அம்மாவின் பிறந்தநாள்

 

கோயிலுக்குச் சென்று ஓர் அர்ச்சனை. வீட்டில் ரவாகேஸரி அல்லது பால்பாயாசம். பிறந்தநாள் ஓடிவிடும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படியில்லை. அக்கம்பக்கத்தில் கொண்டாடுவதைப் பார்த்து அவர்களுக்கும் அந்தப்பழக்கம் தொற்றியிருந்தது. வளர்ந்துவிட்ட அவர்கள்தான் அம்மாவை வற்புறுத்தினார்கள். சண்முகநாதன் யோசித்தார். பையன் ப்ளஸ்டூ. பெண் இந்தவருடம்தான் பொறியியல்கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்திருந்தாள். அவருக்கும் அலுவலகத்தில் பதவிஉயர்வு வந்திருந்தது. இப்போது மனைவியின் பிறந்;தநாளும் சேர்ந்துகொள்ள இதுவும்அதுவுமாய்ச் சேர்ந்து சற்று விமர்சையாகக் கொண்டாடிவிடலாம் என்று தீர்மானித்தார்.

அவர்கள் குடியிருந்தது அடுக்ககத்தில். தொழில்வியாபாரம் பணிநிமித்தம் பல்வேறு மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வசிக்கும் பகுதி. இதுபோன்ற கெட்-டு-கெதர்கள் மனித உறவை மேம்படுத்த என்பதை நன்குணர்ந்த சற்றே வசதிப்படைத்த மேல்நடுத்தர வர்க்கத்துக் கூட்டம்;@ அழைத்தது அழைத்தபடி மாலை சரியாக ஐந்துமணிக்கு வந்து விட்டார்கள். புன்னகை பூத்த முகம்;;,  பாந்தம்,  சுற்றிஇருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற சிறுசிறு உதவிகள்@ ஆலோசனைகள்@ இதுதான் அன்புச்செல்வி@ ஐம்பதுகளைக் கடந்து நல்ல அனுபவஸ்தராய் வளையவரும் அவர்மீது அங்கிருந்த அனைவருக்கும் ஒரு மரியாதை கலந்த ஈர்ப்புண்டு@ குறிப்பாய் இளம்பெண்கள் அவளை அம்மா என்றோ மாஜீ என்றோதான் பிரியமுடன் அழைப்பார்கள்.

“அம்மாவுக்கு இப்பத்தான் பிறந்தநாள் கொண்டாட மனசு வந்துருக்காக்கும்?” கிண்டல்செய்தபடி அவர்கள் அன்புச்செல்வியை கேக் வெட்ட அழைத்து வந்துவிட்டார்கள். காதோரநரை, குங்குமம் துலங்கிய நெற்றி, சற்றே நாணமுமாய் பட்டுப்புடவை சரசரக்க வந்துநின்ற தன்மனைவியை கண்டு சண்முகநாதன் மனம்விம்மி நின்றார்.

சண்முகநாதன் – அன்புச்செல்வி தம்பதியர் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்@ ஊரார் பாஷையில் சொல்வதாக இருந்தால் டபுள்என்ஜின்;@ ஆனால் உள்ளுக்குள்ளோ அனல் அடித்தது. வேலைக்குச்செல்லும் தம்பதியருக்கே உண்டான பிரத்யேகப் பிரச்சனைகள். குறிப்பாய் குழந்தைவளர்ப்பு@ அது ஒரு பெரியசவாலாக உருவெடுத்து நின்றது. இப்போது இவர்கள் வசிக்கும் சென்னை போன்று அவர்கள் பணியாற்றிய ஊர்களில் குழந்தைகாப்பகங்கள் எதுவும் கிடையாது. வீட்டில் வேலைக்காரர்களை நம்பி விட்டுவர வேண்டிய கட்டாயம்@ அலுவலகத்திலிருந்து பதறியபடி ஓடிவருவார்கள்.

மழலைகளின் ப+த்தமுகம் கண்டபின்புதான் பதற்றம் தனியும். இப்படிப் பதறிப்பதறி வளர்க்கப்பட்ட குழந்தைகள்தான் இன்று சிறகுகள்முளைத்து சுயமாய் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் அம்மாவை வற்புறுத்திய போது கூட, அவர்களுக்காக இழந்துவிட்ட சின்னச்சின்ன சந்தோஷங்களை அவர்கள் மூலமாகவே மீட்டெடுக்கக் கிடைத்த வாய்ப்புபோலும் என்றுதான் சண்முகநாதன் எண்ணிக்கொண்டார்.

அன்புச்செல்வி கேக் வெட்ட முனைந்தபோது கைப்பேசி அழைப்பு@ மகளுக்குத்தான்@ யாரோ தோழியிடமிருந்து@ “ஒரு நிமிஷம்!” என்றவள் எட்டப் போனாள். கேக் கட்செய்து அங்கிருந்த அனைவருக்கும் அளித்து முடிக்கும்வரை வரவில்லை. அத்தனை சுவாரஸ்யமான பேச்சு@ பின்னர் வந்தவள் “அதுக்குள்ள கேக் டிஸ்ட்ரிபிய+ஷன் முடிஞ்சுபோச்சா?” – என்றபடி ஒரு துண்டை எடுத்து அம்மாவிற்கு ஊட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டாள். மற்றவர்கள் எல்லாம் சொல்லி முடித்தபிறகு மகளிடமிருந்து கிடைத்த அந்த வாழ்த்து ஆறிய பழங்கஞ்சி போன்று சுவையற்று இருந்தது.

காலையில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்தார்கள். வந்த கையோடு பையன் கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக்கொண்டு போனான். மதியஉணவிற்குக் கூட வரவில்லை. மாலை நாலரைமணிக்கு அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “டாட்! மேட்ச் முடிய லேட்டாகும் போல இருக்கு! நான் மெதுவா வர்றேன்!”- என்றவன், இவரிடம் பதிலைக்கூட எதிர்பாராமல் இணைப்பைத் துண்டித்துவிட்டான். வந்த விருந்தினர்கள் பையனைக் கேட்டபோது இவர் தடுமாறிப் போனார்.

ஆறுமணிக்கு விருந்து ஆரம்பித்திருந்த போது வேர்க்க விறுவிறுக்க வந்தவனிடம் சண்முகநாதன் முகம் கொடுக்கவில்லை. விருந்தினர் ஒருவர் கேட்டதற்கு “அதான் கேட்டரிங்லயே சர்வீஸீக்கும் சேர்த்து ஆள் சொல்லியாச்சுல்ல? என்னோட உதவி என்ன தேவைப்படுது?” – என்று பொறுப்பற்ற பதில் வந்தது அவனிடமிருந்து@ அவனும் வாழத்துக்களைச் சொல்ல மறக்கவில்லை.

சண்முகநாதன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். விருந்துக்காக மொட்டைமாடியில் போடப்பட்டிருந்த ஷாமியானாவின் கீழ் அவரும் அன்புச்செல்வியும் அமர்ந்திருந்தார்கள். குழந்தைகள் இருவரும் வீட்டில் இருந்தார்கள். பையனுக்கு இது முக்கியமான போட்டி கிடையாது. உள்ளுர் பையன்கள் சேர்ந்துகொண்டு ஆடும் ஆட்டம்@ எந்தநேரத்திலும் அவன் சொல்லிக்கொண்டு வந்திருக்கலாம். வளர்ந்துவிட்ட பையன் அவன்@ அவனுக்கு இது தெரிந்திருக்க வேண்டும். விருந்தினுடைய முக்கியஅம்சமே அம்மாவின் பிறந்தநாள்தான்@ அந்தநிகழ்வின் போது பெண் அருகில் இருந்திருக்க வேண்டும். அதற்குப்பின்னால் அவள்தோழியோடு மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தாலும் இவர் கேட்கப் போவதில்லை. குழந்தைகளின் வாழ்த்தும் அருகாமையுமே முதலாவதாக இருக்கவேண்டும் என்று தம்பதியர் எதிர்பார்த்திருக்க அந்த உணர்வுகளை உதாசீனப்படுத்தியது போன்றிருந்தது அவர்களின் செயல்பாடு@ சண்முகநாதன் கடுமையாகக் காயப்பட்டிருந்தார். வந்த விருந்தினர்கள் முன்னிலையில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள ரொம்ப சிரமப்பட்டார். ஆனால் அன்புச்செல்வியின் மனம் அவர் அளவிற்கு விசனப்படவில்லை. மகள் மகனின் செயல்பாடு ஏமாற்றத்தை அளித்தாலும் அதை ஒரு தற்செயல் நிகழ்வுபோல் அவரால் ஜீரணித்துக்கொள்ள முடிந்தது. எள்ளும் கொள்ளுமாய் குழந்தைகளிடம் வெடிக்கக் காத்திருந்த சண்முகநாதனை அவர் தடுத்தார்.

