பழிச்சொல் – ஒரு பக்க கதை

 

கணேஷ் தனது அப்பா இறந்த ஏழாவது நாள் விசேஷத்திற்காக பெங்களூரிலிருந்து திசையன்விளை வந்திருந்தான். தங்கை கனியின் சிறிய வீட்டில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கணேஷ் தனது சித்தப்பா மாரிமுத்துவைப் பார்த்து, “தங்கையின் வீடு சிறியது. பக்கத்தில் உள்ள என் வீடு பெரியதாகவும், வீட்டை ஒட்டி காலிமனை வேறு இருப்பதால் அதில் ஷாமியாணா போட்டு சாப்பாடு வைக்க வசதியாக இருக்கும்’ என்று யோசனை தெரிவித்தான்.

“நீ சொல்றது சரிதான். ஆனால், வயசான உன் அப்பாவை நீ வந்து போய் பார்க்கல. சரியா கவனிக்கல.

“அப்பா உயிரோடு இருக்கும்போது பார்க்காத பையன், அவர் இறந்தபிறகு தடபுடலா சாப்பாடு போட வந்துட்டான்’னு ஊர் உன்னைப் பழிக்கும்’ என்றார் சித்தப்பா மாரிமுத்து.

குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்தான் கணேஷ்.

- எஸ். முகம்மது யூசுப் (ஜூன் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
ராயல் டாக்கீஸ்
காசிதான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தான். தம்பி வரப்போவது பற்றி அவன் வீட்டுக்கே அரசல்புரசலாகத்தான் தெரியும். ஆனால், காசிக்கு மட்டும்தான் உறுதியாக இன்ன தேதியில், இந்த ரயிலில் வருகிறேன் என்பதை தம்பி சொல்லியிருந்தான். தம்பியின் உண்மையான பெயரான 'கணபதி சுப்பிரமணியம்’ என்பது, அவனது ...
மேலும் கதையை படிக்க...
நான் அந்தக் கூட்டத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகத்தான் போனேன். லீவைஸ் கால் சராயும் பழுப்பு நிற டி-ஷர்ட்டுமாக நான் மட்டும் வித்தியாசமாகத் தென்பட்டேன். எல்லோரும் மயில் கண் வேஷ்டியும் அங்கவஸ்திரமும் அணிந்து சிவப் பழமாகக் காட்சியளித்தார்கள். ""வாடா அம்பி, ஏன் லேட்டு?'' என்றார் ...
மேலும் கதையை படிக்க...
அண்ணாந்து பார்க்கும் அரண்மனையைப் போன்ற மாளிகை. அதில் வசிப்பதென்னவோ மூன்று பேர்தான். மூன்று பேரில் முக்கியமானவர்தான் மஞ்சுளா.அந்த மாளிகையைக் கட்டிக்காக்கும் மகாராணி. அந்த மஞ்சுளாதான், வீட்டின் பக்கவாட்டில் காலியாக உள்ள இடத்தில் மரங்களை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர். அவள் வளர்த்து வரும் மரங்களில் கொய்ய ...
மேலும் கதையை படிக்க...
“மாயா!” டி.வியில் தொடர் நாடகம் ஆரம்பிக்கும் நேரம். அவசரமாக, பழைய சோற்றை வாயில் அடைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த மாயா காதில் விழாததுபோல இருந்தாள். “ஏ மாயா! கூப்பிட்டா, ஒடனே பதில் கொரல் குடுக்கறதில்ல? செத்தா தொலைஞ்சுட்டே?” அந்த வேளையில் தந்தையின் குரலை ...
மேலும் கதையை படிக்க...
அண்டங்காக்கை
என் தந்தை அண்டங்காக்கையைப் போலிருந்தார். நான் சிறுவனாக இருந்தபோது இப்படி எனக்குத் தோன்றியது. பானை வயிறு, தோலாடைகள், குட்டையான கறுப்பு நிற பாத அணிகளோடு ஒரு பாறையின் மீது நெப்போலியன் நின்று கொண்டிருக்கும் படம் ஒன்றை நெவாவில் கண்டேன். அதைப் பார்த்ததுமே ...
மேலும் கதையை படிக்க...
ராயல் டாக்கீஸ்
தேர்
கொய்யாக்கனி!
நல்ல பிள்ளை எப்பவும்
அண்டங்காக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)