வெற்றிக்கு வழி!

 

மகாபாரதக் கதை

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் கோட்டை விட்டவர்கள், எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் பிரகாசிக்க முடியாது. மகாபாரதம் இதுகுறித்து அற்புதமாக விளக்கியிருக்கிறது!

பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தனர். பாண்டவர்களின் திறமையே எங்கும் பளிச்சிட்டது. அதனால், துரியோதனனுக்குள் பொறாமைத் தீ, கனன்று கொண்டே இருந்தது.

வெற்றிக்கு வழி!ஒருநாள், பீஷ்மரிடம் வந்தவன், ”தாத்தா! வில் வித்தை கற்றுத் தரும் துரோணர், அனைவரையும் சரிசமமாக பாவிப்பதில்லை. பாண்டவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு வேறு மாதிரியாகவும் பாடம் நடத்துகிறார். இதுபற்றி அவரிடம் கேளுங்கள்…” என்று வற்புறுத்தினான்.

வேறு வழியின்றி துரோணரை சந்தித்த பீஷ்மர், தான் வந்த நோக்கத்தை நாசூக்காகத் தெரிவித்தார்.

உடனே துரோணர், ”பிதாமகரே! நாளைய தலைமுறை இடையே எந்த வேறுபாடும் காட்டுவதில்லை! அனைவரையும் ஒன்றாகவே எண்ணி போதிக்கிறேன். என்னதான் மழை பெய் தாலும் பாத்திரத்துக்கு தக்க படிதானே நீர் நிரம்பும்! அதற்காக மழையை குற்றம் சாட்ட முடியாதுதானே?! எனினும் தாங்களே வந்து கேட்டதற்கு நன்றி” என்றவர், பீஷ்மரை நீராட அழைத்துச் சென்றார்.

துரோணரும் பீஷ்மரும் முன்னே நடக்க… பாண்டவர்களும் கௌரவர்களும் பின்தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும், ”அர்ஜுனா! எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்றிருக்கிறேன். ஆஸ்ரமம் சென்று எண்ணெய்ப் பாத்திரத்தை எடுத்து வா!” என்றார் துரோணர். அர்ஜுனன் ஆஸ்ரமம் நோக்கி ஓடினான்.

இதையடுத்து அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் பெரிய ஆலமரம் ஒன்று! அதன் நிழலில் பீஷ்மருடன் சென்று அமர்ந்தார் துரோணர்.

”இன்று புதிய பாடத்தை சொல்லிக் கொடுக்கப் போகிறேன்” என்றவர், மந்திரம் ஒன்றை தரையில் எழுதினார்.

பிறகு, ”இந்த மந்திரத்தைச் சொல்லி, மரத்தின் மீது அம்பு எய்தினால், அந்த அம்பானது, மரத்தின் எல்லா இலைகளிலும் துளையிடும்!” என்றவர், துரியோதனனை அழைத்து இந்த வித்தையை செய்து காட்டுமாறு பணித்தார். துரியோதனன் எழுந்தான்; தரையில் இருந்த மந்திரத்தைப் படித்தான்; மரத்தை நோக்கி அம்பு தொடுத்தான்; மரத்தில் இருந்த எல்லா இலைகளிலும் துவாரம் விழுந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். துரியோதனன் கர்வத்துடன் வந்து அமர்ந்தான். பீஷ்மர் சந்தோஷப்பட்டார். இதையடுத்து, ”சரி… நீராடச் செல்வோம் வாருங்கள்” என்று கிளம்பினார் துரோணர்.

அர்ஜுனனும் எண்ணெய்க் கிண்ணத்துடன் வந்து சேர்ந்தான். அனைவரும் நதியில் நீராடினர். பிறகு அங்கிருந்து கிளம்பியவர்கள், மீண்டும் அந்த மரத்தடியில் வந்து அமர்ந்தனர். அப்போது, நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம்… மரத்தின் எல்லா இலைகளிலும் இரண்டாவதாக துளை இருந்தது. பீஷ்மருக்கு குழப்பம்!

”துரோணரே, நீராடச் செல்லும்போது, துரியோதனன் அம்பெய்தி, மர இலைகளில் துளையை உண்டாக்கினான். நீராடிவிட்டு வந்தால்… எல்லா இலைகளிலும் இன்னொரு துளை இருக்கிறதே… எப்படி?” என்றார் வியப்புடன்.

