பயம் – ஒரு பக்க கதை

 

“வடக்குத் தெருவுல பணம் வாங்கிய ஒருத்தன், பல மாசமா வட்டியும் தரல. அசலும் தலர….உடனே விசாரி!”

புலிப்பாண்டிக்கு தகவல் வந்தது. ஆஜானுபாகுவான உடல்கட்டு, முறுக்கு மீசை. முகத்தில் வெட்டுத் தழும்புகள்..

இப்பேர்ப்பட்டவன் முன்னால் நின்றால் எப்படி இருக்கும்? கைகால் வெட வெடத்து, மூச்சு வாங்கியது. அடுத்த பத்தாவது நிமிஷமே
பணத்தைக் கொடுத்துவிட்டான்.

எல்லோர்க்குமே புலிப்பாண்டி என்றால் பயம்தான்.

அன்று புலிப்பாண்டியின் மகள், தன் குழந்தையை அவனிடத்தில் விட்டுவிட்டுப் போனாள். கொஞ்ச நேரத்தில் குழந்தை அழ ஆரம்பித்தது.

”டேய் மகேஷ்..” பக்கத்து வீட்டுப் பையனைக் கூப்பிட்டான் புலிப்பாண்டி.

”என்ன தாத்தா, பய அழுவறானா?” என்றவன், அதைப் பயமுறுத்தும் விதமாக ஏதோ சொன்னான்….

குழந்தை கப்சிப் ஆனது.

”இனிமே அழுதா என்னைக் கூப்பிடுங்க. வந்து தொலைச்சுப்புடுறேன்” என மிரட்டல் விடுத்துப் போனான் அந்தப் பொடியன்.

- கணபதிபுரம் வி.அங்கப்பன் (29-7-2007) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒட்டகச்சிவிங்கியின் உதை!
வழக்கத்துக்கு மாறாக, சீக்கிரம், கணவன் வீடு திரும்பியிருந்தது கண்டு, நிர்மலாவுக்கு வியப்பு. ""என்னாச்சுங்க,'' என்று கேட்டபடி, அவனிடம் விரைந்தாள். கட்டிக் கொடுத்தனுப்பிய சாப்பாட்டு கேரியர், பிரிக்கப்படாமலேயே திரும்பி வந்தது; கணவன் ஆனந்த் முகம், வாடி இருந்தது. உடம்புக்குத்தான் வந்து விட்டதோ என்று நினைத்தாள்... ""வரும் வழியில் ...
மேலும் கதையை படிக்க...
தெருவில் “ஊ…ஊ…ஊ….ஊ…..லொள்..லொள்..லொள்…லொள்….ஊ..ஊ..ஊ..ஊ.. ” இரவின் அமைதியைக் கிழித்துத் துவம்சம் பண்ணிக் கொண்டிருந்த தெருநாய்களின் ஊளையிடும் சத்தம் கேட்டு ஏற்கனவே பயந்து கொண்டிருந்த ஜெயந்திக்கு வயிற்றைப் பிசைந்து..தொண்டை வரண்டது..கடிகார முள் சத்தம் வேற “டிக் டிக் டிக்..”..என்று இதயத் துடிப்போடு சேர்த்து அதிவேகமாக ...
மேலும் கதையை படிக்க...
வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை என்று சுந்தர்ராஜன் யோசித்தான்.1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகாின் படமென்று முதல் நாளே மணிக்கணக்காய் நின்று கவுண்டர் அருகே சென்றதும் டிக்கட் இல்லை என்று மூடி விட, அழுக்காய் கைலி கட்டி இருந்த ...
மேலும் கதையை படிக்க...
சூலூர் சுகுமாரனுக்கு சினிமா என்றால் உயிர்! அவனுக்கு நிறைய சினிமாச் செய்திகள் தெரியும் பிலிம் நியூஸ் ஆனந்தனைப் போல! எதைப் பற்றி பேசினாலும், அதை சினிமாவோடு தொடர்பு படுத்தித் தான் பேசுவான். நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, டைரக்டர் மணிவண்ணன் எல்லோருமே இந்த சூலூர் ...
மேலும் கதையை படிக்க...
சுமதி தெரிந்தவர்கள் எல்லோருக்கும் போன் எடுத்து 'எங்கேயும் தெரிஞ்ச இடத்தில வீடு வடகைக்கு இருக்கிறதா' என விசாரித்துக் கொண்டிருந்தாள். தாய் வசந்தி அடுப்படியில் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். மகள் வேலைக்கு போகும் முன் சமைத்து முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ...
மேலும் கதையை படிக்க...
ஒட்டகச்சிவிங்கியின் உதை!
எங்க வீட்டு தங்க ஊசிகள்…!
சுதா, ஸ்டாபன், சுந்தர்ராஜன்
சூலூர் சுகுமாரன்
வீடும் வளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)