யாழினியுடன் மாலை பொழுதின் மயக்கத்தில்

 

மாலை பொழுதின் மயக்கத்தில் இசைச்சாரல் வானொலி வாயிலாக உங்களோடு இணைந்து இருப்பது உங்கள் யாழினி. இந்த இரவு நேரத்தில் உங்கள் கவிதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உங்க முதல் காதல், கவிதை, காதலி , இணைந்த காதல் , பிரிந்த காதல், தொலைத்த காதல் , தொலைந்த காதல் இப்படி நீங்க எழுதிய, எழுதி டைரியில் மறைத்து வைத்து எப்பவாது யாருக்கும் தெரியாமல் இரகசியமா நீங்க மட்டும் உங்க மனசுக்குள்ள படித்து உங்கள் கடந்த காலத்தை அசைபோடும் கவிதைகளை எங்களுடன் இணைந்து மாலை பொழுதின் மயக்கத்தில் இரவு 8 மணி முதல் 10 மணிவரை பகிர்ந்து கொள்ளாலம். உங்கள் கவிதை சாரலில் நமது சென்னை மக்களோடு சேர்ந்து நனைய காத்திருக்கும் உங்கள் யாழினி.

இதோ இன்னைக்கி நமது நிகழ்ச்சியை இசைஞானி பாடலோடு துவங்கலாம் …

♩ ♫♪♬♯♮♭♪♬♩ ♫

பாடல் ஒலிக்க தொடங்கியது மனம் காற்றோடு கறைய ஆரம்பித்துவிடுகின்றது.

யாழினி, இசைச்சாரல் வானொலியில் தொகுப்பாளராக பணி ஆற்றி வருகிறாள்.

கோயம்புத்தூர் சொந்த ஊர். பள்ளி படிப்பு வரை கோயம்புத்தூர் தான். மேற்படிப்புக்காக சென்னை விஜயம். சென்னை பல்கலைகழகத்தில் பட்டபடிப்பு முடித்த கையோடு இசைச்சாரல் வானொலியில் தொகுப்பாளர் பணி.

இரவு 8 மணி ஆகிவிட்டால் போதும் புறநகர் இரயிலில் பயணிக்கும் பயணிகளின் தொலைபேசி, விடுதிகள், ஓட்டல்கள், புறநகர் பேருந்துகள் என எங்கும் யாழினி தொகுத்து வழங்கும் மாலை பொழுதின் மயக்கம் நிகழ்சிக்காக எல்லோரும் காத்திருப்பார்கள். சிலர் மாலை பொழுதின் மயக்கத்தில் பகிரப்படும் கவிதைகளுக்காகவும், ஒளிபரப்பாகும் பாடலுக்காகவும் ( பெரும்பாலும் இசைஞானியின் பாடல்கள் தான் ) , பலர் யாழினியின் குரலை மட்டும் கேட்க. யாழினி, பெயருக்கு ஏற்ப புல்லாங்குழலில் இருந்து வரும் இசை போல குரல். யாழினி சிரித்து பேசினால் மனசு லேசாகும், தோய்ந்து பேசினால் மனசு காரணமின்றி கனமாகும். முகம் அறியாத அந்த குரலுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு. யாழினிக்கு இசைஞானியின் பாடல்கள் மீது ஈர்ப்பு.

அன்று சரியாக 9.50க்கு, இசைச்சாரலில் இறுதி அழைப்பாளராக அழைத்தது குணா. அதுதான் மாலை பொழுதின் மயக்கம் நிகழ்சிக்கு அவன் அழைத்த முதல் தொலைபேசி அழைப்பு. குணா, சென்னை முகலிவாக்கத்தில் இருந்து அழைப்பதாகவும், மணப்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிவதாவும் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு, அவன் எழுதிய கவிதையை பகிர்ந்து கொண்டான்.

கண்டுகொள்ளவில்லை

என்று

கண்டுக்கொண்டேன்

கடந்து சென்ற

பின்பும்

காத்திருந்தேன்

நீ பார்க்கும்போது

மட்டும்

சுற்றும் பூமி

நின்றுப்போகுது

நீ நின்ற

இடத்தில மட்டும்

என் பூமி சுழலுது…

என முடிக்க, நிகழ்ச்சியின் இறுதி பாடலாக இசைஞானியின் பாடல் ஒளிபரப்பானது.

யாழினி இதுவரை பலரிடம் மாலை பொழுதின் மயக்கம் நிகழ்ச்சியில் பேசியதுண்டு, ஆனால் இன்று இறுதியாக பேசிய குணாவின் குரல், எங்கோ கேட்ட, பரிச்சயமான குரலாக இருந்தது. ஏதோ யாழினியின் மனசுக்குள் இனம்புரியாத கலக்கம். திரும்ப திரும்ப முயற்சித்தும் அடையாளம் காண இயலவில்லை.

அன்றுமுதல் தினமும் தவறாமல் மாலை பொழுதின் மயக்கத்தில் குணா குரல் ஒலித்துவிடும், தவறாமல் கவிதையும் கூட. குணவிடம் இருந்து வரும் கவிதைகள் யாவும் யாழினியை அசைத்து பார்த்தது. அன்று சென்னையில் ஆலங்கட்டி மழை கொட்டி கொண்டிருக்க, சரியாக 9.50க்கு குணவிடம் இருந்து அழைப்பு. வழக்கம் போல ஒரு கவிதை (தலைப்பு – மையல்), வழக்கத்துக்கு மாறாக கவிதையின் முடிவில் யாழினியின் பெயர். பிறந்த நாள் வாழ்த்துகள் யாழினி என்று சொன்ன மறுகணம் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

- $ மையல் $-

எழுதி எழுதி

பார்கிறேன்

மையல் மட்டும்

தீர்ந்தபாடில்லை

எழுதியது

உன் பெயர் (யாழினி) என்றால் …

குணா முடிக்க, நிகழ்ச்சியின் இறுதி பாடலாக

“” சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ

மயக்கம் …

என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்லே பகல எனக்கும்

மயக்கம் ..”" என பாடல் ஒலித்தது.

அதிர்ச்சியில் இருந்து மீள நேரம் எடுத்துகொள்ளாமல், உடனே சுதாரித்து கொண்ட யாழினி நிகழ்ச்சி முடித்த கையேடு இசைச்சாரல் வானொலியின் தகவல் அமைப்பை தொடர்பு கொண்டு குணாவின் கைபேசியின் எண்ணை பெற்றுகொண்டால். அடுத்த பத்தாவது நிமிடம் குணா தொலைபேசி சினுங்கியது. மறுமுனையின் குணா. என்ன யாழினி கண்டுபிடிக்க ஒரு வாரமா என கேட்க. அதிர்ச்சியில் யாழினிக்கு பேச்சி வரவில்லை. இது குணா பெயரில் கேட்கும் அகிலனின் குரல்.

மறுமுனையில் யாழினி ….ஹலோ யாழினி என்று குணாவின் குரல் …

அகிலன்…. அகிலன்….. இது அகிலன் தான என கேட்டால் யாழினி.

ஆமாம் யாழினி அகிலன் தான்.

அகிலன் -

அகிலன், யாழினி இருவரும் சென்னை பல்கலைகழகத்தில் ஒன்றாக பட்டம் பயின்றார்கள். அகிலன் மூன்றாம் ஆண்டு பயிலும் போது யாழினி முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தால். அகிலனின் முதல் காதல் அனுபவம் யாழினியிடம் இருந்து தான். பலமுறை கேட்டும் யாழினி காரணம் ஏதும் இன்றி மறுத்துவிட்டால். அகிலனின் படிப்பும் நிறைவடைந்தது. அகிலன் கல்லுரி படிப்பை முடித்து ஆறு வருடம் ஓடிவிட்டது. காலபோக்கில் அகிலன், குணா என்ற துனைபெயரில் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் என எழுத துவங்கினான். அகிலனை சற்றும் எதிர்பார்கவில்லை யாழினி. அகிலன் முதல் நாள் அன்று சொன்ன கவிதைக்கு இன்று யாழினிக்கு அர்த்தம் விளங்கியது. வானொலியில் ” சங்கீத சுவரங்கள் “முடிந்துவிட்டது, அகிலன் யாழினி பேச துவங்கிவிட்டார்கள்.

மாதங்கள் கடந்தது…. இரவுகள் இனித்தது… நிலவு பலமுறை தேய்ந்து வளர்ந்தது…. மழை ஓய்ந்தது…. குளிர்காலம் கரைந்தது… வசந்தகாலம் தொடங்கியது ….

நேரம் சரியாக இரவு 7.50.

யாழினி நம்ப நிறைய பேசியாச்சி … இன்னும் நீ ஒருபதிலும் சொல்லல

எப்போ கேட்டாலும் சொல்றேன் சொல்றேன்னு தான் சொல்ற

எப்போ தான் சொல்லுவா ???

எனக்கு ப்ரோக்ராம் இருக்கு அகிலா நான் போகணும்… நான் அப்புறம் பேசுறேன் …

நேரம் இரவு 9.50. சென்னை முழுக்க மாலை பொழுதின் மயக்கத்தை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இறுதி அழைப்பாளராக அழைத்தது அகிலன். இன்று முதல் முறையாய் அவன் குரல் தளர்ந்து இருந்தது. தளர்ந்த குரலில் அகிலனின் கவிதை …

“” உன் மடியில் தலைசாய்த்து

என் இமைகள் ஒரு சேர

உன் விரல்கள் என் தலை கோத

என் உலகம் நான் மறக்க

உன் கரம் பிடித்து உன் விரல் நகம் நன் கடிக்க

நீ சிலுர்க்க நான் சிரிக்க

என்னில் உன்டாகும் மாற்றங்களுக்கு

எல்லாம் அர்த்தம் நீயாக

சில நாழிகை மட்டும் ஒரு யுகமாக

வாழ வேண்டும்மடி என் வாழ்க்கையை “”

என்று முடித்தான் அகிலன்

அமைதியாக கேட்டு கொண்டிருந்தால் யாழினி

சில நொடிகள் நிசப்தம் … வழக்கத்துக்கு மாறாக பாடல் ஏதும் ஒலிக்கவில்லை … அனைவரின் கவனமும் இசைச்சாரல் நோக்கி இருந்தது ..

யாழினி கண்களின் ஓரத்தில் மெல்ல கண்ணீர் கசிந்துகொண்டிருந்தது

மௌனத்தை உடைத்தல் யாழினி , ஒட்டுமொத்த ஊரே கேட்கும்படி சொன்னால்

பிறந்த நாள் வாழ்த்துகள் அகிலா

” நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் அகிலா ”

தொலைபேசி இணைப்பு துண்டிக்க பட்டது

இசைஞானி பாடல் ஒலிக்கதுவங்கியது …

♩ ♫♪♬♯♮♭♪♬♩ ♫

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று – குறள் 

தொடர்புடைய சிறுகதைகள்
மொத்த சொந்தமும் பந்தமும் ஓர் இடத்தில் சேர்ந்து ஒருவரை ஒருவர் நையாண்டி செய்துகொண்டு இருக்க , குழந்தைகள் பட்டாளம் யார் வார்த்தைகளையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் குறுக்கே நெருக்கே ஓடி விளையாடி கொண்டு இருக்க, எந்நேரமும் அடுப்பில் ஏதோ சமையல் வேலை நடந்து ...
மேலும் கதையை படிக்க...
இன்றோடு சரியாக மூன்று வருடம் ஓடிவிட்டது . இந்த மூன்று வருடங்களில் பல விஷயங்கள் மாறி இருந்தன என்னை சுற்றியும் என்னிடத்திலும். இந்த மூன்று வருடங்களில் இந்த இடம் தளைகீழாக மாறி போய்விட்டது. இப்போது இந்த வீதி பரபரப்பாக இயங்கி கொண்டு இருகின்றது. ...
மேலும் கதையை படிக்க...
மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை தி நகர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. சூரியனின் வெட்பத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் நகரம் நகர்ந்து கொண்டு இருக்க தனது பயணத்திற்கான இறுதி கட்ட ஷாப்பிங் செய்து கொண்டிருந்தான் திலீபன். திலீபனின் தந்தை தமிழ் ஈழத்தின் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஐப்பசி மாதம் மாலை நேரம். மழை பொழிந்து எங்கும் மண்வாசனை வீசிக்கொன்ட்டிருக்க, காந்தள் மலர் போல தூறல் மெதுவாய் விழுந்துகொண்டு இருந்தது. கருமேகங்கள் மழையாய் கரைந்துபோக, வானம் லேசாய் வெளுக்க ஆரம்பித்தது. பறவைகள் வேகமாய் தன் கூடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தன ...
மேலும் கதையை படிக்க...
மன்றம் வளர்த்த காதல்
ஆனந்தி
தொலைந்தது போனவன்
தெருவிளக்கு

யாழினியுடன் மாலை பொழுதின் மயக்கத்தில் மீது 8 கருத்துக்கள்

 1. priyanka says:

  அழகிய காதல் கதை ….. மையல் கவிதை மயக்கியது !!!!

  இறுதி கவிதை நெஞ்சில் இனிமை !!!!!!!!!!!!

 2. vishnupriya says:

  மிகவும் இனிமையான கவிதைகள், மனதை வருடியது. நன்றி ……..

 3. Britoraj V says:

  மயங்கினேன்..

 4. karthikeyan says:

  அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW