யாத்திரை – ஒரு பக்க கதை

 

இன்னிக்கு நேத்து பழக்கமா…இருபது வருஷ நட்பு, ரெண்டு பேரும் சேர்ந்து எதிரெதிர்ல வீடு கட்டி அண்ணன், தம்பி போல இருந்தோம்.

நம்ம பொண்ணு கல்யாணத்தை அவன் வீட்டு கல்யாணம் மாதிரி முன்னே நின்னு நடத்துவான்னு ஆசைப்பட்டேன்.

ஆனா கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி குடும்பத்தோட எங்கேயோ போயிட்டான். எல்லா நம்பரும் ஸ்விட்ச் ஆஃப். கொஞ்ச நாளாவே அவன் மூஞ்சியும் சரியில்லை!

அவன் பொண்ணுங்களுக்கு கல்யாணம் கூடி வராதப்போ நம்ம பொண்ணுக்கு அமைஞ்சுடுச்சேன்னு பொறாமை போல” – கடுமையாகப் புலம்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

கல்யாணமெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்து எதிர் வீட்டில் விளக்கு எரிந்தது. விறு விறுவென்று போனார் கிருஷ்ணன். அங்கு மொட்டையடித்து உட்கார்ந்திருந்தார் கோபால்,

கல்யாண சமயத்துல அப்படியென்னப்பா தலயாத்திரை வேண்டியிருக்கு? என இரைந்தார் கிருஷ்ணன்.

தல யாத்திரை இல்லப்பா, இறுதி யாத்திரை!

அப்பாவுக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக். கல்யாண வேலையில பிஸியா இருந்த உன்கிட்ட சொல்லலை. ரெண்டு நாள் கூட தாங்காதுன்னு சொல்லிட்டாங்க கல்யாணம் நடக்கும்போது எதிர் வீட்ல இப்படின்னா, யாராவது அபசகுனம்னு சொல்லிடக் கூடாதுன்னுதான் ராத்தியோட ராத்திரியா அப்பாவையும் கூட்டிக்கிட்டு கிராமத்துக் போயிட்டோம்!’’ என்ற நண்பன் கோபாலை ஆரத் தழுவி, கதறத் தொடங்கினார் கிருஷ்ணன்

- தேன்மொழிஅண்ணதுரை (ஏப்ரல் 5, 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
ரொம்ப நாள் கழிச்சு நண்பன் ஜோசப் கிட்ட பேசினதுல மனசுக்குள்ள ஒரு குதூகலம். பழைய நினைவுகளோடு மொட்டை மாடியின் உச்சத்தில் ஏறி மல்லாக்கு படுத்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் முழுவதும்இருட்டாத அந்தி மாலைப் பொழுது. கூட்டம் கூட்டமாக பறவைகள் எங்கிருந்தோ அவசரமாக ...
மேலும் கதையை படிக்க...
ஒத்திகை
பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண்ணென்றால் ஆயிரம் வெள்ளி வாங்குவோம், குறைப்பதற்கில்லை என்று மிகவும் கறாராகச் சொல்லியிருந்தார் தரகர் நேற்றிரவு. "நல்ல வேளை சார் நீங்க இன்னைக்கே ஃபோன் பண்ணீங்க, நாளைக்கி ராத்திரியாச்சும் சொன்னாதான் என்னால ஏற்பாடு செய்யவே முடியும்.' வேறு பெண்ணென்றால் பரவாயில்லையா ...
மேலும் கதையை படிக்க...
மாமர நிழலில் அமர்ந்திருந்த பெருமாளின் அருகில் வந்தனர் அவரின் மகன்கள் இருவரும். “அப்பா! உங்க நிலத்தை விற்று என்னையும், தம்பியையும் படிக்க வச்சீங்க… நாங்க இப்போ நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறோம்… எங்களுக்கு குறைன்னு பார்த்தா வாடகை வீடுதான். இந்த நிலத்தை ...
மேலும் கதையை படிக்க...
பஸ்ஸை விட்டிறங்கியதும் சுற்றிலும் கும்மென்றிருந்த இருளும் அதனுள் இருந்துவந்த இரவுப் பூச்சிகளின் இரைச்சலும் என்னைக் கலங்கடித்தன. இறங்கிய இடத்திலிருந்தே ஒரு தடவை பாதையைப் பார்வையிட்டேன். என்னை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்ஸின் பின்புறச் சிவப்பு சிக்னல் லைட்டின் ஒளி புள்ளியாய் மறைந்து கொண்டிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
மாலை நேரம். இருள் பரவத் தொடங்கியது. அந்த பூங்காவில் ஒரு மூலைப் பெஞ்சில் மோகன் மேல் சாய்ந்து கொண்டு சாருமதி கேட்டாள். “ என்னால் இனியும் வீட்டில் சமாளிக்க முடியாதுங்க!....நாம இந்த ஊரை விட்டே எங்காவது போயிடலாமுங்க!....” “ஏண்டி!...அர்த்தமில்லாம பேசறே?...யாரிடமும் சொல்லாம நாம ஊரை ...
மேலும் கதையை படிக்க...
சாமியாடி
ஒத்திகை
மாமரம் – ஒரு பக்க கதை
வாசனை
ஓடிப் போய் விடலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)