கழுதை – ஒரு பக்க கதை

 

சலவைத் தொழிலாளி குமாரசாமி பல வருடங்களாக வளர்த்து வந்த கழுதை , ஒரு நாள் ஏதோ கோபத்தில் அவனைத் தாறுமாறாக உதைத்து விட, ஏற்கனவே சற்று நோய்வாய்ப்பட்டிருந்த அவன் இறந்தே போனான்.

இறுதிக் காரியங்களெல்லாம் முடிந்தபின் நண்பர்களும், உறவினர்களும் துக்கம் விசாரிக்க வந்து கொண்டிருந்தனர்

பெண்கள் குமாரணாமியின் மனைவி கோமதியிடமும் , ஆண்கள், அவனது சகோதரங்களிடமும் ஆறுதல் கூறிச் சென்ற வண்ணம் இருந்தனர்.

இதை வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு கோமதியில் ஒரு செய்கை வியப்பளித்தது. சற்றே ஓய்வாக அமர்ந்ததுத் கோமதியை நெருங்கினாள் அந்தப் பெண்

நானும் ரொம்ப நேரமா பாரக்கறேன். வந்தவங்ககிட்டே நாலுவார்த்தை பொறுமையா கேட்கிற. அப்புறம் திடீர்னு ‘‘வேண்டாம், முடியாது’ ன்னு கோபமா பதில் சொல்றியே? அப்படி என்னதான் கேக்கறாங்க

‘அதுவா அக்கா…?’ என்று தயங்கியவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ‘இந்தக் கழுதையை விலைக்குத் தர முடியுமான்னு கேக்கறாங்க’.

- ஷேக் சிந்தா மதார் (ஏப்ரல் 20, 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
நாரைக்கிணறு, மணியாச்சியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். அந்த ஊர் தண்ணீர் வறட்சிக்குப் பிரபலம். நிஜமாகவே அந்த ஊரில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது. ஒவ்வொரு பானைத் தண்ணீருக்கும் ஊரின் பெண்கள் குடத்தைத் தூக்கிக்கொண்டு நான்கு கிலோமீட்டர்கள் சென்று ...
மேலும் கதையை படிக்க...
அது தனக்கு மட்டுமே சொந்தமான குளம்தானாவென்கிற சந்தேகம் வரத் தொடங்கிய நாளிலிருந்து, இவன் குளத்தில் இறங்கி மூழ்குவதைத் தவிர்த்துக் கரையில் நின்றவாறே, யார் யாரெல்லாம் இறங்குகிறார்களென கண்காணிக்கத் தொடங்கியிருந்தான். இவன் நிற்கும்வரை யாருடைய நிழலின் பிரதியும் கரைகளில் விழாதிருக்க, சலனமற்ற நீரில் ...
மேலும் கதையை படிக்க...
கோவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் பத்தாவது நடைமேடையில் புறப்பட ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தது. கோவையில் ஒரு திருமணம்: திருமணங்களுக்கு மனைவியும் நானும் தம்பதிசமேதராகத்தான் செல்வோம். இம்முறை அவளால் வரவியலாததால் நான் மட்டும். வண்டி புறப்படும் நேரத்திற்கு இருபது நிமிடங்களுக்கு முன்னதாகவே இருக்கைக்கு சென்று அமர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
'பாவம்! அந்த அம்மாவுக்கு ஒரு வருஷமா எந்தப் பட சான்ஸும் வரல. அதனால் பொழுது போகாம கழுதையை வளர்க்கிற அளவுக்குப் போயிட்டாங்க’ என்று நடிகை வர்ஷாவின் வேலைக்காரன் முருகன், தன் மனைவி வள்ளியிடம் அனுதாபப்பட்டான். “அதை தினமும் அவுங்களே சோப்புப் போட்டு குளிக்க ...
மேலும் கதையை படிக்க...
”கிராமத்து பசங்களை உங்க ஜவுளிக்கடையில வேலைக்கு வெச்சிருக்கீங்க. இந்த சிட்டியில் வாடிக்கையாளர்கிட்டே எப்படி பேசணும், என்ன மாதிரி பாடி லாங்வேஜ் காட்டணும்னு அவங்களுக்கு நாங்க கத்துத் கொடுக்கிறோம். ஒரு வார வகுப்புக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுங்க…” போன வாரம் சுய முன்னேற்றப் பயிற்சியாளர் ...
மேலும் கதையை படிக்க...
சாப வறட்சி
குளத்தில் பதுங்கியிருக்கும் கடல்
ஊதிய உயர்வு
கழுதை – ஒரு பக்க கதை
பயிற்சி – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)