எஸ்.ராமமூர்த்தி
எனது சிறுகதை பிரசுரமாகி இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. எழுத வேண்டும் என்ற அவா உள்ளவர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் நீங்கள் ஆற்றும் சேவை பாராட்டுக்குரியது. முதலில் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். சிறுகதைகள் எழுத எவ்வளவோ கதைக் கருக்கள் இருக்கின்றன். அவற்றை எழுதி அனுப்ப ஆவல் அதிகரித்துள்ளது. அதை பிரசுரம் செய்தி தாங்கள் ஆவண செய்ய வேண்டும்.
புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளை விட, புத்தகங்கள் உதவும் என்றார் லெனின். இது ரஷயப் புரட்சியாளரின அனுபவப் பாடமாக கூட இருக்கலாம். sirukathaigal.com தளம் அறிமுகமாகமாவதற்குமுன், இதற்காக நூலகங்களைத் தேடி அலைந்துள்ளேன். இன்றைக்கு, sirukathaigal.com தளத்தின் மூலம், தி.ஜானகிராமன், வைக்கம் முகமது பஷீர், புலமைப்பித்தன், ஜே.கே. போன்றோர், கையடக்க விசாலத்தி்ல், கைபேசி மூலம் என்னோடு பேசுகிறார்கள். காலமான அவர்களைப் “போலச் செய்தலே”, இந்த தளத்தின் அடிப்படையாக. இருக்க வேண்டும். இந்த தளத்தில் படித்த கதைகளை, மேடைப் பேச்சாளர்கள் எடுகோள்களாக பயன்படுத்துகிறார்கள். எதிர்காலத்தில் வாசிப்பு பயிற்சியை, தவிரக்க முடியாத ஒன்றாக்கிவிட்ட sirukathaigal தளத்திற்கு நன்றி.. மிக்க நன்றி.