் திகைத்து எதிர்ப்பை காட்ட முயற்சிக்க, அதற்குள் ஊரில் பாதி அளவு மக்கள் இந்த கம்பெனியை நம்பி வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது என்ன செய்வது? என திகைத்து நின்று கொண்டிருந்தனர் ஊர் மக்கள்.

அதன்பின் இந்த கம்பெனிக்கு தேவையான பொருட்களை அருகில் இருந்தே தயாரித்து கொடுக்க சிறு சிறு நிறுவனங்களும் பக்கத்தில் இருந்த விவசாய நிலங்களில் தோன்ற ஆரம்பித்து விட்டன.அவைகளை தொடங்க அதே ஊர் மக்கள் வேக, வேகமாக முயற்சிகள் செய்ய ஆரம்பித்து விட்டனர்.இந்த நிறுவனங்களுக்கு வேலைக்கு வந்து சேர்ந்த வெளியூர்க்காரர்கள் வசிப்பதற்கு வாடகைக்கு விட, உள்ளுர்க்காரர்கள் பெரிய பெரிய மச்சு வீடுகளை தங்கள் விளை நிலங்களில் கட்ட ஆரம்பித்து விட்டனர்.இவைகளில் வெளியேறும் கழிவுகளை சுற்றியுள்ளவர்கள் செய்வது போலவே சத்தமில்லாமல் கால்வாயிலேயே, விட்டுவிட்டனர்.

இப்பொழுதெல்லாம் நொய்யலை நம்பி இந்த குளம் இல்லை, எப்பொழுதும் தண்ணீர் நிரம்பியே இருக்கும்.அவ்வப்பொழுது நாற்றம் தாங்காமல், தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற வேண்டி இதே ஊர் மக்கள் போராடுவார்கள்.

இப்பொழுதும் இயற்கை சில நேரங்களில் பெரு மழையை பெய்வித்து, நொய்யல் ஆற்று வெள்ளத்தை ஓட செய்து இந்த கழிவுகளை அகற்றிக்கொண்டுதான் இருக்கிறது. 

தொடர்புடைய சிறுகதைகள்
சாமிநாதனுக்கு கோபம் கோபமாய் வந்தது, அவன் மனைவி அவனை விரட்டிக்கொண்டே இருப்பதாக அவனுக்கு பட்டது.இருபது வருடம் குடித்தனம் பண்ணியும் ஒரு மனிதன் சுதந்திரமாக வெளியே போகலாம் என்றால் எல்லாவற்றுக்கும் தடை, இல்லையென்றால் என்னையும் கூட்டிச்செல் என்று நச்சரிப்பு, அட ஒரு கோயிலுக்குச்சென்று ...
மேலும் கதையை படிக்க...
தணிகாசலம் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக்கொண்டு உள்ளார். அவரின் மகள்கள், மருமகன்கள்,சொந்த பந்தங்கள் அனைவரும் வந்து விட்டார்கள், ஆனால் அவர்தான் இந்த உலகத்தின் பந்த பாசத்திலிருந்து விடைபெற மறுத்து யாருக்கோ காத்திருக்கிறார். தணிகாசலத்துக்கு மாமன் முறை ஆகவேண்டும் ராமசாமி, அவர் ஒரு யோசனை ...
மேலும் கதையை படிக்க...
கணபதியப்பன் ஒரு எளிமையான விவசாயி, தன்னைப்பற்றி அதிகம் அல்ட்டிக்கொள்ள மாட்டார்.அதேபோல்தான் அவர் மனைவியும், இவர்கள் உண்டு விவசாயம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.ஆனால் இப்பொழுது கணபதியப்பன் அமைதி இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார், அவரது பிள்ளைகளால் கோடி கணக்கில் பணம் அவரது நிலத்துக்கு கிடைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் அரை நிரவாணமாய் படுத்துறங்கிய கதிர் சட்டென சத்தம் கேட்டு கண் விழித்தவன், எதிரில் நாகரிகமாய் உடையணிந்து ஒருவன் நின்று கொண்டிருப்பதை கண்டவுடன் சட்டென எழுந்து தன் அரை குறை ஆடைகளை சரியாக அணிந்து கொண்டு, “ஏய் ஹூ ...
மேலும் கதையை படிக்க...
குட்டீஸ் நீங்கள் பூங்காவிற்கு சென்றிருக்கிறீர்களா? அங்கு விதம் விதமான மலர்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.நீங்கள் அதை பார்த்து இரசித்திருப்பீர்கள்.அப்பொழுது அங்குள்ளதிலேயே எந்த பூ அழகு என்று பேசிக்கொண்டிருப்பீர்களா?கண்டிப்பாக செய்திருப்பீர்கள். இப்படித்தான் ஒரு நாள் குழந்தைகள் கூட்டம் ஒன்று ...
மேலும் கதையை படிக்க...
சாமியார்
தணிகாசலத்தின் இறுதி யாத்திரை
நிலம் விற்பனைக்கு அல்ல
கி.பி.3000 ம் வருடத்தின் ஒரு சில நாள்
பூக்களுக்கும் போட்டி உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)