தகுதியானவள் – ஒரு பக்க கதை

 

அந்தக் கம்பெனியிலிருந்து நேர்முகத் தேர்விற்கு வரச் சொல்லி தீபாவுக்கு கடிதம் வந்திருந்தது.

எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. தீபாவுக்கும்அப்படித்தானே இருக்கும்.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி…!’ என்றேன்.

ஆனால் அவள் உம்மென இருந்தாள்.

மிகவும் விரும்பித்தான் விண்ணப்பித்திருந்தாள். அவள் வாழ்வின் லட்சியமே அந்த வேலைதான் ஆனால் கடிதம் வந்ததிலிருந்து அவள்முகம் சோகமாகவே இருந்தது.

என்ன காராணமோ?

இண்டர்வியூவுக்குப் போகும் போதும் அவளிடம் மகழ்ச்சியோ, பூரிப்போ இல்லை. அந்த கம்பெனிக்குச் சென்று மாலை வீடு திரும்பிய பிறகும் துயரத்தோடு இருந்தாள். கண்ணாடி முன் நின்று கண் கலங்கினாள். என்ன காரணமோ?

என்னால் பொறுக்க முடியவில்லை. கேட்டே விட்டேன்.

”என்னடி ஆச்சு? ஏன் இப்படி இருக்கே? இண்டர்வியூவிலே செல்க்ட் ஆகலையா?”

”செலக்ட் ஆயிட்டேம்மா…எனக்குத்தான் அதிக தகுதி இருக்குன்னு பாராட்டுனாங்க…நாளைக்கே வரச்சொல்லிட்டாங்க’ என்று தேம்பினாள்.

”அதுக்கு ஏன்டீ அழறே?”

‘பின்னே…மெகா சீரியல்லே நடிக்கல்லே செலக்ட் ஆகியிருக்கேன்..”

- தஞ்சை தாமு (31-1-11) 

தொடர்புடைய சிறுகதைகள்
விலகிப்போன கடவுள்கள்!
கால் நனைக்க தாமிரபரணி, கை கழுவ பாபநாசம், தலை துவட்ட தென் பொதிகை, கன்னம் வருட நெல்மணிகள் என்று உலகத்தைப் பச்சை வண்ணமாக மட்டுமே உணர்ந்த ஒரு பெண்ணான எனக்கு சென்னை பிடிக்காமல் போனதில் அதிசயம் இல்லை. இங்குள்ள கடவுள்களிடமும் என்னால் இயல்பாக ...
மேலும் கதையை படிக்க...
சுமதிக்கு இருபத்தியாறு வயது. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களில் கணவருடன் மேட்டூர்டாம் மால்கோ காலனி குடியிருப்பில் தனிக் குடித்தனம் வந்துவிட்டாள். புது இடம், எவரையும் தெரியாது...எப்படிக் குடித்தனம் நடத்துவது என்று தவித்துக் கொண்டிருந்தபோது அறிமுகமானவள்தான் பக்கத்துவீட்டு மல்லிகா. மல்லிகாவுக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் அரவம் கேட்டது. முன் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்த தாத்தா வேகமாகப் பின் கட்டுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஸ்ரீமதி அவரைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள். "யாரோல்லாம் வந்திருக்கா தாத்தா" "தெரியும்." "அங்கே வரேளா?" "ம்ஹூம்." "உங்களைப் பார்க்கத்தானே அவா...." "எனக்கு யாரையும் பார்க்கவேணாம். நீயே ...
மேலும் கதையை படிக்க...
தேதி பதினைந்து ஆகியும் தன்னிடம் வேலை பார்க்கும் ராஜாவிற்கு சம்பளம் தராமலிருந்தார் மளிகை கடை முதலாளியான அன்பரசு. இது குறித்து அன்பரசுவின் மனைவியிடம் ராஜா பேச அவள் கணவனிடம் கேட்டாள். ‘ஏங்க ராஜாவுக்கு சம்பளம் தரலை..? ஒரு சின்ன ட்ரீட்மென்ட் தான்! இப்பல்லாம் அவன் நைட் ...
மேலும் கதையை படிக்க...
நிலவின் ஒளியில் கூரைத்தகரங்கள் பளபளத்தன. அவள் தன் உள்ளங்கைகளை ஒருதரம் தடவிப் பார்த்தாள். கரகரப்பாய் காய்த்தபடி கைகள். தன் கைகளால் மண்வெட்டியும் பிக்கானும் பிடித்து அவள் உழைத்த உழைப்பின் அறுவடைதான் இந்தக் தகரங்கள் என நினைத்துப் பெருமைப் படுபவளாய்.. அவள் முகம்.. ...
மேலும் கதையை படிக்க...
விலகிப்போன கடவுள்கள்!
தோழிகள்
இணைப் பறவை
முதலாளி – ஒரு பக்க கதை
புதிய மனுசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)