எம் புருசன்தான்

 

உறங்கிக் கொண்டிருந்த கணவனைச் சுரண்டினாள் கெளri. “ஏங்க..! ஸ்டோr ரூமுக்குள்ளார ஏதோ சத்தம் கேட்குது… திருடனா இருப்பான்னு நெனைக்கறேன்… போய்ப் பாருங்க”

ஏற்கனவே பயந்தாங்கொள்ளியான பிரபு அவள் சுரண்டலில் திடுக்கிட்டு விழித்து. ‘திருடனா… எங்க… எங்க?”பதறினான்.

அபபோது ஸ்டோர் ரூமுக்குள் யாரோ இருவர் நடக்கும் ஓசையும், கிசுகிசுப்பாய்ப் பேசும் சத்தமும் கேட்க, “ஏங்க..கண்டிப்பாத் திருடனுகதாங்க… ரெண்டு பேர் இருப்பானுக போலிருக்கு” என்றவள் கட்டிலுக்கடியில் குனிந்து நீண்ட தொட்டில் கம்பியை எடுத்து அவனிடம் நீட்டி “இந்தாங்க… இதை எடுத்திட்டுப் போயி அவனுகளை நாலு சாத்து சாத்துங்க… ஓடிடுவானுக” என்றாள்.

“அய்யோ… நான் மாட்டேன் சாமி… கத்தி கித்தி வெச்சிருப்பானுக… பொருட்கள் திருட்டுப் போனா சம்பாதிச்சுக்கலாம்… உசுரு போயிட்டா” போர்வையை எடுத்து முக்காடிட்டுக் கொண்டான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு,

“அய்யோ..அம்மா” என்ற அலறல் சத்தம் கேட்க, மெல்ல போர்வையை விலக்கியவன் கௌரி அந்த இரண்டு திருடர்களையும் தொட்டில் கம்பியால் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்க மிரண்டு போனான்.

மறுநாள் காலை பல் துலக்கிக் கொண்டே புழற்கடைப் பக்கம் போன பிரபு அங்கே பக்கத்து வீட்டுப் பெண்ணும் கௌரியும் பேசிக் கொண்டிருக்க அதில் தன் பெயரும் இடம் பெற கூர்ந்து கவனிக்கலானான்.

“தொட்டில் கம்பிய எடுத்து அந்த ரெண்டு திருடனுகளையும் எம்புருஷன் சாத்துன சாத்தில் எனக்கே கண்ல தண்ணி வந்திடுச்சு… அவனுகளா ‘அய்யோ… அம்மா’ன்னு உசுரு போற மாதிரி கத்தறானுக… எங்க இவரு அடிக்கற அடில அவனுக செத்துக்கித்துப் போய்டுவானுகளோன்னு பயந்து நான்தான் தடுத்து அவனுகளைத் தொரத்தி விட்டென்”

விக்கித்துப் போனான் பிரபு. 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு வாரத்திற்கான பூஜை சாமான்களை ஒட்டு மொத்தமாய் வாங்கிக் கொண்டு மார்க்கெட்டை விட்டு வெளியேறினார் பெருமாள் குருக்கள். “வணக்கம் சாமி” “கும்பிடறேன் சாமி” “நமஸ்காரம் குருக்களய்யா” எதிரில் வருபவர்களின் விதவிதமான மரியாதை வெளிப்பாடுகளை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு நடந்தார். பஸ் நிறுத்தத்தை அடைந்து காத்திருந்த போதுதான் அதைக் கவனித்தார். எண்ணை ...
மேலும் கதையை படிக்க...
சர்வீசுக்கு வந்திருந்த யமஹாவை வேலை முடித்து சோதனை ஓட்டம் ஓட்டிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினான் தண்டபாணி. “என்ன முதலாளி யோசிக்கறீங்க?…ஏதாவது வேலை பாக்கியிருக்கா இதுல?” தயக்கமாய்க் கேட்டான் கடைப்பையன். “ம்ம்ம்...ஏதோ வித்தியாசமாத் தெரியுதே?”.. “சொர..சொர” தாடியைத் தேய்த்தபடியே யோசித்தவன் “அது சரி... ஆயில் ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் ராஜசேகரின் ஆணைப்படி அவரது தொழில் எதிரியான ராமரத்னத்தின் சூர்யா கார்டன் பங்களாவிற்குள் பத்துப் பதினைந்து கொடிய விஷப் பாம்புகளை பின்புற வெண்டிலேட்டர் வழியாக உள்ளே தள்ளி விட்டுப் பூனை போல் நடந்து காம்பௌண்ட் சுவற்றைத் தாண்டித் தெருவில் குதித்தான் பாம்பாட்டிக் ...
மேலும் கதையை படிக்க...
அந்த வங்கி மேலாளர் வீட்டு முன்புற ஹாலில் ‘மெத்…மெத.;.’தென்ற சோபாவில் அமர்ந்திருந்த சிவாவுக்கு எரிச்சலாயிருந்தது. ‘ச்சை…இன்னொருத்தர் வீட்டில் வந்து…இப்படிக் காத்துக் கெடக்கறதை விடக் கேவலம் வேற எதுவுமில்லை…ஏன்தான் இந்த அப்பாவுக்கு இதெல்லாம் புரிய மாட்டேன் என்கிறதோ?…’ தனக்குள் அலுத்துக் கொண்டவனுக்கு நேற்று ...
மேலும் கதையை படிக்க...
அறை வாசலில் நிழலாட 'யாரது?" படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா. நடுத்தர வயதுக்காரனொருவன். 'அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?" கேட்டபடி உள்ளே வந்தான். 'ஆமாம் நீ யாரு?" 'நான் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து வர்றேன், கலெக்டர் கோபிநாத் அய்யா அனுப்பிச்சார். போன வாரம் அவர் ...
மேலும் கதையை படிக்க...
தெரு ஓவியன்
கபாலி கடன் வராமலிருக்கு!
பாம்பாட்டி
எல்லாம் மாயை தம்பி
நேரில் கடவுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)