ஆட்டுக்கறி

 

மண்சுவரால் கட்டப்பட்ட கூரைவீடு, மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும், கரும்புத் தோகைகளை கத்தையாக கட்டி அந்த வீட்டின் மேல் வேயப்பட்டிருந்தது. ஓரளவு இந்த கரும்புத் தோகை ஒழுகாமல் மலைக்கொழுந்தையும் ஆரியையும் பாதுகாத்தது.

ஒரு நாள், வேப்பமுத்து பொறக்கும் போது எதையோ பாத்துப்புட்டு திடுக்கிட்டு வாய்க்காலில் விழுந்தவளுக்கு இடுப்பு காலு கையினு எல்லா இடமும் பயங்கர வலி. அன்று இரவே காய்ச்சலும் தொற்றிக்கொண்டது. வயதான ஆரியால் வலிதாங்க முடியவில்லை. இராமன் பூசாரிக்கிட்ட மந்திருச்ச கயிரும் விபூதியும் வாங்கி ஆரி கையில் கட்டிவிட்டு அவள் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு தானும் பூசிக்கொண்டார்.

“ஏம்புள்ள முனுச்சாங் கோயிலுக்கிட்ட பயந்துருக்கியாம். அந்தக் கோயிலுக்கு ஒன்னேகால் பணம் காணிக்கை குடுத்துட்டு திரும்பிப்பாக்காம வரணுமாம். நா போயி செஞ்சுட்டு வந்தர்றேன். கட்டில்லேயே இரு” கட்டிலில் கிடந்த சிகப்புத் துண்டை கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

“பாத்துப்போயா”

ம்… ம்… நீ பத்தரமா இரு நடை போட்டார் மலைக்கொழுந்து.

“ஈசனே! ஏந்தான் இந்தச் சோதனையோ ஏ வயித்துலயும் புள்ளக்குட்டியே கொடுக்கல வயசும் போச்சு. ஒனக்குத் தான் வெளிச்சம். மேல் மூச்சு, கீழ் மூச்சு விட்டவளாய் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.”

முனிச்சாங்கோயிலுக்கு காணிக்கை செலுத்திவிட்டு வரும் போது சின்னான் கூப்பிடுவது தெரிந்தும் கேட்காதது போல் வீடு வந்து சேர்ந்தார், எழுபதைக் கடந்த மலைக்கொழுந்து.

“ஆமாபுள்ள எதும் வேணுமா”

“இல்லய்…யா வயிறு போறது மாறி தோணுது”

தோள்பட்டய புடிச்சிக்கிட்டு மெதுவா நட என்றார் ஒருகையில் வாளியுடன்.

“ஆசுப்பத்திரிக்குப் போகனும்னாலும் கைசெலவுக்கே இல்லயே. வச்சுருந்ததையும் வட்டி கடைக்காரனுக்கு கொடுத்துட்டோம். இருக்குற அரிசி ரெண்டு நாளக்கித்தான் வரும். என்னய்யா பண்றது” என்றவள் “இந்தக் கருவத்தூருக்கிட்டேயே இருக்குறய்யா. கூப்புடும்போது வா”

“தண்ணி வாளிய வச்சுட்டுப் போறேன். மெதுவா காலக்கழுவிடு”

“காலக் கழுவிட்டேன் வாயா”

“இந்தா வர்றேன்” மெதுவாக நடக்க வைத்து வீட்டுக்குள் உட்காரவைத்தார்.

நாளும் பொழுதும் இப்படித்தான் சென்றது. ஆரியின் உடல்நிலை மோசமானது. நடப்பது என்பது கனவாகிப் போனது.

“இங்கேருய்யா… வாயிக்கே ஒரு மாறியா இருக்கு. ஆட்டுக்கறி திங்கனும் போல இருக்குயா.காசு இருந்தா கசாப்புக் கடைக்குப் போயிட்டு வாயா” என்றாள் ஏக்கத்தோடு.

“நானும் மறந்தே போயிட்டேன். இன்னக்கி தலைவரம்மா… தர்ஹாவுல கடாய் வெட்டி கந்திரி போடுறாங்க.”