உடனே மாணவர்கள் பக்கம் திரும்பிய துரோணர், ”இது யார் செய்த வேலை?” என்று கேட்டார்.

”அடியேன்!” என்று வணங்கி நின்றான் அர்ஜுனன்.

பீஷ்மர் திகைத்தார். அர்ஜுனனிடம், ”இந்த வித்தையை துரோணர் கற்றுக் கொடுக்கும்போது நீ இங்கு இல்லை. பிறகெப்படி…?” என்று ஆச்சரியம் மேலிடக் கேட்டார்.

”தாத்தா! எண்ணெய்ப் பாத்திரத்துடன் திரும்பும் போது, இந்த மரத்தடியில் காலடிச் சுவடுகள். தவிர, தரையில் எழுதப்பட்டிருந்த மந்திரத்தையும் கண்டேன். எதற்காக இந்த மந்திரம் என்று யோசித்த வேளையில், மரத்தின் இலைகளில் இருந்த துளையை கவனித்தேன். இரண்டுக்கும் ஏதோ தொடர்பு உண்டு என்று யூகித்தேன். மந்திரத்தை உச்சரித்து அஸ்திரம் தொடுத்தேன். என் யூகம் பொய்க்கவில்லை; எனது அஸ்திரம் எல்லா இலைகளையும் துளைத்தது!” என விவரித்தான் அர்ஜுனன்.

அவனைக் கட்டியணைத்துக் கொண்டார் பீஷ்மர். துரியோதனனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. ‘ப்பூ… இதென்ன சாதனை?’ என்று கேலி செய்தான்.

இதைக் கண்ட துரோணர், ”துரியோதனா! எங்கே… மீண்டும் அம்பு எய்தி, இலைகளில் துளை உண்டாக்கு!” என்றார் சிரித்தபடி.

துரியோதனன், மந்திரம் எழுதியிருந்த இடத்துக்கு வந்தான். அங்கே… மந்திரம் இல்லை; அழிக்கப்பட்டிருந்தது. அதிர்ந்து போனான்.

”தரையில் எழுதப்பட்டிருக்கும் மந்திரத்தை எவரேனும் மிதித்துவிடக் கூடாதே என்று நான்தான் அழித்து விட்டேன்” – பவ்வியமாகச் சொன்னான் அர்ஜுனன்.

மந்திரத்தை மனதில் பதிய வைக்கத் தவறியதால் தலை குனிந்து நின்றான் துரியோதனன். ”பீஷ்மரே! இப்போது கூறுங்கள் என் மீது ஏதும் குற்றம் உண்டா?” என்று கேட்டார் துரோணர்.

பிறகு மாணவர்கள் பக்கம் திரும்பியவர், ”சீடர்களே! சிந்தனையை சிதறவிடக்கூடாது. ஆத்திரம், அவசரம், கோபம் முதலான தீய குணங்களுக்கு மனதில் இடம் தரவே கூடாது. எதிலும் அலட்சியம் கூடாது. கூர்ந்து கவனிக்க வேண்டும். பயிற்சியில் ஆர்வமும், நம்மால் முடியும் என்று முயற்சியில் நம்பிக்கையும் இருந்தால், வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறான் அர்ஜுனன்” என்றார்! அர்ஜுனனை எல்லோரும் பாராட்டினர்.

- செப்டம்பர் 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள் மிக உயர்ந்தவர்களாக பெரியோர்களால் போற்றபடுகிறார்கள். யார் அந்த உத்தம தாய்மார்கள்? ராமாயணத்தில் லக்ஷ்மணனின் தாயான சுமித்திரை. பாகவதத்தில் துருவனின் தாய் சுநீதி. மார்கண்டேய புராணத்தில் வரும் இளவரசி மதாலசா. இந்த மூன்று தாய்மார்களும் உலக வழக்கப்படி சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால் ...
மேலும் கதையை படிக்க...
அடியார்க்கு அடியார்!
கலிக்காம நாயனார் திருநட்சத்திரம் : ஜூலை 14 அந்த சேதியைக் கேட்டதும்... அரளி தோய்த்த குறுவாளை நெஞ்சில் பாய்ச்சியதுபோல் துடித்தார் கலிக்காமர்! யாரோ பரவை நாச்சியாராம்! சுந்தரருக்காக, இவளிடம் தூது சென்றாராம் திருவாரூர் தியாகேசர்! 'அடியவருக்காக ஆண்டவன் தூது செல்வதா?' கோபக் கனலால் பற்றியெரிந்தது ...
மேலும் கதையை படிக்க...
நட்பு பெரிதா? நாடு பெரிதா?
துரோணரும் துருபதனும்... துரோணர், புகழ் பெற்ற ஆச்சார் யர். பாண்டவர் மற்றும் கௌரவருக்கு வில்வித்தை கற்பித்தவர். அர்ஜுனன் தேர்ந்த வில்லாளியாகப் புகழ் பெறக் காரணமானவர். இவரின் குருகுலத் தோழன் இளவரசன் துருபதன். குருகுலத்தில் துரோணரும் துருபதனும் நண்பர்கள். ஒரு நாள் துருபதன், ‘‘துரோணா, நான் ...
மேலும் கதையை படிக்க...
"என்னடா, பாபு. இப்பதாண்டா உனக்கு 23. அதற்குள் கலியாணக் கார்டு கொண்டு வந்து விட்டாயே" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் நண்பன் நவீன். "சே! சே! இது எங்க அண்ண ன் கலியாணக் கார்டுடா. என் கலியாணக் கார்டு இப்படியாடா இருக்கும். என் கலியாணக் ...
மேலும் கதையை படிக்க...
கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!
பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு நாள், சபையில் அமைச்சர்கள் புடை சூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது, மன்னனின் நெருங்கிய நண்பனும், ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான். சமண கவியான ...
மேலும் கதையை படிக்க...
சுயம்பிரகாசர் எங்கேயோ ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பியவர், தீவிர சிந்தனையில் ஈடுபட்டவர்போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவ ஆரம்பித்தார். நான் முதலில் அவர் முகத்தைக் கவனிக்காததால், “சாப்பிடுவோமா?” என்றேன். நான் சொன்னது அவர் காதில் விழாததுபோல, அவர் மறுபடியும் வளையம் வந்து ...
மேலும் கதையை படிக்க...
காதலியின் கண்களை விட அழகான கண்கள் உண்டா?
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் அவர்களால், ‘கோயில்’ என்று சிறப்பிக்கப் படுவதுமான திருவரங்கம். பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாங்காண அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்... என்று கவிச் சக்ரவர்த்தி கம்பரால் போற்றப்பட்ட புராதனப் பதி. ‘அரிதுயில்’ செய்யும் அரங்கன் எழுந்தருளி இருக்கும் அந்த அற்புதப் பதி, ...
மேலும் கதையை படிக்க...
கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!
என்ன ஆயிற்று? ''பக்தர்களுக்கு வசப்பட்டவன் நான். அவர்களுக்கு வற்றாத அருளை வாரி வழங்கவே நான் இங்கு இருக்கிறேன்'' என்ற பரந்தாமன், கோயில் கொண்டிருக்கும் இடமே பண்டரிபுரம். இங்கு, வைராக்கிய சீலரான ராக்கா, தன் மனைவி பாக்கா மற்றும் மகள் பங்கை ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். ...
மேலும் கதையை படிக்க...
குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!
துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன காரணம்? எவனோ குதிரைக்காரனாம்! அவனிடம் இருந்த குதிரைகளை விலை பேசினார்களாம் இவரின் சகோதரர்கள். ஆனால் அவனோ 'குதிரைகளுக்கு விலையாகப் பொன்-பொருள் எதுவும் ...
மேலும் கதையை படிக்க...
தண்டனை எதற்கு?
அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலையை அறிய எண்ணினார். சாதாரண மனிதனின் கோலத்தில் தம்பி லட்சுமணனுடன் சென்றார். ஆற்றங்கரையில் அதுவரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர். ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ...
மேலும் கதையை படிக்க...
மகன்களை காட்டுக்கு அனுப்பிய மூன்று அம்மாக்கள்
அடியார்க்கு அடியார்!
நட்பு பெரிதா? நாடு பெரிதா?
திடீர் கல்யாணம்
கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!
ஜானகிக்காக மாத்திரமல்ல
காதலியின் கண்களை விட அழகான கண்கள் உண்டா?
கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!
குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!
தண்டனை எதற்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)