கதையாசிரியர் தொகுப்பு: வல்லிக்கண்ணன்

83 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண் சிங்கம்

 

 (1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிங்காரம் பிள்ளை அண்ணாச்சி – ‘வெறும் வீணப்பயல்’ என்று கைலாசபுரம் வாசிகள் ஒவ்வொருவரது மனக்குறளியும் முணமுணக்கும். ஆனால், வெளிப்படையாக, ‘அவுகளைப்போலே உண்டுமா இந்தப் பூலோகத்திலே? அண்ணாச்சி பெரிய சிங்கமில்லே!’ என்று வாய் சொல் உதிர்க்கும். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை, உள்ளொன்று நினைத்துப் புறமொன்று பேசுவதுதானே பண்பாட்டு உயர்வு என்று மக்களால் மதிக்கப்படுகிறது! மேலும், சிங்காரம் பிள்ளை என்றால் கைலாசபுரத்தினருக்கு உள்ளத்துக்குள் எப்பவுமே


குற்றமும் தண்டனையும்

 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விளாடிமிர் என்னும் நகரத்தில் வாலிப வியாபாரி ஒருவன் வசித்து வந்தான். ஐவான் டிமிட்ரிச் அக்ஸனோவ் என்பது அவன் பெயர். அவனுக்கு இரண்டு கடைகள் இருந்தன. சொந்த வீடு ஒன்றும் உண்டு. அக்ஸனோவ் அழகன். மினுமினுக்கும் சுருட்டை முடி அவன் தலையை அழகு படுத்தியது. வேடிக்கை நிறைந்தவன் அவன். பாட்டுப் பாடுவதில் அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது. சின்னஞ் சிறு வயதிலேயே அவன் குடிக்கப்


விரையும் கரையும்

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?’ – பழமொழி. விரை ஒன்று போட்டு, அதிலிருந்து சுரை முளைக்கச் செய்வது மட்டுமல்ல; பரங்கிப் பூ பூக்க வைத்து, பீர்க்கங்காய் காய்க்கும்படி செய்து, வெள்ளரிப்பழம் பழுக்கும்படி பண்ணுகிற அற்புத வித்தை பூலோகத்தில் நடைபெறுகிறது. அதுதான் சினிமா. – யுகதர்மம். விரை தூவு படலம் டைரக்டர் புரட்யூஸர் ஸ்ரீமான் சோணாசலம் சினிமாப் படம் பிடிக்க வேண்டும்


மனிதர்களைப் பற்றி

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரோமுக்கும் ஜினோவாவிற்கு மிடையிலே ஒரு இடத்தில் கண்டக்டர் நாங்களிருந்த பெட்டியின் கதவைத் திறந்து, அழுக்குப் படிந்த தொழிலாளி ஒருவன் உதவியோடு ஒற்றைக் கண் கிழவன் ஒருவனைச் சுமந்து வந்து ஏற்றுவது போல் உள்ளே கொண்டு வந்து சேர்த்தான். எல்லோரும் இனிய மென்னகை சிந்தி ‘வங்கிழம்தான்’ என்று ஏகமாக ஒலிபரப்பினர். ஆனால் அந்தக் கிழவன் வலிமையுள்ளவனாக மாறி நின்றான். சுருங்கி வதங்கிப்போன கையை ஆட்டி


கடலில் நடந்தது

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸிலிக்காடப் பூச்சிகள் இரைந்து கொண்டிருந்தன. ஆலிவ் மரங்களின் அடர்ந்த இலைக் கூட்டங்களிடையே ஆயிரமாயிரம் உலோகக் கம்பிகளை முறுக்கேற்றி வைத்திருப்பது போலவும், தடித்த இலைகளைக் காற்று அசைக்கவே அவை ஆடித் துடிப்பது போலவும், இந்த இடையறா மென் ஸ்பரிசத்தினாலேயே கிறுகிறுக்கச் செய்யும் இசை எழுவது போலவுமிருந்தது அது. உண்மையில் அது இசையே யல்ல. எனினும் மாயக் கரங்கள் எவையோ அருவமான வீணைகள் பலவற்றைச் சுருதி


