ஓர் இறை தூதனின் மயக்கம்

 

நல்லூர் சிவன் கோவிலுக்கு அருகே உள்ள சாய்பாபா பஜனை மண்டபத்தில் தான் தர்சனன் முதன் முதலாக அந்தப் பெண்ணைப் பார்த்தான் பஜனை பாடும் திறன் கொண்ட் அந்தப் பெண்ணின் முகத்தில் ஆளை வசீகரிக்கும் ஒரு தெய்வீகக்களை தெரிந்தது. இறை வழிபாட்டில் பூரண மன ஒருமைப்பாட்டுடன் அவள் கொண்ட ஈடுபாடே அவளுக்கு இவ்வாறான பேரழகைக் கொடுத்திருப்பதாக அவன் மிகவும் விழிப்புணர்வுடன் நினைவு கூர்ந்தான்

பிரான்ஸ் மண்ணிலும் தமிழ் சைவ நெறிகள் தடம் புரண்டு போகாத தனது இலட்சிய வாழ்க்கைக்கு ஏற்ற துணையாக அவளை இனம் கண்டு அவளை அவன் மணம் செய்து கொண்ட காலம் அவனைப் பொறுத்த வரை ஒரு பொற்காலமாக இருந்ததென்னவோ உண்மை தான். அவனுடைய முழுப்பெயர் சிவதர்சனன். பிரான்ஸ் சிவா என்றால் பலரும் அறிவார்கள். வெள்ளை மண்ணிலும் தமிழ் சுவாசம் விட்டுப் போகாத சிவப் பழமாக இருந்தவன் அவன் தோற்றத்திலும் சிவன் மாதிரி அப்படி ஒரு தேஜஸ் அவன் அப்பாவே ஒருபெரிய சைவப் பழம் அதில் ஒளி ஊற்றாக வந்த களை அவனிடம் கொஞ்சம் மிகுதியாகவே தெரிவது போல நிலை குலையாத ஆத்ம அனுபூதி கைவரப் பெற்ற அவன் சுமக்க நேர்ந்த அந்த வைரக் கிரீடத்தின் ஒளி துலங்கவே பிறக்க நேர்ந்த தவத்துடன் சாயிபக்தையான காயத்திரி அவனை மணம் செய்து கொண்டு அவனின் காலடிக்கு வந்து சேர்ந்தாள்

ஊரிலே அவர்கள்: கல்யாணம் நடந்த மறுநாள் மாலை,அவன் வீடே பெரிய பஜனை மண்டபமாகக் களை கட்டி நின்றது. காயத்திரியைச் சுற்றி அவள் உறவுக் கூட்டம் சூழ்ந்திருக்க மயக்கும் குரலில் ஸ்ருதி லயம் பிசகாமல் உரத்த குரலெடுத்து இனிமையாக அவள் பஜனை பாடக் கூடவே மனம் ஒன்றிய பாவத்துடன் அவனும் பாடியது காலத்தை வென்ற ஒரு சிரஞ்சீவி நிகழ்ச்சி. இப்படிக் காலத்தை வென்று நின்ற கடவுள் தரிசனமாய் அவர்கள் இருந்தது வெறும் கனவாகவே போய் விடுமென்று யார் கண்டார்கள்?

அவர்களுக்குத் திருமணமாகி பரஸ்பரம் மனம் ஒன்றுபட்டு இறை தரிசனமே கண்டு பணத்தினால் வரும் மேலோட்டமான வெற்றிகளையெல்லாம் புறம் தள்ளி மறந்து விட்டுப் பக்தி மார்க்கம் தழைக்க அவர்கள் வாழ்க்கைப் பயணம் தொடரும் வேளை ஒரு நாள் சிவா வேலை விட்டு வீடு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக அவன் பேச்சில் ஒரு புதிய குழப்பம் தெரிந்தது. இது வரை அவன் ஒரு பேக்கரியில் தான் வேலை செய்து கொண்டிருந்தான். கை நிறைய நல்ல சம்பளம் கிடைத்தாலும் ஓர் அடிமை மாதிரிக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அவனுக்குச் சின்ன வயதிலிருந்தே பொறுப்பு அதிகம். கடுமையாக உழைத்துச் சகோதரிகளைக் கறையேற்றியபோதே வாழ்க்கை மீது பற்று விட்டுப் போன மனோ நிலைக்கு அவன் தள்ளப்பட்டிருந்தான்.. பக்தி ஒன்றே அதற்குப் பரிகாரம் என்ற நம்பிக்கையின் தொடர்ச்சியே அவனுடைய இந்தச் சைவ நெறி பேணுகின்ற இறை வாழ்க்கை. தற்போது அதற்கும் இடையூறு வந்த மாதிரிப் பழைய களையெல்லாம் போய் புதிய நடத்தைக் கோளாறு கண்ட முற்றிலும் வித்தியாசமாகப் பேசத் தெரிந்த, விபரீத சிந்தனையுடன் அவன் வந்து சேர்ந்திருப்பதை ஒரு விபத்தாகவே காயத்திரி மனம் குழம்பி எதிர் கொள்ள நேர்ந்தது

இதுவரை காலமும் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடிய சிவனையே வாய் கூசாமல் அவதூறு பேசித் தூற்றுமளவுக்கு அவனுக்கு என்ன நேர்ந்து விட்டது? சுவரில் மாலையும் கழுத்துமாகத் தொங்கிய சிவன் படம் கண்ணில் உறுத்த, அதைத் தூக்கி மூலையிலே கோபமாக வீசி எறிந்து விட்டுச் சைவத்தையே அடியோடு அழித்து ஒழிக்கும் ஆவேசத்துடன் அவன் உரத்த குரலெடுத்துச் சொன்னான்

“கண்டறியாத சிவத்துவம். அந்த வார்த்தையே உன்ரை வாயிலை இனி வரப்படாது, மீறிச் சொன்னியோ உன்ரை நாக்கை அறுத்துப் போடுவன்”

தன்னை மறந்து அன்பு விட்டுப் போய் அவன் சொன்னதைக் கேட்டவாறே காயத்திரி ஒன்றும் பேசத்தோன்றாது உறைந்து போய் நின்று கொண்டிருப்பது உயிர் ஒழிந்து போன ஒரு நிழல் காட்சியாய் அவன் கண்களை மறைத்தது

அந்த ஜடம் வெறித்த தனிமையில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு மீண்டு வந்த சோகம் தாளாமல் அவள் அழுகை குமுறி பெரும் தர்மாவேசத்தோடு அவனைக் கேட்டாள்

“என்ன இது புது அவதாரம்?எந்தக் கடவுளுக்காக? அப்ப சிவனை இனிக் கும்பிட மாட்டியளே?

‘ஏசு தான் இனி என்ரை கடவுள். உந்தச் சாந்தான்களைக் கும்பிட்டால் நீங்கள் நரகத்துக்குத் தான் போவியள்”

அவளுக்கு அதைக் கேட்கப் பெரும் திடுக்கீடாய் இருந்தது. இந்துக் கடவுள் கொள்கைகளுக்கு மறுப்பாக அவனை இவ்வாறு பேசும்படி அவனுக்கு ஏதோ பெரிய மூளைச் சலவையே நடந்திருப்பதாக அவள் பெரும் மனக் கவலையுடன் நினைவு கூர்ந்தாள். சொந்த மதத்தையே தூற்றுமளவுக்கு பணத்தைக் காட்டி அவனை விலைக்கு வாங்கி விட்ட அத்தகைய மத வியாபாரிகளின் மாய வலைகளில் விழுந்து சோரம் போய் விட்ட தனித்துவமான இது வரை அவன் கட்டிக் காத்து வந்த இந்து மதத்தின் உயிர் அடையாளமான களங்கமற்ற ஆன்மீக எழுச்சி கொண்ட கோபுரமே சரிந்து வீழ்ந்து விட்ட வெறுமை நெஞ்சில் கனக்க, தர்மாவேசம் கொண்ட சினத்தோடு அவள் அவனைக் கேட்டாள்

“இதுக்குத்தானா இவ்வளவு நாளும் நீங்கள் தேவாரம் படித்தது திருநீறு பூசியதெல்லாம்”

“போதும் நிறுத்து சொர்க்கத்துக்கு வழி தெரியாமல் அப்ப அதெல்லாம் நரகத்துக்குப் போகிற வழி அது என்று தெரியாமல் இருந்திட்டன் நீயும் இனித் திருநீறு பூசக் கூடாது தேவாரம் படிகிக்றதையும் விட்டிடு. அப்ப தான் உனக்குச் சொர்க்க வாசல் திறக்கும் நான் இனி ஓர் இறை தூதன் இறை ஊழியம் செய்யவே களத்தில் இறங்கியாச்சு யேசு கொள்கை பரப்புவதே இனி எனக்கு நாளாந்த வேலை “

