ஏன் நிறைய கடவுள்கள்?

 

பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே விவாதங்கள் நிகழும்.

ஒரு முறை பீர்பாலிடம் அக்பர், ”எங்கள் இஸ்லாம் மதத்தில் ஒரே கடவுள்தான் உள்ளார். அதே போல கிறிஸ்தவ மதம், புத்த மதம் போன்றவற்றுக்கும் ஒரே கடவுள்தான் உள்ளார். ஆனால் உங்கள் இந்து மதத்தில் மட்டும் நிறையக் கடவுளர்கள் உள்ளார்களே?” என்று கேட்டார்.

அதற்கு பீர்பால், ”பேரரசர் அவர்களே! எல்லாக் கடவுளரும் ஒன்றுதான். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பல பெயரிட்டு அழைக்கிறார்கள்” என்றார்.

”நிறைய கடவுளர்கள் இருக்கிறார்களே… ஏன் என்று கேட்டேன். நீரோ, எல்லா கடவுளும் ஒன்று தான் என்று மழுப்பலாக பதில் தருகிறீர். பல கடவுளர்களும் ஒன்றுதான் என்பதை, நீர் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் நம்புவேன்” என்றார் அக்பர்.

”இப்போதே நிரூபித்துக் காட்டுகிறேன்” என்றார் பீர்பால். தன் தலைப்பாகையை பேரரசரிடம் காட்டி, ”இது என்ன சொல்லுங்கள்?” என்று கேட்டார். ”இது என்ன கேள்வி? இது தலைப்பாகை” என்றார் அக்பர்.

தனது தலைப்பாகையை அவிழ்த்த பீர்பால் அதைத் தன் தோளில் போர்த்திக் கொண்டார். பிறகு, அருகிலிருந்த வீரனை அழைத்து, ”இது என்ன?” என்று கேட்டார். ”போர்வை!” என்றான் அவன்.

பிறகு அதைத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார் பீர்பால். இன்னொரு வீரனை அழைத்து ”இது என்ன?” என்று கேட்டார். ”வேட்டி” என்று பதில் வந்தது.

”பார்த்தீர்களா, பேரரசே! நீங்கள் தலைப்பாகை என்றீர்கள். அதையே இந்த வீரர்கள் போர்வை என்றும், வேஷ்டி என்றும் சொன்னார்கள். உண்மையில் இது துணிதான். இடத்துக்குத் தக்கவாறு இதன் பெயர் மாறுகிறது. தலையில் இருந்தால் தலைப்பாகை. உடலைப் போர்த்தி இருந்தால் போர்வை. இடுப்பில் இருந்தால் வேஷ்டி. அதே போலத்தான் எங்கள் கடவுளர்களும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படுகிறார்கள். படைக்கும் தொழில் செய்பவர் பிரம்மன்; காக்கும் தொழில் செய்பவர் திருமால்; அழிக்கும் தொழில் செய்பவர் சிவன். பெயர் மாறுகிறதே தவிர எல்லோரும் ஒருவர்தான்” என்று விளக்கம் தந்தார் பீர்பால். விளக்கத்தைக் கேட்டு அக்பர் சமாதானமானார்.

- ராணி மணாளன், கிருஷ்ணகிரி-1 (டிசம்பர் 2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
நண்பர் ஒருவருடைய வீட்டுக்குப் பீர்பால் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒருவர் அவரைப்பார்த்து, 'அமைச்சர் பீர்பால் வீடு எது?'' என்று கேட்டார். அந்த மனிதர் பீர்பாலை பார்த்ததே இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஏதோ அவசர காரியமாக அவரிடம் ஆலோசிப்பதற்கு விரும்பினார். பீர்பால் அவரைப் ...
மேலும் கதையை படிக்க...
சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில ...
மேலும் கதையை படிக்க...
அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் 'செல்வம்' என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து விட்டான். அதனால் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார் அக்பர். செல்வம் ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன்; வேலை நீக்க உத்தரவினால் அவன் மிகவும் ...
மேலும் கதையை படிக்க...
அக்பர், வழக்கம் போல் சபைக்கு வந்து அமர்ந்தார். அமைச்சர்களைப் பார்த்து, ''யாரேனும் யாருக்காவது எதையேனும் வழங்கும் பொழுது கொடுப்பவர் கை மேலாகவும் வாங்குபவர் கை அதற்குக் கீழாகவும் இருக்கிறது. ஆனால், வேறு விதமாக, அதாவது வாங்குவோர் கை மேலாகவும் கொடுப்பவர் கை கீழாகவும் எப்பொழுது ...
மேலும் கதையை படிக்க...
தம்பிகளைத் திரும்பப் பெற்ற தருமன்!
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது கடுமையான தாகத்தால் தவித் தனர். நீர் இருக்கும் இடம் தேடிச் சென்ற சகோதரர்களை நீண்ட நேரமாகியும் காணாததால் தவித்தார் தருமன். துரியோதனன் வேண்டிக் கொண்டதன் பேரில் பாண்டவர்களைக் கொல்வதற்காக யாகம் நடத்தி அதன் மூலம் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
பீர்பால் வீடு எது
விலைமதிப்புள்ள பொருள்
செல்வம் நம்மோடு இருக்கட்டும்
மேலும் கீழும் உள்ள கை
தம்பிகளைத் திரும்பப் பெற்ற தருமன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)