அழகு

 

வர்ஷா நிறம் கருப்புதான் என்றாலும் அழகுச் சிலைதான். அது அவளுக்கே தெரியாது ஏனெனில் சிறு வயதிலிருந்தே அவளின் நிறத்தைக் கொண்டு அவளுக்குள்ளேயே நாம் அழகில்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டாள். அதனால் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதங்கள் ஆகியும் யாருடனும் சரியாக பேசுவதில்லை, பழகவுமில்லை. ஆனால் படிப்பில் அவள்தான் முதல் இடம்.

கல்லூரிக்கு நேரமானது வேகமாக சென்றுக் கொண்டிருந்தாள். இவள் வருவதைக் கண்ட சக வகுப்புத் தோழி மோனி இவளை அழைத்தாள்.

மோனிக்கு வர்ஷாவை மிகவும் பிடிக்கும் அதனால் அவளே வலிய சென்று பேசினால் கூட வர்ஷா ஒரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதில்லை. அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்று அவளிடம் கேட்க வேண்டுமென்று பேச அழைத்தாள்.

மோனி, என்னை எதற்கு அழைத்தாய்?

நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். மதியம் என்னுடன் வருகிறாயா என்றாள்.

வர்ஷா அவளையே பார்த்துவிட்டு சரி என்றாள். இவள் என்னுடன் என்ன பேச போகிறாள் என்று யோசித்துக் கொண்டே இருவரும் வகுப்பிற்குச் சென்றனர்.

மதியம் சாப்பிட்டு முடித்த பின் இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தனர்.

வர்ஷா இந்த கண்கள் இரண்டும் எப்படி இருக்கிறது என்று சொல்லு என்று ஒரு புகைப்படத்தைக் காட்டி கேட்டாள்.

மானின் கண்கள் போல் எவ்வளவு அழகாக இருக்கிறது. பார்ப்பவர்களை மீண்டும் பார்க்கச் சொல்வது போல் இருக்கிறது என்றாள். எதற்கு கேட்கிறே மோனி?

சொல்கிறேன் இது யாருடைய கண்கள் என்று சொல்லு.

உன்னுடைய கண்கள் போலில்லை. ஆனால் யாருடையது என்று தெரியவில்லையே.

உன்னுடைய கண்கள்தான் வர்ஷா. உன்னுடைய கண்களை உனக்கே தெரியவில்லை. நீ தினமும் கண்ணாடியில் உன் முகத்தை பார்க்கிறாய்தானே?

வர்ஷாவினால் நம்ப முடியவில்லை. என்னுடைய கண்களா இது என்று மோனியையே பார்த்தாள் இவள் எப்போது என்னை புகைப்படம் எடுத்தாள்.

மோனியே பேசினாள் இரண்டு நாட்களுக்கு முன் உன் பையிலிருந்து கணக்கு நோட் எடுத்துச் சென்றேன் இல்லையா அப்போது தவறுதாலாக உன் டைரியையும் எடுத்துச் சென்றுவிட்டேன். அதில் நீ எழுதியிருந்ததை எல்லாம் படித்தேன். உனக்குள் ஏன் இப்படி ஒரு எண்ணம் உன் மீது உனக்கே நம்பிக்கையில்லையா.

அழகு என்றால் என்ன என்று நினைத்தாய்? இப்பொழுது நீயேதான் உன் கண்களைப் பற்றி கூறினாய். கடவுளால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொரும் ஒவ்வொருவிதத்தில் அழகுதான் வர்ஷா. நான் நல்ல நிறம் என்பதால் அழகு என்றுமில்லை, நீ நிறம் குறைவு என்பதால் அழகில்லை என்றுமில்லை.

நாம் பிறந்த போது இருந்த அதே அழகுடனா இப்போது இருக்கிறோம். நமக்கு இருபது வயது இன்னும் முப்பது வருடங்கள் கழித்து நாம் இதே அழகுடனா இருக்கப் போகிறோம். கொஞ்சம் யோசித்துப் பார். இன்னும் பல வருடங்கள் கழித்து ஆறடி மண்ணுக்குள் எலும்புக் கூடாக இருப்போம். நமக்கு எதுவும் நிரந்தமில்லை எல்லாம் ஒரு நாள் நம்மைவிட்டுப் போய்விடும் அழிந்துவிடும்.

அப்படிப்பட்ட ஒன்றிற்காக நாம் இருக்கும் நாட்களை ஏன் வீணடிக்க வேண்டும் மகிழ்ச்சியாக இருக்கலாமே. உனது கண்கள் எவ்வளவு அழகு என்று நீயே சொன்னாய் அந்த கண்களில் மகிழ்ச்சி இருந்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கும்.

மோனி பேசுவதையே கேட்ட வர்ஷா ஒன்றும் சொல்லாமல் யோசித்துக் கொண்டே சென்றாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மோனி கண்டிப்பாக நாளை ஒரு மாற்றத்துடன் வருவாள் என்று நினைத்து கொண்டாள்.

மோனி நினைத்தது போலவே அழகுச் சிலையாகவே மாறி வந்தாள். அவள் கண்களில் இருந்த மகிழ்ச்சி அவளை இன்னும் அழகாகவே காட்டியது. அனைவரும் இவளின் மாற்றம் கண்டு இவளையே பார்த்தனர்.

உன் மகிழ்வான மானின் கண்களால் இன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டாயே வர்ஷா.

அந்தக் கலையை சொல்லிக் கொடுத்ததும் நீதானே ரொம்ப நன்றி மோனி.

உனக்கு பேசக் கூட தெரியுமா என்றாள் கிண்டலாக இருவரும் சிரித்துக் கொண்டே கல்லூரிக்குள் சென்றனர். 

தொடர்புடைய சிறுகதைகள்
மருதண்ணே என்ன பலத்த யோசனையில் இருக்கீங்க நான் கூப்பிடுவது உங்கள் காதில் விழவில்லையா? ஒண்ணுமில்லை வேலு நம்ம சுரேஷ் மனைவி இரண்டாயிரம் ரூபாய் கடனாக வாங்கினாள், சம்பளம் வந்ததும் கொடுத்துவிடுகிறேன் என்றாள். சரி மருதண்ணே இப்படி யோசிக்கிற அளவுக்கு இப்போ என்ன ஆச்சு உங்களுக்கு? அதில்லை ...
மேலும் கதையை படிக்க...
அமீர் மஹால் கரவொலியின் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தர்க்கும் அவன் மனைவிக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதில் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். அதைக் கண்ட அவன் நண்பர் தீபக் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் ஏன் இந்த கண்ணீர் ...
மேலும் கதையை படிக்க...
கடம்பன், “கோயிலுக்குத் தங்கைகள் இருவரையும் கூட்டிச் செல்கிறேன்” என்று தன் தாய் வள்ளியிடம் கூறினான். “சரி பத்திரமாக கூட்டிட்டு போ சின்ன பிள்ளைகள் கவனமா இரு, நீ வர எவ்வளவு நேரமாகும்” என்றாள் வள்ளி. “அம்மா போக ஒரு மணி நேரம், வர ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ஆர்தி அலுவலகத்தில் வேலையில் கவனமாக இருந்தாள். வேலை அதிகம் என்பதால் சோர்வாக இருந்தது போலிருந்தது ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே..... கிஷோர் காபி குடித்து வரலாமா கயல் என்று கேட்டான். அவனுடன் செல்ல பிடிக்கவில்லை என்றாலும் ...
மேலும் கதையை படிக்க...
கடன்
வெற்றி
காணவில்லை!
இணையதளக் காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)