ஓ அந்தளவுக்குப் திரிந்து போய் விட்டதா அவன் புத்தி வெளிச்சமெல்லாம் கை நிறையப் பணம் புரளும் போது புத்தியையென்ன உயிரையே விற்க முடியும்.. அப்படி உயிரையே விற்கத் துணிந்த அவன் முன் தான் வேதமாக எதைச் சொன்னாலும் எடுபடாதென்பது காலம் கடந்த ஞானமாகவே அவளை உயிரோடு வைத்துக் கொளுத்துவது போல இப்போது அவள் நிலைமை ஆனானப்பட்ட சாயி பக்தையான அவளுக்கே இந்தக் கதியென்றால் பக்தி மார்க்கமேயறியாத சாதாரண மனிதர்கள், காசையே குறியாக வைத்து வெள்ளை மண்ணில் வந்து விழும் பிள்ளைகள், இவன் கண்ணில் பட்டுத் துரும்பாகவே மாறினாலும் பற்றியெரியப் போகிற இந்த தீயை அணைக்க முடியாமல் போன கையறு நிலை தான் எனக்கும்” என்று அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாத அந்த உயிர் வேதம் சரிந்து போன மன வருத்தப் படு குழிக்குள் இப்போது அவள் மட்டும் தான்/. அவனுக்கென்ன கைநிறையக் காசு புரளப்போகிற நிலைமையால், உலகையே விலைக்கு வாங்கி விட்ட மிகப் பெருமிதமான வெற்றிக் களை ஒன்று மட்டும் தான் இப்போது அவன் முகத்தில்… ஓர் இறை தூதனுக்கு அது போதுமே

அதன் பிறகு முற்றிலும் மதம் மாறிய ஓர் இறை தூதனாய் அவன் தன் சொந்த ஊரான ஏழாலை மண்ணில் முதல் தடவையாக வந்து கால் தடம் பதித்த போது ஞானிகளின் திருவடிகள் பட்டதால் புனிதம் பெற்றுத் தெய்வீகக் களை கொண்டு மிளிரும் அதன் சுவடுகளே கண்டறியமுடியாமல் போன ஒரு வெறும் மனிதனே அப்போது அவன்

மனைவியை அழைத்து வராமல் அவன் தனியாகவே வந்திருந்தான். அதிலும் ஓர் உள் நோக்கம் இருந்தது.. அங்கு நிகழப் போகும் தன்னுடைய மதத் தலையீடுகளுக்கு அவள் ஒரு ஒரு தடைக் கல்லாக இருந்து விடக் கூடாதே என்ற தறி கெட்ட சிந்தனைப் போக்கினால் தான், அவளை அவன் அழைத்து வரவில்லை. இதற்கு முதலில் அவன் இலக்கு வைத்து வீழ்த்தியது தன்னைக் கருவில் சுமந்த அம்மாவைத் தான்.. அவளைச் சுற்றியிருந்த பிறவிப் பெருமையான தெய்வீகக் களையே அவன் வரவால் ஒரு நொடியில் மாறிப் போய் விட்ட விபரீத சூழ் நிலைக்கு முகம் கொடுக்க முடியாமல் அம்மா எரிந்து கருகியது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.. தன் புருஷன் வாழ்ந்து காட்டிய வழிக்குப் போக முடியாமல் அவன் எடுத்த நின்ற விசுவரூபத்துக்கு முன்னால் எல்லாமே தவிடுபொடியாகிப் போயின

தன் தலை மேல் விழுந்த இந்தச் சாபத்தை மத வெறி சார்பான சரிவுகளைச் சரி செய்து கொள்ளுமளவுக்கு ஆத்மபலம் கொண்ட விழிபுணர்வே அடியோடு வரண்டொழிந்த நிலையில், அவனுக்காக வேடம் கட்டி ஆடுவததைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு. உண்மையில் அது அவளின் இயல்பான முகமல்ல. திருநீறில்லாத நெற்றியோடு அவளைப் பார்க்கும் போது மூதேவிக் களை தான் ஞாபகத்துக்கு வந்தது

இப்படிப் பெற்ற தாயையே தோலுரித்துப் போட்டவன் இனி எதற்கும் தயார்தான். உலகத்தைத் தன் காலடிக்குக் கொண்டு வர அவன் தன் தாயையே விற்கவும் துணியலாம். வெறும் காசுக்காக தான் கொண்ட மதத்தையே விற்கத் துணிந்தவனுகுத் தாய் எந்த மூலைக்கு?

காசோடு எல்லாமே போன மாதிரித்தான். அவன் இப்படி உயிரை விற்றுப் பிழைப்பு நடத்தப் போயும் போயும் கடைசியில் உயிருக்கு மேலான மதம் தானா கிடைத்தது?அறிவு சரிந்த அவனின் இந்த மயக்கத்தைச் சரி செய்ய இனி ஒரு கடவுள் தான் பிறக்க வேண்டும் சொர்க்கத்துக்கு வழி காட்ட அவன் தேவையில்லை சொர்க்கமும் நரகமும் அவன் ஒருவனுக்குத்தான் மனிதனைப் பீடித்த வாழ்வின் தளைகள் அழிந்து சரியான ஒரு குருவின் வழிகாட்டலில் முக்தி நிலை கை கூடி வரும் போது சொர்க்க நரகமென்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை இது அவன் அறிவுக்கு எட்டாமல் போய் பணத்தைக் கண்டு புத்தி மயங்கி நிற்கும் அவனை ஓர் இறை தூதன் என்று சொன்னால் யார் தான் நம்புவர்.

உள்ளார்ந்த இறைவழிபாட்டின் புனிதமான பெருமைகளையே கறை குடிக்க வைத்துக் கொச்சைபடுத்திக் காட்டுகிற மாதிரித்தான் அவனுக்கு அந்த வேஷம் இது. அவன் பேச்சில் எடுபட்டு மயங்கும் கூட்டத்திற்கான ஓர் ஆன்மீகச் செய்தியாக எங்கும் முழங்கட்டும். 

தொடர்புடைய சிறுகதைகள்
அவள் தன் பிறந்த வீட்டில் அப்பாவினுடைய கறைகள் தின்று புரையோடிப் போகாத புனிதம் மிக்க காலடி நிழலின் கீழ், ஓர் ஒளிக் கிரீடம் தரித்த வானத்துத் தேவதை போல் என்றோ ஒரு யுகத்திற்கு முன்னால் வாழ்ந்து சிறந்து சந்தோஷக் களை கட்டி ...
மேலும் கதையை படிக்க...
கல் என்றல்ல கருங்கல் மனிதன் என்று ஆரணியின் ஆழ் மனதில் உண்மை தெரிந்த பெரிய மனிதர்கள் பலராலும் விதையாகத் தூவப்பட்டு அது விருட்சமாக நிலை கொண்டு வளர்ந்த நிலையிலேயே யாழ்ப்பாண மண்ணில் புகை விட்டு எரிந்த சண்டை நெருப்பினால் இடம் பெயர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
மனோகரி கண் முன்னால் காட்சி கொண்டு நிகழ இருக்கிற தங்களின் கல்யாண எழுத்தை எதிபார்த்து, மூடிக் கிடந்த அறைக்குள்ளே மங்கலான ஒளிகீற்றுகள் நடுவே ஒரு நித்திய தரிசன தேவதை போலச் சந்தோஷம் குதூகலித்து வெகு நேரமாகத் தன்னை மறந்து அமர்ந்திருந்தாள். வெளியே ...
மேலும் கதையை படிக்க...
திலகவதி முதன் முதலாக அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரிக்குப் படிக்க வந்தது ஒரு மாறுபட்ட புது அனுபவமாக இருந்தது மகளிருக்கான கல்லூரி அது ஆண் வாடையே கிடையாது பழகிப் பார்க்கும் முகங்களெல்லாம் பெண் முகங்கள் தாம் அவர்களோடு புதிதாய் அறிமுகமாக வேண்டிய ...
மேலும் கதையை படிக்க...
எந்தக் காலத்திலும் டைரி வைத்துக் குறிப்பு எழுதும் பழக்கம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு முக்கிய நடைமுறை ஒழுக்கம் என்று நம்புகிறவனல்ல நான் இதை விட வாழ்க்கையில் தவறாது பின்பற்ற வேண்டிய மனோதர்ம ஒழுக்கங்களையே பெரிதாக நம்புகின்ற என் கண் முன்னால் ...
மேலும் கதையை படிக்க...
நல்லதோர் வீணை செய்தே
கல்லுக்குள் ஈரம்
வேதம் என்ன சொல்கிறது?
ஒரு தேவதையின் சரிந்த கிரீடம்
அப்பாவின் டைரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW