வானதியின் ஐஸ்வரியம்

 

ஆண்டிபட்டி என்ற அழகான கிராமம்,தேனி மாவட்டத்தில் உள்ளது.இவ்வூர் வைகை நதிகரையில் மலையும்,மரங்களும்,பூக்கள் மலர்ந்த செடிகளும் சூழ்ந்து உள்ளன.

நம் கதையின் கதாநாயகி வானதி, ஓர் அழகான எளிமையான குடும்பத்தில் இவூரில் பிறந்தவள். சிறு பருவதிலிருந்தே, எப்பொழுதும் அவள் வீட்டில் உள்ள அழகான நாகலிங்க மரத்தின் கிழே பொழுதை கழிப்பாள்.

இரவில் அம்மரத்திலிருந்து வரும் நற்மனம், அவள் மனதை பல மையில்கள் இறக்கைகட்டி பறக்க செய்யும்.அவள் கண், அதன் அழகான பூ மேல் சிறிதும் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்கும்.ஏனெனில் அதன் மலர்கள், சிவலிங்கம் போல் நடுவிலும், நாகராஜா அந்த லிங்கத்தின் மேல் காவல் காப்பது போல் இருக்கும்.

அவளுடைய தோழிகள் வானதியை எப்பொழதும் கேலி செய்வார்கள்.உயிர் தோழி மேகலாவும் விதிவிலகல்ல.ஆனால், வானதியோ சிறிதும் பொருட்படுத்தாமல்,ஆண்டிபட்டியிலிருந்து, திருஆவினன்குடியிலுள்ள குழந்தை வேலாயுதரை, தன் பாட்டியுடன் சிறு பருவத்திலிருந்தே வணங்க செல்வது பழக்கமாகும்.

பழனி மலை அடிவார்த்திலுள்ள திருஆவினன்குடி தலமே ” மூன்றாம் படை வீடு” ஆகும். மயில் மீது அம்ர்ந்துள்ள குழந்தை வேலாயுதரை மகாலட்சுமி(திரு), கோமாதா(ஆ), இனன்(சூரியன்), கு(பூமாதேவி), அக்னி(டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், ‘திருஆவினன்குடி’ என்று பெயர் பெற்றது.இந்த கோவிலிலும், பல நாகலிங்க மரங்கள் இருந்தன. மாலை நேரத்தில் வண்டுகள் பல நாகலிங்க மலர்களை சூழ்ந்து,மலர்களின் அழகை மேலும் அதிகரித்து காண்பிக்கும் நேரம் ரொம்ப ரம்மியமாக இருக்கும்.

வானதியின் மனம் அதை விட்டு வர இயங்காது.அவள் திருமணப் பருவம் அடைந்த பின்,அவளுடைய தோழிகள் எல்லாம் வெளி நாட்டில் வேலை செய்யும் செல்வம் படைத்த ஆண் பிள்ளைகளை திருமணம் செய்து கொண்டனர்.ஆனால், வானதியோ ஆண்டிபட்டியிலே,சாதான குடும்பத்தில் வாக்கப்பட்டாள். அவள் மனது கூறியது போல், அவளுடைய ஐஸ்வரியத்தை(நாகலிங்க மரம்) விட்டு பிரியாமல் ரொம்ப சந்தோஷமாக, ஓர் இளம் பெண்ணை பெற்றெடுத்தாள். குந்தவை என்று பெயரிட்டாள்.

ஒரு நாள் வானதியின் பிரியமான தோழி மேகலா தன் மகள் ஆனந்தியுடன் அமெரிக்காவிலிருந்து அவள் பெற்றொரை பார்க்க ஆண்டிபட்டிக்கு வந்தாள்.சில நாட்கள் கழித்து மேகலாவின் அன்பு மகள் ஆனந்தி வயிற்று வலி, இருமல், காய்ச்சலால் துடி துடித்து போனாள். அந்த ஊரில் உள்ள மருத்துவர்கள் அவளை குணபடுத்த முடியவில்லை.

வானதிக்கு சற்றென்று தன்னுடைய ஐஸ்வரிய மரம் ஞாபகத்துக்கு வந்தது. அவள் வீ ட்டிலுள்ள நாகலிங்க மரத்தின் சிறு பாகத்தை எடுத்து, நன்றாக அரைத்து, காய்த்து, வடிகட்டி டிக்காக்ஷனை ஆனந்திக்கு மூன்று நாட்கள் கொடுத்தாள். என்ன ஆச்சிரியம்!!!

ஆனந்தி நன்றாக குணமடைந்தாள். வானதி, எல்லோரையும் தன் அன்பு மரமான நாகலிங்க மரத்தின் கீழ் நிற்க வைத்து ஓர் ஆசிரியர் போல் வகுப்பு நடத்தினாள்.

இம்மரத்தை ஆங்கிலத்தில், ‘Cannon ball tree’ என்றும், இதன் அறிவியல் பெயர் ‘Couroupita guianensis’. ஒரு பெரிய மரத்தில் 1000 பூக்கள் ஒரே நாளில் பூக்கும், இதனுடைய சிறிய பழத்தில் 50 விதைகளும், ஒரு பெரிய பழத்தில்550 விதைகளும், ஒவ்வொரு மரத்திலும் குறைந்த பட்சம் 150 பழங்கள் இருக்கும்.இந்த அற்புதமான நாகலிங்க மலர்கள் சிவனுக்கு உகந்தது என்று கூறினாள்.

மேகலாவுக்கு திருவள்ளுவர் இயற்றிய அறத்துப்பால் திருக்குறள் ஞாபகத்துக்கு வந்தது.

‘காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.’

மறு நாள் காலையில் வானதிக்கு சந்தோஷமான ஆட்சிரியம்!

தன் மகள் குந்தவை நாகலிங்க மரத்தின் கீழ் நிற்க தொடங்கினாள்.

வானதியின் ஐஸ்வரியம் தொடரட்டும்!!! 

தொடர்புடைய சிறுகதைகள்
குறவன்பாலயம் என்ற சிறிய கிராமம் கோபிசெட்டிபாலயம் அருகே ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. குறைந்த ஜனதொகை உடைய இந்த கிராமத்தில் வேளாண்மை நம்பி மக்கள் வாழந்து வந்தனர்.அரிசி, தேங்காய், மஞ்சள் பயிரிட்டு விவசாயம் செய்தனர்.சில மக்கள் கைத்தறியில் ஈடுபட்டு துணிமணிகளையும் நெய்து வந்தனர். இப்படிப்பட்ட ...
மேலும் கதையை படிக்க...
குடியிருந்த கோயில்

வானதியின் ஐஸ்வரியம் மீது 5 கருத்துக்கள்

 1. NARAYANAN says:

  very good

 2. NARAYANAN says:

  வாழ்க வளமுடன், very good

 3. p.Kalusulingam says:

  நன்று

 4. P.Kalusulingam says:

  Very nice

 5. S L Kandaswamy says:

  திருஆவினன்குடி பெயர் விளக்கம் அருமையிலும் அருமை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)