“எதுக்கு வேண்டாங்குறே”?

“ராத்திரி பூரா பொறுமையா எனக்கு மெஹந்தி வச்சுவிட்டது உங்க பொண்ணுதான்! நான் சொல்லியும் கேக்காம ஒரு ஹேர்டிரெஸ்ஸரை கூட்டியாந்து சின்னப்பொண்ணு மாதிரி எனக்கு அலங்காரம் பண்ணிவிட்டதும் அவதான்! வீட்டு அலங்காரத்தையும் அவதான் பார்த்துக்கிட்டா! உங்களுக்கே தெரியும் வந்த கெஸ்ட்லாம் டின்னர் மெனு வித்தியாசமா நல்லா இருந்துச்சுனு பாராட்டிட்டுப் போனாங்க! இந்தப் பாராட்டெல்லாம் உங்க பையனுக்குத்தான்! அவன்தான் உங்களை ஓவர்-லுக் பண்ணி கேட்டரிங்கை பார்த்துக்கிட்டான்! மனசுல அன்பில்லைன்னா இப்படிச் சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் கவனிச்சிச் செய்வாங்களா? இந்தப் பார்ட்டியே அவங்க வற்புறுத்தல்தானே?”

“அதனால்தான் கேக்குறேன்! தோளுக்குமேல வளர்ந்த பிள்ளைங்களுக்கு அனுசரணையா ஆதரவா அம்மா அப்பா பக்கத்துல இருக்கணும்னு தோணாதா?”

“தோணியிருக்கணும்! தோணாமப் போயிருச்சு! அதுக்கு என்ன பண்றது? இந்த ரெண்டுங்கெட்டான் பருவத்துல சமயங்கள்ல அம்மாஅப்பாவை விட ஃபிரன்ட்சும் விளையாட்டும் முக்கியமா தெரியுது! இது சின்ன தவறுதான்! இத நாம பெருசு படுத்த வேண்டாம்!”- சண்முகநாதன் அமைதியாக இருக்க அன்புச்செல்வியே தொடர்ந்தார்.

“இன்னிக்கு அம்மாஅப்பா ரெண்டுபேரும் ரொம்ப சந்தோஷமா இருக்குறதாத்தான் அவங்க நினைச்சிக்கிட்டிருக்காங்க! அப்படியே இருந்துட்டுப் போகட்டும்! நம்ம மனசுகாயப்பட்டிருக்குன்னு சொல்லி அவங்கமனசைக் காயப்படுத்திட வேண்டாம்! இன்னிக்கு நடந்த நிகழ்ச்சிக்கு ஒரு பத்துப்பதினைஞ்சு வருஷம் கழிச்சு உங்க பையன்ட்ட இருந்தோ, பொண்ணுட்ட இருந்தோ மன்னிப்பு வரலாம்! இதே மாதிரி சூழ்நிலைல அவங்க கடந்துவர்றப்ப இது புரியும்! இப்ப தேவை பொறுமைதான்!” -என்றார் அன்புச்செல்வி@ மனைவியின் வார்த்;தைகளைச் செவிமடுத்த சண்முகநாதன் நடந்த நிகழ்வுகளைக் கோர்வையாய் மனதில் ஓடவிட்டுப் பார்த்தார். முதலில் பெருங்குற்றமாய்த் தெரிந்த குழந்தைகளின் செயல்பாடு இப்போது மன்னிக்கக்கூடிய சிறு பிழையாய் தெரிந்தது. படபடப்பு நீங்கியவராய் லிஃப்டை நோக்கி நடந்தார்.

