கழுதை – ஒரு பக்க கதை

 

‘பாவம்! அந்த அம்மாவுக்கு ஒரு வருஷமா எந்தப் பட சான்ஸும் வரல. அதனால் பொழுது போகாம கழுதையை வளர்க்கிற அளவுக்குப் போயிட்டாங்க’ என்று நடிகை வர்ஷாவின் வேலைக்காரன் முருகன், தன் மனைவி வள்ளியிடம் அனுதாபப்பட்டான்.

“அதை தினமும் அவுங்களே சோப்புப் போட்டு குளிக்க வைச்சு, துடைச்சு விடறாங்க!’ வியந்தாள் வள்ளி.

“அந்த கழுதை ரொம்ப கொடுத்து வைச்சுருக்கணும்’ என்றான் முருகன்.

மறுநாள் – அனைத்து தமிழ், ஆங்கில பேப்பர்களில், வர்ஷா கழுதையின் குழுத்தை கட்டிக் கொண்டிருந்த போட்டோ பிரசுரமாகியிருந்தது.

நடிகை வர்ஷாவிடம், “அம்மா, ஒரு வருஷத்துக்கு அப்பாலே உங்க போட்டோ எல்லா பேப்பர்களிலும் வந்திருக்கும்மா’ என்றாள் ஆச்சரியத்துடன் வள்ளி.

“ம்… பார்த்தேன். இனிமேல் நான் நிறைய படங்களில் நடிப்பேன் பாரு. எப்படி என் யுக்தி’ என்றாள் பெருமையாக வர்ஷா.

வர்ஷா சொன்னதுபோல் பிரபல பட முதலாளி அவளைத் தேடி வந்தார். அவரை மகிழ்ச்சியோடு வரவேற்று சோபாவில் உட்கார வைத்தாள்.

“புக்’ பண்ண வந்திருக்கேன்.

“சந்தோஷம், என் கால்ஷீட் எப்போ வேணும்?’

குழப்பத்துடன் அவர் “நாங்க வித்தியாசமான ஒரு படம் எடுக்கப் போகிறோம். அதுக்கு “கழுதை’ என்று பெயர் வச்சுருக்கோம். அதனாலே… உங்க கழுதையை மட்டும் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கோம்’.

வர்ஷாவுக்கு வியர்த்துக் கொட்டியது.

- ராஜன்புத்திரன் (ஏப்ரல் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
ரகுவின் மனைவி போன் வந்தால் எதிரில் பேசாமல் தனியாக எங்காவது போகிறாள் ... பேசியது யார் என்றும் சொல்லுவது இல்லை ... இதனால் சமிபகாலமாக ரகுக்கு தன் மனைவி மஞ்சு மேல் சந்தேகம் ... அதனால் அலுவலகத்திலிருந்து .. அடிக்கடி வந்து, ...
மேலும் கதையை படிக்க...
‘’டேய் வசந்த் உனக்கு லவ் பண்ண வேற யாரும் கிடைக்கலையா? போயும் போயும் அந்த திமிர் பிடிச்சவளை செலக்ட பணணியிருக்க?’’ ‘’டேய்.. குமார் ஆபீஸ்ல எல்லாருமே ஏன் அவளை தப்பாவே பார்க்கறீங்க? ‘’வசந்த்.. அந்த சுமி நடக்கவே காசு கொடுக்கணும். அவ்வளவு சோம்பேறி ஒரு ...
மேலும் கதையை படிக்க...
"ணே ! இந்த பஸ்சு புளியம்பட்டி போகுமா"... என கவ்விய குரலில் அருகில் இருந்த டீக்கடைக்காரனிடம் கேட்டான் ராமன் நாவரண்டது போலும் வெறும் வாயையை அவ்வபோது விழுங்கி கொண்டே இருந்தான் ராமன். வியாபாரத்தை நினைத்து நொந்து கொண்டே "போகும் போல தம்பி ...
மேலும் கதையை படிக்க...
பத்மாவதிக்கு இந்த பதினைந்து நாட்கள் பள்ளியை விட்டுப் பிரிந்த அனுபவம் மிகவும் கடுமையாகத்தான் இருந்தது. ஒரு வாரம் லீவு விட்டால் இரண்டு நாள் விளையாடிவிட்டு மூன்றாம் நாள் அடப்பள்ளிக்கே போயிருக்கலாமோனு சிலருக்குத் தோணும் அவர்களில் ஒருவர்தான் இந்த பத்மாம்மா. ஆனால் இன்று வேறு ...
மேலும் கதையை படிக்க...
வேகமாய் நடந்து கொண்டிருக்கிறேன். நேரமாகிக் கொண்டிருந்தது. கள்ளுண்ட போதை தலைக்கேறியதைப் போன்ற கிறக்கம். கண்களுக்கு முன்பு பூச்சி பறந்தது. காலை நேரத்திலேயே கானல் நீர் படர்ந்திருந்தது தார் ரோட்டின் மீது. புழுக்கமாய் உணர்ந்தேன். வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டேன். man 300தார் ரோட்டிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
சந்தேகம் – ஒரு பக்க கதை
காதலி – ஒரு பக்க கதை
அந்நிய வாசம்
தாயுமானவள்…
நான் தான் இவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)