”இத்தனை கரிச்சுக் கொட்டறியே உன் மாமியாரை, அப்படி என்ன பண்ணினாங்க?”
கேட்ட தோழியிடம் பொருமித் தள்ளினாள் கமலி.
“பின்னே என்ன, அவருக்கு நாலு நாள் புவனேஷ்வரில் ட்ரெயினிங் வந்தது. எனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டிருந்தார். கடைசி நேரத்தில் எனக்கு அந்த ஊர் கோயில் பார்க்கணும்னு ஆசையா இருக்குடான்னு சொல்லி என் டிக்கெட்டை கேன்சல் செய்துட்டு அவரோட கிளம்பிட்டாங்க. அதான் எரிச்சல்ல இருக்கேன். நாளைக்கே எங்கம்மாவைப் போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்.”
அதே நேரம் ரயிலில்…
“என்னம்மா, அண்ணாவோட ஒரிசா பயணமா ?” என்று செல்லில் கேட்ட மகளிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் கமலியின் அத்தை.
“அதுவா ? கமலியோட அம்மாவுக்கு கொஞ்ச நாளா உடம்புக்கு முடியாம இருந்தது. போய் நாலு நாள் பார்த்துட்டு வரலாம்னு அவ கேட்டால் உங்கண்ணன் விட்டால்தானே ? அதான் வலுக்கட்டாயமா நான் கோயிலுக்கு வரணும்னு சொல்லி டிக்கெட்டை மாத்திடச் சொல்லி அவ ஊருக்குப் போயிட்டு வர்றதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொடுத்துட்டேன்.”
- கே.பி.ஜனார்த்தனன்
தொடர்புடைய சிறுகதைகள்
என் அப்பா ஒரு கடமை தவறாத , ஒழுங்கான, நேர்வழியில் போகிற ஆசாமி. நான் விசாரித்தறிந்தவரை இந்த அவர் குணங்கள் சிறு வயது தொட்டே வந்தவை. என் நினைப்பிலும் அவர் ரொம்ப மகிழ்ச்சியானவராகவோ அல்லது ரொம்ப சோகம் காப்பவராகவோ இருந்ததில்லை. கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, உடம்பில் ஒருவித நடுக்கம் வந்து, என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியாது தொண்டைக்குழியை அழுத்தியது.
மனமோ நேர்மாறாக “என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எப்போ? நிஜம்மாவா?” இப்படி எல்லாவிதமான கேள்விகளும்; அகராதியில் உள்ள அத்தனைக் கேள்விகளும் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து, என்னைச் ...
மேலும் கதையை படிக்க...
மாசிலாமணிக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் பண்ணியே ஆகணும்னு டாக்டர் சொல்லிட்டார். இரண்டிலிருந்து மூன்று லட்சங்கள் ஆகலாம்.
சிக்கனமாக இருந்து, நேர்மையாக சம்பாதித்து முன்னுக்கு வந்தவர். கால்குலேட்டடு பெர்சன். வயது எண்பது.
அவருக்கு சம்மதமில்லையென்றாலும், மனைவி கணவருக்கு பைபாஸ் பண்ணியே ஆக வேண்டும் என உறுதியாக ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக அவர் அப்படியேதான் இருந்தார்.
அவர் வேலைசெய்த தொழிற்சாலையில் ஆட்குறைப்புச் செய்தபின்பு வேலை இழந்தோருக்கான உதவிப்பணத்தைப்பெற்றுக்கொண்டு புதிய வேலைக்கு மார்க் முயற்சிப்பதை நாமறிவோம். ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘சுப்பையாவின் வருகை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
சுப்பையா அசத்தலாக அவனுடைய மோட்டார் பைக்கில் திம்மராஜபுரம் வந்து சேர்ந்தபோது சபரிநாதன் வீட்டில் இல்லை.
நடவு ஆதலால் வயலில் நின்றார். அவருடைய அந்தஸ்த்துக்கு இப்படியெல்லாம் வந்து வயலில் நிற்க வேண்டியதில்லை. ...
மேலும் கதையை படிக்க...
ரெபேக்கா வீட்டுக்கு நான் போகிறேன்