ஹாலில் நுழைந்தபோது பையனும்பொண்ணும் மறுநாள் பள்ளி, கல்லூரி செல்லத்தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். மனைவி சொன்னமாதிரி தவறு செய்துவிட்டதற்கான எந்தக் குற்றஉணர்வும் அவர்கள் முகத்தில் இல்லை. மிகவும் இயல்பாக இருந்தனர். இதைஒரு சர்ச்சையாகக் கொண்டுசென்றால்தான் அவர்கள் முகம் வாடும் என்பது புரிந்தது.

“எடுத்து வைக்குறத எடுத்து வைச்சுட்டு வந்து படுங்க! காலைல சீக்கிரமா எந்திரிக்கணும்ல?”- கனிவாய் சொல்லிவிட்டு படுக்கப்போனார் மனம் சாந்தப்பட்டிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
ரம்யாவிற்கு அவளதுதோழிகளுடன் அடிக்கடி சண்டைவந்தது. ஒன்பதாவதுபடிக்கும் சிறுமி அவள் எதற்காகத் தோழியருடன் தனக்குச்சண்டை வருகிறது என்பதை அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அப்படிச் சண்டைவராமல் தடுக்கவும் முடியவில்லை. இப்படி அடிக்கடி சண்டைபோடுவதால் அனைவரும் சேர்ந்து தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்று அவள் பயந்தாள். கடும் ...
மேலும் கதையை படிக்க...
மழைகாலப்பொழுது. பூத்தூவல் என்பார்களே அதுபோன்று மெலிதாய்சாரல் தூறிக்கொண்டிருந்தது. ரம்யா தன்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். திரும்பிய பக்கமெல்லாம் புல்பூண்டுகள் துளிர்த்துச் செழித்துக் கிடந்தன. மழைக்குருவிகள் தாழப்பறந்து கொண்டிருந்தன. அப்போது ரம்யாவின் கையில் பொன்வண்டு ஒன்று வந்தமர்ந்தது. பார்ப்பதற்கு அதுமிகவும் அழகாய் ...
மேலும் கதையை படிக்க...
கார்த்திகாவிடம் ஓரு பேனா இருந்தது. விலைகூடுதலான மசிப்பேனா@ கீழ்புறமைக்கூடு மேல்மூடி என்று பேனாவின் அனைத்து பாகங்களும் வெள்ளியால் ஆனது. அவளுடைய பத்தாவது பிறந்தநாளுக்கு அவளின் அப்பா பரிசாகத்தந்தது. “நீ இதை ஸ்கூலுக்குக் கொண்டுபோகக்கூடாது! வீட்டுல வைச்சுதான் எழுதனும்!- என்றார் அம்மா@ கார்த்திகாவும் ‘சரி’ ...
மேலும் கதையை படிக்க...
சொர்ணபுரி என்ற ஒரு தேசம். அதை தர்மராஜன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். முப்பதுஆண்டுகளுக்கும் மேலான அவரதுநல்லாட்சியில் சொர்ணபுரி தேசம் சகலசுபிட்சங்களையும் பெற்றுத்திகழ்ந்தது. தனது காலத்திற்குப் பின்னும், தனது குடிமக்கள் மகிழச்சியாக வளமுடன் வாழவேண்டும் என்பது மன்னரின் விருப்பம். தனக்கு வயதாகிவிட்டதால் தனதுபுதல்வர்களில் ...
மேலும் கதையை படிக்க...
வள்ளி தந்த படிப்பினை!
வள்ளி ஓர் ஏழைச் சிறுமி. ஆனால் பதினோரு வயது நிரம்பிய புத்திசாலிப் பெண். மலையடிவார கிராமம் ஒன்றில் அவள் தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். வள்ளி, நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பாள். அது அவள் தானாகக் கற்றுக் கொண்டது. அவள் எப்பொழுதும் தன் ...
மேலும் கதையை படிக்க...
மாயக்கண்ணாடி
நான் பரம்பொருள்
கார்த்திகாவின் தவறு
அரச கட்டளை
வள்ளி தந்த படிப்பினை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)