தங்களின் சிறுகதைகள் இணையதளம் என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமல்லாமல், நானும் பங்கு கொள்ள வேண்டுமென்கிற ஆவலையும் ஏற்படுத்தியது. தமிழின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழாகவே வாழ்ந்து மறைந்த அற்புதக் கதையாசிரியர்களின் கதைகளையும் வெளியிடுவதோடு, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றி வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சியால் சிறுகதைகள் சாகாவரம் பெறும் என்பது எனது கணிப்பு!
பானுரவி
எனது சிறுகதைகள் மங்கையர்மலர், ஆனந்த விகடன், அமெரிக்காவின் தென்றல், கலைமகளில் வெளிவருகின்றன. சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ்முரசில் எனது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.. மேலும், சிங்கப்பூர் தேசியக் கலைக்கழகத்தார் நடத்தும் தங்க முனை விருதுப் போட்டியில், எனது கவிதைக்கு 2011-ஆம் ஆண்டு முதல்பரிசு கிடைத்தது. கெளரவத்துக்குரிய அப்பரிசை சிங்கப்பூரின் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். (சிங்கப்பூர் வெள்ளி பத்தாயிரம்). அது தவிரவும், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் போன்றவை நடத்திய…மேலும் படிக்க... |