“இருபுள்ள, ஒரு குண்டான் சட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்”

ஆட்கள் உட்கார ஆரம்பித்தார்கள்.

“மலக்கொழுந்து இப்புடி உக்காரு” யாரோ சொல்லவும் அந்த இடத்தில் உட்கார்ந்தார்.

இலை நிறைய சோறும் அஞ்சாறு கரித்துண்டும் போட்டு கொழம்பு ஊத்தினார்கள். சாப்பிடாமல் சட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

“என்னய்யா, எதுவாச்சும்” ஆவலோடு கேட்டாள்.

“ஆண்டவன் நமக்கு நெறயக் கொடுத்துருக்கான். ஊட்டி விடுறேன் சாப்புடு”

“சாமி சோற குளிச்சுட்டு சாப்புடுறய்யா” அப்புறம் ஒன்னோட யோசனை. நடக்க முடியாத அவளை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்.

வீட்டுக்குள் ஏதோ உருட்டும் சத்தம்.

அவளை தூக்கியவாறு மலைக்கொழுந்து ஒடிச்சி ஒடிச்சி கத்தினார். சட்டியை வாசலில் இழுத்துக்கொண்டு மும்மரமாகத் தின்று முடித்தது தெரு நாய். கையில் நடக்க சிரமப்படும் மனைவி, எதிரே நாய். அவளை இறக்கிவிடவும் முடியாமல் தெருநாயை விரட்டவும் இயலாமல்

மிஞ்சியிருந்த ஒன்றிரண்டு பருக்கைகளை கோழிகள் வேட்டையாடின. அவரின் கண்கள் அதிகமாகவே கசிந்தன.

இருந்த பழைய கஞ்சியை அவளுக்கு ஊட்டிவிட்டார்.

“நீயாவது சாப்புட்டியா”

“ம்.. பொய்யாக தலை அசைத்தது. அவளுக்கும் தெரியும்” நீராரத்தை குடித்துவிட்டு வீட்டு சுவற்றில் சாய்ந்தார். கரிதின்ற மயக்கத்தில் தெருவில் ஓய்வெடுத்தது அந்த தெருநாய்.

- 6-12 ஆகஸ்ட் பாக்யாவில் வெளியானது. 

தொடர்புடைய சிறுகதைகள்
''இந்தக் கூறுகெட்ட உலகத்துல காலம் போறதே தெரியமாட்டேனுது... எப்புடியாவது திங்ககெழம சந்தையில எலந்தப்பழத்த வித்துறனும். கனகுக்கு மாத்திக்கிறதுக்குக்கூட வேற பாவாடை இல்ல. கிடைக்கிற காசுக்கு நல்ல பாவாடைய வாங்கிட்டு இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேந்துறனும். தனக்குள்ளயே பேசிக்கொண்டு கனகையும் கையில் பிடித்துக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
கல்யாணத்துக்குப் பிறகு படிக்க வைப்பதாகச் சொல்லித்தான் கமலாவை திருமணம் செய்து கொண்டான் சுந்தர். இருவருக்கும் ஏழு ஆண்டுகள் வித்தியாசம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுந்தருக்கு போதுமான வருமானம் கிடைத்தது. கமலா ஆசைப்படி தொழிற்கல்வி டிப்ளமோ படிப்பில் சேர்த்துவிட்டான். வயது இருபதை கடந்ய அவளுக்கு படிக்க ...
மேலும் கதையை படிக்க...
மழைத்தூறலாய் வெப்பக்கதிர்கள் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. தெருநாய்கள் நிழலுக்கு ஒதுங்கி உறங்கிக் கிடந்தன. இலைகள் மண்தரையில் மடிந்து கிடந்தன. காற்றுக்கு அசையாதவைகளாகவே மரங்கள் காட்சியளித்தன. தலையில் உருமாக்கட்டு. இடுப்பில் ஒரு கந்தைத் துணி. தலையில் ஒரு கூடை. அதில் நிறைய வேர்வை சிந்தி ...
மேலும் கதையை படிக்க...
''மனுசனுக்கு வேதனையப் பாரு.. யாருக்கும் தொல்லையா இல்ல. வம்பு தும்புக்கு போகாத ஆளு, அவனுக்கா இப்படி....?" ''தான் உண்டுனு ஏதாவது எழுதிக்கிட்டுதான் இருப்பான். வழியக்க பேசாட்டியும் மத்தவங்க பேச்சுக்கு மரியாதக் கொடுப்பான்...'' ''பாவம்யா... பொண்ணுக்கு கல்யாணத்த முடிச்சுட்டு பையனுக்கும் அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சர்றதா எங்கிட்டயே ...
மேலும் கதையை படிக்க...
காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரும் மூட்டைகளை சுமந்து கொண்டு குடும்பம் குடும்பமாக வேற்றிடம் நோக்கி சென்றார்கள். போர் அபாயத்தை வானொலியும் தொலைக்காட்சியும் அறிவித்துக்கொண்டே இருந்தன. ஆயுதங்களையும் ஆட்களையும் இந்தியாவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் குவித்து வைத்திருந்தனர். பனித்தூறல்களை துடைத்துவிட்டு சூரியகதிர்கள் உலாவிக்கொண்டு இருந்தன. இந்திய ...
மேலும் கதையை படிக்க...
வழக்கம் போல் இரவு உறங்கச் சென்றேன். உறக்கத்தில் விழித்த என் குழந்தைகள் எப்போதும் போல் ஆளுக்கொரு பக்கமாய் என்மீது கால்களை தூக்கிப் போட்டுக்கொண்டு என் முகத்தைப் பார்த்தனர். அந்தப் பார்வையின் அர்த்தம் புரியாதவனா நான். கதை கேட்காமல் ஒருநாளும் உறங்கியதில்லை என்பதை ...
மேலும் கதையை படிக்க...
வயிற்று வலியும் மயக்கமும் வர வீட்டு வாசலிலே விழுந்துவிட்டேன். "அய்யய்யோ....! தொளசி விழுந்துட்டானே....." என் தாய் ஆரியமாலா அழுது ஓடி வர அனைவரும் வந்துவிட்டனர். பாதி கெரக்கத்தில் இருந்த என்னை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். ஓரளவு மயக்கம் தெளிந்தேன். வயிற்று ...
மேலும் கதையை படிக்க...
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தப் பேருந்து நிலைத்தில் பதினாறாம் எண் பேருந்து வந்து நிற்பதற்குள் கூட்டம் வெள்ளமென திரண்டு ஏறினர். இறங்க வேண்டியவர்கள் இறங்குவதற்குள் ஏறுபவர்கள் இருக்கையில் இடம்பிடிக்க தன் கைகளில் இருந்தவற்றை சன்னல் வழியே இருக்கை நோக்கி வீசினர். ஒருவழியாக ...
மேலும் கதையை படிக்க...
அவன் எதிர்பார்க்கவே இல்லை. மதுப்புளியில் ஊரே கூடியிருந்தது. கைக்குழந்தையுடன் நின்றிருந்த தேவியை பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான் மலைச்சாமி. '' ஏம்பா....எத்தன முறை சொல்லியாச்சு. திருந்தவே மாட்டியா....'' கடுகடு முகத்துடன் பேசினார் தலைவர் முருகையன். '' ஏம்புள்ளய நிக்க வச்சு கேள்வி கேட்குறீங்க... ...
மேலும் கதையை படிக்க...
நல்ல காலை பொழுது. மணி எட்டு. தட்டில் சோறு சாப்பிட்டுக் கொண்டே சிந்தனையில் ஆழந்தான் சேகர். “என்னடா சாப்புட்டுக்கிட்டே ரோசனை. சும்மா சாப்புட்டுட்டு படுத்துத்தூங்கு. இல்லேனா பக்கத்து வீட்ல டீவியப் பாரு” வாசலில் குவித்து வைத்திருந்த குப்பையை அள்ளியவாறு சொன்னாள் சிகப்பி. "அதுவந்தும்மா மாமா ...
மேலும் கதையை படிக்க...
சாமக்கோழி..
வார்த்தைகளால் ஒரு கோடு
விசிறி
ரெண்டாவது ரகம்
எதிர்பாராத யுத்தம்
கதையல்ல
வெளிச்சம்
பெருசுகள்….
பெண்மை
நெஞ்சுக்குள் இருள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)