பசி – ஒரு பக்க கதை

 

வயிறார சாப்பிட்டு இன்றோடு மூன்று நாட்களாகி விட்டது.

பசி மயக்கத்தில் உறங்கிய குழந்தைகளையும், காயம் பட்டு படுத்திருந்த கணவன் மாரியையும் இயலாமையோடு பார்த்தாள் அஞ்சலை.

தொழிலுக்குப் போய் ஒரு வாரமாகி விட்டது. கையில் சல்லிக்காசு இல்லை. குழந்தைகள் பட்டினியில் வாடி அவதிப்பட, இப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என்ற முடிவுடன் எழுந்தாள்.

அடுக்களையில் இருந்த எலி மருந்துடன் வந்து நின்றவளை வெறித்துப் பார்த்தான் மாரி.

அவள் நோக்கம் புரிந்து. அவள் கையிலிருந்த மருந்தை பிடுங்கித் தூக்கிப் போட்டுவிட்டு, தட்டுத் தடுமாறி கயிற்றைத் தேடி எடுத்தான்.

தன் பலம் தாங்குமா என கயிற்றை பரிசோதித்தான். ‘வேண்டாம் எனக் கண்ணீரோடு நெருங்கி கையைப் பிடித்து தடுத்த
அஞ்சலையை விலக்கி விட்டு, கயிற்றைத் தோளில் போட்டுக் கொண்டு எழுந்தான். அஞ்சலையும் பரபரப்புடன் பின் தொடர்ந்தாள்.

சாலையோர மரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்த மாரி, சற்று நேரத்தில் அங்கு ஜன சந்தடி அதிகமாகி விடும் என்ற யோசனையுடன் உடனே வேலையில் இறங்கினான். இறுக்கிக் கட்டிய கயிற்றை இழுத்து சோதித்தபடி அஞ்சலையைப் பார்த்தான்.

வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி,தரையில் துணியை விரித்தவள், கையிலிருந்த மேளத்தை எடுத்து அடிக்க…தடுமாற்றத்துடன் மாரி கயிற்றின் மேல் ஏறி நடந்தான். கூட்டம் சேர ஆரம்பித்தது.

- பா.வெங்கடேஷ் (ஏப்ரல் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
அக்காவின் வீட்டிற்கு வந்திருக்கிறேன். நலம் விசாரிப்புக்கள் முடிந்தவுடன், அக்கா மாமாவைப்பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டாள். இவரு சொன்னா கேட்க மாட்டேங்கறாரு,பக்கத்துல ஒரு "பிளாட்" விலைக்கு வருது வாங்கிப்போடுங்க, அப்படீன்னா மாட்டேங்கறாரு! அக்கா என்னிடம் சொன்னதும் நான் அவளுக்கு ஆதரவாய் பேசுவேன் என ...
மேலும் கதையை படிக்க...
`நீ யாரை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக்க. எனக்கு இருக்கிற வேலையில, ஒனக்கு எங்கே போய் மாப்பிள்ளையைத் தேடறது?’ கவிதாவுக்குப் பதினைந்து வயதானபோதே மங்களம் அப்படிக் கூறியிருந்தாள். `அட, ஜாதகம், மத்த பொருத்தமெல்லாம் பாத்துச் செய்யற கல்யாணமெல்லாம் நல்ல விதமா அமைஞ்சுடுதா, என்ன!’ பத்துப் ...
மேலும் கதையை படிக்க...
வெயில் விளையாடிக் கொண்டிருந்தது... "கல்யாணத்தைக் செஞ்சு பார்.... வீட்டைக் கட்டிப் பார்...." என்று எங்கோ... எப்போதோ யாரோ கூறியது ஞாபகத்தில்... நீர் சொட்டி வியர்க்குள் ஆவியானது... அவன்... பின்னால் மாட்டிய பேக்கோடு தலையில் கவிழ்த்திய கவசத்தோடு... கழுத்து நசநசக்க.... முதுகில்.. சட்டை ஒட்ட... இரு ...
மேலும் கதையை படிக்க...
சின்னு வந்திருக்கிறாள். அவளுக்கு அனுவின் சமையல் என்றால் ரொம்ப இஷ்டம். அனு அவளுக்காக மீன் குழம்பு வைத்திருந்தாள் . காரம் கொஞ்சம் அதிகமாகி விட்டது. ஆனாலும் என்ன? சின்னுவுக்குப் பிடிக்கும் தான். இரண்டு தட்டுகளை கழுவி எடுத்து வந்தாள். சின்னு சாப்பிட ...
மேலும் கதையை படிக்க...
கேசவப் பணிக்கர். அவரைப் பார்க்க வேண்டும். தோளில் மாட்டியிருக்கிற பிளாஸ்க்கின் வார் நழுவி முழங்கைக்கு வராமல் அவ்வப்போது அதை மேல் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நடந்து போக வேண்டும். மாதவனுக்கு இதுதவிர உலகில் வேலையேதும் இல்லை. என்றாலும், உலகம் சுற்றிக் ...
மேலும் கதையை படிக்க...
ஆகாயத்தில் வாழ நினைப்பவர்கள்
ஆபத்தான அழகு
கோடை மழை
நீளும் கனவு
பலகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)