கதையாசிரியர் தொகுப்பு: விஷ்ணுபுரம் சரவணன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மழை நல்லதுதானே ஃப்ரெண்ட்ஸ்?

 

 அம்மா அவ்வளவு நேரம் சமாதானப்படுத்தியும்கூட, மழை நல்லதுதான் என்பதை மீனா ஒப்புக்கொள்ளவே இல்லை. காலையில் சீக்கிரமாகவே எழுந்து, களிமண்ணில் தண்ணீர் கலந்து, கால், கை, உடை என அனைத்தையும் அழுக்காக்கி, ரசித்து ரசித்து ஒரு காண்டாமிருகப் பொம்மையைச் செய்து, வெயிலில் காயவைத்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றிருந்தாள் மீனா. கொம்பு மட்டும் சரியாக வளராத அந்தப் பொம்மைக்கு பீம் என்று பெயரும் வைத்திருந்தாள். ஆனால், அவள் வீடு திரும்புவதற்குள் காண்டாமிருகத்தை மீண்டும் களிமண்ணாகவே மாற்றி வைத்திருந்தது மழை. பிறகு எப்படி


மகிழம்பூ

 

 குமரேசன் ஏறி மிதிக்கும் நேரத்தில் சைக்கிளில் செயின் கழன்று போய்விட்டது. குப்பற விழுந்தான். பாலத்தின் மேலிருந்து ஆற்றுக்குள் குதிக்க ஆயத்தமான சிறுவர்கள் திரும்பி பார்த்தனர். அவர்களில் ஒருவன் குமரேசனை பார்த்து ஓடிவர அவனை தொடர்ந்து மற்ற சிறுவர்களும் ஓடி வந்தனர். அதற்குள் குமரேசனே எழுந்து புறங்கையில் தோல் கிழிந்து ரத்தம் சொட்டுவதை தன் கைலியால் துடைத்துகொண்டான். ஓடி வந்த சிறுவர்களிடம் , ” ஒண்ணுமில்லடா… போய். குளிங்க… என்று சொல்லுவிட்டு சைக்கிள் செய்யினை மாட்டுவிட்டு ஓட்டத்துவங்கினான்.சிறுவர்கள் திரும்பி


வெள்ளை நிற பாம்பு

 

 அந்த அறையில் இருமலொலியை விடவும் குறைவு வெளிச்சம். யாரேனும் கதவை திறக்கையில் வாசலிலிருந்து உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு சில நொடிகளில் மறைந்துவிடும் சத்தமும் தடயமின்றியும். அவ்வெளிச்சத்தில் மருந்துப் பட்டைகளின் பளபளக்கும் மேற்தாள் மின்னிமறையும்.மேற்கூரையின் பொத்தல்களின் வ்ழியே புகும் வெளிச்சம் அவனுக்கு போதுமாயிருந்தது. அந்த அறையிலிருந்த‌ முகம்பார்கும் கண்ணாடியை அவன் திருப்பிவைத்த நாளில்தான் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றது. பலமுறை அம்மா அந்த கண்ணாடியை சரியாக வைத்தாலும் அடுத்த சிலநிமிடங்களில் அவன் திருப்பிவைத்துவிடுவான். அம்மாவின் நசுங்கிய வளையல்களைப்போல கூரைப்பொத்தல் வெளிச்சம் கிடந்தது.