மனிதனுக்கே வெற்றி

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நிரந்தரமாய் பனி மூடியிருக்கும் உயர்ந்த மலைகளை வரம்புகளாகக் கொண்டு அமைந்திருந்தது சாந்திமய நீல ஏரி. நந்தவனங்களின் கரிய இலைத் தொகுப்புகள் நீரோரம் வரை வளம் நிறைந்து அலைபாய்ந்து கிடந்தன. சர்க்கரைக் கட்டிகளால் அமைக்கப் பெற்றவை போல் தோன்றும் வெள்ளைகிற வீடுகள் நீரினுள் எட்டிப் பார்த்தபடி நின்றன. குழந்தையின் இனிய துயில் போல் குடியிருந்தது அமைதி. காலை வேளை. மலர்களின் நறுமணம் மலைப் புறங்களி


பெப்பி

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெப்பிக்கு வயது பத்து தான். பல்லி மாதிரி மெலிந்து, ஒல்லியாய், ஓட்ட ஆட்டம் மிகுந்தவனாய் விளங்கினான் அவன். அவனது சூம்பிய தோள்களின் மீது பல வர்ணக் கந்தல்கள் தொங்கும். வெயிலாலும் புழுதியினாலும் கறுத்துப் போன சருமம் துணிகளிலுள்ள எண்ணற்ற கிழிசல்களின் வழியாக எட்டிப் பார்க்கும். காய்ந்து போன புல் மாதிரி, கடல் காற்று அப்படியும் இப்படியும் ஆட்டி அலைக்கழிக்குமே சருகு , அது


சந்தோஷங்கள் சந்தோஷங்கள்

 

 சுவரில் தொங்கிய காலண்ட ரைப் பார்த்தான் சின்னக் கண்ணன். ஆகா என்று கைகொட்டிக் களித்தான். ஈசிச்சேரில் ஓய்வாகச் சாய்த்திருந்த அப்பா கேட்டார், “இப்ப என்ன சந்தோவும்?” என்று. “நாளைக்குத் தேதி இருபது” என்றான் கண்ணன். “சரி. அதுக்கென்ன?” “நாளைக்கு ஒரு விசேஷம். ஞாபகம் இல்லை?” “என்ன விசேஷம்?” “பம்பர் பரிசுச் சீட்டு குலுக்கல் முதல் பரிசு ரெண்டு லட்சம்”. “ஆமா, மறந்தே போனேன்” என்று நிமிர்ந்து உட்கார்ந்தார் தந்தை. “நாளைக்கு நமக்கு பரிசு கிடைக்கும், ஆமாதானே?” என்று


குடியிருப்பில் ஒரு வீடு

 

 நாகரிக நகரங்களில் தவிர்க்க முடியாத வளர்ச்சியாகத் தலையெடுக்கிற எல்லா “எக்ஸ்டென்ஷன்”களையும் போல் தான் அந்தக் குடியிருப்பும் அமைந்திருந்தது. அமைதியான சூழ்நிலை, பரபரப்பு இல்லாத அருமையான தெருக்கள், “மொட்டைமொழுக்கென்று அழகோ கவர்ச்சியோ இல்லாது கட்டப்பெற்றுள்ள சதுர வடிவக் கட்டிடங்கள் முதலியவற்றை நாகரிக விதிகளின்படி கொண்டிருந்த அந்தப் பகுதிக்கு ஆரம்பத்தில் “நியூ காலனி” என்று தான் பெயர் சூட்டியிருந்தார்கள். காலவேகத்தில், பெயர்களுக்கும் தமிழ் வடிவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று முளைத்த ஒரு உணர்வைப் பின்பற்றி – அந்த வட்டாரத்துக்கும்


மனநிலை

 

 அவன் – பெருமாள். சாதாரண மனிதன். அவ்வேளையில் அசாதாரணமான சூழ்நிலையில் தனித்து விடப்பட்டிருந்தான். அதனாலேயே அவன் உள்ளம், இனம்புரிந்து கொள்ள முடியாத உணர்வுகளினால் கனமேறிக் கொண்டிருந்தது. ஒருவித பயம், குழப்பம், அழுத்தும் சோகம், ஏதோ ஒரு வேதனை கவிந்து, கணத்துக்குக் கணம் பாரமாகி வந்தன. அவன் பார்வை ஒரு மிரட்சியுடன், மேலும் கீழும்; அங்கும் இங்கும், ஏறி இறங்கிப் புரண்டு அலைபாய்ந்தது. அவன் கண்களில் பட்டனவெல்லாம் அவனை அச்சுறுத்தின. மலைகள். எல்லாப் பக்கங்களிலும் மலைப்பகுதிகள். விரிந்து பரந்து